Tamil Star |
- களாக்காயின் மருத்துவ பயன்கள்!
- மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதலில் ஈடுபடும் கனடாவின் போர் விமானங்கள் மீட்டுக்கொள்ளப்படும்?
- நீண்டகால திட்டங்களே நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு உதவும் – ஜி20 மாநாட்டில் பிரதமர்
- அகதிகளை உள்வாங்கும் திட்டத்தினை கனடா மாற்றிக்கொள்ள தேவையில்லை
| Posted: 16 Nov 2015 05:58 PM PST
இது, மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு நல்லது. பற்களில், ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்தக் கூடியது. விட்டமின் சி குறைபாடுகளால் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. பசியை தூண்டுகிறது. ஈரலுக்கு பலம் தரக் கூடியது. மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கிறது. அதே போல களாக்காயின் வேர்களை பயன்படுத்தி அதி தாகம், நாவறட்சிக்கான ஒரு எளிமையான மருந்தை தயார் செய்யலாம். தேவையான பொருட்கள் களாக்காய் செடியின் வேர்ப்பொடியை ஒரு ஸ்பூன் அதனுடன் சம அளவு சர்க்கரை ஆகியவற்றை எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இதை காலை, மாலை இரு வேளையும் எடுத்து வந்தால், நா வறட்சி, அதி தாகம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். குறிப்பு; தொண்டைவலி உள்ளவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது. The post களாக்காயின் மருத்துவ பயன்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதலில் ஈடுபடும் கனடாவின் போர் விமானங்கள் மீட்டுக்கொள்ளப்படும்? Posted: 16 Nov 2015 10:29 AM PST
கனடாவில் தற்போது ஆட்சி அமைத்துள்ள ஜஸ்டின் ரூடோ தலைமையிலான புதிய லிபரல் அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை பாரீசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான வான் தாக்குதல் அணியில் இருந்து தனது போர் விமானங்களை மீட்டுக் கொள்வதான கனடாவின் முடிவு,பலத்த விவாதங்களை தோற்றுவிக்கக்கூடும் என கூறப்படுகிறது. இதேவேளை அவ்வாறான விவாதங்கள் முன்வைக்கப்படடாலும், போர் விமானங்களை மீட்டுக் கொள்வதான கனடாவின் முடிவினை மீள்பரிசீலிப்பதற்கான சந்தர்ப்பங்ள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாக நிபுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
போர் விமானங்களை மீட்டுக் கொள்ளும் முடிவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் அதிபர் அலுவலகமும் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில், பாரீசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள், ஜஸ்டின் ரூடோ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் திட்டங்களில் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை என்றே கொள்ளப்பட வேண்டும் என ஆய்வாளர்க் கருத்துரைத்துள்ளனர். The post மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதலில் ஈடுபடும் கனடாவின் போர் விமானங்கள் மீட்டுக்கொள்ளப்படும்? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீண்டகால திட்டங்களே நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு உதவும் – ஜி20 மாநாட்டில் பிரதமர் Posted: 16 Nov 2015 10:18 AM PST
துருக்கியில் நேற்று ஆரம்பமான G20 மாநாட்டில் வர்த்தக பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். உட்கட்டுமானங்கள் மற்றும் இளைய சமுதாயத்தின் வளர்ச்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீண்டகால முதலீடுகளே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். எமது நாட்டுக்குள் எமது சமுதாயத்துக்குள், எமது மக்களுக்குள் முதலீடுகளை மேள்வதே நாட்டின் நீண்டகால வளர்ச்சிப் பாதைக்கு பலமான அடித்தளமாக அமையும் என்பதே தனது நம்பிக்கை உள்ளது என அவர் கூறியுள்ளார். அதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்பதை அண்மையில் இடம்பெற்று முடிந்த தேர்தல்களுக்கான பரப்புரைகளின் போது அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக நாட்டின் உள் கட்டுமானங்களில் முதலீடுகளை மேற்கொண்டு உள்ளக வளர்ச்சிகளை பலப்படுத்துவதே கனடாவுக்கு மட்டுமின்றி உலகநாடுகளுக்கம் நன்மை பயக்கும் விடயமாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை 25,000 சிரிய அகதிகளை கனடாவுக்குள் உள்வாங்கும் தமது திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதையும் அவர் மீள் உறுதிப்படுத்தியுள்ளார். கனடா அனைத்துவித மக்களின் தனித்துவங்களையும், கலாச்சாரங்களையும் உள்வாங்கிக் கொண்டு அவற்றை பகிர்ந்து வாழும் ஒரு நாடே அன்றி கலாச்சார வேறுபாடுகளை பெரிதுபடுத்தும் நாடு அல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், ஏனைய நாடுகளையும் இதனைப் பின்பற்ற வேண்டும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். The post நீண்டகால திட்டங்களே நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு உதவும் – ஜி20 மாநாட்டில் பிரதமர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அகதிகளை உள்வாங்கும் திட்டத்தினை கனடா மாற்றிக்கொள்ள தேவையில்லை Posted: 16 Nov 2015 10:14 AM PST
"சில தினங்களின் முன்னர் பாரீசில் பயங்கரவாத தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதை நினைவு படுத்திய அவர் அந்த தாக்குதலுக்காக கனடா அகதிகளை உள்வாங்கும் தனது கொள்கையை மாற்ற வேண்டியது இல்லை என்று தெரிவித்துள்ளார். கனடா போன்றே பிரான்சும் எப்போதும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளார்களுக்கு அடைக்கலம் வழங்கிவரும் நாடு என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாரீசில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் சிரிய கடவுக் சீட்டைக் கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், சிரிய அகதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பிரான்சின் கொள்கைகளில் மாற்றம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நம்மிடம் தஞ்சம் நாடிவரும் அகதிகள் காட்டுமிராண்டிகள் அல்ல என்பதையும், காட்டுமிராண்டிகளிடம் இருந்து தப்பித்து வருபவர்களே அவர்கள் என்பதையும் அவர் விபரித்துள்ளார். ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் கொடூரங்களில் இருந்து தப்பித்து வரும் மக்கள், தாம் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தையே தம்மிடம் கோருகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இடம்பெற்ற தாக்குதல்களையும், சிரிய அகதிகளின் அவலத்திற்கு தாம் வழங்கும் அடைக்கலத்தினையும் சிலர் ஒன்றாக்கி குழப்பமான கருத்துக்களை ஏற்படுத்த முயற்சிக்கின் போதிலும், அதற்கு இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சிரிய அகதி மக்களுக்கு கனடாவில் உரிய அரசியல் தஞ்சத்தின வழங்கும் திட்டத்தினை, பாரீஸ் தாக்குதல்களை காரணமாக கொண்டு நிறுத்துவதற்கோ மாற்றுவதற்கோ சிந்திக்க வேண்டிய தேவை இல்லை எனவும் கனடாவுக்கான பிரான்ஸ் தூதர் மேலும் தெரிவித்துள்ளார். The post அகதிகளை உள்வாங்கும் திட்டத்தினை கனடா மாற்றிக்கொள்ள தேவையில்லை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

களாக்காய் ஏராளமான தாதுக்களையும், விட்டமின்களையும் கொண்டுள்ளது.
ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல் குழுவில் உள்ள தமது போர் விமானங்களை மீட்டுக் கொள்வதான முடிவினை கனடா அறிவித்துள்ளது.
குறுகிய கால இலாபங்களை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் முதலீடுகளை விட நீண்டகால திட்டங்களே நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
சிரிய அகதிகளை உள்வாங்கும் திட்டத்தினை கனடா மாற்றிக்கொள்ள வேண்டும் என்றில்லை என கனடாவுக்கான பிரான்ஸ் தூதுவர் தெரிவித்துள்ளார்.