Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


1500 தியேட்டர்களில் இஞ்சி இடுப்பழகி- 27ம் தேதி ரிலீஸ்

Posted:

வருகிற தீபாவளியன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இஞ்சி இடுப்பழகி வருகிற 27ந் தேதி ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. உலகம் முழுவதும் 1500 தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமா ஏற்பாடு செய்திருக்கிறது.

ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ...

இந்தி, தெலுங்கில் வெளியாகிறது சவுகார் பேட்டை

Posted:

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் அடுத்து கன்னியும் காளையும் செம காதல் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கினார். கரண் ஹீரோவாக நடித்தார். அந்த படம் வியாபாரமாகவில்லை. அதை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு சவுகார்பேட்டை என்ற பேய் பட ஸ்கிரிப்டை உருவாக்கினார். சாட்டை படத்தை தயாரித்த ஜான்மேக்ஸ் தயாரிக்க ...

பாலிவுட் நடிகையானார் மனீஷாஸ்ரீ

Posted:

இருக்கு ஆனா இல்ல படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் மனீஷாஸ்ரீ அதற்கு பிறகு அவரை ஆளையே காணவில்லை. இப்போது அவர் பாலிவுட் நடிகை ஆகிவிட்டார். ட்ரீஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் படம். அவருக்கு ஜோடியாக கதை திரைக்கதை வசனம் படத்தில் நடித்த சந்தோஷ் நடிக்கிறார். லோகேஷ் என்ற புதுமுக நடிகரும் ...

டிரம்ஸ் இசை கல்லூரி தொடங்குகிறார் சிவமணி

Posted:

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவமணி உலகபுகழ்பெற்ற டிரம்ஸ் இசை கலைஞர். உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருப்பவர். டி.ராஜேந்தர், இளையராஜா, எம்.எஸ்.விஸ்வாநதன் குழுவில் டிரம்ஸ் வாசித்த சிவமணி ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்தான டிரம்ஸ் கலைஞர். சிவமணி இசையை முறையாக கற்றவரில்லை. அதனால் முறைப்படி இசை கற்று பட்டம்பெற வேண்டும் என்பது அவர் ஆசையாக இருந்தது. ...

தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம்: நடிகர் சங்கம் அமைக்குமா?

Posted:

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். 1936 முதல் 1943 வரை தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர். நடித்த படங்கள் 13. அவற்றில் 6 படங்கள் சூப்பர் ஹிட். லட்சுமி காந்தன் கொலை வழக்கிற்கு பிறகு பாகவதரின் வாழ்க்கை மாறியது. சிறையிலிருந்து விடுதலையானதும் சொந்தமாக படம் தயாரித்து நடித்தார். அது தோல்வி அடையவே வறுமை வாழ்க்கைக்கு ...

2 கோடி சம்பள பாக்கி: தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர ஐஸ்வர்யாராய் முடிவு

Posted:

நடிகை ஐஸ்வர்யாராய் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியில் நடித்த படம் ஜாஸ்பா. இதில் நடிக்க ஐஸ்வர்யாராய்க்கு 3 கோடி சம்பளம் பேசப்பட்டது. அதில் ஒரு கோடி படத்தின் பூஜை அன்றே கொடுக்கப்பட்டது. மீதி பணமான 2 கோடியை படம் முடிந்ததும் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் படம் தயாரிப்பில் இருந்தபோதே நிதி சிக்கலில் சிக்கிய ...

இன்று முதல் விஜய் டி.வியின் புதிய தொடர் களத்து வீடு!

Posted:

திரைப்படங்களின் தரத்துக்கு நிகராக வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்புவது விஜய் டி.வியின் வழக்கம். அந்த வரிசையில் அடுத்து வரும் தொடர் களத்து வீடு. இன்று முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.
சங்கரபாண்டியன், தேவிப்ரியா, சிவன் ஸ்ரீனிவாசன், அனிலா, மாணிக்கம், ராஜேஷ், காயத்ரி, ஹேமா, ...

நவ-19ல் கல்ப் நாடுகளில் மம்முட்டியின் 'பத்தேமாறி' ரிலீஸ்..!

Posted:

கேரளாவை பொறுத்தவரை கல்ப் நாடுகள் எனப்படும் அரபுநாடுகளுக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக வேலை தேடிச்செல்வோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் போகிறது.. அவர்களின் பயணத்தையும் அதில் உள்ள வலியையும் இதுநாள்வரை யாரும் படமாக எடுத்ததில்லை.. ஆகையால் அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை உரக்க சொல்லும் விதமாக மம்முட்டி நடிப்பில் வெளியாகி ...

அர்ச்சனா கவியின் நிச்சயதார்த்தம் இனிதே நடந்தது..!

Posted:

இப்போது மற்ற நடிகைகளைப்போல மலையாள நடிகை அர்ச்சனா கவிக்கும் திருமண ஆசை துளிர்விட்டு, இன்று திருமண நிச்சயதார்த்தம் வரை வந்துள்ளது.. வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'அரவான்' படத்தில் தன்சிகா தவிர இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்தாரே அவர்தான் இந்த அர்ச்சனா கவி. மாப்பிள்ளை வேறு யாருமில்லை.. மேடைக்கச்சேரிகள் ...

மோகன்லால்-ரோஷன் நான்காவது முறை மெகா கூட்டணி..!

Posted:

தமிழில் வெளியான '36 வயதினிலே' படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான் மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. இந்தப்படத்தை வைத்து இவரை 'மாணிக்கம்' என சாதாரணமாக நினைத்து விட வேண்டாம்.. மலையாளத்தில் மோகன்லாலை வைத்து மூன்று படங்களை இயக்கிய 'பாட்ஷா' இவர். இவரது திரையுலக ஆரம்பமே மோகன்லாலை வைத்து இயக்கிய ...

நிவின்பாலியின் ஆக்சன் ஹீரோ அவதார் ஒர்க் அவுட் ஆகுமா..?

Posted:

மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி தற்போது நடித்துவரும் ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்துவரும் இளம் நடிகர்கள் அனைவருமே ஒரு படத்திலாவது போலீஸ் கேரக்டரில் நடித்துவிடவேண்டும் ...

ஒரிஜினல் தயாரிப்பாளர் நடத்திய குற்றம்கடிதல் சக்சஸ் மீட்!

Posted:

அண்மையில் வெளிவந்த அதிஅற்புதமான படங்களில் ஒன்று குற்றம் கடிதல். இந்தப் படத்தைத் தயாரித்தவர் கிறிஸ்டி என்பவர். மிகுந்த சிரமங்களுக்கு இடையில் குற்றம் கடிதல் படத்தை தயாரித்த இவரால் படத்தை வெளியிட முடியவில்லை. இந்த நேரத்தில் பிரபல விநியோகஸ்தரான ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் சதீஷ்குமார் என்பவர் குற்றம் கடிதல் படத்தைப் பார்த்துவிட்டு ...

தூங்காவனம் யுஏ... விலையைக் குறைத்த விநியோகஸ்தர்கள்!

Posted:

உத்தமவில்லன் படத்தை அடுத்து கமல் நடிக்கும் தூங்காவனம் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரேநாளில் வெளியாகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் கமலே இந்தப் படத்தை தயாரித்துள்ளார். நடிப்பில் மட்டுமல்ல வியாபாரத்திலும் கெட்டிக்காரர் என பெயர் எடுத்துள்ள கமல், தூங்காவனம் படத்தை இரண்டு மொழிகளிலும் சேர்த்து நல்ல ...

ஜெயம் ரவியின் அடுத்த படங்கள்...?

Posted:

'தனி ஒருவன்' படத்தின் மூலம் ஜெயம் ரவியின் மார்க்கெட் மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. அதற்கு முன் வெளிவந்த 'சகல கலா வல்லன்' ஜெயம் ரவியின் மார்க்கெட்டைக் கவிழ்த்திருந்தது. நல்ல வேளையாக 'தனி ஒருவன்' வந்ததால் தப்பித்தார் ஜெயம் ரவி. இப்போது 'நாணயம், நாய்கள் ஜாக்கிரதை' படங்களை இயக்கிய சக்தி எஸ்.ராஜன் இயக்கத்தில் 'மிருதன்' ...

10 நாள் பட்டினி கிடந்த விஜய் சேதுபதி

Posted:

தமிழ்த் திரையுலகில் உள்ள இப்போதைய நடிகர்களில் நடிப்புக்காக அனைத்து ரசிகர்களாலும் பாராட்டப்படும் ஒரு நடிகராக விஜய் சேதுபதி வளர்ந்து வருகிறார். விஜய் சேதுபதி சீக்கிரமே, கமல்ஹாசன், விக்ரம் வரிசையில் சேர்ந்து விடுவார் போல் தெரிகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்கள், வித்தியாசமான படங்கள் என படத்துக்குப் படம் தன்னை மாற்றிக் கொண்டே ...

சிவா படம் 30 கோடி என்றால், தனுஷ் படம் 40 கோடி ?

Posted:

திரையுலகில் எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் சொல்லவே முடியாது. இன்றைய நண்பர்கள், நாளை எதிரிகள், நேற்றைய எதிரிகள் இன்றைய நண்பர்கள் என அரசியலைப் போலவே அடிக்கடி தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள்.

டி.வி.யில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு தன் மனைவி இயக்கிய '3' படத்தில் தன்னுடன் காமெடி செய்யும் நடிகராக ...

அக்டோபர் மாத திரைப்படங்கள் ஓர் பார்வை!

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை வாரத்திற்கு வாரம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. கடந்த வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டப் போவது நிச்சயம்.

இந்த மாதத்தில் அக். 30 வரை வெளியான படங்களின் எண்ணிக்கை 180ஐத் தாண்டிவிட்டது. இன்னும் முழுவதுமாக இரண்டு மாதங்கள் உள்ள ...

சாந்தனு தொடங்கிய சைடு பிசினஸ்

Posted:

வாரிசு நடிகர்கள் எல்லாம் கோடம்பாக்கத்தில் கோடிகோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். சில வாரிசு நடிகர்கள் மட்டும் இன்னும் க்ளிக் ஆகாமலே உள்ளனர். அவர்களில் கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவும் ஒருவர். தன் அப்பாவினால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட சாந்தனு சக்கரக்கட்டி, கண்டேன் போன்ற படங்களில் நடித்தார். அப்படங்கள் ...

பெரும் தொகை கொடுத்து மாரியை வாங்கிய விஜய் டிவி

Posted:

தீபாவளி அன்று இந்தியத்தொலைக்காட்சியில் முதல்முறையாக விஜய் டிவியில் மாரி படம் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த ஒளிபரப்புக்குப் பின்னால் உள்ள கதை எத்தனை பேருக்குத்தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள்... ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவான மாரி படத்தை லைன் புரட்யூஸராக தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துக் கொடுத்தார் ...

லட்சுமிமேனனின் பெருமைக்குரிய அண்ணன்!

Posted:

அஜீத்தின் வேதாளம் படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடித்திருப்பவர் லட்சுமிமேனன். இதே படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன். என்றாலும், இந்த படத்தைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க அண்ணன்-தங்கை செண்டிமென்ட் பிரச்னையை மையமாக வைத்துதான் உருவாகியிருக்கிறதாம். அதாவது, சிவாஜி-சாவித்ரி நடித்த பாசமலர்கள் பாணியில் என்கிறார்கள். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™