Tamil Star |
- ஸ்காபரோவில் கத்திக்குத்துச் சம்பவம்
- கனேடியர்களை விடுவிப்பதற்கு கப்பம் கோரும் பிலிப்பீ்ன்ஸ் ஆயுதக் குழு
- வாழைப்பூ வடகம் சாப்பிடுங்கள்! பலனை பெறுங்கள்
- தேர்தல் தோல்வியின் பின்னர் முதல் முறையாக ஒன்று கூடுகின்றனர் NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இன்று புதிய அரசாங்கம் பதவி ஏற்பு – முதல் அமைச்சரவையும் இன்றே கூடுகிறது
| ஸ்காபரோவில் கத்திக்குத்துச் சம்பவம் Posted: 04 Nov 2015 07:53 PM PST
இன்று அதிகாலை 1 மணிக்கு சற்றுப் பின்னராக மார்க்கம் வீதி மற்றும் எக்லிங்டன் அவனியூப் பகுதியில் அந்த கத்திகுத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அந்த ஆணின் வயிற்றில் காயம் ஏற்படுத்தப்பட்டள்ளதாகவும், எனினும் அவருக்க உயிராபத்து இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்பான சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை. அத்துடன் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. The post ஸ்காபரோவில் கத்திக்குத்துச் சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனேடியர்களை விடுவிப்பதற்கு கப்பம் கோரும் பிலிப்பீ்ன்ஸ் ஆயுதக் குழு Posted: 04 Nov 2015 04:15 PM PST
பிலிப்பீன்சின் தென்பகுதி காடுகளுக்குள் கடத்தி வைக்கப்பட்டுள்ள அவர்களை விடுவிப்பதற்கு அறுபது மில்லியன் டொலர்களுக்கம் அதிகமான தொகையினை அவர்கள் கப்பமாக கோருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கப்பம் கொடுத்து விடுவிக்கும் கொள்கையை தமது அரசாங்கம் கொண்டிருக்கவில்லை எனவும், முடிந்தவரையில் பாதுகாப்பாக அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிலிப்பீன்சின் இராணுவ தளபதி கூறியுள்ளார்.
சுற்றுலாத் தளம் ஒன்றில் இருந்த இரண்டு கனேடியர்களும், ஒரு நோர்வே நாட்டவரும் கடத்தப்பட்ட நிலையில், பிலிப்பீன்சின் அபு சயாப் முஸ்லிம் ஆயுதக் குழு அவர்களை கடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலும், பிலிப்பீன்சிலும் தடை செய்யப்பட்டுள்ள இந்த அபு சயாப் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம், முதன் முறையாக இந்த கடத்தல் தொடர்பில் உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. The post கனேடியர்களை விடுவிப்பதற்கு கப்பம் கோரும் பிலிப்பீ்ன்ஸ் ஆயுதக் குழு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாழைப்பூ வடகம் சாப்பிடுங்கள்! பலனை பெறுங்கள் Posted: 04 Nov 2015 03:47 PM PST
மூல நோய்கள், இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், சீதபேதி, வாய்ப்புண் போன்றவற்றிற்கு தீர்வு தரும். வாழைப்பூ வடகம் தேவையானவை: வாழைப்பூ - 4 மடல்கள், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, உப்பு -தேவையான அளவு. செய்முறை வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்). பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை. கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதை, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம். பலன்கள் மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கும். அதிக ரத்தப்போக்கை (அது மூலமாக இருந்தால்கூட) நிறுத்த வல்லது. The post வாழைப்பூ வடகம் சாப்பிடுங்கள்! பலனை பெறுங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேர்தல் தோல்வியின் பின்னர் முதல் முறையாக ஒன்று கூடுகின்றனர் NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் Posted: 04 Nov 2015 07:35 AM PST
கடந்த நாடாளுமன்றில் 95 ஆசனங்களைப் பெற்ற இரண்டாவது நிலையில் எதிர்க்கட்சியாக இருந்த புதிய சனநாயக கட்சிக்கு, இந்த முறை 44 ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் தோல்வியின் பின்னர், புதிய சனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினமே முதன் முறையாக ஒட்டாவாவில் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். தேர்தல் தோல்வியின் பின்னர் பொதுமக்கள் பார்வையில் பெரிதும் படாமல் இருந்து வந்த புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair உம் எண்ணிக்கையில் பெரிதும் குறைவடைந்துள்ள தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்திக்கவுள்ளார். புதிய சனநாயக கட்சியின் தலைவர் இன்றைய தனது உரையின் போது தேர்தல் முடிவுகள் தாம் எதிர்பார்த்தாவாறு அமையாது விட்டாலும், மக்களின் ஆணையை மதிப்பதாக கூறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை தற்போது தெரிவாகியுள்ள தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் புதியவர்கள் எனவும், அனைவரையும் சந்திப்பதில் தாம் மிகவும் ஆவலாக உள்ளதாகவும், புதிய சனநாயக கட்சியின் அவைத் தலைவர் தெரிவித்துள்ளார். The post தேர்தல் தோல்வியின் பின்னர் முதல் முறையாக ஒன்று கூடுகின்றனர் NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இன்று புதிய அரசாங்கம் பதவி ஏற்பு – முதல் அமைச்சரவையும் இன்றே கூடுகிறது Posted: 04 Nov 2015 07:18 AM PST
இந்த அமைச்சரவைக் கூட்டம் பிற்பகல் நடைபெறும் என்றும், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் காலத்தில் லிபரல் கட்சியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பிலான நடவடிக்கைகளை அவர்கள் இன்று ஆரம்பிப்பார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சி கடந்த சுமார் பத்து வருடங்களாக ஆட்சி புரிந்து வந்த நிலையில், இன்று அமையவுள்ள புதிய லிபரல் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னைய அரசாங்கத்திலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீபன் ஹார்ப்பரின் ஆட்சிக் காலத்தின் போது அமைச்சரவைக்கு வெளியே ஊடகவியலாளர்கள் காத்திருந்து தகவல் சேகரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் என கூறப்படுகிறது. அத்துடன் இன்றைய புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வு பல்வேறு மாற்றங்களின் தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்டின் ரூடோவும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் இன்றைய பதவியேற்பு நிகழ்வுக்ககு வழமைக்கு மாறான முறையில் பேரூந்து ஒன்றிலேயே வருகை தரவுள்ளனர், ஆளுநர் மாளிகை வாயிலில் இருந்து மண்டபத்திற்கு நடந்து செல்லவுள்ளமையும் முன்னுதாரண நிகழ்வாக நோக்கப்படுகிறது. அத்துடன் முதன் முறையாக இந்த நிகழ்வுக்கு பொதுமக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post இன்று புதிய அரசாங்கம் பதவி ஏற்பு – முதல் அமைச்சரவையும் இன்றே கூடுகிறது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஸ்காபரோவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றில் 46 வயது ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பிலிப்பீன்சிஸ் வைத்து கடத்தப்பட்ட இரண்டு கனேடியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை விடுவிப்பதற்கு பிலிப்பீன்ஸ் ஆயுதக் குழுவினர் கப்பம் வழங்குமாரு கோரியுள்ளனர்.
வாழைப்பூவை உணவாக உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்புத்தன்மை குறைந்துவிடும்.
இம்முறை நடைபெற்ற கனேடியப் பொதுத் தேர்தலில் புதிய சனநாயகக் கட்சியினர் எதிபாராத அளவான தோல்வியத் தழுவிக்கொண்டனர்.
ஜஸ்டின் ரூடோ தலைமையிலான கனடாவின் புதிய அரசாங்கம் இன்று அதிகாரபூர்வமான பதவியேற்கிறது. பதவியேற்பு வைபவம் நிறைவடைந்ததும் இன்றைய தினமே பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான அமைச்சரவையும் முதன் முறையாக கூடவுள்ளது.