Tamil Star |
- யோர்க் பிராந்தியத்திய நெடுஞ்சாலை 404 விபத்து – மூவர் உயிரிழப்பு
- கத்தலின் வின், ஜஸ்டின் ரூடோ சந்திப்பு – ஒன்ராறியோ ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆதரவழிப்பதாகவும் உறுதி
- பிரதான நீர்வழங்கல் குழாய்களில் வெடிப்பு – போக்குவரத்துக்களுக்கு பாதிப்பு
| யோர்க் பிராந்தியத்திய நெடுஞ்சாலை 404 விபத்து – மூவர் உயிரிழப்பு Posted: 28 Oct 2015 04:35 PM PDT
நேற்று மாலை 5 மணியளவில் Stouffville வீதிக்கு வடக்கே நெடுஞ்சாலை 404இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Ford Fusion ரக வாகனம் ஒன்று நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி பயணித்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது அது சாலையின் நடுத் தடுப்புக்களை உடைத்துக் கொண்டு வடக்கு நோக்கிய வழித்தடத்தினுள் நுளைந்து, அந்த வழியே வந்துகொண்டிருந்த Toyota Camry ரக வாகனத்தை மோதித் தள்ளியதாகவும் ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விபரம் தெரிவித்த காவல்த்துறை அதிகாரி ஒருவர், தெற்கு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாகனம் என்ன காரணத்தினால் நடுத் தடுப்பினை உடைத்துக்கொண்டு எதிர்த் தடத்தினுள் நுளைந்தது என்பதற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான வாகனங்கள் இரண்டும் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், அது மிகவும் பயங்கரமான விபத்து காட்சி எனவும் சம்பவ இடத்திலிருந்த அந்த காவல்த்துறை அதிகாரி விபரித்துள்ளார். சம்பவ இடத்திலேயே உயிரழந்த இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் அந்த Toyota Camry ரக வாகனத்தில் பயணித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது Ford Fusion ரக வாகனத்தில் பயணித்தவரே மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் மேலதிக விபரங்கள் எவையும் காவல்த்துறையினரால் உடனடியாக வெளியிடப்படவில்லை< The post யோர்க் பிராந்தியத்திய நெடுஞ்சாலை 404 விபத்து – மூவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கத்தலின் வின், ஜஸ்டின் ரூடோ சந்திப்பு – ஒன்ராறியோ ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆதரவழிப்பதாகவும் உறுதி Posted: 28 Oct 2015 04:30 PM PDT
பெருமளவான லிபரல் கட்சியினர் கூடியிருந்த இந்த நிகழ்வில் கத்தலின் வின் ற்கும், ஜஸ்டின் ரூடோவுக்குமான சந்திப்பு அரைமணி நேரமே இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து இருவரும் காலஞ்சென்ற ஈரானுக்கான கனடாவின் முன்னாள் தூதர் கென் டெய்லரின் இறுதி நிகழ்வுக்கு சென்றிருந்தனர்.அதன் காரணமாக நேற்றைய இந்த நிகழ்வினைத் தொடர்ந்து ஊடக சந்திப்புக்களில் இருவருமே கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இருவருக்கும் இடையேயான இந்த சந்திப்பு தொடர்பில் கத்திலின் வின் இன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து விடயங்களிலும் இரு தரப்பினரும் இணைந்து பணியாற்ற இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக ஒன்ராறியோ மாகாண அரசின் ஓய்வூதியத் திட்டம், கனேடிய தேசிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இருவருக்குமிடைய இணக்கப்பாடு நிலவியதாக அதில் கூறப்பட்டுள்ளது. The post கத்தலின் வின், ஜஸ்டின் ரூடோ சந்திப்பு – ஒன்ராறியோ ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆதரவழிப்பதாகவும் உறுதி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரதான நீர்வழங்கல் குழாய்களில் வெடிப்பு – போக்குவரத்துக்களுக்கு பாதிப்பு Posted: 28 Oct 2015 09:35 AM PDT
ஈரமான காலநிலை மற்றும் பிரதான நீர்வழங்கல் குழாய் உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக இன்று அதிகாலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது சில வீதிகள் போக்குவரத்திற்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ள போதிலும், சில வீதிகள் இன்னமும் மூடப்பட்டு உள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது. கார்டினர் அதிவிரைவுச் சாலையின் கிழக்கு நோக்கிய வழித் தடத்தில், யோர்க் வீதிப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அந்த வீதி மூடப்பட்ட போதிலும் தற்போது அது போக்குவரத்திற்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. யோர் வீதியின் தெற்கு நோக்கிய வழித்தடத்தில் Lakeshore Boulevard பகுதியும், வடக்கு நோக்கிய வழித்தடத்தில் Queens Quay பகுதியும் மூடப்பட்டதாகவும், அவற்றுள் சில வழித்தடங்கள் மீளத் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. Tecumseth வீதியில், Wellington Street ற்கும் King Street West ற்கும் இடைப்பட்ட பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல Pape Street இலும், Eastern Avenueவிற்கும் Queen Street Eastற்கும் இடைப்பட்ட பகுதி மூடப்பட்டுள்ளது. The post பிரதான நீர்வழங்கல் குழாய்களில் வெடிப்பு – போக்குவரத்துக்களுக்கு பாதிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

யோர்க் பிராந்தியத்தில், நெடுஞ்சாலை 404இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள ஜஸ்டின் ரூடோ ஆகியோர் நேற்றைய நாள் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளனர்.பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று புதிய பிரதமராக ஜஸ்டின் ரூடோ தேர்வானதன் பின்னர் முதன் முதலாக இவ்விருவருக்கும் இடையே இடம்பெற்ற இந்த சந்திப்பு, ஜஸ்டின் ரூடோவுக்கு உற்சாகமான வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் கோலாகலமாக அமைந்தது. இந்த பேச்சுக்களின் போது, ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஓய்வூதியத் திடடத்திற்கு தமது லிபரல் அரசாங்கம் உதவியளிக்கும் என ஜஸ்டின் ரூடோ உறுதியளித்துள்ளார்.