Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஸ்காபரோ விபத்தில் ஒருவர் பலி

Posted: 06 Oct 2015 07:32 PM PDT

j

jஸ்காபரோ பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் 50 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிழக்கு Sheppard அவனியூவிற்கு அருகில் Morningside அவனியூவில் இன்று காலை 6.30 இற்கு சற்று முன்னராக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கார் ஒன்றும் TTC பேருந்து ஒன்றும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

காரினைச் ஓட்டி வந்த நபரே விபத்தில் உயிரிழந்ததாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட TTC பேருந்தில் பயணிகள் எவரும் இருக்கவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.j

காலை இடம்பெற்ற இந்த விபத்தை அடுத்து Casebridge Court மற்றும் கிழக்கு Sheppard அவனியூவிற்கு இடைப்பட்ட Morningside அவனியூ பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டு பின்னர் காலை 10.30 மணியளவில் மீண்டும் திறந்து விடப்பட்டு போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியிருந்தன.

The post ஸ்காபரோ விபத்தில் ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சூப்களின் மருத்துவ பலன்கள்

Posted: 06 Oct 2015 04:53 PM PDT

uyu

uyuநோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுவகைகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம்.

ஆனால் இன்றைய அவசர காலகட்டத்தில் சத்தான உணவுகளை உட்கொள்கிறோமா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.

துரித உணவுகளின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதால், காய்கறிகள் என்றாலே சிலர் வெறுப்படைகின்றனர்.

அத்தகையர்கள் மிக எளிதாக சூப் வைத்து குடிக்கலாம், உணவிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சூப் குடித்தால் நல்ல பசியை தூண்டிவிடும்.

அதுமட்டுமின்றி காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

* 50 முதல் 75 கிராம் முடக்கத்தான் இலை (அ) முடக்கத்தான் பொடி மூன்று டீஸ்பூன் எடுத்து நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்.

இதில் வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.

uyu

இதனை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் சர்க்கரை நோய், வயிற்றுப்புண், மூட்டுவலி மற்றும் பக்கவாதம் குணமடையும்.

* பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வல்லாரை கீரையுடன் தேவையான காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம், இதேபோன்று பொன்னாங்கன்னி கீரையையும், முருங்கை கீரையையும் செய்து சாப்பிடலாம்.

இதன் மூலம் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் கண் சம்பந்தமான நோய்கள் சரியாகும், எலும்புகள் வலுப்பெறும்.

* இதேபோன்று துளசி அல்லது துளசி பொடியை நீர் சேர்த்து, தேவையான அளவு காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம்.

இவ்வாறு குடித்தால் ஆஸ்துமா நோய் சரியாகும், சளி- இருமல் இருக்காது.

The post சூப்களின் மருத்துவ பலன்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய அறிவியலாளர் ஒருவருக்கும் நோபல் பரிசு அறிவிப்பு

Posted: 06 Oct 2015 11:31 AM PDT

Arthur_B._McDonald_-_10062015

Arthur_B._McDonald_-_10062015கனேடிய அறிவியலாளர் ஒருவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெளதீகத்திற்கான நோபல் பரிசை இணை வெற்றியாளர்களில் ஒருவராக கனேடிய அறிவியலாளரான ஆர்தர் பி மக்டொனால்ட்(Arthur B. McDonald) பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர் ஒன்ராறியோவின் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் இணைந்து பெளதீகத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற மற்றைய இணை வெற்றியாளர் ஜப்பானைச் சேர்ந்த தக்காய் கஜிட்டா (Takaaki Kajita) என்ற அறிவியலாளர் ஆவார்.Arthur_B._McDonald_-_10062015

நியூட்ரினோக்களுக்கும் திணிவு உண்டு என்பதனை காட்டும் "நியூட்ரினோ ஏற்றத்தாழ்வு" கண்டுபிடிப்பிற்காக 2015 ஆம் ஆண்டுக்கான பெளதீகத்திற்கான நோபல் பரிசு இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

The post கனேடிய அறிவியலாளர் ஒருவருக்கும் நோபல் பரிசு அறிவிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் தஞ்சமடைவோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரி்ப்பு

Posted: 06 Oct 2015 10:44 AM PDT

refugees_-_10062015

refugees_-_10062015உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் கனடாவில் தஞ்சமடைவோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது.

அனைத்துலக போர்க்குற்றங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதில் ஏனைய உலக நாடுகளை விட கனடாவே அதிக பக்களிப்பு செய்துள்ளதாகவும் கனடிய குடிவரவுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிரியா , ஈராக் போன்ற நாடுகளிலிருந்து கனடாவிற்குள் வருவோரைப் போன்றே 1970களில் சிலி , பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், பின்னர் அண்மைய காலங்களில் இலங்கை, ஹைடி ஆகியவற்றில் இருந்தும் அகதியாக வந்தோருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதை கனடிய குடிவரவுத் துறையின் புள்ளி விபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.refugees_-_10062015

ஆண்டுதோறும் சுமார் 26,000 பேர் அகதிகளாக கனடாவிற்கு வந்து கொண்டிருப்பதாகவும், இது கடந்த 10 ஆண்டுகளாக தொடரும் நிலையில், இவர்களில் 11,000 பேர் வரையில் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதையும் புள்ளிவிபரவியல் திணைக்கள தகவலகள் உறுதிப்படுத்துகின்றன.

அத்துடன் அவ்வாறுவந்துள்ளவர்களில் 4,000 பேர் இவர்களை சார்ந்து வாழ்பவர்களாகவும், கிட்டத்தட்ட 7,000 க்கும் மேற்பட்டோர் கனடாவில் மீள்குடியமர்விற்கு விண்ணப்பித்துள்ளதையும் கனடிய குடிவரவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் 2013 -2014 ஆம் ஆண்டுகளில் கனடாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கையில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாமிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post கனடாவில் தஞ்சமடைவோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரி்ப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Justin Trudeauவுக்கு ஆதரவு திரட்டும் கத்தலின் வின்

Posted: 06 Oct 2015 09:35 AM PDT

Kathleen_Wynne_-909

Kathleen_Wynne_-909கனடியப் பொதுத் தேர்தல் நெருங்கும் நிலையில், லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeauவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், ஸ்டீபன் ஹாப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரொரன்ரோ Empire Clubஇல் அவர் ஆற்றியிருந்த உரையிலேயே அவர் இந்த விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

இதுவரையில் ஆட்சியில் இருந்த ஸ்டீபன் ஹாப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சி அரசாங்கத்திடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லை எனவும், மக்களுடனான பிணைப்பினையும் அவர்கள் இழந்துள்ளதாகவும் கத்தலின் வின் தமது உரையில் தெரிவித்துள்ளார்.

பழமைவாதக் கட்சி அரசாங்கம் பருவநிலை மாற்றம், உட்கட்டுமானம், சிரிய அகதிகள் விவகாரம், ஓய்வூதிய திட்டம் என பல்வேறு விடயங்களிலும் தேவையான அளவு அக்கறையை வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

அத்துடன் பிரதமரின் பெயரை நேரடியாக சுட்டிக்காட்டாத கத்தலின் வின், அகதிகள் விடயத்தில் அச்சத்துடன் செயற்படக் கூடாது எனவும், துணிச்சலான நம்பிக்கையான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

கனேடிய மக்களுக்கு வெறுமனே தேர்தலில் வெற்றியீட்டும் ஒரு அரசாங்கம் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Kathleen_Wynne_-909

வழங்கப்பட்டுள்ள ஆணையை கொண்டு மக்களின் வாழ்வில் முற்போக்கான மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய அரசாங்கமே கனடாவுக்கு தேவை என்று வலியுறுத்திய அவர், அத்தகைய ஒரு அரசாங்கத்தினை அமைக்க எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் கனேடியர்கள் Justin Trudeau தலைமையிலான லிபரல் அரசாங்கத்தினையே தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் அடுத்த தலைவராக லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeauவைத் தெரிவு செய்யுமாறும் வாக்காளர்களிடத்தில் ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post Justin Trudeauவுக்கு ஆதரவு திரட்டும் கத்தலின் வின் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பச்சை பயறை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted: 06 Oct 2015 08:03 AM PDT

hj

hjநாம் தினசரி உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பது என்பது அவசியமானது.

அத்தகைய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது தான் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். வயிற்றிக்கு கிடைத்ததை உட்கொள்ளலாம் எனும் போது உடநலப் பிரச்சனைகள எட்டி பார்க்க தொடங்குகிறது.

தற்போதைய சூழ்நிலையில் சரியான ஆலோசனை, மாறிவரும் சமூகத்தால் போதிய நேரமின்மை ஆகியவை உண்ணும் உணவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவு என்பது கேள்விக் குறியாகி விடுகிறது.

இத்தகைய சுழலில் நாம் தினசரி சாப்பிடும் உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வது உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். அதிலும் பச்சை பயறு உடல்நல ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.hj

பச்சை பயற்றின் நன்மைகள்:-

1) ஒரு பவுல் வேக வைத்த பச்சை பயறில் 100 கலோரிகளுக்கு மேல் உள்ளது. இவை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

2) பச்சை பயறு, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கும் உதவுகிறது. பச்சை பயறு நீண்ட நேரம், வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது.

3) பச்சை பயறு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் சப்பாத்தி சாப்பிடும் போது பச்சை பயறை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

4) சரும புற்றுநோயில் இருந்து பச்சை பயறு பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் சுற்றுவோர், பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை உணவில் சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க முடியும்.

5) ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.

6) அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து கொள்ளும் போது உடலில் இரும்புசத்து கூடும்.

The post பச்சை பயறை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™