Tamil News | Online Tamil News |
- பார்லிமென்ட் உணவகத்திற்கு வழங்கப்பட்ட மானியம் 'கட்': 50 சதவீதம் கூடுதல் விலை கொடுக்கும் எம்.பி.,க்கள்
- கம்யூனிஸ்டுடன் கூட்டணி மே.வங்கத்தில் காங்., திட்டம்
- ஓ.பி.எஸ்., முதல்வராக பதவியேற்ற செலவு விவரம் இல்லை என தகவல்
- விவசாயிகள் தற்கொலை கைகொடுக்கும் விநாயகர்
- வீழ்ச்சியை ஒப்புக்கொண்ட ஜெ.,: ஸ்டாலின்
- தேசிய கொடி வடிவில் கேக்: புத்தாண்டில் சர்ச்சை
- சம்பளத்தை கூட்டி கொடுக்க பணம் கேட்கிறார் பிரபு
- வெள்ளத்தில் சென்னை சிக்க காரணம்
- தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்: பாரம்பரிய உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
- விரைவில் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்!
| Posted: 01 Jan 2016 08:37 AM PST புதுடில்லி:டில்லியில், பார்லிமென்ட் வளாகத்தில், எம்.பி.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கான உணவகத்தில், இதுவரை மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த உணவு பொருட்கள் மற்றும் தின்பண்டங்களுக்கான மானியம், நேற்று முதல் ரத்து செய்யப்பட்டு, 50 சதவீத கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட்டன. எனினும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், வெளியிடங்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கான விலையை விட மிகக் குறைவாகவே உணவுக்காக செலவிடுகின்றனர்.ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் சம்பளம் பெறும், எம்.பி.,க்களுக்கு விரைவில் சம்பளம் மற்றும் படிகள் உயர்த்தப்பட உள்ளன. ... |
| கம்யூனிஸ்டுடன் கூட்டணி மே.வங்கத்தில் காங்., திட்டம் Posted: 01 Jan 2016 08:43 AM PST கோல்கட்டா,:மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டு சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இவ்விஷயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன . மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், இந்த ஆண்டில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், இடதுசாரிகள் என அழைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திக்க, காங்கிரஸ் விரும்புவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த, ... |
| ஓ.பி.எஸ்., முதல்வராக பதவியேற்ற செலவு விவரம் இல்லை என தகவல் Posted: 01 Jan 2016 09:57 AM PST 'தமிழக முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற போது பதவியேற்பு விழாவிற்கு, தமிழக அரசு சார்பில் செலவிடப்பட்ட தொகை குறித்த விவரம் இல்லை' என, அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா பொறுப்பேற்ற போது பதவியேற்பு விழா, வெகு விமரிசையாக நடந்தது. 2014ல், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதால், முதல்வர் பதவியை இழந்தார். புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். தகவல் அறியும் உரிமை சட்டம்அப்போது, கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா மிகவும் எளிமையாக நடந்தது. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா ... |
| விவசாயிகள் தற்கொலை கைகொடுக்கும் விநாயகர் Posted: 01 Jan 2016 10:00 AM PST மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில், வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை, பிரசித்தி பெற்ற, சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை ஏற்கிறது. மஹாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக உள்ளார். 1997ம் ஆண்டு முதல் ஏற்பட்ட வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாக, 70 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதால், அவர்களுடைய குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தற்கொலை செய்த விவசாயிகளின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக, மும்பை சித்தி விநாயகர் ... |
| வீழ்ச்சியை ஒப்புக்கொண்ட ஜெ.,: ஸ்டாலின் Posted: 01 Jan 2016 10:02 AM PST சென்னை:''நமக்கு நாமே பயணத் திட்டம் ஜெயலலிதாவையும் கவர்ந்துள்ளது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார். சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழக மக்கள் விரும்பும் ஆண்டாக, 2016ம் ஆண்டு இருக்கும். ஏனென்றால், இந்த ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி. கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் செயலற்ற, ஊழல் மிகுந்த, இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட, மக்கள் முடிவெடுத்து விட்டனர். அதற்கேற்ற வகையில், தி.மு.க., நிர்வாகிகளும் கடமையாற்றி வருகின்றனர்.'கண்ணுக்கு எட்டிய துாரம் வரையில்,எதிரிகளே இல்லை' என பேசி வந்த ஜெயலலிதா, கட்சிப் பொதுக்குழுவில், ... |
| தேசிய கொடி வடிவில் கேக்: புத்தாண்டில் சர்ச்சை Posted: 01 Jan 2016 10:02 AM PST தர்மபுரி: தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், தேசிய கொடி வடிவிலான கேக் வெட்டி, கல்வித்துறை அதிகாரிகள் புத்தாண்டு கொண்டாடியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி சி.இ.ஓ., மகேஸ்வரி, டி.இ.ஓ., நடராஜன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், சி.இ.ஓ.,அலுவலகத்தில், தேசிய கொடி வடிவிலான கேக்கை வெட்டி, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜாராம் வர்மா கூறியதாவது: பெற்றசுதந்திரத்தையும், தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில், கல்வித்துறை அதிகாரியான ... |
| சம்பளத்தை கூட்டி கொடுக்க பணம் கேட்கிறார் பிரபு Posted: 01 Jan 2016 10:03 AM PST புதுடில்லி: 'ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டியுள்ளதால், ரயில்வேக்கு ஏற்படும் கூடுதல் செலவுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும்' என, ரயில்வே அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, சுரேஷ் பிரபு, மத்திய நிதித் துறையில் கோரிக்கை விடுத்துள்ளார். நிதியமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, அருண் ஜெட்லிக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ரயில்வேயின் ஆண்டு வருமானத்தில், 51 சதவீதம், சம்பளம், படி, ஓய்வூதியத்துக்கே செலவாகிறது. ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவதால், ரயில்வேக்கு மேலும், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ... |
| வெள்ளத்தில் சென்னை சிக்க காரணம் Posted: 01 Jan 2016 10:13 AM PST சென்னை: சென்னை காவாங்கரை கிளை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களால் தான் சமீப மழை வெள்ளத்தில் வடபழனி மூழ்கியது என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிச.,௧ முதல் ௪ம் தேதி வரை சென்னையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், வடபழனி பெரிதும் பாதிக்கப்பட்டது. வடபழனி, 100 அடி சாலையில் வெள்ளம் தேங்கியதால், அச்சாலையில் இரண்டு நாட்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், அப்பகுதிவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.100 அடி சாலையில் வெள்ளம்மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்த பின் வடபழனி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதுபோன்ற வெள்ளம் வடபழனியில் ... |
| Posted: 01 Jan 2016 11:13 AM PST உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழகம் முழுவதும்,இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 36 ஆயிரத்து, 800 கோவில்களில், பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. பாரம்பரிய உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.மதுரை மீனாட்சியம்மன் கோவில், பழநி முருகன் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில், பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி வேட்டி மற்றும் சேலை அணிந்து வந்தனர்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், காளிகாம்பாள் ... |
| விரைவில் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்! Posted: 01 Jan 2016 12:36 PM PST புதுடில்லி: நீண்ட காலமாக கூறப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியிலான மாற்றம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவிற்கு விடுமுறையில் சென்றுள்ள ராகுல், விரைவில் இந்தியா திரும்பியதும் அவர் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்பார் என தெரிகிறது.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், காங்., துணைத்தலைவர் ராகுல் ஜனவரி 8ம் தேதிக்கு முன்னர் எப்போது வேண்டுமானாலும் இந்தியா திரும்பலாம். அப்போது காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டமும் நடக்கும் என தெரிவித்தன. பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் கட்சி தலைவர் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 02,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |