Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வெள்ளம் பாதித்த மாநிலம் தமிழகம்: தொழில் துறையினர் நிம்மதி

Posted: 27 Dec 2015 07:25 AM PST

தமிழகத்தை வெள்ளம் பாதித்த மாநிலமாக அறிவித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், சிறிய தொழில் துறையினர் மற்றும் விவசாயிகள், வங்கிகளில் கடன் பெற வழி

ஏற்பட்டுள்ளது.
வருவாய்த் துறை, சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், 'தமிழகம் வெள்ளம் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்படுகிறது.
எனவே, வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனத்தினருக்கு, ரிசர்வ் வங்கி விதிகளுக்கு உட்பட்டு, சலுகை மற்றும் நிவாரணஉதவிகளை வழங்கலாம்.
'மேலும், தொழில் துறையினர் ...

இறுதி வெற்றி எங்களுடையதே: ஐ.எஸ்., பயங்கரவாதி கொக்கரிப்பு

Posted: 27 Dec 2015 10:30 AM PST

பெய்ரூட்: 'அமெரிக்க கூட்டுப் படைகளின் தாக்குதலில், ஐ.எஸ்., இயக்கம் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும், இறுதி வெற்றி எங்களுடையதே' என, அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் கூறியுள்ளான்.மேற்கு ஆசிய நாடுகளான, சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதி. இவன், மே மாதம், அமெரிக்க கூட்டுப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும், தற்போது அவன் பேசியதாக, ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அவன் கூறியுள்ளதாவது:அமெரிக்க கூட்டுப் படைகளின்வான் வழி ...

புதிய பார்லிமென்ட் கட்டுங்க: சபாநாயகர் சுமித்ரா மகாஜன் யோசனை

Posted: 27 Dec 2015 10:34 AM PST

புதுடில்லி:'தற்போதைய பார்லிமென்ட் கட்டடம், 88 ஆண்டு பழமையானது. அந்தக் கட்டடத்தில், இடப்பற்றாக்குறை உள்ளதாலும், உறுதி குறைந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாலும், புதிய பார்லிமென்ட் கட்டடத்தை நிர்மாணிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் யோசனை தெரிவித்து உள்ளார்.

கடிதம்:
மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எழுதியுள்ள கடித விவரம்: தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம், 1927ல் கட்டப்பட்ட போது, ஊழியர்கள், பாதுகாவலர்கள், வருகை தரும் பத்திரிகை ...

சென்னையில் காற்று விற்பனை கனஜோர்: குடுவை விலை 975 ரூபாய்

Posted: 27 Dec 2015 10:35 AM PST

சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக, துாய்மையான, 'ஆக்ஸிஜன்' எனப்படும் பிராண வாயு குடுவை, விற்பனைக்காக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சென்னை, எழும்பூரில், 'இனவேட்டிவ்' என்ற தனியார் நிறுவனம், ஆக்ஸிஜன் குடுவைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஒரு குடுவையில், 120 முறை சுவாசிக்கும் அளவிற்கான, 99.6 சதவீதம் துாய்மையான ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு உள்ளது. எளிதாக அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்லும் வகையில் உள்ள அந்த குடுவையின் விலை, 975ரூபாயாகும். இதுகுறித்து, நுரையீரல் மருத்துவ நிபுணர் திருப்பதி கூறியதாவது: டில்லி, சென்னை போன்ற மாநகரங்களில், ...

காரி துப்பிய விஜயகாந்த்; வெடிக்கும் போராட்டம்

Posted: 27 Dec 2015 10:36 AM PST

பொது இடங்களில், தரங்கெட்டு நடக்கும் விஜயகாந்தின் அநாகரிகம் தொடர்வது, தமிழக அரசியல் வட்டாரங்கள், பத்திரிகை வட்டாரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது, தன் கட்சி நிகழ்ச்சிகளில் கட்சி பிரமுகர்களை, எம்.எல்.ஏ.,க்களை, தொண்டர்களை பலர் முன்னிலையில் அடித்து, துவைப்பது, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் வாடிக்கையாக உள்ளது.அந்த வரிசையில் நேற்று, பத்திரிகையாளர்களை காரித் துப்பி அசிங்கப்படுத்தி உள்ளார் விஜயகாந்த். இது பலதரப்பினரையும் கடும் கொந்தளிப்பில் ...

முழுமையான இட ஒதுக்கீடு: கருணாநிதி கோரிக்கை

Posted: 27 Dec 2015 10:38 AM PST

சென்னை: 'இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்ற, மத்திய அரசு முன் வர வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் அறிக்கை:வி.பி.சிங் தலைமையில் அமைந்திருந்த மத்திய அரசு, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு, இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட்டு, 20 ஆண்டுகளாகிறது. இன்னும், மத்திய அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு உரிய சதவீத ஒதுக்கீடு வழங்காமல், மிக குறைந்தசதவீதமே வழங்கப்பட்டு, தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட ...

அருண் ஜெட்லி தப்பு செய்யல: விசாரணை குழு அறிக்கை

Posted: 27 Dec 2015 10:41 AM PST

புதுடில்லி:டி.டி.சி.ஏ., எனப்படும், டில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்திய, நிபுணர் குழு அறிக்கையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் இடம் பெறவில்லை. சமீபத்தில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலர் ராஜேந்தர் குமார் அலுவலகத்தில், சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 1999 முதல், 2013 வரை, டி.டி.சி.ஏ., தலைவராக இருந்த போது, நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பான கோப்புகளை எடுக்கவே, சி.பி.ஐ., சோதனை நடத்தியதாக, முதல்வர் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.இதையடுத்து, டி.டி.சி.ஏ., ...

புதிய தொழில்களை ஊக்குவிக்க மோடி அடுத்த அதிரடி: ஜன., 16ல், 'ஸ்டார்ட் - அப் இந்தியா' துவக்கம்

Posted: 27 Dec 2015 10:43 AM PST

புதுடில்லி:''ஜனவரி, 16ல், 'ஸ்டார்ட் - அப் இந்தியா, ஸ்டேண்ட் - அப் இந்தியா' என்ற செயல் திட்டம் வெளியிடப்படும். கீழ்மட்ட மக்களும் தொழில்துறையில் அடியெடுத்து வைக்க உதவும் இத்திட்டம் பற்றிய பிரசாரத்தை, மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்ல, மாநில அரசுகள் உதவ வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையின் போது, 'இந்தியாவில் புதிய தொழில்களை துவக்கவும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அடையவும், 'ஸ்டார்ட் - அப் இந்தியா, ஸ்டேண்ட் - அப் இந்தியா' என்ற திட்டம், நம் நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப உருவாக்கப்படும்' ...

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விரைவில் அமலாகிறது அவசர சட்டம்? தமிழக கட்சிகளின் வாயை அடைக்க மோடி அரசு தீவிரம்

Posted: 27 Dec 2015 10:44 AM PST

'தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த, விரைவில் அவசர சட்டத்தை அமலாக்குவது' என, டில்லியில் நடந்த, பா.ஜ., உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அதுபற்றிய தகவல் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவசர சட்டம் விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசியல் கட்சிகளின் வாயை அடைக்க, பிரதமர் மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டில் இந்தப் போட்டி ...

ரயில் கட்டணங்களை நிர்ணயிக்க ரயில்வே மேம்பாட்டு ஆணையம்

Posted: 27 Dec 2015 11:42 AM PST

புதுடில்லி:ரயில்வே கட்டுப்பாடு ஆணையமானது, ரயில்வே மேம்பாட்டு ஆணையம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை நிர்ணயித்தல் உட்பட, பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளது.கடந்த பல ஆண்டுகளாக அமைக்கப்பட்ட பல்வேறு நிபுணர் குழுக்கள், 'ரயில்வேயின் பணிகளை சிறப்பாக கையாள, தனிப்பட்ட ஆணையம் அமைக்க வேண்டும்' என, பரிந்துரைத்து உள்ளன. அதை நனவாக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ள, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, அதற்கான திட்டத்தை தீட்டியுள்ளார்.அதன்படி, தற்போதுள்ள ரயில்வே கட்டுப்பாடு ஆணையம், ரயில்வே மேம்பாட்டு ஆணையம் என, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™