Tamil News | Online Tamil News |
- ரயில்களில் 'ஓசி' பயணம் இனிமேல் முடியவே முடியாது: டிக்கெட் சோதனையில் ஆர்.பி.எப்., வீரர்களை ஈடுபடுத்த முடிவு
- பிரதமரை சந்திக்க காத்திருக்கும் அ.தி.மு.க.,
- 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை கொண்டு வந்தது ராஜிவ்: பிட்ரோடா
- பாக்.,குக்கு ராணுவ உதவிகூடாது: அமெரிக்க எம்.பி.,
- தாக்கரேவை வணங்கும் மோடி: சிவசேனா போஸ்டரால் சர்ச்சை
- 'இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உண்மையே'
- பா.ஜ., அரசுக்கு ராகுல் கண்டிப்பு
- பருப்பு விலை உயர யார் காரணம்? பீஹாரில் கட்சிகள் கடும் மோதல்
- மஹாராஷ்டிராவில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பருப்பு 23 ஆயிரம் டன்
- பார்லி குளிர்கால கூட்டம் அடுத்த வாரம் முடிவு
| Posted: ரயில்களில், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும் திட்டமிட்டுள்ள ரயில்வே அமைச்சகம், ரயில் பயணிகளின் டிக்கெட்டை, ரயில்வே பாதுகாப்பு படையினரும் பரிசோதிக்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.ரயில்வே அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த சுரேஷ் பிரபு தலைமையில், ரயில்வே உயர்மட்டக் குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது.அதில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பயணத்தின்போது, பயணிகளிடம் ரயில் டிக்கெட்டை, ஆர்.பி.எப்., எனப்படும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் பரிசோதிக்க வேண்டும் என்ற திட்டத்தை, விரைந்து நடைமுறைப்படுத்த, ... |
| பிரதமரை சந்திக்க காத்திருக்கும் அ.தி.மு.க., Posted: மீனவர் பிரச்னை குறித்து பேச, நேரம் ஒதுக்கும் படி, விண்ணப்பம் அளித்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து, அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, அழைப்பு வராதது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, டில்லியில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இலங்கை சிறையில் ஏற்கனவே, தமிழக மீனவர்கள், 54 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன், மேலும், 24 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.தமிழகத்தில், மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், மத்திய அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் ... |
| 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை கொண்டு வந்தது ராஜிவ்: பிட்ரோடா Posted: மும்பை:''டிஜிட்டல் இந்தியா எனப்படும், அனைத்து துறைகளிலும் தகவல் தொழில்நுட்ப திட்டத்தை தொடங்கியது, முன்னாள் பிரதமர் ராஜிவ்; இப்போதைய பிரதமர் நரேந்திர மோடியல்ல,'' என, இந்திய தகவல் தொழில்நுட்ப உலகின் தந்தை என பாராட்டப்படும், சாம் பிட்ரோடா கூறியுள்ளார். பிரதமராக ராஜிவ் இருந்த போது, இந்திய தொலை தொடர்பு கமிஷனின் தலைவராக, சாம் பிட்ரோடா நியமிக்கப்பட்டார். இவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான், தொலை தொடர்புத்துறையில், இந்தியா மாபெரும் வளர்ச்சி பெற முடிந்தது. 'பெரிய கனவு; இந்தியாவை இணைப்பதற்கான பயணம்' என்ற தலைப்பில், தன் சுயசரிதையை ... |
| பாக்.,குக்கு ராணுவ உதவிகூடாது: அமெரிக்க எம்.பி., Posted: வாஷிங்டன்: பாகிஸ்தானின் ஏமாற்றுப்போக்கு தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள, அமெரிக்காவை சேர்ந்த மூத்த எம்.பி., 'பாகிஸ்தானுடன், சிவில் அணு ஒப்பந்தம் எதிலும், அமெரிக்கா கையெழுத்திடக் கூடாது' என வலியுறுத்தி உள்ளார்.அமெரிக்க பார்லிமென்ட் மூத்த உறுப்பினரும், பயங்கரவாதம் தொடர்பான பார்லிமென்ட் துணைக்குழு தலைவருமான டெட் போ, அதிபர் பராக் ஒபாமாவுக்கு எழுதிய கடித விவரம்:பாகிஸ்தான் அரசு, ஏமாற்றுப் போக்கை கடைபிடித்து வருகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதன் மோசடி வேலைகள் நிரூபணமாகி வருகின்றன. ஆப்கனில், அமெரிக்க வீரர்கள் மீது ... |
| தாக்கரேவை வணங்கும் மோடி: சிவசேனா போஸ்டரால் சர்ச்சை Posted: மும்பை: மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை, பிரதமர் மோடி உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்கள் வணங்கும் போஸ்டர்களை, சிவசேனா கட்சியினர் நேற்று நீக்கினர்.மஹாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக, பா.ஜ.,வின் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளார். இம்மாநிலத்தில், பா.ஜ., - சிவசேனா இடையிலான உறவில், நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி வருகிறது.கடந்த 19ம் தேதி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த சிவசேனா கட்சியினர், வாரிய தலைவர் ஷசாங்க் மனோகர், பாக்., கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய தலைவர் ஷஹர்யார் கான் ஆகியோருக்கு எதிராக ... |
| 'இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உண்மையே' Posted: கொழும்பு:'இலங்கையில், 2009ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, ராணுவம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தான். இதுகுறித்த, உள்நாட்டு விசாரணையில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற பரிந்துரை ஏற்கத்தக்கதே' என, அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு கூறியுள்ளது.இலங்கையில், 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர், 2009ல், முடிவுக்கு வந்தது. இப்போரின் இறுதி நாட்களில், எண்ணற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களில், ராணுவத்தினர் ஈடுபட்டதாக, ஐ.நா., மனித உரிமை கமிஷன் குற்றம் சாட்டியது.இதுதொடர்பாக, வெளிநாட்டு நீதிபதிகளை ... |
| பா.ஜ., அரசுக்கு ராகுல் கண்டிப்பு Posted: பரீதாபாத்:ஹரியானாவில், தலித் குழந்தைகள் இருவர் எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், வன்முறையை கட்டுப்படுத்த தவறிய, பா.ஜ., அரசை கண்டித்தார்.பரீதாபாத் அருகே உள்ள கிராமத்தில், ஜாதி தகராறு காரணமாக, தலித் ஒருவரின் வீட்டுக்கு சிலர் தீ வைத்தனர்.இதில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் உடல் கருகி இறந்துவிட்டனர். குழந்தைகளின் தாயும், தந்தையும் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக, 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பரீதாபாத்துக்கு நேற்று காலை சென்ற, காங்கிரஸ் ... |
| பருப்பு விலை உயர யார் காரணம்? பீஹாரில் கட்சிகள் கடும் மோதல் Posted: பாட்னா: பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பீஹார் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள், ஒன்றை ஒன்று சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றன.பீஹாரில், கடந்த 12 முதல், ஐந்து கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல், 28ல் நடக்கிறது. இந்நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி தலைவர்களும், பா.ஜ., தலைமையிலான கூட்டணித் தலைவர்களும், மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ... |
| மஹாராஷ்டிராவில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பருப்பு 23 ஆயிரம் டன் Posted: புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநிலத்தில், அரசு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 160 கோடி ரூபாய் மதிப்புள்ள, 23 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பருப்பு விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.பருப்பு வகைகள் அதிகம் விளையும், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், பருவ மழை குறைவால், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த வேளாண் பருவத்தில், பருப்பு உற்பத்தியில், 20 லட்சம் டன் குறைந்துள்ளது.சில வியாபாரிகள் இதை சாதகமாக பயன்படுத்தி, பருப்பை பதுக்கி, செயற்கையான விலையேற்றத்தை ... |
| பார்லி குளிர்கால கூட்டம் அடுத்த வாரம் முடிவு Posted: புதுடில்லி: பார்லிமென்ட்டின் குளிர்காலக் கூட்டத் தொடரை எப்போது என்பது குறித்து அடுத்த வாரம் முடிவாகிறது.சி.சி.பி.ஏ. எனப்படும் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அதிகாரிகள் கூறியதாவது: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சி.சி.பி.ஏ. கூட்டம் நடந்தது. பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா உள்பட பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டம் நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 22,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |