Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருவனந்தபுரம் அருகே காய்கறி மார்க்கெட்டில் நாட்டு வெடிகுண்டுகள்: போலீசார் விசாரணை

Posted: 15 Nov 2015 09:26 PM PST

திருவனந்தபுரம் அருகே கழக்கூட்டத்தில் நகரசபைக்கு சொந்தமான மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த மார்க்கெட்டில் ஒருபுறம் காய்கறி வியாபாரமும் இன்னொருபுறம் மீன் வியாபாரமும் நடந்து வருகிறது. இதனால் இந்த மார்க்கெட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்யும் ஒரு பெண் வழக்கம்போல வியாபாரம் செய்வதற்காக வந்தார்.

5 நாள் சுற்றுப்பயணமாக ராஜ்நாத் சிங் சீனா செல்கிறார்

Posted: 15 Nov 2015 08:13 PM PST

பிரதமர் நரேந்திரமோடி இந்த ஆண்டு மே மாதம் 3 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றார். அதன்பிறகு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா செல்வது குறிப்பிடத்தக்கது. கடந்த 2005-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்த சிவராஜ்பாட்டீல் சீனாவுக்கு சென்றார். அதன்பின்னர் தற்போதைய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா செல்கிறார். 19-ந்தேதி முதல் 5 நாட்கள் அவர் சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். சீனா செல்லும் ராஜ்நாத் சிங் சீனாவின் உள்துறை மந்திரி மற்றும் உயர் மட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். பேச்சுவார்த்தையில் இருநாடுக

பீகார் தேர்தலில் பா.ஜனதா தோல்வி: பிரதமர் மோடி மீது சத்ருகன் சின்கா தாக்கு

Posted: 15 Nov 2015 07:13 PM PST

பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான நடிகர் சத்ருகன் சின்கா பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்தார். தேர்தல் முடிந்த பிறகும் கட்சியை அவர் தீவிரமாக தாக்கிப் பேசி வருகிறார். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது சத்ருகன்சின்கா

நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவிற்கு அத்வானி மற்றும் ராகுலுக்கு அழைப்பு

Posted: 15 Nov 2015 04:04 PM PST

பீகாரில் சட்டமன்ற தேர்தலில் அமோகவெற்றி பெற்ற நிதிஷ் குமார் வரும் 20-ம் தேதி மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்கிறார். மகாகூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம்,

தூய்மை இந்தியா திட்டத்துக்காக வரி விதிப்பதா? மார்க்சிஸ்ட் கம்யூ., கண்டனம்

Posted: 15 Nov 2015 03:30 PM PST

தொலைபேசி கட்டணம், ஓட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், காப்பீடு தொகை போன்றவற்றுக்கு முன்பு 14 சதவீதம் சேவைவரி விதிக்கப்பட்டு வந்தது. கடந்த மே 31-ந்தேதி வரை 12.36 சதவீதம் தான் சேவை வரி விதிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில்

தீவிரவாதத்துக்கு எதிராக மனிதகுலம் ஒன்றுபட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு

Posted: 15 Nov 2015 12:37 PM PST

இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 தனிப்பட்ட நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை உறுப்பு நாடுகளாக கொண்ட பொருளாதார அமைப்பு 'ஜி-20' ஆகும். இதன் உச்சி மாநாடு, துருக்கி நாட்டில் ஆன்டல்யா நகரில், வரலாறு

கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது

Posted: 15 Nov 2015 11:02 AM PST

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. கர்நாடகத்தில் நிலவும் கடும் வறட்சி குறித்து விவாதிக்க சட்டசபையை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வந்தன. இதையடுத்து

பெரும்பாலான இந்துக்கள் அமைதியை விரும்புபவர்கள் என்பதையே பீகார் தேர்தல் காட்டுகிறது: தலாய் லாமா

Posted: 15 Nov 2015 10:19 AM PST

அகிம்சையின் நாடு இந்தியா என்றும் பெரும்பாலான இந்துக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதையே பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் புத்தமத துறவியும் திபெத் தலைவருமான 14-வது தலாய் லாமா கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

Posted: 15 Nov 2015 06:49 AM PST

மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துள்ளான படகில் பயணம் செய்த பலரை காணவில்லை. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோல் விலை 36 காசுகள், டீசல் 87 காசுகள் உயர்வு

Posted: 15 Nov 2015 05:28 AM PST

பெட்ரோல் விலை லிட்டருக்கு 36 காசுகளும், டீசல் விலை 87 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

பா.ஜ.க.வை வீழ்த்த பீகாரை போன்றே உ.பி.யிலும் மெகா கூட்டணி: அகிலேஷ் அதிரடி

Posted: 15 Nov 2015 03:35 AM PST

பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக பீகாரை போன்றே உத்தர பிரதேசத்திலும் மெகா கூட்டணி அமைப்போம் என்று அம்மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா

கப்பல் போக்குவரத்து செயலாக்க திட்டத்தில் கையெழுத்திட்டது இந்தியா-வங்கதேசம்: நிதின்கட்கரி

Posted: 15 Nov 2015 03:11 AM PST

இந்தியா - வங்கதேசம் நாடுகளுக்கு இடையில் ஏற்கனவே செய்யப்பட்ட கடற்கரை கப்பல் ஒப்பந்தத்தினை செயல்படுத்தும் விதத்திலான செயல்முறை பொதுத்திட்டத்தில் இருநாடுகள் இன்று கையெழுத்திட்டன. மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் புதுடெல்லியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கப்பல் துறை அமைச்சகத்தின் கூடுதல் இயக்குநர்

பீகாரில் பயணிகள் ரெயிலில் இருந்து 7 வெடிகுண்டுகள் பறிமுதல்

Posted: 15 Nov 2015 02:03 AM PST

பீகார் மாநிலத்தில் பயணிகள் ரெயிலில் இருந்து 7 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடிஹர்-மால்டா பயணிகள் ரயிலில் வெடிகுண்டுகள் இருப்பதாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அந்த ரெயிலில் போலீசார் உடனடியாக சோதனை நடத்தினர்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசத்தலாக விருந்தளித்த 5 ஸ்டார் சமையல்காரர்கள்

Posted: 15 Nov 2015 01:37 AM PST

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தலைநகர் புதுடெல்லியில் உள்ள குஷி என்ற ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லம் ஒன்று உள்ளது. இங்குள்ள குழந்தைகளுக்கு, பணக்காரர்களின் வீட்டு பிள்ளைகளைப்போல் அவர்கள் விரும்பிய உணவு வகைகளை எல்லாம் உண்ணும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

திருவனந்தபுரம் அருகே ஆதிவாசி பெண்ணை ஜீப்பில் கடத்தி கற்பழிக்க முயற்சி: 3 டிரைவர்கள் கைது

Posted: 14 Nov 2015 11:44 PM PST

திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடையில் ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ள ஆதிவாசி மக்கள் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியூர்களுக்கு சென்று பொருட்கள் வாங்க சரியான பஸ் வசதி கிடையாது. இதனால் இந்த பகுதியில் தனியார் ஜீப்கள் இயக்கப்படுகின்றன. இவர்கள் ஆதிவாசி மக்களிடம் கட்டணம் வசூலித்து ஜீப்களை இயக்கி வருகிறார்கள்.

கேரளாவில் 18–ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை: பாலக்காட்டில் 62 வீடுகள் இடிந்தன

Posted: 14 Nov 2015 11:33 PM PST

கேரள மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த மழை கனமழையாக நீடிக்கிறது. இதனால் கேரளாவில் வடக்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தலைநகரான திருவனந்தபுரத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மொரிசியசில் கைதான செம்மர கடத்தல்காரன் ஆந்திர போலீசாரிடம் ஒப்படைப்பு

Posted: 14 Nov 2015 11:21 PM PST

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த 2003–ம் ஆண்டு திருப்பதி கோவில் பிரமோற்ச விழாவுக்கு சென்ற போது அலிபிரி மலை பாதையில் அவர் மீது கன்னிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

பாரிஸ் தாக்குதல் எதிரொலி: அமெரிக்க பயணத்தை ரத்து செய்து துபாயில் இருந்து நாடு திரும்பினார் சுஷ்மா சுவராஜ்

Posted: 14 Nov 2015 11:06 PM PST

பாரிஸ் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பாதி வழியில் துபாயில் இருந்து நாடு திரும்பினார். இந்தியாவில் இருந்து வந்து வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்

சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: ரூ.2 கோடி நகை–பணம் சிக்கியது

Posted: 14 Nov 2015 11:00 PM PST

ஐதராபாத் கூகட் பள்ளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக இருப்பவர் சஞ்சீவ் ராவ். இவர் முறைகேடாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி.ஓ. சுனிதா தலைமையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள சஞ்சீவி ராவ் வீடு, உறவினர்கள் வீடுகளில் ஒரே சமயத்தில் சோதனை செய்தனர். மொத்தம் 6 இடங்களில் சோதனை நடந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™