Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நடிகர் ஷாருக்கான் ரூ.1 கோடி நிதியுதவி

Posted:

சென்னையில் கொட்டி தீர்த்த பேய் மழையால் சென்னை நகரமே சின்னபின்னாமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தற்போது வெள்ள நீர் வடிந்து வருகிறது. மக்கள் உணவு கூட சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சினிமா நட்சத்திரங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிவாரணம் ...

மழை பாதிப்பு - சென்னை திரைப்பட விழா ஒத்திவைப்பு!

Posted:

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 13வது சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் 10ம் தேதி துவங்க இருந்தது. ஆனால் இப்போது சென்னை திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்த பருவ மழையில், சென்னை நகரம் சின்னாபின்னமாகியுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது, ...

சினிமாவில் மட்டும் மக்கள் சேவை: நடிகர்களை வாட்டும் நெட்டீசன்கள்

Posted:

தமிழ் சினிமா ஹீரோக்களை நம்மூர் மக்கள் தெய்வமாய் கொண்டாடுகின்றனர். அவர்களின் படங்கள் ரிலீஸாகும் போது கட்-அவுட், பேனர் எல்லாம் கட்டி பாலாபிஷேகம், பீர் அபிஷேகம், ஏன் கையில் சூடம் கூடஏந்துகிறார்கள்.

அப்படிப்பட்ட ரசிகர்களாகிய பொதுமக்கள், இப்போது வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடிகர்கள் செய்தது ...

ஹேட்ஸ்டோரி 3 - மூன்றுநாளில் ரூ.26.77 கோடி வசூல்

Posted:

ஹேட் ஸ்டாரி படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக வெளிவந்துள்ள படம் தான் ஹேட் ஸ்டோரி-3. விஷால் பாண்டியா இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் மூன்று நாளில் ரூ.26.77 கோடி வசூலித்திருக்கிறது. முதல்நாளில் ரூ.9.72 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.8.05 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.9 கோடியும் வசூலித்திருக்கிறது. முதல்வார முடிவில் இப்படம் ரூ.35 கோடி வசூலை ...

கரண் ஜோகர் படத்தில் சன்னி லியோன் நடிக்கவில்லை!

Posted:

சில மாதங்களுக்கு கரண் ஜோகரின் படமான ''ஏ தில் ஹே முஷ்கில்'' படத்தில், பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் இதனை சன்னி லியோன் மறுத்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது... ''ஏ தில் ஹே முஷ்கில்'' படத்தில் நான் நடிப்பதாக வந்த செய்தது உண்மை கிடையாது, என்னை நம்புங்கள். நான் ...

என் வாழ்வில் மிகப்பெரிய படம் பாஜிராவ் மஸ்தானி - சஞ்சய்லீலா பன்சாலி

Posted:

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள சரித்திர படம் பாஜிராவ் மஸ்தானி. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 18ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட படக்குழுவினர்.

இந்நிலையில் ...

ஹாலிவுட் ஸ்டார் வின் டீசல் உடன் நடிக்கும் தீபிகா!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. இவர் நடித்த அனேக படங்கள் 100 கோடி பாக்ஸ் ஆபிசில் இணைந்துள்ளது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான தமாஷா படமும் நல்ல வசூலை கொடுத்துள்ளது. இதுநாள் வரை பாலிவுட் படங்களில் நடித்து இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே பரீட்சையமாக இருந்த தீபிகா விரைவில் உலகளவில் பரீட்சையமாக போகிறார். ஆமாம், தீபிகா ...

“காஞ்சனமாலா காதலின் தூதர் அல்ல” - சித்திக் காட்டம்..!

Posted:

கேரளாவில் கடந்த மூன்று மாதங்களாக என்னு நிண்டே மொய்தீன் படம் பற்றியும் அதில் இடம்பிடித்த உண்மை காதலர்களான காஞ்சனமாலா - மொய்தீன் பற்றியும் பேசாதவர் பாக்கியில்லை. குறிப்பாக தற்போது உயிரோடு இருக்கும் காஞ்சனமாலா மீது மீடியா வெளிச்சம் நன்றாகவே விழுகிறது. இந்த வெளிச்சம் காஞ்சனமாலாவின் கண்களை கூசவைக்கிறதோ இல்லையோ, ஒரு சிலரின் கண்களை ...

எளிமையாக நடந்த காதல் சந்தியாவின் திருமணம்!

Posted:

ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், ''காதல்'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சந்தியா. முதல்படத்தில் ஐஸ்-ஆக வந்து ரசிகர்களை கவர்ந்த சந்தியா அதன்பின்னர் டிஸ்யூம், கூடல்நகர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவருக்கும் ...

அந்திர முதல்வரின் உறவுக்காரரான மகேஷ் பாபு

Posted:

தெலுங்கு திரையுலகின் யங் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் மகேஷ் பாபு, ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றியை அடுத்து பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வருகின்றார். அதிக ரசிகர் பலம் கொண்ட மகேஷ் பாபு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு உறவுக்காரர் ஆகப்போவதே தற்போது டோலிவுட்டில் அதிகம் உலா வரும் செய்தியாம். மகேஷ் பாபுவின் ...

கீர்த்தி சுரேஷுடன் போட்டி போடும் அனிஷா அம்ரோஸ்

Posted:

பிக்சல் ட்ரீம்ஸ் இந்தியா எனும் பட நிறுவனம் நிவின் பாலி - நஸ்ரியா இணைந்து நடித்த நேரம் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது. தயாரிப்பாளர் சுதாகர் இப்படத்தை 123 என்ற பெயரில் பிக்சல் ட்ரீம்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவும் முன்வந்துள்ளார். அனில் கன்னெகன்டி இயக்கவிருக்கும் இப்படத்தில் நாயகனக சுதீப் கிஷாண் ...

பொங்கல் போட்டியிலிருந்து விலகும் ஜுனியர் என்.டி.ஆர்

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் டிக்டேட்டர், நாகார்ஜுனா நடிக்கும் சொக்கட்டே சென்னி நயனே, பவர் ஸ்டார் நடிக்கும் சர்தார் கபார் சிங், ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் நன்னுக்கு பிரேமதோ போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இயக்குனர் சுகுமார் ...

ஒரு கோடி சம்பளம் கேட்கும் இளம் நடிகர்

Posted:

டோலிவுட்டில் இயக்குனராக வேண்டும் என்ற முனைப்போடு நுழைந்த ராஜ் தருண் நடிகராக அசத்தி வருகின்றார். ராஜ் தருண் தனது அறிமுக திரைப்படமான உய்யலா ஜும்பலா எனும் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அப்படத்திற்கு பின்னர் ராஜ் தருண் நடித்த சினிமா சூபிஸ்தா மாமா எனும் திரைப்படமும் வெற்றியை பெற்றது. ராஜ் தருண் ...

பிரபல இயக்குனரை அவமதித்த ராம் சரண்?

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண், தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தயாராகி வருகின்றார். இப்படத்தில் நாயகிக்கான தேர்வு நடந்த போது டோலிவுட்டின் பிரபல இயக்குனர் சுகுமார், நடிகை ஹீபா படேலை அப்படத்தில் நடிக்க பரிந்துரை செய்துள்ளார். சுகுமார் திரைக்கதை எழுதி, தயரித்த குமாரி 21F ...

10-ம் தேதி தெறி க்ளைமாக்ஸ் பைட் சீன் படமாகிறது!

Posted:

மூன்று மாறுபட்ட கெட்டப்புகளில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தெறி. இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய், சமூக விரோதிகளை களையெடுக்கும் ஆக்சன் காட்சிகளை சமீபத்தில் கோவாவில் படமாக்கினார். அதற்காக ஒரு ஹாலிவுட் பைட் மாஸ்டரையும் வரவழைத்து இதுவரை விஜய் படங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக படமாக்கியுள்ளாராம். ...

விஷாலுக்காக காத்திருக்கும் பாண்டிராஜ்!

Posted:

பாயும்புலி படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் கதகளி. கிராமத்து பங்காளிகள் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் காதல், பாசம், காமெடி, ஆக்சன் எல்லாமே உள்ளதாம். குறிப்பாக, சூரி காமெடியனாக நடித்திருக்கிறாராம். இதற்கு முன்பு பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் மெயின் காமெடியனாக நடித்த ...

நான் அப்படி சொல்லவேயில்லை - தவறு இருந்தால் மன்னிக்கவும் - கமல் பல்டி!

Posted:

தமிழகத்தில் பெய்த கனமழையால் சென்னை, கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் முகாம்ங்களில் தங்கியுள்ளனர். இந்தசூழலில் இருதினங்களுக்கு முன்னர் கமல் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அரசு செயல் இழந்துவிட்டது, நாங்கள் கட்டிய வரிப்பணமெல்லாம் எங்கே.? என்பது போன்று பேட்டி ...

சிஐடி வேடத்தில் ஸ்ருதிஹாசன்!

Posted:

சிங்கம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைத்த டைரக்டர் ஹரி, சிங்கம்-2 படத்தில் சூர்யா-அனுஷ்கா ஜோடியோடு இன்னொரு கல்லூரி பெண் வேடத்தில் ஹன்சிகாவையும் நடிக்க வைத்தார். அதேப்போல் சிங்கம்-3 படத்திலும் சூர்யா-அனுஷ்கா ஜோடியை இணைத்திருப்பவர், இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசனை நடிக்க ...

பாண்டுவின் மகனுக்கு சான்ஸ் கொடுத்த பிரபுதேவா!

Posted:

சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோ, காமெடியன், டைரக்டர் என யாராக இருந்தாலும் தங்களது வாரிசுகளை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். அந்த வகையில், காமெடி நடிகர் பாண்டுவும், தனது மகன் பிண்டுவை பட்டாளம் என்ற படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு வெள்ளச்சி என்றொரு கிராமத்து படத்தில் நடித்தார் பிண்டு. ஆனால் அந்த படம் ...

விளம்பர படங்களுக்கு இசையமைக்கும் கார்த்திக்ராஜா!

Posted:

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா. பல படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். என்றபோதும், இன்னும் கவனிக்கப்படும் இடத்துக்கு அவர் வரவில்லை. மேலும், விஜயகாந்த் நடித்த அலெக்சாண்டர் படத்துக்கு இசையமைத்த கார்த்திக் ராஜா, அவரது மகன் சண்முகபாண்டியன் நடித்து வெளியான சகாப்தம் படத்துக்கும் இசையமைத்தார். தற்போது விக்னேஷ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™