Tamil Star |
- TTC பேருந்து ஓட்டுனரை அவதூறாக பேசி தாக்கிய பயணி கைது
- கோதுமைப்புல் பவுடரை தினசரி உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
- நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்த்துறை
- யாழ்ப்பாணத்தில் கனடிய உயர்ஸ்தானிகராலயம்
- நோர்த் யோர்க்கின் Parkwoods பகுதியில் விபத்து – ஒருவர் மருத்துவ மனையில்
- வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும் மோர்
- கனடாவில் துணைப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்வு பெற்ற ஈழத்தமிழர்
- போதைப்பொருள்,துப்பாக்கி கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் 12 பேர் கைது
- 15 வயது சிறுமியைக் காணவில்லை – பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது
- Mississauga மற்றும் Mount Olive பகுதிகளில் இரு வேறு விபத்துக்கள்
- இரத்தம் சுத்தமாக வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!
- குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு புதிய சலுகைகள்
- பழங்குடியின மக்களின் விவகாரங்களுக்கு முன்னுரிமை என்கிறார் Tom Mulcair
- லிபரல் மற்றும் புதிய சனநாயக கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் இன்று ரொரன்ரோ பெரும்பாகத்தில்
| TTC பேருந்து ஓட்டுனரை அவதூறாக பேசி தாக்கிய பயணி கைது Posted: 09 Oct 2015 09:39 PM PDT
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பேருந்து ஒட்டுனருக்கும் பயணிக்கும் இடையில் ஆரம்பத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்ததாகவும் அது பின்னர் வன்முறையாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், பயணி TTC பேருந்து ஓட்டுனரை வார்த்தைகளால் தாக்கியிருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். எனினும் அது தொடர்பிலான விளக்கங்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை. அத்துடன் சம்பவம் இடம்பெற்ற செவ்வாய்கிழமை மாலை 6. 35 மணியளவில் தாம் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்ததாகவும், அசம்பாவிதம் காரணமாக Morningside Drive மற்றும் Kingston வீதிக்க அருகில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர் பிரசினைக்குரிய இருவரும் வகனத்தின் வெளியில் வந்து சண்டையிட்டதாகவும், இதன் போது பயணி பேருந்து ஓட்டுனரை குடையினால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறித்த பயணி கைது செய்யப்பட்டார் என்றும், பின்னர் அவரை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்ததாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான காவல்த்துறையினரின் விசாரணைகள் இன்னமும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பேருந்து ஓட்டுனர்,அவர் பணியாற்றும் நிறுவனத்தினால் ஒழுக்காற்று குற்றச்சாட்டுக்கள் எதனையும் எதிர்கொண்டுள்ளாரா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. The post TTC பேருந்து ஓட்டுனரை அவதூறாக பேசி தாக்கிய பயணி கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கோதுமைப்புல் பவுடரை தினசரி உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் Posted: 09 Oct 2015 04:15 PM PDT
கோதுமைப்புல் பொடி (Wheatgrass) என்பது கோதுமைப்புல்லின் இலைகளை அரைத்து சாறெடுத்து, பின்னர் அதை உலர வைத்து பொடி செய்யப்படும் ஒரு உணவுப்பொருளாகும். இதை தண்ணீரில் கலந்து, சத்து பானமாகவும் அல்லது வேறு ஏதாவது ஜூஸ்களில் கலந்தும் அருந்தலாம். கோதுமைப்புல் செடியில் உள்ள அனைத்து சத்துக்களும், கோதுமைப்புல் சாற்றிலும் உள்ளன. கோதுமைப்புல் பொடியின் நன்மைகள் கோதுமைப்புல் பொடியானது உணவு செரிப்பதை எளிதாக்குகிறது. இதில் அடங்கியுள்ள சில காரத்தன்மையுள்ள தாதுக்களினால், வயிற்றிலுள்ள புண்கள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகின்றன. முக்கியமாக இதில் உள்ள மக்னீசியமானது மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது. இதில் காரத்தன்மை அதிகமாக உள்ளதால், இரத்தத்தில் இருக்க வேண்டிய pH அளவை நிலைப்படுத்தி பேணுகிறது. எனவே, இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து, காரத்தன்மையை நிலைநிறுத்த உதவுகிறது. புதிய காய்கறிகளில் உள்ள அளவுக்கு, இதிலும் தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், என்ஸைம்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைத்து இரத்த செல்களின் வலிமையைக் கூட்டுகிறது. இதிலுள்ள குளோரோபில்லானது எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு, இரத்த உற்பத்தியையும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்து, அவற்றை இயல்பான நிலையில் பேண உதவுகிறது. இதிலுள்ள குளோரோபில் கதிரியக்கங்களின் தீமையைக் குறைப்பதால் ஹீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி மருத்துவத்தை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள், கோதுமைப்புல் பவுடரை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. பற்சிதைவு மற்று இதர பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு கோதுமைப்புல் பவுடர் மிகச்சிறந்த மாற்றாகப் பயன்படுகிறது. அதற்கு கோதுமைப்புல் பொடியைக் கொண்டு, ஈறுகளை மசாஜ் செய்து வந்தால், ஈறுகள் வலிமையடைந்து, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். நச்சு நீக்கும் தன்மை கொண்டதால், இது இரத்தத்தை சுத்திகரித்து, மூச்சு மற்றும் வியர்வையில் உள்ள கெட்ட நாற்றத்தைப் போக்குகிறது. கோதுமைப்புல் பவுடர் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இனப்பெருக்க சக்தியை அதிகரித்து, கருவுறுதலில் மிகவும் உதவுகிறது. சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தின் நெகிழும் தன்மையை நிலை நிறுத்த உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் இளமைப் பொலிவை மீட்டுத் தருகிறது. The post கோதுமைப்புல் பவுடரை தினசரி உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்த்துறை Posted: 09 Oct 2015 03:29 PM PDT
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் குறித்த நபர் உணர்விழந்த நிலையில் Pickering வீதியில் கிடந்தாக காவல்த்தறையினர் தெரிவித்துள்ளானர். Liverpool வீதி மற்றும் Kingston வீதிகளை அண்டிய அந்த பகுதியில் நினைவிழந்து கிடந்த குறித்த நபரை 2.55 மணியளவில் கண்டதாகவும், உடனடியாகவே அவர் அங்கிருந்து உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் விபரித்துள்ளனர். எனினும் அவர் மோசமான காயங்களுக்க ஆளான நிலையில் இருந்தமையால் பின்னர் அவர் அங்கிருந்து ரொரன்ரோ மத்திய மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் 50 இற்கும் 60 இற்கும் இடைப்பட்ட வயதுடையவர் என்றும், ஐந்து அடி ஒன்பது அங்குல உயரம் உள்ள மெல்லிய நபர் என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர். தகவல் தெரிந்தவர்கள் 1 (888) 579-1520 ext. 2535. என்ற இலக்த்தின் ஊடாக குற்ற விசாரணைப் பிரிவினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். The post நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்த்துறை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| யாழ்ப்பாணத்தில் கனடிய உயர்ஸ்தானிகராலயம் Posted: 09 Oct 2015 10:33 AM PDT
அந்த அறிவித்தலை வெளியிட்ட கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜேசன் கெனி, இலங்கையில் கனடாவின் வெளிநாட்டு பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானம் மற்றும் சமரச புரிந்துணர்வை உறுதி செய்யும் நோக்குடன், புதிதாகத் தெரிவாகும் தமது அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வடபகுதிக்கான ஒரு அலுவலகத்தை உருவாக்குவதென்பது, அப்பகுதியுடனான இராஜதந்திரத் தொடர்புகளுக்கான ஒரு முக்கிய தளமாக அமையும் எனவும், யாழ்ப்பாணத்திற்கு கனடிய இராஜாங்கத் தொடர்புகளை உருவாக்குவது, இலங்கையில் சனநாயகம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான கனடாவின் உறுதிப்பாட்டை மேலும் திடமாக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தை வீதி வழியாகச் சென்றடைய 7 மணித்தியாலங்களுக்கு மேல் தேவைப்படுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்புவதையும், மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியமைப்பதையும், தமிழர்களின் பிரதேசத்தில் உறுதியான மறுமலர்ச்சி ஏற்படுவதையும் கனடா உறுதிசெய்யும் என்றும் ஜேசன் கெனி கூறியுள்ளார். 2013ல் ராஜபக்ச அரசின் சூழ்ச்சிநிறைந்த ஆட்சிக்கெதிராக உறுதியாக நின்ற கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அரசாங்க தலைவர்களுக்கான மாநாட்டைப் புறக்கணித்தார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் பழமைவாதக் கட்சி அரசாங்கம் மறுபடியும் தேர்ந்ததெடுக்கப்பட்டால், கனடா சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதுடன், அங்கு நீதியை முன்னெடுக்க அனைத்துலக சமூகத்தை தொடர்ந்தும் உள்வாங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் அரசு கையகப்படுத்திய நிலங்களை மீளக் கையளிப்பதற்கும், இடம்பெயர்ந்தோருக்கு உதவி வழங்குவதற்கும், மீள்கட்டுமானம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், போரில் பாதிப்படைந்த மக்களுக்கு, குறிப்பாக விதவைகளின் அவசிய தேவைகளைக் கவனிப்பதற்கும் தமது அரசு துணை நிற்கும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜேசன் கெனி உறுதியளித்துள்ளார். The post யாழ்ப்பாணத்தில் கனடிய உயர்ஸ்தானிகராலயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நோர்த் யோர்க்கின் Parkwoods பகுதியில் விபத்து – ஒருவர் மருத்துவ மனையில் Posted: 09 Oct 2015 10:08 AM PDT
இந்த விபத்து நோர்த் யோர்க்கின் Parkwoods பகுதியில் சம்பவித்துள்ளது. கார் ஒன்று மின் கம்பத்துடன் மோதி, பாதசாரி ஒருவரை மோதித் தள்ளியதுடன், அருகில் இருந்த பேரூந்து தரிப்பிடத்திலும் மோதியதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிராபத்தான காயங்களுக்கு ஆளான ஒருவர் ரொரன்ரோ சணிபுரூக் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்தினை அடுத்து Lawrence Avenue East பகுதியில் விபத்து இடம்பெற்ற வீதி ஊடான போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலையில் போக்குவரத்து நெரிசல் மிக்க வேளைகளிலும் அது மூடியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீதி ஊடாக சேவையில் ஈடுபடும் பேரூந்துகளும் வேறு மாற்று வீதிகளூடாக திசை மாற்றி விடப்பட்டுள்ளன. The post நோர்த் யோர்க்கின் Parkwoods பகுதியில் விபத்து – ஒருவர் மருத்துவ மனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும் மோர் Posted: 09 Oct 2015 08:42 AM PDT
மோரில் உள்ள சத்துக்கள்: மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம். மருத்துவ பயன்கள்: காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும். வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும். மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சிஅடைவதைத் தடுக்கலாம். மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல்மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர். மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றைகுளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும். சருமத்திற்கு உகந்த மோர்: 1. சருமத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மோர் சிறந்த மருந்தாகஉள்ளது. முகத்தில் தயிர், பால் ஏடு தேய்த்து வந்தால் நல்ல பலன் தெரியும். 2. சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை மோரில் நனைத்த துணியால் கட்டுப் போட்டு வருவதன் மூலம் சரும பாதிப்புவிரைவில் குணமடைவதைக் காணலாம். 3. தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. குறிப்புகள்: கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும். ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் சாப்பிடக்கூடாது. மோர்சாதமும் கூடாது. The post வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும் மோர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவில் துணைப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்வு பெற்ற ஈழத்தமிழர் Posted: 08 Oct 2015 09:53 PM PDT
ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து தனது திறமைகளில் சார்ஜன்ட் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பொறுப்பதிகாரி, பொலிஸ் அத்தியட்சர் போன்ற பதவிநிலைகளை வகித்த நிசாந்தன் துரையப்பா தற்போது துணைப் பொலிஸ்மா அதிபராகத் தரமுயர்த்தப்பட்டிருக்கின்றார். இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை ஹால்ரன் பொலிஸ் திணைக்களம் கடந்த வார இறுதியில் வெளியிட்டுள்ளது. அதில் புதிய குடிவரவாளரான நிசாந் துரையப்பா ஏனைய இனங்களிற்கும் முன்னுதாரணமாக இருந்திருக்கின்றார் என்ற விடயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண முன்னைநாள் அல்பிரட் துரையப்பா அவர்களின் பெறாமகனான இவர் தனது மூன்று வயதிலேயே கனடா வந்தவர் என்பதும் தான் வசித்த பிரதேசத்திலுள்ள தொண்டார்வ நிறுவனங்களிலும் தன்னை இணைத்துச் செயற்பட்டு உதவி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹால்ரன் பிரதேசத்திலுள்ள பல்லிண சமூகத்தினரிடையே மிகவும் பிரபல்யமான ஒரு அதிகாரியாக இருக்கும் நிசாந் துரையப்பா புதிய குடிவரவாளர்களிற்கான பல திட்டங்கைள அப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. The post கனடாவில் துணைப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்வு பெற்ற ஈழத்தமிழர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| போதைப்பொருள்,துப்பாக்கி கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் 12 பேர் கைது Posted: 08 Oct 2015 09:13 PM PDT
ஒரு வருடமாக நாடாத்திய விசாரணைகளில் இருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்க எதிராக மொத்தம் 46 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த போதைப் பொருட்களையும், கைத் துப்பாக்கிகளையும் அமெரிக்கா மற்றும் கருபியன் ஆகிய நாடுகளில் இருந்து ரொரன்ரோவினுள் கடத்தியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மேற்கொண்டிருந்த இந்த கடத்தல் சம்பவங்கள் குறித்த விபரங்களையும் காவல்த்துறையினர் வெளியிட்டுள்ளனர். இவர்கள் மேற்கொண்ட கடத்தல் சம்பவங்களின்போது காவல்த்துறையினரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப் பொருட்களின் பெறுமதி ஏறக்குறைய 12.2 மில்லியன் கனேடியன் டொலர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 22 கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றின் பெறுமதி 146,000 கனேடிய டொலர்கள என்றும் கூறுப்படுகிறது. அத்துடன் அவர்களிடம் இருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான போதைப் பொருட்களும், துப்பாக்கிகளும் விமான நிலையங்களினூடாக கடத்தப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலையில் நடாத்தி ஊடகவியலாளர் சந்திப்பின் போதே காவல்த்துறையினர் இந்த தகலைக் கூறியுள்ளார். The post போதைப்பொருள்,துப்பாக்கி கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் 12 பேர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 15 வயது சிறுமியைக் காணவில்லை – பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது Posted: 08 Oct 2015 08:34 PM PDT
தமது மகளை காணவில்லை என்றும், அவரின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாகவும் காணாமல் போன அந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல்த்துறையினரிடம் முறையிட்டுள்ள நிலையிலேயே, காவல்த்துறையினர் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர். காணாமல் போயுள்ள Chrystal Clemens என்ற அந்த சிறுமி கடைசியாக மேற்கு Sheppard அவனியூ மற்றும் Weston வீதிப்பகுதியில் காணப்பட்டதாகவும் காவல்த்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் காணாமல் போன அந்த சிறுமியின் புகைப்படத்தையும் காவல்த்துறையினர் வெளியிட்டுள்ளனர். The post 15 வயது சிறுமியைக் காணவில்லை – பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Mississauga மற்றும் Mount Olive பகுதிகளில் இரு வேறு விபத்துக்கள் Posted: 08 Oct 2015 08:21 PM PDT
வாகனத்தால் மோதுண்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணியளவில் Seneca அவனியூ மற்றும் Lakeshore வீதிகளுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது அந்த பெண் வாகனத்தின் அடியில் மாட்டிக்கொண்டிருந்தார் என்றும், பின்னர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அவர் மீட்கப்பட்ட போது, அவர் உயிரிழந்து விட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில் Mount Olive பகுதியில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் மோசமான காயங்களுக்கு ஆளான இருவர் மருத்தவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Martin Grove வீதி, Steeles அவனியூப் பகுதியில் அந்த விபத்து இடம்பெற்றிருந்தது. எனினும் விபத்துக்கான காரணம் குறித்து காவல்த்துறையினர் தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கும் உயிராபத்தான காயங்கள் இல்லை என்ற தகவலை காவல்த்துறையினர் பின்னர் வெளியிட்டிருந்தனர். The post Mississauga மற்றும் Mount Olive பகுதிகளில் இரு வேறு விபத்துக்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரத்தம் சுத்தமாக வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்! Posted: 08 Oct 2015 04:36 PM PDT
அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். எனவே இயற்கை உணவுகளை உட்கொண்டு இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். 2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். 3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். 4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும். 5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. 6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. 7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. 8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். The post இரத்தம் சுத்தமாக வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு புதிய சலுகைகள் Posted: 08 Oct 2015 11:28 AM PDT
நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில் கனேடியப் பிரதமர் அளித்திருந்த விளக்கம் பின்வருமாறு, புதிதாக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெற்றேர்களின் தொழில்சார் காப்புறுதித் திட்டங்களின் கீழ் புதிய சலுகைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் புதிதாக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய் தந்தையர் தமது குழற்தையினை பராமரிப்பதற்காக நீண்டகால விடுமுறையினை பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் புதிய பெற்றோருக்கு 18 மாதங்களுக்கு தொழிற் காப்பீட்டு உத்தரவாதத்தினை எனது அரசாங்கம் உறுதிப்படுத்தும். EI எனப்படும் தொழில்சார் காப்புறுதித் திட்ட மேம்பாட்டு நடவடிக்கைகள் அடுத்தவருட தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும். இதேவேளை EI யின் அனுகூலங்களைப் பெற்றவாறே பெற்றோர்கள் சுயதொழில் முனைப்புக்கள் ஊடக வருமானம் ஈட்டக்கூடிய இரண்டு முக்கிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. The post குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு புதிய சலுகைகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பழங்குடியின மக்களின் விவகாரங்களுக்கு முன்னுரிமை என்கிறார் Tom Mulcair Posted: 08 Oct 2015 11:21 AM PDT
கனடாவின் பழங்குடியின் மக்களின் முன்னேற்றத்திலேயே நாட்டின் எதிர்கால முன்னேற்றம் தங்கியுள்ளது என்ற நம்பிக்கையினை தாம் கொண்டுள்ளதன் காரணத்தினால் இந்த உறுதிப்பாட்டை தாம் வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் தான் பங்குபற்றிய கூட்டங்களில் தெளிவுபடுத்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுள், ஒப்பீட்டளவில் பழங்குடியின மக்கள் தொடர்பிலான விவகாரத்திலேயே தாம் அதிக அக்கறை காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில புதிய சனநாயக கட்சி வெற்றிபெற்றால், நாட்டின் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தப்படும் முன்னேற்றத்தின் ஊடாகவே தனது பிரதமர் பதவியின் வெற்றி உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 148 வருடங்களாக பழமைவாதக் கட்சியும், லிபரல் கட்சியும் பயனற்ற வகையில் பயணித்த வழிகளை தாமும் பின்பற்ற முடியாது எனவும், பழங்குடியின சமூகத்தின் வாழ்வில் மேம்பாட்டினை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பழங்குடியின மக்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் எதிர்வரும் எட்டு வருடங்களில் 4.8 பில்லியன் டொலர்களை செலவிடவுள்ளதாகவும், இந்த கல்வி அபிவிருத்தி திட்டத்தில் 1.8 பில்லியன் டொலர்கள் முதல் நான்கு வருடத்தில் செலவிடப்படும் எனவும், மீதித் தொகை அடுத்துவரும் நான்கு வருடங்களுக்கு செலவிடப்படும் என்றும் புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair விளக்கமளித்துள்ளார். The post பழங்குடியின மக்களின் விவகாரங்களுக்கு முன்னுரிமை என்கிறார் Tom Mulcair appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| லிபரல் மற்றும் புதிய சனநாயக கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் இன்று ரொரன்ரோ பெரும்பாகத்தில் Posted: 08 Oct 2015 11:13 AM PDT
புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair இந்த வார ஆரம்பத்தில் கனடாவின் மேற்கு பிராந்தியங்களில் தேர்தல் பரப்புரை பயணங்களை மேற்கொண்டிருந்தார். அங்கிருந்து இன்று ரொரன்ரோவுக்கு திரும்பும் அவர் இங்கு தனது பரப்புரைகளை தொடரவுள்ளார். இன்று அவர் பங்கேற்கும் கூட்டம் ஒன்று ரொரன்ரோ நகரமன்றத்தில் நடைபெற உள்ளது.அதனைத் தொடர்ந்து Tom Mulcair சில ஊடக நேர்காணல் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். புதிய சனநாயக கட்சியின் முன்னைய தேர்தல் பரப்புரகளில் மிக முக்கிய இடத்தினை வகித்துவந்த இடமாக ரொரன்ரோவின் 416 பிரதேசம் விளங்குகின்றது. தற்பேதைய நிலைமையில் கூட கட்சியின் எதிர்காலத்தினை தீர்மானிப்பதில் அந்த பிராந்தியம் முக்கியமானதாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூடொ(Justin Trudeau)தனது தேர்தல் பரப்புரைப் பணிகளை ரொரன்ரோவின் வட பிராந்தியமான வோன்(Vaughan) பகுதியில் இன்று காலையில்ஆரம்பிக்கவுள்ளார். பசுமைக் கடசியின் தலைவர் எலிசபெத் மே (Elizabeth May)யும் ஒன்ராறியோவில் இன்று தனது பரப்புரைப் பணிகளை மேற்கொள்ளவுள்ளார். அவர் மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களை நடாத்துவார். பின்னர் இன்று மாலையில் Guelph நகரமன்றத்தில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார். இதேவேளை வன்கூவர் பிராந்தியத்தில் இன்று தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார் பழமைவாதக் கட்சித் தலைவரான பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர். தேர்தல் வாக்குப் பதிவுகளுக்கு இன்னமும் 11 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமது தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது. The post லிபரல் மற்றும் புதிய சனநாயக கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் இன்று ரொரன்ரோ பெரும்பாகத்தில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

TTC பேருந்து ஓட்டுனர் ஒருவரை அவததூறாகப் பேசி தாக்கிய பயணியைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோதுமைப்புல் மிகச்சிறந்த மருத்துவத்தன்மைகளைக் கொண்டுள்ளதும் ஆரோக்கியமானதும் ஆகும். நமது உடல் இயங்குவதற்குத் தேவையான 19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும் இதில் அடங்கியுள்ளன.
மோசமான காயங்களுக்கு ஆளான நிலையில், வீதியில் நினைவிழந்து கிடந்த நபர் ஒருவரை மீட்டுள்ள டுர்ஹாம் பிராந்தியக் காவல்த்துறையினர் அவரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


வெயில் கால பானமான மோரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் பெரும்பாலான தமிழர்களில் ஒருவர் துணைப் பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்யப்பட்டு கனடியத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கி என்பவற்றின் கடத்தல்கள் தொடர்பில் ரொரன்ரோ பெரும்பாகத்தில் இருந்து 12 பேரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரொரன்ரோவின் Humberlea பகுதியில் காணாமல் போயுள்ள 15 வயது சிறுமியைத் தேடி வரும் ரொரன்ரோ காவல்த்துறையினர், பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
மிசிசாகா பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் 46 வயது பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.


