Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டிசம்பர் 19–ந் தேதி முதல் படகுசவாரி தொடக்கம்: இடுக்கி அணையை ஆண்டு முழுவதும் சுற்றிப்பார்க்கலாம்

Posted: 12 Dec 2015 11:02 PM PST

இடுக்கி அணையை இனி ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க கேரள அரசு அனுமதித்துள்ளது. கேரளாவில் உள்ள இடுக்கி அணை 'ஆர்ச்' வடிவில் கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள உயரமான (555 அடி) அணைகளில் ஒன்றான இந்த அணைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் மட்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் அணையை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

பாராளுமன்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு தினம்: உயிர் நீத்தவர்களுக்கு பிரதமர் மோடி மலரஞ்சலி

Posted: 12 Dec 2015 10:51 PM PST

தலைநகர் டெல்லியில் உள்ள பாரளுமன்றத்தின் மீது கடந்த 13-12-2001 அன்று ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் ஒன்பது பேர் பலியான சம்பவத்தின் 14-வது ஆண்டு நினவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

புதிய டி.வி. சேனல் தொடங்க லைசென்ஸ் கேட்டு 260 மனுக்கள் காத்திருப்பு

Posted: 12 Dec 2015 10:25 PM PST

நாட்டில் தற்போது 800-க்கும் அதிகமான தனியார் டி.வி. சேனல்கள் இயங்கிவரும் நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் புதிதாக லைசென்ஸ் கேட்டு 260 மனுக்கள் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் ஒடிசா, பீகார் மாநில சட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

Posted: 12 Dec 2015 10:04 PM PST

லஞ்ச, ஊழலில் ஈடுபடும் அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடத்தி அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை ஒடிசா மாநில அரசு கடந்த 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதேபோன்றதொரு சட்டத்தை பீகார் மாநில சட்டசபையும் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டுவந்தது.

சத்தீஷ்கரில் தாயின் கண்முன்னே 4 மாத குழந்தையை கொன்று புதைத்த மாவோயிஸ்ட்டுகள்

Posted: 12 Dec 2015 09:54 PM PST

சத்தீஷ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள தோட்கா கிராமத்தை சேர்ந்தவர் தாகி ஆய்து. சமீபத்தில் மாவோயிஸ்டுகள் இவரையும், மனைவி மற்றும் சகோதரி, குழந்தை ஆகியோரை கடத்திச் சென்றனர். போலீசுக்கு உளவு சொன்னதாக அவர்கள் மீது மாவோயிஸ்டுகள் குற்றம் சாட்டி

மராட்டிய முதல்–மந்திரி பதவியில் இருந்து என்னை நீக்க ராஜீவ் திட்டமிட்டார்: சரத்பவார் புத்தகத்தில் தகவல்

Posted: 12 Dec 2015 09:21 PM PST

75 வயதாகும் முன்னாள் மத்திய மந்திரி சரத்பவார் 'ஆன் மை டேர்ம்ஸ்' (எனது காலங்களில்) என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அரசியல் தொடர்பாக அவர் எழுதிய கருத்துக்கள் வெளியாகி வருகிறது. அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பற்றி சரத்பவார் கூறியிருப்பதாவது:–

கேரளாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் உம்மன்சாண்டிக்கு அனுமதி மறுப்பு

Posted: 12 Dec 2015 08:28 PM PST

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை கேரளா செல்கிறார். திருச்சூர், கொச்சி, கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 15–ந்தேதி கொல்லத்தில் நடைபெறும் கேரள முன்னாள் முதல்வர் சங்கரின் சிலை திறப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளாப்பள்ளி நடேசன் தலைமையிலான அமைப்பினர் செய்து

மராட்டிய அரசு மீது ஒரு பைசா கூட ஊழல் புகார் கூற முடியாது: அமித்ஷா சொல்கிறார்

Posted: 12 Dec 2015 07:38 PM PST

மராட்டிய அரசின் மீது எதிர்க்கட்சிகளால் ஒரு பைசா கூட ஊழல் குற்றச்சாட்டு தெரிவிக்க முடியாது என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மறைந்த பாரதீய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும் ஆன கோபிநாத் முண்டேக்கு பீட் மாவட்டம் பார்லியில் உள்ள வைத்யநாத்

நேஷனல் ஹெரால்டு வழக்கால் ஜி.எஸ்.டி. மசோதா முடக்கமா? ராகுல் காந்தி பதில்

Posted: 12 Dec 2015 05:57 PM PST

தற்போது நடந்து வரும் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின்போது, ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அதில் தீவிரமாகவும் உள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேறி விட்டு, மேல்-சபையில்

பருவ நிலை மாநாட்டு ஒப்பந்தம் இந்தியாவிற்கு மகிழ்ச்சியளிக்கிறது: பிரகாஷ் ஜவடேகர்

Posted: 12 Dec 2015 04:34 PM PST

பாரிஸ் பருவ நிலை மாநாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள ஒப்பந்தம் இந்தியாவிற்கு மகிழ்ச்சியளிப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பாரிஸில் செய்தியாள்ர்களிடம் பேசிய போது "பருவ நிலை மாற்றத்தை தடுப்பதற்கான செயல்திட்டம் மற்றும் அது

மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எதையும் செய்ய தயார்: அமெரிக்கா

Posted: 12 Dec 2015 04:15 PM PST

மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எதையும் செய்ய தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைதாகி 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் உலக வெப்பமயமாதல் ஒப்பந்தத்திற்கு 196 நாடுகள் ஒப்புதல்

Posted: 12 Dec 2015 12:40 PM PST

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் உலக வெப்பமயமாதல் ஒப்பந்தத்திற்கு 196 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 1-ம் தேதி பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷியா,

உ.பி. அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பிரதமர் மோடி நன்றி

Posted: 12 Dec 2015 10:22 AM PST

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியுடன் வாரணாசி சென்றார். இருவரும் புனிதமான கங்கை நதியை கவுரவிக்கும் வகையில் நதிக்கரையில் நடந்த கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதல் முறையாக இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு கார்கள் ஏற்றுமதி: பிரதமர் மோடி

Posted: 12 Dec 2015 06:45 AM PST

இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே வருகை தந்துள்ளார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து நடந்த இருநாட்டு தொழிலதிபர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், " இந்தியாவின் வளர்ச்சியில் ஜப்பானின் பங்கு பிரதானமாக இருக்கிறது. மேக் இன் இந்தியா அடிப்படையில் இந்தியாவில் இருந்து மாருதி சூசுகியின் கார்களை ஜப்பான்

கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஜப்பான் பிரதமர்

Posted: 12 Dec 2015 05:54 AM PST

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியுடன் வாரணாசி சென்றார். இருவரும் புனிதமான கங்கை நதியை கவுரவிக்கும் வகையில் நதிக்கரையில் நடந்த கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது ஜப்பான் பிரதமர் அபே, பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக

கவுரவமிக்க சர்வதேச மனித உரிமைகள் விருது பெறும் இந்திய ஆர்ச்பிஷப்

Posted: 12 Dec 2015 05:00 AM PST

இந்த வருடத்திற்கான கவுரவமிக்க சர்வதேச மனித உரிமைகள் விருது மத்தியப் பிரதேச மாநிலம், போபாலை சேர்ந்த ஆர்ச் பிஷப்பிற்கு வழங்கப்பட்டது. புதுடெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிக் மையத்தில், அனைத்து இந்திய மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் சமூக நீதிக்கான அமைப்பு ஒருங்கிணைப்பு செய்திருந்த நிகழ்ச்சியில், அமைதிக்கான தூதர் என்ற

சேவை வரியை அமல்படுத்தினால் ஆலைகளை மூடுவோம்: மிரட்டும் கோகோ கோலா

Posted: 12 Dec 2015 04:09 AM PST

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு சேவை வரியை அமல்படுத்தினால் இந்தியாவில் செயல்படும் கோகோ கோலா ஆலைகளை மூடுவோம் என பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா மிரட்டியுள்ளது. இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் அண்மையில் அளித்துள்ள பரிந்துரையில், சரக்கு-சேவை எனப்படும்

ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சியின் 2-ம் ஆண்டு நிறைவு விழா: அமித் ஷா பங்கேற்பு

Posted: 12 Dec 2015 03:47 AM PST

ராஜஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்த்ல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. அந்த கட்சியின் வசுந்தரா ராஜே சிந்தியா முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். ராஜஸ்தானில் பா.ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்து இரண்டு வருடங்கள் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து பொதுப்பேரணி நடத்த அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி-அபே இருவரும் வாரணாசி வந்தனர்: ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் மேள தாளத்துடன் வரவேற்பு

Posted: 12 Dec 2015 03:43 AM PST

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் பாரம்பரியம் மிக்க கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் நரேந்திர மோடியுடன் வாரணாசி வந்து சேர்ந்தார். தோல், ஷெனாய், டங்சென் ஆகிய இசைக்கருவிகளை இசைத்து

விவசாயிகளின் மூத்த தலைவர் சரத் ஜோஷி காலமானார்

Posted: 12 Dec 2015 02:37 AM PST

விவசாயிகளின் தலைவர்களில் பிரபலமானவரும் ஷேத்கரி சங்கடனா என்ற அமைப்பின் நிறுவனருமான சரத் ஜோஷி வயது முதிர்ச்சி காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 81. விவசாயிகளின் நன்மைக்காக கடந்த 1979ம் ஆண்டில் ஷேத்கரி சங்கடனா என்ற அமைப்பை தொடங்கிய அவர், அதன்பின் 1980-ம் ஆண்டில், வெங்காய


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™