Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அதானியின் 600 மெகாவாட் அனல் மின் நிலைய திட்டத்திற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு

Posted: 26 Dec 2015 10:47 PM PST

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரானவரும் அதானி குழுமத்தின் தலைவருமான அதானியின் 600 மெகாவாட் அனல் மின் நிலைய திட்டம் சத்தீஸ்கர் மாநில மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து தாமதமாகிறது. அங்குள்ள சர்குஜா மாவட்டத்தில் 150 மெகாவாட் திறன் கொண்ட 4 அனல் மின் ஆலைகளை அதானி சுரங்க குழுமத்தை சேர்ந்த நிறுவனம் நிறுவ

15 கோடி மக்கள் பலன் அடைந்த நேரடி மானிய திட்டம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

Posted: 26 Dec 2015 10:42 PM PST

மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலமாக உரை நிகழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடியின் 15-வது வானொலி உரை இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. பிரதமர் நரேந்திர மோடி மாதம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வாயிலாக 'மன் கி பாத்' (மனதில் உள்ளதை பேசுகிறேன்) என்ற

நேற்று பீஜிங், இன்று டெல்லி... நாளை சென்னை?

Posted: 26 Dec 2015 10:20 PM PST

அகண்ட பாரதத்தின் தலைநகரான டெல்லி, இந்த கடுங்குளிரிலும் தகிக்கிறது. காரணம், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அரசு மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் உஷ்ணம் தான். உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவை விட 10 மடங்கு அதிக மாசு நிறைந்த காற்றை மக்கள் சுவாசித்தால் எப்படி சும்மா இருக்க முடியும்? அதுதான் மக்களையும், சமூக ஆர்வலர்களையும் கொதித்தெழ செய்தது.

கோடிக்கணக்கான பணத்தை யாகத்துக்காக வீணடிப்பதா?: சந்திரசேகரராவுக்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 26 Dec 2015 10:16 PM PST

தெலுங்கானா முதல்– மந்திரி சந்திரசேகரராவ் மெடக் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் மகா சண்டியாகம் நடத்தி வருகிறார். யாகத்துக்காக கோடிக்கணக்கான அரசு பணம் செலவிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தனது சொந்தப் பணமே செலவிடுவதாக முதல்–மந்திரி சந்திரசேகரராவ் கூறினார்.

ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் ரோசைய்யா திடீர் சந்திப்பு

Posted: 26 Dec 2015 10:05 PM PST

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று தமிழ்நாடு கவர்னர் கே.ரோசைய்யா இன்று சந்தித்துப் பேசினார். தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் மெடக் மாவட்டம் எர்ரவள்ளி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது சொந்தப் பணம் ரூ.20 கோடி செலவில் மகாசண்டியாகம் நடத்தி வருகிறார். கடந்த 23–ந்தேதி தொடங்கிய இந்த யாகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம்: தரிசனத்துக்கு 14 மணி நேரம் ஆகிறது

Posted: 26 Dec 2015 09:25 PM PST

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாகவும், பஸ் போக்குவரத்து தடைபட்டதாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பக்தர்கள் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. பக்தர்கள் எந்தவித தாமதமும் இன்றி நேரடியாக மூலவரை தரிசிக்க முடிந்தது. மழை ஓய்ந்ததும் கோவிலுக்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

இந்திய கடற்படையின் சரக்கு கப்பலுக்குள் தண்ணீர் புகுந்தது: நடுக்கடலில் தத்தளித்த 8 சிப்பந்திகள் மீட்பு

Posted: 26 Dec 2015 08:48 PM PST

சரக்கு கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து நடுகடலில் தத்தளித்த 8 சிப்பந்திகள் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டனர். இந்திய கடற்படையின் சாம்ராத் கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தது. அப்போது முருடு பகுதியில் குஜராத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று

தேர்தலில் தோற்றதால் பழிக்குப்பழி: கடத்தி கற்பழிக்கப்பட்ட மாணவி தற்கொலை

Posted: 26 Dec 2015 08:36 PM PST

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றார். இது எதிர் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வெற்றி பெற்ற பெண்ணை பழி தீர்க்க திட்டமிட்டனர். சம்பவத்தன்று வெற்றி பெற்ற பெண்ணின் மகளான 11–ம் வகுப்பு மாணவி

இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றுகிறார்

Posted: 26 Dec 2015 08:29 PM PST

வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலமாக உரை நிகழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடியின் 15-வது வானொலி உரை இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

கடவுள் காப்பாற்றுவாராக! மோடியின் சர்ப்ரைஸ் விசிட்டால் கொந்தளித்த பாகிஸ்தான் நிருபர்: வைரல் வீடியோ

Posted: 26 Dec 2015 07:15 PM PST

பிரதமர் மோடி-நவாஸ் ஷெரீப் சந்திப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை முதல் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வரை பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், மோடியின் சந்திப்புக்கு எதிராக கொக்கரிக்கும் பாகிஸ்தான் நிருபரின் வீடியோ ஒன்று சமூக வலைஒதளங்களில்

மணிப்பூரில் லாரி பேட்டரிக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ.7 கோடி தங்கம் பிடிபட்டது

Posted: 26 Dec 2015 07:08 PM PST

மணிப்பூர் மாநிலத்தின் தவுபால் மாவட்டத்தின் பிரதான சாலையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் நடமாடும் சோதனைச் சாவடி அமைத்து அவ்வழியாக வரும் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டுக்

ஜம்முவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: குடும்பத்தை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்சென்ற இளைஞர் சாவு

Posted: 26 Dec 2015 06:57 PM PST

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் நடுங்கியதையடுத்து, வெளியே கொட்டிக்கொண்டிருந்த உறைபனியையும்

மோடி-நவாஸ் ஷெரீப் சந்திப்புக்கு அத்வானி வரவேற்பு

Posted: 26 Dec 2015 06:32 PM PST

ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் திடீரென்று பாகிஸ்தான் சென்று அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசியது பற்றி, டெல்லியில் நேற்று பாரதீய

உலக அளவில் கருச்சிதைவு, கருக்கலைப்பால் இந்திய பெண்கள் அதிகம் பாதிப்பு: ஆய்வில் தகவல்

Posted: 26 Dec 2015 04:23 PM PST

உலகில் உள்ள மற்ற நாடுகளை விட இந்திய பெண்கள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவால் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் இதனை கண்டறிந்துள்ளார். 2,400 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 32 சதவீதம் பெண்கள்

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஒருநாள் மீண்டும் ஒன்றுசேரும்: பா.ஜ.க., பொதுச்செயலாளர் ராம் மாதவ்

Posted: 26 Dec 2015 04:07 PM PST

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மூன்றுநாடுகளும் ஒருநாள் மீண்டும் ஒன்றுசேரும் என்று ஆர்.எஸ்.எஸ் நம்புவதாக பா.ஜ.க., பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் பயணங்களை முடித்துக் கொண்டு

நாட்டுக்காக சண்டையிட புதல்விகளை அனுப்புங்கள்: ராணுவ தளபதி தல்பீர் சிங்

Posted: 26 Dec 2015 03:32 PM PST

நாட்டுக்காக சண்டையிட உங்கள் புதல்விகளை அனுப்பி வையுங்கள் என்று ராணுவ தளபதி தல்பீர் சிங் வலியுறுத்தியுள்ளார். அரியான மாநிலத்தின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பிஷன் என்ற தனது சொந்த கிராமத்தில் பொதுக்கூட்டம்

விமான பயணத்தில் சைவ உணவு மட்டும்தானா?: ஏர் இந்தியாவிற்கு ஒமர் அப்துல்லா கேள்வி

Posted: 26 Dec 2015 03:12 PM PST

ஏர் இந்தியா உள்ளூர் விமானங்களில் 60 முதல் 90 நிமிடங்கள் வரையிலான பயணத்தில் இனி சைவ உணவுகள் மட்டுமே பயண நேரங்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நீண்ட நேர பயணத்தில் அசைவ உணவு வழக்கம்போல் வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

குதிரையில் வீட்டுக்கு சென்ற பீகார் மந்திரி

Posted: 26 Dec 2015 02:24 PM PST

ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பீகார் மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவர் தலைநகர் பாட்னாவில், தன் பெற்றோர் வீட்டில் இருந்து தனது அதிகாரபூர்வ இல்லத்துக்கு குதிரையில் சென்றார்.

கொல்கத்தா டம் டம் பூங்காவில் பயங்கர தீ விபத்து: ஒருவர் பலி, 150 பேர் படுகாயம்

Posted: 26 Dec 2015 02:09 PM PST

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள டம் டம் பூங்காவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 150-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பாகுஹலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரிசந்த் என்ற சிலெம்

ஒவ்வொருவரது கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவன்னு சொன்னீங்களே அருண்ஜெட்லி அது என்ன ஆச்சு?: ராம் ஜெத்மலானி

Posted: 26 Dec 2015 10:31 AM PST

நாட்டில் உள்ள ஒவ்வொருவரது கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவன்னு சொன்னீங்களே அருண்ஜெட்லி, என்ன ஆச்சு அந்த வாக்குறுதி என்று மூத்த வழக்கறிஞர் ராஜ் ஜெத்மலானி கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™