Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தினமும் காலையில் கற்றாலை ஜூஸ் குடிங்க: ஆரோக்கியத்தை பாருங்க!

Posted: 27 Nov 2015 05:42 PM PST

k

kகற்றாலை சரும அழகிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், ஆரோக்கியம் மேம்படும்.

கற்றாழை ஜெல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

• மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வரலாம். மேலும் கற்றாழை ஜூஸ் மலக்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

• உங்களுக்கு செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.

• நீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் கற்றாழை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.k

• உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றிவிடும்.

• கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

• தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும்.

• இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

The post தினமும் காலையில் கற்றாலை ஜூஸ் குடிங்க: ஆரோக்கியத்தை பாருங்க! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா நாடாளுமன்றத்திலும் தமிழின நினைவெழுச்சி நாள் அனுஷ்டிப்பு

Posted: 27 Nov 2015 04:08 PM PST

canada_parliment_001

canada_parliment_001தமிழீழ நினைவெழுச்சி நாளானது இன்று கனடா நாடாளுமன்றத்திலும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

கனடா ஒன்ராரியோ நாடாளுமன்றில் கொன்சவேட்டிவ் ஒன்ராரியோ மாகாணசபை உறுப்பினர் Jack மச்லறேன் இன்று தமிழ் நினைவெழுச்சி நாள் பற்றி ஓர் சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய Jack MacLaren, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் உயிரிழந்த தமது உறவுகளை கார்த்திகை 27இல் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை போர்க்குற்றம் புரிந்த எவரும் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.3

45canada_parliment_001

மேலும் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்புத் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாட்டினூடாக கனடிய மக்களும் அறிந்துள்ளதாக அவர் கூறினார்.

இழந்த தமது உறவுகளை உணர்வு பூர்வமாக நினைவு கூரும்; இந்நாளில், தமிழினவழிப்பின் நீதிக்காக போராடுவதுடன், தாய் நாட்டில் இனவெறியற்ற அமைதியான சுழலை ஏற்படுத்தும் முகமாகவும் தமிழ் மக்கள் செயற்பட்டு வருவதாக Jack MacLaren தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

The post கனடா நாடாளுமன்றத்திலும் தமிழின நினைவெழுச்சி நாள் அனுஷ்டிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அகதிகளுக்கான ஐ.நா அமைப்பிற்கு 100 மில்லியன் டொலர்களை வழங்குகிறது கனடா

Posted: 27 Nov 2015 09:57 AM PST

Refugee_-_un_-_11272015

Refugee_-_un_-_11272015கனேடிய மத்திய அரசாங்கம் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு 100 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.

அகதிகள் மீள்குடியேற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியை கனேடிய மத்திய அரசாங்கம் வழங்குகின்றது.

அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகராலயம் சிரியாவில் இருந்து வெளியேறிவரும் அகதிகளுக்கான நிவாரண உதவிப் பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில், அதற்கு பெருமளவு நிதி தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் இருந்து லெபனான், துருக்கி, யோர்தான், ஈராக் போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள 4.3 மில்லியன் அகதிகளுக்கு உதவுவதற்கு, 2015ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் டொலர்கள் தேவை என ஐ.நா அறிவித்திருந்த நிலையில், அந்த தொகையின் 45 சதவீதத்தினை மட்டுமே அதனால் திரட்ட முடிந்துள்ளது.

இந்த நிலையிலேயே லிபரல் அரசாங்கம் 100 மில்லியன் டொலர்களை வழங்குவதான உதவித் திடடத்தினை அறிவித்துள்ளது.Refugee_-_un_-_11272015

கனடா அகதிகள் விவகாரத்தில் தனது வலுவான ஆதரவினை வெளிக்காட்டியுள்ளது என ஐ.நாவுக்கான கனேடிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ஐ.நாவுக்கான நிதி ஆதரவினையும் வழங்கும் இந்த நடவடிக்கை மற்றும், 25,000 அதிகளை கனடாவில் குடியேற்றுவதான அசாதாரண திட்டத்தனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை என்பன அதனை உறுதி்ப்படுத்துவதாகவும் அவர் கூறியள்ளார்.

அகதிகளுக்கான உதவித் திட்டத்தினை மேற்கொள்வதற்கான நிதிமூலம் தமக்கு தொடர்ந்தும் பற்றாக்குறையாகவே உள்ளதாகவும், இது அதிஸ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகையதான ஒரு நிலையில் கனடாவின் அகதிகள் தொடர்பிலான முனைப்புகள் மிகவும் ஆதரவு மிக்கதாக அமைந்துள்ளதாகவும் அவர் வரவேற்றுள்ளார்.

The post அகதிகளுக்கான ஐ.நா அமைப்பிற்கு 100 மில்லியன் டொலர்களை வழங்குகிறது கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோவின் வடபகுதியில் கத்திக்குத்துச் சம்பவம்

Posted: 27 Nov 2015 09:31 AM PST

Tpronto_police_-_11142015

Tpronto_police_-_11142015ஸ்காபரோவின் வடபகுதியில் நேற்று இரவு கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களுக்கு உயிராபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கத்திகுத்துச் சம்பவம் நேற்று இரவு மக்நிக்கோல் அவனியூ மற்றும் டேர்பினா அவனியூ பகுதியில், 2190 மார்க்கம் வீதியில் அமைந்துள்ள, மார்க்கம் மாநாட்டு மண்டபத்தின் வரவேற்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட அந்த பகுதியில் நேற்று இரவு நிகழ்வொன்று நடைபெற்றதாகவும், அந்த நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர் மோதல் ஏற்பட்டதாகவும், அதன் போதே இந்த மூவரும் கத்திக்குத்துக்கு இலங்கானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.Tpronto_police_-_11142015

அத்துடன் அவர்கள் மீது கத்திக்குத்தை மேற்கொண்டவர்கள் யார் என்பதும் தெரியவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பில் காவல்த்துறையினர் நடாத்தியா விசாரணைகளில் இருந்து கத்திக்குத்தை மேற்கொண்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக காவல்த்துறையினர் இதுவரை இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவர்களைத் தவிர வேறும் சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனரா என்பது தொடர்பான விபரங்களை காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை 416-808-4200 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு ரொரன்ரோ காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ஸ்காபரோவின் வடபகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™