Tamil News | Online Tamil News |
- ராகுல் நிகழ்ச்சியில் பங்கேற்காத அமைச்சர்களுக்கு நெருக்கடி
- நேபாள புதிய பிரதமராக சர்மா ஒலி தேர்வு
- 'காதலில் விழுந்தால் பதவி காலி': நக்சலைட்டுகளுக்கு கிடுக்கிப்பிடி
- ஜனநாயகத்தை பாதுகாக்க பிரதமர் மோடி அழைப்பு: அவசரநிலை காலத்தை நினைவூட்டி பேச்சு
- முன்கூட்டியே தேர்தல்: மக்கள் எதிர்பார்ப்பதாக ஸ்டாலின்
- பீஹாரில் இன்று நடக்கும் முதல் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்: அதிகாரிகள் நடத்திய வேட்டையில் இதுவரை ரூ.16 கோடி பறிமுதல்
- 54 தமிழக மீனவர்களை மீட்டுத்தர பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்
- 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு 2 கவுரவ பதக்கங்கள்
- நெல்லை பஸ்களுக்கு தற்காலிக விடிவு
- 'ஆச்சி' மனோரமா உடல் தகனம்: திரையுலகத்தினர் அஞ்சலி
- கூடங்குளத்தில் 2ம் அலகு தயார்
| ராகுல் நிகழ்ச்சியில் பங்கேற்காத அமைச்சர்களுக்கு நெருக்கடி Posted: பெங்களூரு:தேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், கர்நாடகாவிற்கு வருகை தந்த போது, அவரது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத, 15 அமைச்சர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுக்க, கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், கர்நாடக காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மாண்டியா, ஹாவேரி மாவட்டங்களில், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை, காங்., துணைத்தலைவர் ராகுல், கடந்த, 9, 10ம் தேதிகளில், சந்தித்து ஆறுதல் கூறினார்.இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, முதல்வர் சித்தராமையா, அனைத்து அமைச்சர்களுக்கும், கடிதம் ... |
| நேபாள புதிய பிரதமராக சர்மா ஒலி தேர்வு Posted: காத்மாண்டு:இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் புதிய பிரதமராக, சர்மா ஒலி, 63, நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.நேபாளத்தின் புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து ஏற்படாததை அடுத்து, பிரதமர் பதவியை யார் வகிப்பது என்பது தொடர்பாக, பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது.இதற்கான ஓட்டெடுப்பு, பார்லிமென்டில் நேற்று நடந்தது. மொத்தம், 587 உறுப்பினர்கள்ஓட்டளித்தனர். இந்த ஓட்டெடுப்பில், சி.பி.என்., - யு.எம்.எல்., கட்சித் தலைவர், சர்மா ஒலி, 338 ஓட்டுகள் பெற்று, புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேபாளி காங்கிரஸ் கட்சியின், ... |
| 'காதலில் விழுந்தால் பதவி காலி': நக்சலைட்டுகளுக்கு கிடுக்கிப்பிடி Posted: ராய்ப்பூர்:'நக்சலைட்டுகள், சகபெண் நக்சலைட்டுகளு டன் காதலில் விழுந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, அந்த அமைப்பின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். காதல் வயப்படும் நக்சலைட்டுகளிடம் இருந்து முக்கிய பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு, 'டம்மி' பதவிகள் வழங்கப்படுகின்றன. பீஹார், சத்தீஸ்கர், உத்தரகண்ட், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது.மாநில அரசுகளுக்குசவால் விடும் வகையில், அவ்வப்போது, இவர்கள் தாக்குதல் நடத்திவருகின்றனர். சத்தீஸ்கர், தெலுங்கானா, ஒடிசா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டும் ... |
| ஜனநாயகத்தை பாதுகாக்க பிரதமர் மோடி அழைப்பு: அவசரநிலை காலத்தை நினைவூட்டி பேச்சு Posted: புதுடில்லி:''அவசரநிலைக்கு எதிரான போராட்டம் தான், நாட்டின் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தியது; புதிய அரசியல் தலைமுறையை உருவாக்கியது. ஜனநாயக உணர்வுகளை பலப்படுத்துவதற்கு, அவசரநிலை கால நினைவலைகளை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கடந்த, 1975ல், அப்போதைய பிரதமர் இந்திரா, அவசரநிலையை அறிவித்தார். இதை எதிர்த்து போராட்டம் நடத்திய தலைவர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், அவசரநிலையின் போது போராடிய தலைவர்களை நினைவுபடுத்தும் வகையில் தலைநகர் டில்லியில், மத்திய அரசு சார்பில் விழா நடத்தப்பட்டது. சோசலிஷவாதியும், ... |
| முன்கூட்டியே தேர்தல்: மக்கள் எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் Posted: சென்னை:''தமிழகத்தில், முன்கூட்டியே தேர்தல் வராதா என மக்கள் எதிர்பார்ப்பதை அறிய முடிகிறது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார். திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:சுற்றுப்பயணம் பற்றிய விமர்சனத்தை, 'பாசிட்டிவ்' வாகவே எடுத்துக் கொள்கிறேன். 'அ.தி.மு.க., ஆட்சியை அகற்ற, தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதம் இருக்கிறதே... அதற்கு முன் தேர்தல் வராதா' என, மக்கள் எதிர்பார்ப்பதை அறிய முடிகிறது.ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூருக்கு தனி இடம் உள்ளது. தொழில் துறைக்கு போதிய வசதி இல்லாமல், தொழிலாளர்கள் ... |
| Posted: பாட்னா: பீஹாரில், முதற்கட்டமாக, 49 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது; ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. அதிகாரிகள் நடத்திய வேட்டையில், இதுவரை, 16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்டமாக, 49 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்., ஆகிய கட்சிகள், ஒரு கூட்டணியாக ... |
| 54 தமிழக மீனவர்களை மீட்டுத்தர பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம் Posted: சென்னை: 'இலங்கை அரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைவில் மீட்டுத் தாருங்கள்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்:தமிழகத்தின் நாகையைச் சேர்ந்த, 19 மீனவர்கள், அவர்களது இரு படகுகளில், நேற்று முன்தினம் அதிகாலை மீன் பிடித்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அது குறித்து, தங்களுக்கு மீண்டும் கடிதம் எழுதுகிறேன். சில வார இடைவெளியில், ஐந்தாவது தடவையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளதை, மனவேதனையுடன் சுட்டிக்காட்ட ... |
| 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு 2 கவுரவ பதக்கங்கள் Posted: சென்னை:இந்திய நாணயவியல் சங்க, 98ம் ஆண்டு கருத்தரங்கம் மற்றும் நாணய கண்காட்சி இனிதே முடிந்தது. இதில், தமிழ்நாடு நாணயவியல் சங்கத் தலைவரும், 'தினமலர்' நாளிதழ் ஆசிரியருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்டி, இரண்டு கவுரவப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஆய்வு கட்டுரைகள்: இந்திய நாணயவியல் சங்கத்தின், 98ம் ஆண்டு தேசிய கருத்தரங்கம் மற்றும் நாணயக் கண்காட்சி, சென்னைப் பல்கலை மெரினா வளாகத்தில், கடந்த இரண்டுநாட்களாக நடந்தது. இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன், நேற்று முன்தினம், கருத்தரங்கைத் துவங்கி வைத்தார். இந்திய ... |
| நெல்லை பஸ்களுக்கு தற்காலிக விடிவு Posted: 'நெல்லை போக்குவரத்து கழக பஸ்களை, 15 நாட்களுக்குள் பழுது பார்த்து, இயக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்' என, அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால், மோசமான பராமரிப்பு பஸ்களுக்கு விடிவு கிடைத்துள்ளது. ஆனாலும், நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில், நெல்லை, நாகர்கோவில், துாத்துக்குடி என, மூன்று மண்டலங்களை உள்ளடக்கிய, நெல்லை போக்குவரத்து கழகத்தில், 1,800 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 50 சதவீதத்திற்கும் மேலான பஸ்கள், ஆயுட்காலம் முடிந்தும் பயன்பாட்டில் உள்ளன. பஸ்களின் மோசமான பராமரிப்பு குறித்து, நமது நாளிதழில், இம்மாதம், ... |
| 'ஆச்சி' மனோரமா உடல் தகனம்: திரையுலகத்தினர் அஞ்சலி Posted: பழம்பெரும் நடிகை, 'ஆச்சி' மனோரமா உடலுக்கு, திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்; உடல், நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. தமிழ் திரைப்பட ரசிகர்களால், 'ஆச்சி' என, அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகை மனோரமா; இந்திய திரைப்படத்துறையில், மாபெரும் சாதனை படைத்தவர். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் என்.டி.ஆர்., என, ஐந்து முதல்வர்களுடன் பணியாற்றிய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு.இவர், 5,000த்திற்கும் மேற்பட்ட நாடகங்கள், 1,200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, 'கின்னஸ்' புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். ... |
| Posted: புதுடில்லி:கூடங்குளம் அணுமின் நிலையத்தின், இரண்டாவது அலகை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட மேலும் இரு புதிய அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான பணிகள், விரைவில் துவங்க உள்ளன.தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில், அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு, 2013 முதல், மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த நிலையத்தின், இரண்டாவது அலகை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, ரஷ்யாவை சேர்ந்த, அணுஉலை கட்டுமான நிறுவனம், 'ரோசடோம்' கூறியுள்ளது.இதுகுறித்து, ரோசடோம், இ - மெயிலில் அளித்த பதிலில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 12,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |