Tamil Star |
- நத்தார் தினத்தில் இந்த முறை பனிப்பொழிவு இருக்காது
- மொன்றியல் மாணவர் போராட்டத்தில் எட்டு பேர் கைது
- தகவல் அறியும் சட்டத்தில மேம்பாடு: பிரதமர் ஜஸ்டின் ரூடோ
- காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்!
| நத்தார் தினத்தில் இந்த முறை பனிப்பொழிவு இருக்காது Posted: 20 Dec 2015 10:41 AM PST
நத்தார் பண்டிகை நாளின் போது வழக்கமாக எதிர்பார்க்கப்படும் வெண் பனிப்பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் ஐந்து வீதமே காணப்டுவதாக வானிலை அவதானிப்பு நிபுனர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வருடம் நத்தார் தினம் வெண்பனி நத்தாராக இல்லாமல், பச்சைப் பசேலென்ற நத்தாராக அமைவதற்காக வாய்ப்புக்களே அதிகம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நத்தார் அன்று சுமார் இரண்டு சென்டிமீட்டர் அளவிலேனும் பனி பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே காணப்பவதனால், நூறு சதவீதம் பச்சை நத்தார் சூழலையே எதிர்பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் நத்தார் நாளுக்கு இன்னமும் குறித்த சில நாட்கள் இருப்பதனால், எதனையும் இறுதியிட்டுக் கூற முடியாது எனவும், நாட்கள் அண்மிக்கும் போது வானிலையில் சில வேளைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். நத்தார் நாளன்று காலையில் ஒன்ராறியோவின் தென் பகுதிகளில் தாளமுக்கத்தின் தாக்கம் காணப்படுவதாகவும், அது மழையாக அல்லாது பனியாக பொழிந்தால் அது நத்தால் நாள் ஆச்சரியமாக அமையக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். The post நத்தார் தினத்தில் இந்த முறை பனிப்பொழிவு இருக்காது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மொன்றியல் மாணவர் போராட்டத்தில் எட்டு பேர் கைது Posted: 20 Dec 2015 10:33 AM PST
கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டமை, காவல்த்துறையினரின் கட்டளைகளுக்கு பணிய மறுத்தமை ஆகிய காரணங்களுக்காக ஒரு பெண்ணும், ஏழு ஆண்களும் கைது செய்யப்பட்டதாக மொன்றியல் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் பேரணி செல்லவுள்ள பாதை தொடர்பிலான தகவல்களை உரிய முறையில் வழங்காத காரணத்தினால், பேரணியை தடை செய்வதாக அறிவித்திருந்த காவல்த்துறையினர், அது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்திருந்தனர். தடை உத்தரவினையும் மீறியே இந்த பேரணி நடாத்தப்பட்டதாகவும், பேரணியில் ஈடுபட்டடோர் காவல்த்றை வாகனங்களின் யன்னல் கதவுகளையும் அடித்துடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். ஆர்ப்பட்டத்தில் இருந்து கலைந்து ஓடிச் சென்ற வேளையில், தரையில் வீழந்து சிலர் காயமுற்றதாகவும், அவர்களில் குறைந்தது ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள், காவல்த்துறையினரின் காட்டுமிராண்டித்தனம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி மேற்கொள்ளப்பட்ட இந்த மாணவர் ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் நூறு பேர் வரையில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. The post மொன்றியல் மாணவர் போராட்டத்தில் எட்டு பேர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தகவல் அறியும் சட்டத்தில மேம்பாடு: பிரதமர் ஜஸ்டின் ரூடோ Posted: 20 Dec 2015 10:27 AM PST
கனடாவில் 1983ஆம் ஆண்டு யூலை மாதம் முதலாம் நாள் நடைமுறைக்கு வந்த இந்த தகவல் அறியும் சட்டம், அதன் பின்னர் சிறு அளவிலான மாற்றத்தினை மட்டுமே கண்டுள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரகாரம் அந்த தகவல் அறியும் சட்டத்தினை நவீனமயப்படுத்தும் கட்டுப்பாடு தமக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டு்ளளார். அந்த வகையில் பல தசாப்தங்கள் பழமையான கனடாவின் தகவல் அறியும் சட்டத்தினை தமது லிபரல் அரசாங்கம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். கனேடியர்கள் தகவல்களை அறிந்துகொள்ளும் இந்த நடைமுறை சிலவேளைகளில் பொது பாதுகாப்புக்கு சற்று அச்சுறுத்தலாக அமையக் கூடும் என்ற போதிலும், சிறந்த ஒரு ஆட்சியினை நடைமுறைப்படுத்துவதற்கு அது மிகவும் உறுதுணையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னைய நடைமுறைகளின் பிரகாரம் காகிதங்களிலும், அட்டைக் கோப்புகளிலும் பேணப்பட்டு வந்த மத்திய அரசின் தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமாயின், ஐந்து டொலர்களை செலுத்தி அவர்களால் கோரப்படும் தகவல்களை பெற்றுக்கொடுக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகின்ற போதிலும், அனேகமான சந்தர்ப்பங்களில் அதற்கும் அதிகமான நாட்கள் ஆவதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நிலையில், பழைய நடைமுறைகளை மாற்றியமைத்து, விரைவாகவும், இலகுவாகவும், இன்னமும் அதிக அளவிலான தகவல்களை கனேடியர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மேலும் தெரிவித்துள்ளார். The post தகவல் அறியும் சட்டத்தில மேம்பாடு: பிரதமர் ஜஸ்டின் ரூடோ appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்! Posted: 20 Dec 2015 07:19 AM PST
காய்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவதற்கு சோம்பேறி பட்டுக்கொண்டு, மட்டன், சிக்கனை வாங்கி சமைத்து உண்ணுகிறார்கள், அதுமட்டுமின்றி மிஞ்சிய உணவுகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மறுநாளும் சூடு செய்து சாப்பிடுகிறார்கள். விளைவு, மாரடைப்பு, கொழுப்பு சார்ந்த பிரச்சனைகள், புற்றுநோய்கள் போன்றவற்றிற்கு ஆளாகிறோம். அதனால் அசைவ உணவுகளை சாப்பிட்டாலும், அன்றாட வாழ்வில் ஏதேனும் 2 காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், காய்கறிகளில் இருந்து மாவுச்சத்து, புரதம், தாது உப்புகள், விட்டமின்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை கிடைக்கிறது. காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள் நார்ச்சத்து: காய்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கலை தவிர்க்கிறது. உணவுக் குழாயில் உணவு எளிதாக பயணிக்க உதவும். விட்டமின் சத்து: பச்சை இலை காய்களில், கீரைகளில் தான் அதிகளவில் விட்டமின் இருக்கிறது. முக்கியமாக கரோட்டின் இருக்கிறது. கரோட்டின் நம் உடம்பில் விட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது கண் பார்வையை சீராக்குகிறது. மாலைக்கண் நோயை தடுக்கிறது. கீரை வகைகளில் கரோட்டினுடன் ரைபோபிளேவின் மற்றும் "விட்டமின் சி'யும் அதிகளவில் உள்ளது. தாது உப்புகள்: தண்டுகீரை, அகத்தி, வெந்தயக் கீரை மற்றும் முருங்கைக் கீரையில் கால்சியம் அதிகளவில் காணப்படுகிறது. கீரை வகைகளில் இரும்புச் சத்தும் நிறைந்து காணப்படுகிறது. தினமும் நம் உணவுடன், 50 கிராம் கீரையை சேர்த்துக் கொண்டால் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், கரோட்டின், விட்டமின் சி ஆகியவை கிடைத்துவிடும். ஆகவே அன்றாடம் காய்கறிகளை உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வை பெறுங்கள். The post காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இந்த முறை வெண் பனிப் பொழிவுடன் கூடிய நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

மொன்றியல் டவுன்ரவுன் பகுதியில் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது எட்டு பேர் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் அறியும் சட்டத்தினை மேலும் சிறந்த முறையில் விரிவாக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இதன் மூலம் அரசாங்கமும் முன்னேற்றம் அடையும் என கூறியுள்ளார்.
இன்றைய நவீன உலகில் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை சாப்பிடுபவர்களே அதிகம்.