Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மிசிசாகாவில் வீட்டின் மீது மோதி நுளைந்த கார் – சாரதி கைது

Posted: 04 Oct 2015 04:43 PM PDT

kj

kjநேற்று இரவு மிசிசாகா பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முகப்பு பகுதி மீது மோதிய கார் ஒன்று வீட்டுச் சுவரினை உடைத்துக் கொண்டு உள்நுளைந்த சம்பவம் தொடர்பில் அந்த வாகனத்தின் சாரதியான ஆண் ஒருவரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

Hurontario Street மற்றும் Eglinton Avenue பகுதியில், Barondale Driveவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தினால் வீட்டின் முகப்பு பகுதி, வாகனம் நிறுத்துமிடம் போன்றன பலத்த சேதமடைந்துள்ளதாகவும், வீட்டின் அடித் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நீர்க் குளாய் பொறிமுறைகளும் சேதமடைந்துள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.kj

அதிஸ்டவசமாக இந்த விபத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 19 வயதான Ahmed Abdul Ahmid என்பவர் மீது, வாகனத்தினை ஆபத்தான முறையில் செலுத்திச் சென்றமை உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

The post மிசிசாகாவில் வீட்டின் மீது மோதி நுளைந்த கார் – சாரதி கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்டனில் விபத்துக்குள்ளான காரினுள் சிக்குண்ட பெண் காயங்களுடன் மீட்பு

Posted: 04 Oct 2015 03:32 PM PDT

e

eபிரம்டன் பகுதியில் இன்று காலை இரண்டு வாகங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மோசமான காயங்களுக்கு உள்ளான பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Clark Boulevard மற்றும் Lisa Street பகுதியில் இன்று காலை 6.30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதாகவும், அந்த கார்களில் ஒன்றின் சிக்கி கொண்ட பெண் சாரதி ஒருவர் பகீரத முயற்சிகளின் பின்னர் மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

e

சம்பவம் தொடர்பில் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயதான Rivera Monge எனப்படும் பெண் மீது காவல்த்துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

விபத்தினை தொடர்ந்த அந்த வீதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், பிற்பல் 1.30 அளவில் அவை மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளன.

The post பிரம்டனில் விபத்துக்குள்ளான காரினுள் சிக்குண்ட பெண் காயங்களுடன் மீட்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Algonquin Park பகுதியில் வாகன விபத்து: ஒருவர் பலி

Posted: 04 Oct 2015 03:22 PM PDT

u

uAlgonquin Provincial Park பகுதியில் நேற்று பேரூந்து ஒன்றும் SUV ரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்ட விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்று வலது பக்கமாக திரும்பி பேரூந்து பயணித்துக் கொண்டிருந்த பாதையினுள் நுளைந்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் றிச்மண்ட்ட ஹில் பகுதியைச் சேர்ந்த 51 வயதான Jing Xu எனப்படும் SUV ரக வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பேரூந்தின் சாரதியான ரொரன்ரோவைச் சேர்ந்த 61 வயது ஆணும், காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருந்த போதிலும் குறித்த அந்த பேரூந்தில் இருந்த 53 பயணிகளுக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

The post Algonquin Park பகுதியில் வாகன விபத்து: ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Trans-Pacific கூட்டிணைவு முயற்சி தொடாபில் பிரதமர் தகவல்

Posted: 04 Oct 2015 11:13 AM PDT

Stephen_Harper-2306

Stephen_Harper-2306மிகப்பெரும் வர்த்தக உடன்பாட்டுக்கான Trans-Pacific கூட்டிணைவு முயற்சியில் கனடா ஈடுபட்டுள்ள நிலையில், அது குறித்து கனேடியப்பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த Trans-Pacific வர்த்தக உடன்பாட்டில் 12 நாடுகள் இணைந்து கொள்ளவுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் இந்த உடன்பாடு கனேடிய வரலாற்றிலேயே மிகப்பெரும் வர்த்தக நடவடிக்கையாக இருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வர்த்தக உடன்பாடு முயற்சி வெற்றியளிக்குமாயின் அது கனடாவின் பொருளாதாரத்திற்கு அளப்பெரும் உந்துசக்தியாக விளங்கும் என்ற நம்பிக்கையையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.Stephen_Harper-2306

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த கூட்டிணைவுக்கான முயற்சிகள் வெற்றி பெற்று இணக்கப்பாடுகள் எட்டப்படும் எனில் அது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

கனேடிய பொதுத் தேர்தல் நெருக்கும் நிலையில்,இந்த Trans-Pacific வர்த்தக உடன்பாடு தொடர்பான உறுதிப்பாட்டை கனேடியப் பிரதமர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post Trans-Pacific கூட்டிணைவு முயற்சி தொடாபில் பிரதமர் தகவல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கியூபெக் மாகாணத்தின் பொதுத் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Oct 2015 11:05 AM PDT

Quebec_public_sector_workers_protest_-_10032015 (1)

Quebec_public_sector_workers_protest_-_10032015 (1)கியூபெக் மாகாணத்தின் பொதுத் துறை பணியாளர்களினால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பொதுத் துறை பணியாளர்கள் சம்பள விடயம் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை கொடுக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மொன்றியலில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியில் மாநிலத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் வந்து கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொள்வதற்காக கியூபெக்கின் அனைத்து பாகங்களில் இருந்தும் சுமார் 225 பேரூந்துகளில் அரசாங்க பணியாளர்கள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மொன்றியலின் Mount Royal பகுதியில் இருந்து கியூபெக் முதல்வரின் ஆலுவலகம் வரை கால்நடையாக சென்றஆர்ப்பாட்க்காரர்கள், அரசாங்கத்துறை பணியாளர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர்.Quebec_public_sector_workers_protest_-_10032015 (1)

இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்த தொழிற்சங்கத்தின் தலைவர் கருத்து வெளியிடுகையில், தற்போதய நிலையில் தளர்வுப் போக்கினை வெளிப்படுத்த மாநில அரசாங்கம் மறுக்குமாக இருந்தால், போராட்டங்கள் இன்னமும் தீவிரப்படுத்தப்பட்டு, அழுத்தங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post கியூபெக் மாகாணத்தின் பொதுத் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

துப்பாக்கி வைத்திருந்த இருவர் காவல்த்துறையினரால் கைது

Posted: 04 Oct 2015 10:52 AM PDT

arrested_-_804

arrested_-_804துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பில் ரொரன்ரோ இளைஞர் இருவர் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இளைஞர்கள் இருவரும் உணவகம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக உலாவிக்கொண்டிருந்ததையும், இரண்டு நபர்களில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்ததனையும் கண்ட ஒருவர் காவல்த்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு 10.15 மணியளவில் அளவில், Kingston வீதி மற்றும் Lawrence Avenue East பகுதியிலிருந்து கிடைத்த அந்த தகவலை அடுத்து தாம் அந்த பகுதிக்கு உடனடியாக சென்றிருந்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த இடத்தில் வைத்தே 20 மற்றும் 24 வயதான அந்த இரண்டு இளைஞர்களையும் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.arrested_-_804

கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர்களின் அடையாளத்தினையும் காவல்த்துறையினர் வெளியிட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post துப்பாக்கி வைத்திருந்த இருவர் காவல்த்துறையினரால் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அளவுக்கதிகமாக பொரித்த மீன் சாப்பிடாதீர்கள்!

Posted: 04 Oct 2015 08:03 AM PDT

kl

klகடல் உணவுகளில் ஒன்றான மீனை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம்.

நன்கு காரசாரமாக குழம்பு வைத்தோ, பொரியல் என விதவிதமாக சமைத்து சுவைப்பார்கள்.

மீன்களை அவித்தோ குழம்பு வைத்தோ சாப்பிட்டால் இதயநோயின் பாதிப்பு குறையும்.

ஆனால், மீன்களை பொரித்து சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் நமக்கும் முழுமையாக கிடைப்பதில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரித்த மீன்

மீன்களை பொரித்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன், அத்தகைய உணவு தயாரிப்பு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொரித்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு, 48 சதவீதம் கூடுதல் ஆகிறது என அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.kl

பாத்திரம் கழுவுங்கள்

நாம் சமைத்த உணவுகளை சாப்பிட்டு முடித்த பின்னர், அதனை சமைப்பதற்கு பயன்படுத்திய பாத்திரங்களை பார்க்கும்போது எரிச்சல் வரும்.

ஆனால், முழு மனதுடன், சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை கழுவினால் மனசு லேசாகும், மனஅழுத்தம் குறையும் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.po

The post அளவுக்கதிகமாக பொரித்த மீன் சாப்பிடாதீர்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™