Tamil Star |
- எகிப்திய சிறையிலிருந்து விடுதலையான மொஹ்மட் ஃபஹ்மி கனடாவை வந்தடைந்தார்
- ஈட்டோபிக்கோவில் விபத்துக்குள்ளான காரை கைவிட்டுச் சென்ற சாரதி தேடப்படுகிறார்
- ஈட்டோபிக்கோவில் உந்துருளி விபத்து – ஓட்டுனர் படுகாயம்
- பிரம்ரன் கத்திக்குத்து சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில்
- Trans-Pacific பங்காளித்துவ திடம் – ஏனைய கட்சிகளை சாடுகிறார் Tom Mulcair
- காலையில் வெள்ளை பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
| எகிப்திய சிறையிலிருந்து விடுதலையான மொஹ்மட் ஃபஹ்மி கனடாவை வந்தடைந்தார் Posted: 12 Oct 2015 07:23 PM PDT
எகிப்தில் சுயாதீனமாக கருத்து வெளிடுவது தொடர்பிலான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் சிறையில் கழித்த அவர், இறுதியில் ஒருவாறு விடுதலையாகி நேற்று நாடு திரும்பியுள்ளார். அல் ஜசீரா சர்வதேச ஊடகத்தில் பணியாற்றிய இவர் உள்ளிட்ட மூன்று பேர் பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் அவர் நாடு திரும்பியதை அடுத்து, அது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்டுள்ள அவரது குடும்பத்தினர், இவ்வாறான ஒரு நாளைத்தான் தாம் எதிர்பார்த்திருந்ததாக தெரிவித்துள்ளனர். தான் கனடாவை வந்தடைந்த போது விமான நிலையத்தில் தன்னை நன்றா கவனித்துக் கொண்ட அதிகாரிகளின் செயற்பாடு குறித்து தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக மொஹ ஃபஹ்மி தெரிவித்துள்ளார். The post எகிப்திய சிறையிலிருந்து விடுதலையான மொஹ்மட் ஃபஹ்மி கனடாவை வந்தடைந்தார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈட்டோபிக்கோவில் விபத்துக்குள்ளான காரை கைவிட்டுச் சென்ற சாரதி தேடப்படுகிறார் Posted: 12 Oct 2015 07:18 PM PDT
இஸ்லிங்டன் அவனியூவில் தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த அந்த கார் இன்று அதிகாலை நான்கு மணியளவில், வீதியின் நடுவே இருந்த மின் விளக்கு கம்பத்துடன் மோதுண்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான கார் விதியின் எதிர்த்திசையில், வடக்கு நோக்கிய வழித்டத்தினுள் நுளைந்த பின்னரே ஓய்வுக்க வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரும், காவல்த்தறையினரும் விரைந்த வேளையில் அங்கே அந்த கார் மட்டும் காணப்பட்டதாகவும், சாரதி காரை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வாகனத்தில் பயணித்ததாக நம்பப்படும் வேறு ஒரு நபரையும் தாம் தேடி வருவதாக 23ஆவது பிரிவு காவல்த்துறையின் அதிகாரி ஒருவர் தெரவித்துள்ளார். இந்த சம்பவம் தொட்பில் தகவல் அறிந்தோர் தம்மை 416-808-2300 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். The post ஈட்டோபிக்கோவில் விபத்துக்குள்ளான காரை கைவிட்டுச் சென்ற சாரதி தேடப்படுகிறார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈட்டோபிக்கோவில் உந்துருளி விபத்து – ஓட்டுனர் படுகாயம் Posted: 12 Oct 2015 03:11 PM PDT
Martingrove வீதி Eglinton அவனியூ பகுதியில் இன்று இரவு ஏழு மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திலிருந்து உந்துருளி ஓட்டுனர் மிகவும் மோசமான நிலையிலேயே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதனை ரொரன்ரோ அவசர மருத்துவ பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவரின் பெயர் விபரங்களோ, அவர் ஆணா பெண்ணா என்ற விபரங்களோ, சம்பவம் தொடர்பில் ஏதாவது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டனவா போன்ற விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை. The post ஈட்டோபிக்கோவில் உந்துருளி விபத்து – ஓட்டுனர் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்ரன் கத்திக்குத்து சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில் Posted: 12 Oct 2015 01:07 PM PDT
பிரம்ரனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கத்திக்குத்துக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது இளைஞர் உயிர்பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கத்திக்குத்து சம்பவம் Steeles அவனியூ மற்றும் Hurontario வீதிகளின் அருகில் உள்ள Tim Hortons வாகனத் தரிப்பிடத்தில் நேற்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த நபரின் மீது பல தடவைகள் கத்திக்குத்துப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை தாம் தேடி வருவதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். தேடப்படுபவர்களில் ஒருவர் கறுப்பினத்தை சேர்ந்த 20 இற்கும் 25 இற்கும் இடைப்பட்ட வயதுடையவர் என்றும் காவல்த்துறையினர் விபரித்துள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட நபரின் விபரத்தையும் வெளியிடாத காவல்த்துறையினர், தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். The post பிரம்ரன் கத்திக்குத்து சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Trans-Pacific பங்காளித்துவ திடம் – ஏனைய கட்சிகளை சாடுகிறார் Tom Mulcair Posted: 12 Oct 2015 12:07 PM PDT
அத்துடன் கனடாவுக்கு பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய Trans-Pacific பங்காளித்துவ திட்டத்தில் இருந்து கனேடியர்களை பாதுகாக்கக்கூடிய வல்லமை புதிய சனநாய கட்சியிடம் மாத்திரமே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த வேளையில் Tom Mulcair இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மக்களை திசைதிருப்பும் வகையிலான வாக்குறுதிகளை வழங்குவதற்காகவே ஸ்டீபன் ஹார்ப்பர் இவ்வாறான உடன்படிக்கையை வலிந்து மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். இலட்சக் கணக்கான மக்களின் வேலைக்கு அச்சுறுத்தலாகவும், ஊதியங்களை குறைக்கும் வகையிலும் கைச்சாத்தாகியுள்ள இந்த ஒப்பந்தத்திற்கு, புதிய சனநாயக கட்சியைப் போலன்றி, லிபரல் கட்சி ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறான நிலையில், கனேடிய மக்களையும், தொழிலாளர் சமூகத்தினையும் பாதுகாத்து, அவர்களுக்கான சிறந்த இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள புதிய சனநாயக கட்சியால் மட்டுமே முடியும் எனவும் அந்த கட்சியின் தலைவரான Tom Mulcair தெரிவித்துள்ளார். The post Trans-Pacific பங்காளித்துவ திடம் – ஏனைய கட்சிகளை சாடுகிறார் Tom Mulcair appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| காலையில் வெள்ளை பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! Posted: 12 Oct 2015 08:37 AM PDT
தேநீர், காபி போன்றவை உடலுக்கு புத்துணர்ச்சியை தந்தாலும், காலை நேரத்தில் பழச்சாறுகள் குடிப்பதல் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். காலையில் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ, சத்துக்கள்: வெள்ளைப் பூசணியில் விட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மருத்துவ பயன்கள்: 1. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும். 2. தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். 3.வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும். 4.உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும். 5. வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம். 6. சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். The post காலையில் வெள்ளை பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

எகிப்திய சிறையில் இருந்து கடந்த மாதம் விடுதலை பெற்ற கனேடிய ஊடகவியளலார் மொஹ்மட் ஃபஹ்மி கனடாவை வந்தடைந்துள்ளார்.
ஈட்டோபிக்கோ றிச்வியூ பகுதியில் மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்ட கார் ஒன்றினை கைவிட்டுச் சென்றுள்ள அதன் சாரதியை தேடிவரும் காவல்த்துறையினர், அந்த காரில் மேலும் ஒரு பயணியும் இருந்திருக்க கூடும் என சந்தேகிப்பதுடன் அவரையும் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு ஈட்டோபிக்கோ பகுதியில வாகனம் ஒன்றுடன் உந்துருளி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மிக மோசமான காயங்களுக்கு உள்ளான உந்துருளி ஓட்டுனர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரும்பாலானோரின் வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பாக அமையக் கூடிய Trans-Pacific பங்காளித்துவ திட்டத்தினை நிறைவேற்றும் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் திட்டத்துடன், லிபரல் கட்சியும் ஒத்துப் போவதாக புதிய சனநாய கட்சியின் தலைவர் Tom Mulcair எச்சரித்துள்ளார்.
காலையில் எழுந்தவுடன் தேநீர், காபி குடிப்பதை பழக்கமாக கொண்டிருப்பவர்கள் ஏராளம்.