Tamil News | Online Tamil News |
- ஜெ., அதிரடி: எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி
- வலைதளங்களில் வலம் வரும் அ.தி.மு.க., - தி.மு.க., மோதல் காட்சிகள்
- 'தி.மு.க., கூட்டணி தான் எதிர்காலம்': விஜயகாந்துக்கு மா.செ.,க்கள் நெருக்கடி
- மோடி பிரதமராக காங்கிரசே காரணம்: சோனியா புது விளக்கம்
- 'ஸ்டாலின் ஆய்வு: ஜெ., ஓய்வு'
- முப்பதாண்டு பணிக்கு இப்போது அங்கீகாரம்: 'தினமலர்' ஆசிரியர் பெருமிதம்
- பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: மோடியின் புதிய வியூகம்
- கஸ்தூரி கை துண்டிப்பு: சவுதி புது 'கதை'
- சங்கத்தை கைப்பற்ற நடிகர், நடிகையர் பலப்பரீட்சை: பலத்த பாதுகாப்புடன் இன்று ஓட்டுப்பதிவு
- சரத் பவாரை புகழ்ந்த ஜெட்லி: மஹா., அரசியலில் மாற்றம்?
| ஜெ., அதிரடி: எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி Posted: சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும், அதிரடி நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகளிடம், அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க., ஆட்சியின் பதவி காலம், 2016, மே மாதத்துடன் முடிகிறது. எனவே, சட்ட சபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அ.தி.மு.க., தலைமை துவக்கியுள்ளது. |
| வலைதளங்களில் வலம் வரும் அ.தி.மு.க., - தி.மு.க., மோதல் காட்சிகள் Posted: தமிழகத்தில், ஆளுங்கட்சிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே, எந்த பிரச்னையாக இருந்தாலும், 'நீயா, நானா' போட்டி நடந்து வருகிறது. ஏராளமான கட்சிகள் இருந்தாலும், இவ்விரு கட்சிகளும், மாறி மாறி ஆட்சிக்கு வருவதால், இரு தரப்பும் எலியும், பூனையுமாகவே உள்ளன. தி.மு.க., ஆட்சியில் இருந்தால், அரசின் செயல்பாடுகளை கண்டித்து, அ.தி.மு.க., போராட்டத்தில் ஈடுபடும்; பதிலுக்கு, தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்தும். ஆளுங்கட்சியாக, அ.தி.மு.க., இருக்கும்போது, தி.மு.க., போராட்டம் நடத்தும்; போட்டியாக, அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்தும். |
| 'தி.மு.க., கூட்டணி தான் எதிர்காலம்': விஜயகாந்துக்கு மா.செ.,க்கள் நெருக்கடி Posted: 'தனித்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, மாவட்ட செயலர்கள் நெருக்கடி கொடுத்து வரும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:தனித்து போட்டியிட்டபோது, விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் நோக்குடன், 2011 சட்டசபை தேர்தலில், கூட்டணி வேண்டும் என, மா.செ.,க்கள் கூறியதும், அ.தி.மு.க.,வுடன் சேர்ந்தார், விஜயகாந்த். அதன் பலனாக, 29 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர்; சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தும், விஜயகாந்துக்கு கிடைத்தது. ஆனால், அடுத்தடுத்து நடந்த மோதல்களால், ... |
| மோடி பிரதமராக காங்கிரசே காரணம்: சோனியா புது விளக்கம் Posted: பக்சார் :''ஜனநாயகத்தை வலுப்படுத்த காங்., எடுத்த நடவடிக்கையால் தான், நரேந்திர மோடி பிரதமராக முடிந்தது'' என காங்., தலைவர் சோனியா கூறினார்.பீஹார் சட்டசபை தேர்தல் ஐந்து கட்டங்களாக நடக்கிறது. இரண்டு கட்ட வாக்கு பதிவு முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.பக்சார் தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்., தலைவர் சோனியா பேசியதாவது:நாட்டில் நடந்த 60 ஆண்டு கால காங்., ஆட்சியை குறை சொல்வதை, பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். காங்., எதையும் செய்யவில்லை என்று கூறுகிறார். ஆங்கிலேயர்கள் ... |
| Posted: நாகப்பட்டினம்:நாகை மாவட்டத்தில் நேற்று, 'நமக்கு நாமே' சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், 'தமிழகத்தில் ஸ்டாலின் ஆய்வு, கோடநாட்டில் ஜெ., ஓய்வு; இதுதான் தமிழகத்தின் நிலை' என்றார்.தமிழகம் முழுவதும், 'நமக்கு நாமே' என்ற பெயரில், சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று நாகை மாவட்டம் வந்தார். வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து பகுதியில், உப்பு உற்பத்தியாளர்கள், மாங்காய் விவசாயிகளை சந்தித்து, குறைகள் கேட்டறிந்து, அவர்களிடம் மனுக்கள் பெற்றார்.அப்போது அவர் கூறுகையில், ''அரசியல்வாதிகளை மக்கள் தேடிச் சென்ற காலம் மாறி, மக்களைத் தேடி ... |
| முப்பதாண்டு பணிக்கு இப்போது அங்கீகாரம்: 'தினமலர்' ஆசிரியர் பெருமிதம் Posted: சென்னை: ''தமிழுக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் செய்த பணிக்கு, இப்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது,'' என, 'தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.கணித்தமிழ் சங்கம் சார்பில், 'தினமலர்' ஆசிரியரும், தமிழ்நாடு நாணயவியல் சங்கத் தலைவருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, 'கணித்தமிழ் விருது' வழங்கும் விழா, தமிழ் இணைய கல்விக்கழக கலையரங்கில், நேற்று நடந்தது.விழாவில், 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ஏற்புரை வழங்கி பேசியதாவது: முப்பது ஆண்டுகளுக்கு முன், நான் செய்த பணிக்கு, இப்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது. நான், 30 ஆண்டுகளாக செய்து வரும், ... |
| பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: மோடியின் புதிய வியூகம் Posted: பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்காலம், குளிர்காலம் என, ஆண்டுக்கு குறைந்தபட்சம், 140 நாட்கள் பார்லிமென்ட் நடைபெறுவது வழக்கம். ஆனால், இப்போதெல்லாம், கூச்சல், கலாட்டாவால், பாதி நேரம் கூட்டத்தொடர் நடைபெறுவதே இல்லை. இந்நிலையில், நவம்பர் மாதம், குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது.எப்போது கூட்டத்தொடரை ஆரம்பிக்க வேண்டும் என்பதை, அரசு முடிவு செய்ய வேண்டும். 'மழைக்கால கூட்டத்தொடர் காங்., அமளியால் பாதிக்கப்பட்டதால், எந்த வேலையும் நடக்கவில்லை; அப்படியிருக்க, எதற்கு ஒரு மாதத்திற்கு மேலாக, சபைகளைக் கூட்ட வேண்டும். இம்முறையும், எதிர்க்கட்சிகள் ஏதாவது பிரச்னையை ... |
| கஸ்தூரி கை துண்டிப்பு: சவுதி புது 'கதை' Posted: ரியாத்:'தமிழகத்தைச் சேர்ந்த கஸ்துாரி என்ற பெண், மாடியில் இருந்து குதித்து, தப்ப முயன்றபோது தான் கையை இழந்தார்; அவர் கையை வெட்டவில்லை' என, சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.வேலுாரைச் சேர்ந்த கஸ்துாரி முனிரத்தினம், 56, என்ற பெண், சவுதி அரேபியாவுக்கு, வீட்டு வேலை பார்க்க சென்றிருந்தார். அங்கு, பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான அவர், அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அதை தடுக்க நினைத்த, கஸ்துாரி வேலைபார்த்த வீட்டின் எஜமானி, கஸ்துாரியின் கையை வெட்டியுள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஸ்துாரி, அங்குள்ள ஊழியர்களின் துணையுடன், தனக்கு நேர்ந்த கொடுமையை, ... |
| சங்கத்தை கைப்பற்ற நடிகர், நடிகையர் பலப்பரீட்சை: பலத்த பாதுகாப்புடன் இன்று ஓட்டுப்பதிவு Posted: ஒரு மாதமாக, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், சென்னையில் இன்று நடக்கிறது. சங்கத்தைக் கைப்பற்ற நடக்கும் இந்த பலப் பரீட்சையில் யார் வெற்றி பெற்றாலும், போட்டி நடிகர் சங்கம் உருவாகும் என்று, 'கோலிவுட்' வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், நடிகர் சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, இன்று காலை, 7:00 மணிக்கு துவங்கி, மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டு எண்ணிக்கை ... |
| சரத் பவாரை புகழ்ந்த ஜெட்லி: மஹா., அரசியலில் மாற்றம்? Posted: பாரமதி: மத்தியில் மற்றும் மஹாராஷ்டிராவில், ஆளும், பா.ஜ., - சிவசேனா கூட்டணி கட்சிகளிடையே, கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் நிலையில், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த அருண் ஜெட்லி, வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.மஹாராஷ்டிராவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் உள்ளார். துவக்க விழாஇவர், புனே மாவட்டம், பாரமதி நகரை சேர்ந்தவர். இங்கு, புதிதாக கட்டப்பட்ட, விவசாயக் கல்லுாரியின் துவக்க விழா நேற்று நடந்தது.மத்திய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 18,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |