Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


உலங்குவானூர்தி விபத்து – இருவர் உயிரிழப்பு

Posted: 23 Oct 2015 01:12 PM PDT

helicopter_crash_in_Saskatchewan

helicopter_crash_in_Saskatchewanஉலங்குவானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய மத்திய காவல்த்துறையினர் இந்த விபத்துக் குறித்து தகவல் வெளியிடுகையில், சாஸ்காச்சுவான் மாநிலத்தின் வட பிராந்தியத்தின் பாய்ன்டன் பகுதியில் உள்ள ஆறு ஒன்றின் அருகே இந்த உலங்குவானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்.

அந்த உலங்குவானூதியின் விமானியான பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த 55 வயது ஆண் ஒருவரும், உலங்குவானூர்தியில் பயணித்த பிறின்ஸ் அல்பேரட்டைச் சேர்ந்த ஒருவரும் அந்த விபத்தில் பலியானதாகவும், இவர்கள் அந்த பகுதிஊடான மின் இணைப்புகளை சீர்செய்யும் கடமையில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.helicopter_crash_in_Saskatchewan

ஒப்பந்த ரீதியில் அமர்த்தப்பட்ட நிறுவனம் ஒன்றின் பணியாளர்களே உயிரிழந்தள்ளதாகவும், அவர்கள் மின் இணைப்புகளை சீர்செய்யும் பணியிலேயே அப்போது ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ள சாஸ்காச்சுவான் மின்சார வாரியத்தின் பேச்சாளர், சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

விபத்து தொடர்பில் கனேடிய மத்திய காவல்த்துறையினரும், கனேடிய போக்கவரத்து பாதுகாப்பு சபையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உலங்குவானூர்தி விபத்து – இருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சொந்த பிள்ளையை கத்தியால் குத்த முற்பட்ட தாய் காவல்த்துறையினரால் கைது

Posted: 23 Oct 2015 12:55 PM PDT

Mother_charged_with_attempted_murder_-_1023

Mother_charged_with_attempted_murder_-_1023ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் தாய் ஒருவர் தனது ஆறு வயது மகளை கத்தியால் குத்திய கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கத்திக்குத்துக்கு இலக்கான ஆறு வயது சிறுமி மருத்துவமனையில் உயிராபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சத்திரசிகிச்சைகளின் பி்ன்னரும் அவரின் நிலை மோசமாக உள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது ஆறு வயது மகளை கத்தியால் குத்திய அந்த பெண்ணை காவல்த்துறையினர் கைது செய்துள்ளதுடன்,அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டினையும் பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே சிறுமியின் தாயான 29 வயது பெண் சம்பவ இடத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.Mother_charged_with_attempted_murder_-_1023

சொந்தப் பிள்ளையை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அந்த தாயார் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் காவல்த்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஆறுவயது சிறுமி மீது கத்தியால் குத்தப்பட்ட இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post சொந்த பிள்ளையை கத்தியால் குத்த முற்பட்ட தாய் காவல்த்துறையினரால் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாகனம் மோதி 4 வயது சிறுமி பலி

Posted: 23 Oct 2015 12:43 PM PDT

Markham_collision_-_1023

Markham_collision_-_1023மார்க்கம் பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டேவிட் சுசூகி அரசாங்க பாடசலைக்கு அருகே Fieldside Street மற்றும் Riverwalk Drive பகுதியில் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தமது தயாருடன் வீதியைக் கடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு சிறுமிகள் மீது குறித்த அந்த வாகனம் மோதியதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.<

சம்பவத்தில் படுகாயமடைந்த நான்கு வயது சிறுமி உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் சகோரியான ஏழுவயது சிறுமியும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.Markham_collision_-_1023

குறித்த அந்த சிறுமிகள் இருவரும் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையிலேயே வசித்து வருவதாகவும், அருகே உள்ள பாடசாலைக்கு அன்றாடம் சென்று வருவதாகவும் தெரிவித்துள்ள அயலவர்கள், அந்த பகுதி ஊடாக வாகனங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் பயணிப்பதாகவும், நேற்றைய இந்த சம்பவம் அனைவரையும அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

The post வாகனம் மோதி 4 வயது சிறுமி பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அசைவ உணவால் பற்களுக்கு ஆபத்தா? கலர் கலரான கேசரி பிரியரா? தெரிந்துகொள்ளுங்கள்

Posted: 23 Oct 2015 08:43 AM PDT

kj

kjஅசைவ உணவுகளை ஆசையாக ருசித்து சாப்பிடும்போது அவை பற்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டால் பெரும் தொல்லையாக இருக்கும்.

அவ்வாறு சிக்கலை சந்திப்பர்வர்களுக்கு இதோ டிப்ஸ்

அசைவ உணவு வகைகளில் பெரும்பாலானவற்றை மெல்லும் போது, அவை மெல்லிய நார்களாக பிரியும்.

பற்களின் இடையே சிறிய இடைவெளி இருந்தாலும், அவற்றில் இவை புகுந்து விடும். ஈறு நோய் உள்ளவர்கள், பல்சொத்தை உள்ளவர்களுக்கு, பற்களின் நடுவே உள்ள இடைவெளி, பெரிதாக இருக்கும்.

இதனால் அசைவ உணவுகள் சிக்கிக்கொள்வது அதிகமாக இருக்கும்.

இதற்கு, "டென்டல் ப்ளாஸ்' என்ற நூலை, பற்களின் இடையே விட்டு சுத்தம் செய்யலாம். இதன் மூலம் உணவுத் துண்டுகளை எடுப்பதுடன், பற்களின் இடுக்குகளையும் சுத்தம் செய்யலாம்.

பல்குச்சி, பின், ஊசி போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

இது இடைவெளியை பெரிதாக்கி ஈறுகளை புண்ணாக்கி விடும். இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

எப்போதும் பற்களின் நடுவே உணவு மாட்டிக் கொள்ளும் தொந்தரவு இருப்பவர்கள், பற்களின் இருபக்கமும் உள்ள இடைவெளியை மூடும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

ஈறுகள் கீழே இறங்கி, இடைவெளி ஏற்பட்டு இருந்தால் ஈறுகளின் அடியில் சுத்தம் செய்து, மருந்து வைத்து கட்டி, ஈறுகளை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

இது போன்ற சிகிச்சைகளாலும், சரியாக சுத்தம் செய்யும் முறைகளாலும், பற்களின் இடையே அசைவ உணவு மாட்டிக் கொள்ளாமல் தவிர்க்கலாம்.kj

கலர் கலரான கேசரி

கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதுவும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.jk

The post அசைவ உணவால் பற்களுக்கு ஆபத்தா? கலர் கலரான கேசரி பிரியரா? தெரிந்துகொள்ளுங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்ரன் பகுதியில் உந்துருளி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Posted: 23 Oct 2015 12:10 AM PDT

p

pபிரம்ரன் பகுதியில் உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மிசிசாகா வீதி மற்றும் குயின் வீதிப் பகுதியில் இன்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காவல்த்துறைத் தகவலின்படி உந்துருளி மற்றும் four-door sedan ஆகியன மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை விபத்தில் உயிரிழந்வர் தொடர்பான விபரங்கள் தொடர்பில் காவல்த்தறையினர் தகவல்கள் எதனையும் இன்னமும் வெளியிடவில்லை.p

விபத்தை அடுத்து குறித்த வீதிப்பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டு, காவல்த்துறையினரின் விசாரணைகளை அடுத்து மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது.

The post பிரம்ரன் பகுதியில் உந்துருளி விபத்து – ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலியல் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நபரின் ஒளிப்பட ஆதராம் வெளியிடப்பட்டுள்ளது

Posted: 22 Oct 2015 08:02 PM PDT

o

oபெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கிய நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு காவல்த்தறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை காலை 8 மணியளவில் ரொரன்ரோ போக்குவரத்து பேருந்தில் (TTC bus)பயணம் செய்த பெண் ஒருவரை பாலியல் தாக்குதல் செய்ததாக அந்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பேருந்து Bayview அவனியூவிற்கு அருகில் Finch அவனியூ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,23 வயதுப் பெண் மீது பாலியல் தாக்குதல் நடாத்திய அந்த நபர் பின்னர் Finch Subway தரிப்பிடத்தில் பேருந்தை விட்டு இறங்கிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தாக்குதல் நடாத்திய குறித்த அந்த நபரின் படத்தை காவல்த்துறையினர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

குறித்த நபர் 24 வயது மதிக்கத் தக்கவர் என்றும், ஐந்து அடி ஐந்து அங்குல உயரமும், 140 இராத்தல் நிறையும் கொண்ட, குட்டையான கடும் கபில நில முடியையும், குறுகிய தாடியையும் கொண்டவர் என்றும் காவல்த்துறையினர் விபரித்துள்ளனர்.o

கடைசியாக அவரை காணும் போது அவர் கறுப்பு நிற யக்கெற், மற்றும் கடுகுநிறமான காற்சட்டை மற்றும் கறுப்பு தடித்த கண்ணாடி என்பவற்றை அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் முதுகில் அணியும் கறுப்பு நிற கைப்பை மற்றும் Samsung கைபேசி என்பனவும் வைத்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.

இந்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 416-808-3200 என்ற இலக்கத்தில் காவல்த்துறையினருடன் அல்லது 416-222-TIPS (8477) என்ற இலக்கத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பாலியல் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நபரின் ஒளிப்பட ஆதராம் வெளியிடப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™