Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இடஒதுக்கீட்டை மாற்ற திட்டமா?

Posted:

பாட்னா, :''இடஒதுக்கீடு நடைமுறையில் மாற்றம் செய்யும் திட்டம் எதுவும், பா.ஜ., அரசுக்கு இல்லை. ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடு நடைமுறை தொடர வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா கூறினார். பீஹார் மாநிலம், பாட்னாவில், பா.ஜ., தலைவர் அமித் ஷா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும், பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பா.ஜ.,வுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றனர். பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, இடஒதுக்கீட்டை ரத்து செய்யப் போவதாகவும்; மாற்றம் செய்யப் ...

சிறுமியரை கற்பழித்தால் தூக்கு தண்டனை?

Posted:

புதுடில்லி:சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு அல்லது ஆயுள் தண்டனை அளிக்கலாமா என ஆய்வு செய்ய, உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அதிர்ச்சி அலை...:
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு, இரண்டு பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.'டில்லி காவல் துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் தான், இதுபோன்ற சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. காவல் துறையை, ...

பி.சி.சி.ஐ., அலுவலகத்தில் புகுந்து சிவசேனா ரகளை: பாக்.,குடன் கிரிக்கெட் போட்டி நடத்த எதிர்ப்பு

Posted:

மும்பை: பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்த சிவசேனா கட்சியினர், 'பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷஹர்யார் கானுடன், கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக எந்த பேச்சும் நடத்தக் கூடாது' என, வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.டில்லியிலும், அதுபோல, காஷ்மீர் சுயேச்சை எம்.எல்.ஏ., முகத்தில் கறுப்பு மை பூசி, இந்து மத ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர்.மும்பை மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள், 2008ல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ...

ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

Posted:

புதுடில்லி: மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோர், அரசுக்கு தவறான தகவல்களை அளித்தால், இனி, குற்ற வழக்குகளை சந்திக்க நேரிடும். மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:அரசின் உயர் பதவிகளில் பணியாற்றியவர்கள் பலர், ஓய்வு பெற்றதும், அரசு சாரா அமைப்பிலோ, தனியார் நிறுவனங்களிலோ சேருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவற்றில், சில அரசு சாரா அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று, அதை, அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றன. அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையிலும், நாட்டுக்கு களங்கம் ...

ஆட்சி மாற்றம்: கருணாநிதி சூளுரை

Posted:

சென்னை : ஆட்சி மாற்றம் ஏற்படுத்த கட்சி தொண்டர்கள், தமிழக மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதிபேசினார்.தி.மு.க., அமைப்பு செயலர், ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி இல்ல திருமண விழா, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:விலைவாசி உயர்வால், எதிர்காலம் குறித்து பெண்களும், பாட்டாளிகளும், உழவர்களும் கவலைப்படுகின்றனர். அவர்களின் எண்ணத்துக்கு அர்த்தம் உருவாக்க, தி.மு.க., தொண்டர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.தமிழக மக்களின் களங்கத்தை துடைக்கும் நல்லாட்சியை உருவாக்க வேண்டும்.எதிர்கால ...

நடிகர் சரத்குமார் அடுத்த நடவடிக்கை என்ன

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிந்தாலும், நேற்றும், அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. ''சர்ச்சைக்குரிய கட்டட ஒப்பந்தத்தை, செப்., 29ம் தேதியே ரத்து செய்து விட்டேன்,'' என, நடிகர் சரத்குமார், கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக பொன்வண்ணன் மற்றும் கருணாசும்; 24 செயற்குழு உறுப்பினர்களில், காளிமுத்து, காமராஜ், சபாபதி, விஸ்வநாதன் ஆகியோர் தவிர, 'பூச்சி' முருகன் உட்பட, 20 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சரத்குமார் அணியில், செயற்குழு ...

கூட்டுறவு கடைகளில் துவரம் பருப்பு விற்பனை: ஒரு கிலோ ரூ.110க்கு வழங்க ஜெ., உத்தரவு

Posted:

சென்னை :'தமிழகத்தில், 91 விற்பனை அங்காடிகளில், ஒரு கிலோ துவரம் பருப்பு, 110 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம், நவம்பர் முதல் தேதி துவக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:அத்தியாவசிய பொருட்களின் விலை, வெளிச்சந்தையில் உயரும் போது, விலையை கட்டுக்குள் வைக்கவும்; நுகர்வோருக்கு தரமான பொருட்கள், நியாயமான விலையில் கிடைக்கவும், 'விலை நிலைப்படுத்தும் நிதியம்' என்ற அமைப்பு, 100 கோடி ரூபாயுடன், 2012ல் துவக்கப்பட்டது.கடந்த ஆண்டில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், புளி போன்ற அத்தியாவசிய ...

இந்தியாவில் 'வால்மார்ட்' லஞ்சம் கொடுத்தது அம்பலம்

Posted:

வாஷிங்டன்:அமெரிக்காவின் பிரபல 'வால்மார்ட்' நிறுவனம், இந்தியாவில் வர்த்தகம் புரிய, கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்தது அம்பலமாகிஉள்ளது.இதுகுறித்து, அமெரிக்காவின், 'வால்ஸ்டீட் ஜர்னல்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி : உலகளவில் பிரபலமான, வால்மார்ட் நிறுவனம், 2006ல், இந்தியாவில், பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து, பல்பொருள் மொத்த விற்பனையில் களமிறங்கியது. இந்தியாவில் காலுான்ற, முந்தைய, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு, பல்பொருள் விற்பனையில், அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என, அழுத்தம் கொடுத்தது. இந்நிலையில், மன்மோகன் சிங் ...

ஸ்ரீவைகுண்டம் அணையில் ரூ.300 கோடிமணல் கொள்ளை : தூர்வாரும் பணி என்ற பெயரில் மெகா மோசடி

Posted:

'தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதாகக் கூறி, 300 கோடி ரூபாய் அளவுக்கு ஆற்று மணல் கொள்ளை நடந்துள்ளது' என, அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தூர்வாரும் பணிக்காக தொடரப்பட்ட வழக்கு, மணல், 'மாபியா'வுக்கு உதவியது எப்படி எனவும், அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள ஸ்ரீவைகுண்டம் அணை, 143 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்தது. இதனால், 8 அடி உயரத்துக்கு நீர் தேக்கும் பகுதியில், 7 அடி வரை மணலும், வண்டல் மண்ணும் சேர்ந்ததாக உள்ளது; 1 அடி உயரத்துக்கு கூட, தண்ணீர் தேக்க ...

ஓய்வு பெறுகிறார் சேவக்

Posted:

துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெறுகிறார் சேவக்.டெஸ்ட், ஒருநாள் போட்டி என்ற வித்தியாசம் இல்லாமல் துணிச்சலாக விளையாடி புரட்சி ஏற்படுத்தியவர் இந்தியாவின் சேவக். 36. கடந்த 1999ல் மொகாலியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 2001ல் புளோம்போன்டீனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இதில் சதம் அடித்து அசத்தினார்.மொத்தம் 251 ஒருநாள் போட்டிகளில் 8,273 ரன்கள்(15 சதம், 38 அரைசதம்) எடுத்துள்ளார். 96 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 104 டெஸ்டில் 8586 ரன்கள்(23 சதம், 32 அரைசதம்) எடுத்துள்ளார். 40 விக்கெட் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™