Tamil Star |
- ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில்
- ஒன்ராறியோ ஏரியிலிருந்து மீட்கப்பட்ட படகோட்டி மருத்துவமனையில் மரணம்
- ஸ்காபரோவில் வாகனம் மோதி சிறுவன் படுகாயம்
- புதிய பிரதமராக ஜஸ்டின் ரூடோ பதவியேற்கும் நேர விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
- பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி
- GO தொடரூந்து, இரண்டு பாரவூர்திகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி
- உடலில் நல்ல கொழுப்பு வேண்டுமா? இதனை பின்பற்றுங்கள்
- தினமும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
| ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் Posted: 31 Oct 2015 08:42 PM PDT
Victoria Park Avenue மற்றும் Dawes வீதிப் பகுதியில், Gower Streetஇல் இன்று இரவு 8.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடலின் மேற்பகுதியில் கத்திக் குத்துக் காயங்களுக்கு இலக்கான 16 வயது சிறுவன் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இரண்டாவது சிறுவனுக்கு ஏற்பட்ட காயம் உயிராபத்தானது அல்ல என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஆறு பதின்ம வயதினர் தப்பி ஓடிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை. The post ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோ ஏரியிலிருந்து மீட்கப்பட்ட படகோட்டி மருத்துவமனையில் மரணம் Posted: 31 Oct 2015 08:19 PM PDT
இந்த சம்பவத்தினை உறுதிப்படுத்தியுள்ள பீல் பிராந்திய காவல்த்துறையினர், Timothy Kelley எனப்படும் அந்த நபர் இன்று காலையில் Tommy Thompson Park அருகே ரொரன்ரோ காவல்த்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டு மோசமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை Credit River படகோட்டத்திற்கு என புறப்பட்டுச் சென்றவர் வீடு திரும்பாததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அவரைத் தேடி வந்த நிலையிலேயே இன்று காலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். மீட்கப்படும் போது அவர் உடலில் மிதப்பு அங்கி அணிந்தவாறு காணப்பட்டதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post ஒன்ராறியோ ஏரியிலிருந்து மீட்கப்பட்ட படகோட்டி மருத்துவமனையில் மரணம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்காபரோவில் வாகனம் மோதி சிறுவன் படுகாயம் Posted: 31 Oct 2015 08:13 PM PDT
மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பேர்ட் அவனியூ பகுதியில் இன்று மாலை 4.40 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த வழியே வந்த சிற்றூர்தி ஒன்று சிறுவன் மீது மோதியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தோர் தெரிவித்துள்ளனர். வாகனத்தினால் மோதுண்ட சிறுவனின் தலைப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், உடனடியாகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்றமைக்கான காரணங்கள் எவையும் உடனடியாக தெரியவரவில்லை. The post ஸ்காபரோவில் வாகனம் மோதி சிறுவன் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய பிரதமராக ஜஸ்டின் ரூடோ பதவியேற்கும் நேர விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன Posted: 31 Oct 2015 10:56 AM PDT
எதிர்வரும் புதன்கிழமை காலையில் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான புதிய லிபரல் அரசாங்கம் பதவியேற்றுக்கொள்ளும் என்று ஆளுநர் நாயகத்தின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் நான்காம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த பதவியேற்பு வைபவம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ஜஸ்டின் ரூடோ தாம் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ள நாளாக குறித்த இந்த திகதியை ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் நான்காம் திகதி, ஆளுநர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டன் முன்னிலையில் சத்தியப்பிரமானம் எடுத்துக் கொள்ளும் புதிய அரசாங்கத்தில், கனடாவின் 23ஆவது பிரதமராக ஜஸ்டின் ரூடோ பதவியேற்றுக்கொள்ளவுள்ளார். அவருடன் சேர்ந்த்து ஏனைய 25 அமைச்சரவை அங்கத்தவர்களும் பதவியேற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
The post புதிய பிரதமராக ஜஸ்டின் ரூடோ பதவியேற்கும் நேர விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி Posted: 31 Oct 2015 10:48 AM PDT
அந்த வெற்றிடத்திற்கு தற்காலிக தலைவர் ஒருவரை நியமிக்கும் நடவடிக்கையில் கட்சித் தலைமைப்பீடம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. பழமைவாதக் கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதாக இதுவரை ஆறுபேர் வெளிப்படையாக தமது அறிவிப்புக்களை விடுத்துள்ளனர். அல்பேர்ட்டா மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான றோனா அம்ப்றோஸ் (Rona Ambrose), மைக் லேக் (Mike Lake) போட்டியிடவுள்ளவர்களுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. போட்டியாளர் பட்டியலில் இணைந்துள்ள றோனா அம்ப்றோஸ் (Rona Ambrose) கருத்து வெளியிடுகையில், 2006ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தான் ஆறு அமைச்சரவை பதவிகளை வகித்துள்ளதாகவும், நாடாளுமன்றில் அதற்கான நன்மதிப்பை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தமது கட்சி மட்டுமின்றி ஏனைய கட்சிகளுடனும் கலந்து பேசி பணியாற்றுகின்றமை மற்றும் மரியாதையான அணுகுமுறை உள்ளிட்ட தனது தனிப் பண்புகளை ஏனைய உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி தலைமைப் பதவிக்கு போட்டியிடுமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது தலைமைத்துவத்தினை கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வரவேற்பது போலவே, நாட்டு மக்களும் வரவேற்பார்கள் எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். The post பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| GO தொடரூந்து, இரண்டு பாரவூர்திகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி Posted: 31 Oct 2015 10:30 AM PDT
மிசிசாகாவின் Lisgar "GO" தொடரூந்து நிலையப் பகுதியில் நேற்று காலை ஏழு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கையில், அந்த பகுதியில் ஏற்கனவே ஏற்பட்ட விபத்து தொடர்பில் உதவிபுரிவதற்காக அங்கு சென்ற பாரவூர்தியை அதன் சாரதி அந்த பகுதியில் நிறுத்தியிருந்ததாகவும், சிறிது நேரத்தின் பின்னரே அது தண்டவாளப் பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதை உணர்ந்த வாகனத்தின் சாரதி, அதனை அங்கிருந்து அகற்றுவதற்குள் அங்குவந்த தொடரூந்தினால் மோதுண்டதாகவும் குறித்த அந்த வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த ஆண் நபர் 54 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விபத்து இடம்பெற்றதை அடுத்து தொடருந்து நிறுத்தப்படும் வரையில், சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு பாரவூர்தி இழுத்துச் செல்லப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post GO தொடரூந்து, இரண்டு பாரவூர்திகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடலில் நல்ல கொழுப்பு வேண்டுமா? இதனை பின்பற்றுங்கள் Posted: 31 Oct 2015 08:17 AM PDT
அந்த கொழுப்பு இரண்டு வகையாக உள்ளது. ஒன்று LDL என்ற Low Density Lipoprotein. மற்றொன்று HDL என்ற High Density Lipoprotein. இவ்விரண்டு கொழுப்பு வகைகளுக்கு LDL என்று கெட்ட கொழுப்பு என்றும் HDL நல்ல கொழுப்பு என்றழைக்கப்படுகிறது. LDL கொலஸ்ட்ரால் என்பது, 139 மி.கி., குறைவாகவும், HDL கொலஸ்ட்ரால் என்பது ஆண்களுக்கு 40 கிராமிற்கு அதிகமாகவும் பெண்களுக்கு, 25 கிராமிற்கு மேலாகவும் இருத்தல் வேண்டும். HDL கொலஸ்ட்ரால் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகுறையும் போது, இதய நோய் ஏற்பட வழி பிறக்கிறது. மேலும் பெரும்பாலும், இந்தியர்களின் HDL கொழுப்பு அளவு சராசரியை விட குறைவாகவே உள்ளது. எனவே, HDL என்ற நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தினால், ரத்த குழாய் அடைப்பு ஏற்படாது. HDL கொலஸ்ட்ரால் அதிகரிக்க செய்ய வேண்டியவை தினசரி உடற்பயிற்சி, புகையை விடுதல், புரத எண்ணெய் உபயோகிப்பதை குறைத்தல் போன்றவை மூலம், HDL கொலஸ்ட்ரால் அளவை உயர்த்த முடியும். மேலும், உணவில் தினசரி சில பொருட்களை சேர்ப்பது மூலம், HDL என்ற கொழுப்பின் அளவை உயர்த்த முடியும். வெங்காயம் தினமும், பாதி அளவு வெங்காயத்தை சாப்பிடும் போது, HDL அளவு, 25 சதவீதம் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெங்காயத்தை இப்படி சாப்பிட முடியாதவர்கள் சாலட் மற்றும் வேறு உணவுப் பொருட்களுடன் இணைத்துச் சாப்பிடலாம். சோயா சோயாபீன்ஸ் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, HDL என்ற நல்ல கொலஸ்ட்ரால் உர வழிவகை செய்கிறது. சோயாபீன்ஸ் உணவில் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். முழு தானியங்கள் மூக்கடலை, வெள்ளை மூக்கடலை, ராஜ்மா போன்ற உடைக்காத முழு தானிய பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும். மேலும், தியான பயிற்சிகளும், மனதிற்கு சந்தோஷமான சூழ்நிலையும் HDL கொலஸ்ட்ரால் உயர துணை புரிகின்றன. The post உடலில் நல்ல கொழுப்பு வேண்டுமா? இதனை பின்பற்றுங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தினமும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? Posted: 31 Oct 2015 08:12 AM PDT
சத்துக்கள் கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள், இரும்புச் சத்து, விட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் விட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன. மருத்துவ பயன்கள் உடல் சக்தி க்ளுகோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரிச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன. ஆகையால் தினமும் பேரிச்சம்பழம் உட்கொண்டால், உங்கள் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்கும் உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம். இதில் இருக்கும் விட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க பயன் தருகின்றன. எலும்புகளின் வலிமை அதிகரிக்கும் பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கூட தினசரி பேரிச்சம்பழம் சாப்பிடலாம். இதில், செலினியம், காப்பர் போன்ற சத்துகளும் இருக்கின்றன, இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உறுதுணையாக இருக்கின்றன. செரிமானம் சரியாகும் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண இயலும். இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது, இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மற்றும் குடலியக்கத்தையும் சீர் செய்கிறது. சருமத்திற்கு நல்லது பேரிச்சம்பழத்தில் நிறைய விட்டமின் ஏ, பி போன்றவை இருக்கின்றன. இவை, சருமத்தின் தன்மையை மிருதுவாக்குகிறது, சுருக்கங்களை போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. இரத்த சோகைக்கு தீர்வு பேரிச்சம் பழத்தில் இருக்கும் இரும்பு, விட்டமின் சி, பி 6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தேர்வு காண முடியும். சாப்பிடும் முறை உலர்ந்த பேரீச்சம் பழங்கள் அப்படியே உண்ண ஏற்றது. வாதாங்கொட்டை, பாதாம் பருப்பு, சீஸ், கலர்ப்பொடி ஆகியவற்றுடன் பேரீச்சையும் சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம். பழ சாலட்டுகளில் பேரீச்சை துண்டுகள் சுவை சேர்க்கும். பேரீச்சை ஜூஸ் உடலுக்கு பேராற்றல் வழங்கக் கூடியது. பேரீச்சம்பழம், பதப்படுத்திய திராட்சை மற்றும் பன்னீருடன் சேர்த்து 'டேட்ஸ் சிரப்' தயாரித்து சத்துபானமாக அருந்தப்படுகிறது. The post தினமும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இன்று இரவு ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒன்ராறியோ ஏரியில் படகோட்டத்திற்காக சென்ற நிலையில் காணமல் போயிருந்த மிசிசாகாவைச் சேர்ந்த 36 வயது ஆண் ஒருவர், இன்று காலை ஏரியிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை ஸ்காபரோ பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதுண்ட 14 வயது சிறுவன் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திய பிரதமராக ஜஸ்டின் ரூடோ பதவியேற்கும் நேர விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பழமைவாதக் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து அதன் தலைமைப் பொறுப்பில் இருந்து ஸ்டீபனர் ஹார்ப்பர் விலகியுள்ளார்.


கொழுப்பு என்பது உடலின் செல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது.


இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரீச்சம்பழம் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.