Tamil Star |
- மிசிசாகாவில் சோதனை நடவடிக்கை – போதைப்பொருள், குண்டுதுளைக்காத அங்கி, துப்பாக்கி மீட்பு
- ரொரன்ரோ எக்ளிங்டன் அவனியூ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு
- பழமைவாதக் கட்சிக்கான இடைக்காலத் தலைவர் இன்று தெரிவு செய்யப்படுகிறார்
- புதிய லிபரல் அரசாங்கத்தின் ஆடசிக் காலம் சிறந்த காலமாக அமையும் – ஜஸ்டின் ரூடோ
- குளிர்பான பிரியரா நீங்கள்? காத்திருக்கும் பேராபத்து
- காராமணியில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா?
| மிசிசாகாவில் சோதனை நடவடிக்கை – போதைப்பொருள், குண்டுதுளைக்காத அங்கி, துப்பாக்கி மீட்பு Posted: 05 Nov 2015 07:38 PM PST
சோதனைக்கான அனுமதி பெறப்பட்ட நிலையில், டண்டாஸ் வீதி மற்றும் Confederation Parkway ஆகியவற்றின் சந்திப்பிற்கு அருகில் Argyle வீதியில் உள்ள வீடு ஒன்றை காவல்த்துறையினர் திங்கட்கிழமை சோதனையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை நடவடிக்கையின் போது மர்யுனா, கொக்கேன், ஹெரோயின் என்பவற்றுடன் வேறு போதை மாத்திரைகள் உள்ளிட்ட சுமார் 20,322 டொலர் மதிப்பான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைத்துப்பாக்கி, குண்டு துளைக்காத ஆடை என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் ஒளிப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் இதுவரையில் நால்வரைக் கைது செய்துள்ள காவல்த்துறையினர், அவர்கள் ஒவ்வொருவரும் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள திகதிகளையும் அறிவித்துள்ளனர். அதேவேளை இந்த விடயம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் குற்றப் புலனாய்வுக் காவல்த்துறையினரைஅல்லது காவல்த்துறையினரை அழைத்து தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். The post மிசிசாகாவில் சோதனை நடவடிக்கை – போதைப்பொருள், குண்டுதுளைக்காத அங்கி, துப்பாக்கி மீட்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ எக்ளிங்டன் அவனியூ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு Posted: 05 Nov 2015 10:04 AM PST ரொரன்ரோ எக்ளிங்டன் அவனியூ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 10.30 அளவில் Eglinton Avenue மற்றும் Brentcliffe வீதிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தாம் விரைந்து சென்றிருந்தபோது, அங்கு சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மோசமானநிலையில் காணப்பட்டதாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். உயிராபத்தான நிலையில் இருந்த […] The post ரொரன்ரோ எக்ளிங்டன் அவனியூ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பழமைவாதக் கட்சிக்கான இடைக்காலத் தலைவர் இன்று தெரிவு செய்யப்படுகிறார் Posted: 05 Nov 2015 09:31 AM PST
கட்சியின் தலைவராக இருந்த ஸ்டீபன் ஹார்ப்பருக்கு பதிலாகவே இந்த புதிய இடைக்காலத் தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் தோல்வியை அடுத்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஹார்ப்பர் விலகியிருந்தார். இதனால் வெற்றிடமாகியுள்ள தலைமைத்துவத்திற்கு, இன்று தெரிவாகவுள்ள இடைக்காலத் தலைமை தற்காலிக தீர்வாக அமையும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் தற்காலிக கட்சித் தலைவர் பதவிக்கு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறவுள்ள இந்த இடைக்கால தலைவர் தெரிவு நிகழ்வின் போது, தலைவர் பதவிக்காக போட்டியிடும் ஒவ்வொருவருக்கும், தாம் இந்த பதவியினை ஏற்பது எந்தவகையில் பயனுள்ள செயல் என்பதனை விளக்கிப் பேசுவதற்கு தலா மூன்று நிமிடங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த இடைக்கால தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையில் யார் யார் வாக்களிக்கவுள்ளனர் என்பது தொடர்பிலான தெளிவான விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. அதேவேளை இன்று இடைக்காலத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அனைவரும் தமக்கான ஆதரவினை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களில் சிலர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும், அவரது போக்கையே இவர்களும் கடைப்பிடிப்பதாகவும் சர்ச்சைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. The post பழமைவாதக் கட்சிக்கான இடைக்காலத் தலைவர் இன்று தெரிவு செய்யப்படுகிறார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய லிபரல் அரசாங்கத்தின் ஆடசிக் காலம் சிறந்த காலமாக அமையும் – ஜஸ்டின் ரூடோ Posted: 05 Nov 2015 09:13 AM PST
தற்போது அமையப் பெற்றுள்ள புதிய லிபரல் அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் சிறந்த காலமாக அமையும் என புதிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள கனேடிய தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு நேற்றைய நாள் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தானும் தனது அமைச்சரவையும் கனேடிய வெளியுறவுக் கொள்கை இலக்குகளை சிறந்த முறையில் மாற்றியமைப்பதற்கு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கனடாவை பிரதிநிதித்துவப் படுத்தி வெளிநாடுகளில் பணியாற்றிவரும் அரசதந்திரிகளின் செயற்பாடுகள் நாட்டின் நலனுக்கு மிகவும் முக்கியமானது என்பதை வலியுறுத்திய புதிய பிரதமர், தமது ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளுடனான கனடாவின் உறவுகளில் சிறந்த மாற்றங்கள் உருவாகும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். கனடா மிகவும் அனுபவமுள்ள, ஆற்றலுள்ள அரசதந்திரிகளை கொண்டுள்ளது என்றும், இவ்வாறான நிலையில் தனது தலைமைத்துவத்தின் கீழ் அவர்களுக்கு அனைத்துவித உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் வாக்குறுதியளித்துள்ளார். அதேவேளை அரசதந்திரிகள் சுதந்திரமாக செயற்படக் கூடிய நிலை உருவாக்கப்படும் எனவும், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நிலவியதைப் போன்ற அனாவசிய கட்டுப்பாடுகள் இல்லாத வகையில் புதிய அரசாங்கம் செயற்படும் என்றும் புதிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். The post புதிய லிபரல் அரசாங்கத்தின் ஆடசிக் காலம் சிறந்த காலமாக அமையும் – ஜஸ்டின் ரூடோ appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| குளிர்பான பிரியரா நீங்கள்? காத்திருக்கும் பேராபத்து Posted: 05 Nov 2015 07:47 AM PST
இன்றைய காலகட்டத்தில் தண்ணீரை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது குளிர்பானம் தான். சோர்வு ஏற்பட்டாலோ, விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ குளிர்பானத்தை அருந்துகிறோம், ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள் ஒன்றல்ல. இந்நிலையில் கியாஸ் நிரப்பப்பட்ட சோடா மற்றும் குளிர்பானங்களால் இதய நோய்கள் ஏற்படும் என தெரியவந்துள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த மருத்துவ குழுவொன்று கடந்த 12 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 12 ஆண்டுகளாக தொடர்ந்து தினமும் கியாஸ் நிரப்பப்பட்ட குளிர்பானம் குடிக்கும் 12,000 பேரை ஆய்வுக்கு எடுத்து பரிசோதித்தனர், அவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இவற்றை அருந்துவதால் 23 சதவீதம் இதய பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. The post குளிர்பான பிரியரா நீங்கள்? காத்திருக்கும் பேராபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| காராமணியில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா? Posted: 05 Nov 2015 07:07 AM PST
இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அடங்கியுள்ள சத்துக்கள் பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், விட்டமின் கே, விட்டமின் சி மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மருத்துவ பயன்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். வயிற்றுப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு மிகவு உகந்தது. உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காராமணியை காலை மற்றும் மதியம் எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் 1/2 கப் அளவு காரமணியில் 1 கிராம் கொழுப்பு உள்ளது. காராமணியில் உள்ள துத்தநாக உப்பு, லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்' என்ற சமிக்ஞையைத் தந்துவிடும். இதில் நிறைந்துள்ள விட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. Anti-oxidants அதிகமாக நிறைந்துள்ளதால் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்துவிடும். சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம். flavonoids நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கும். பக்கவாதம்(stroke), உயர் இரத்த அழுத்தம்(hypertension), ஆஸ்டியோபோரோசிஸ்( osteoporosis) போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும். முகச்சுருங்களை போக்கி தோல்களை மென்மையாக வைத்திருக்க உதவும், மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. காராமணி சாதம் வானலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதோடு பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து மசிந்து வரும் வரை வதக்கவும். 2. குக்கரில் அரிசி, காராமணி, புளி தண்ணீர் ஆகியவற்றை எடுத்து வைக்கவும். 3. தக்காளி நன்கு மசிந்தவுடன், குழம்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி, குக்கரில் சேர்க்கவும். 4. அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கர் மூடி போட்டு மூடி 3 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். இப்பொழுது சுவையான காராமணி சாதம் தயார். பயன்கள் நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும். The post காராமணியில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மிசிசாகாப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திங்கட்கிழமை நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள், குண்டுதுளைக்காத அங்கி, துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும். இவை கைப்பற்றப்பட்டமையை அடுத்து அவற்றுடன் தொடர்புடைய நால்வர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்தள்ளனர்.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவையைக் கொண்ட லிபரல் அரசாங்கம் நேற்றைய தினம் பதவியேற்றுள்ளது.
கியாஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்களை அருந்தினால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.