Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
- மோசடி புகாரில் 3 பேர் மீது வழக்கு
- தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு கலந்துரையாடல்
- புதிய நூலக கட்டடத்தை திறக்க மாணவர்கள் கோரிக்கை
- ரேஷன் கடை முற்றுகை
- சுங்கச்சாவடியை மூடக் கோரி லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தொகுப்பு வீடுகள் கட்டித் தருமாறு நரிக்குறவர் சமுதாயத்தினர் கோரிக்கை
- சூதாடிய 14 பேர் கைது
- ம.பொ.சி. நினைவு நாள் அனுசரிப்பு
- அனுமதியில்லாத சாயப்பட்டறைகள்:நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை
- ஆண் குழந்தை கடத்தல்: அண்ணன், தங்கைக்கு வலை
- மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரப் பயணம் நிறைவு
- மரம் விழுந்து 4 பேர் காயம்
- கோவை விரைவு ரயில் 4 மணி நேரம் தாமதம்
- விளையாட்டு பல்கலை.யை மேம்படுத்த விரைவில் நிதி :யு.ஜி.சி. துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் தகவல்
- இளைஞர்களிடம் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை தடுப்பது அவசியம்
- சாணார்பட்டி பகுதியில் ரூ.14.63 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள்
- காலமானார்:தமிழறிஞர் தமிழழகன்
- கேரளத்துக்கு கடத்த முயன்ற 400 கிலோ அரிசி பறிமுதல்
- திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊராட்சிகளில் 100 சதவீத கழிப்பறை வசதி திட்டம் நிறைவேற்றம்
- திருமலைக்கேணியில் சஷ்டி விழா
- புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
- கோம்பை திருமலைராய பெருமாள் கோயிலில் புரட்டாசி வழிபாடு
- பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நாளை முதல் மக்கள் சந்திப்பு பிரசாரப் பயணம்
- பழனி
- ரயில் நிலையப் பிரச்னை: நவ. 22 இல் வடமதுரையில் மறியல்
- 4 கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி நாளை அறிவிப்பு:வைகோ
- அதிமுக ஆலோசனைக் கூட்டம்
- தமாகா கையெழுத்து இயக்கம்
- பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
- முந்து தமிழ் வட்டெழுத்துடன் மூத்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு
- 8.50 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா: நிதியமைச்சர் தகவல்
- இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தனித் தமிழீழமே தீர்வு
- நத்தம் அருகே சுகாதாரப் பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்
- மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்
- லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
- நிர்வாகத்தை நடத்தி மக்களுக்கு நல்லது செய்வார் ஸ்டாலின்
- வீடு புகுந்து நகை திருடியவர் கைது
- கண்தான விழிப்புணர்வு முகாம்
- தங்கம்: பவுனுக்கு ரூ. 320 உயர்வு
- என்டிஎம்சி அதிகாரியை தாக்கியதாக பாஜக மூத்த தலைவர் மீது புகார்
- வருவிக்க உற்ற வள்ளலார்!
- நகை கடைகளில் திருட்டு: 3 பெண்கள் கைது
- தில்லி விமான நிலையத்தில் காவலரின் மனைவியிடம் தோட்டாக்கள் பறிமுதல்
- எலுமிச்சம் பழக் கணக்கு
- சோம்நாத் பார்திக்கு எதிரான வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல்
- கதைகளால் நிரம்பிய கதை!
- புதுதில்லி
- இந்தவாரம் கலாரசிகன்
- சொல் தேடல் -28
- பிகார் தேர்தல்: ரூ. 14 கோடி பறிமுதல்
- டிடிஇஏ பள்ளிகளில் உலக இயற்கை தினக் கொண்டாட்டம்
- டெங்குவுக்கு எதிராக அவையில் போராட்டம்: எதிர்க்கட்சி கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்ய நஜீப் ஜங்குக்கு மேயர் வலியுறுத்தல்
- குஜராத் அரசின் நிலம் கையக மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டாம்: குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கோரிக்கை
- டெங்கு தீவிரம்: பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்காமல் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை
- சிங்காரவேலர்-ஜீவரத்தினம் மணிமண்டபங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
- தில்லி முதல்வரை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
- 7 மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் கடிதம்
- பெண்களுக்கு இலவச பெட்ரோல்:பிகாரில் பாஜக தேர்தல் வாக்குறுதி
- "இந்திய விமானப் படைக்கு 108 ரஃபேல் போர் விமானங்கள் தேவை'
- இந்திய மீனவர்கள் 65 பேர் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது
- மதுரை வழக்குரைஞர்கள் இடைநீக்கம் நீடிக்கும்:தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர்
- சிறப்புக் குழு இன்று விசாரணை
- தலைமையின்றி செயல்படும் ராணுவ உளவு நிறுவனம்!
- வைகை அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது:பாசனத்துக்கு இன்று மீண்டும் தண்ணீர் திறப்பு
- காவிரி நீர் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்
- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: கருணாநிதி வலியுறுத்தல்
- லாரிகள் வேலைநிறுத்தம்: திண்டுக்கல் சந்தையில் 230 டன் வெங்காயம் தேக்கம்
- அனைத்து ஆசிரியர் சங்கங்கள் 8-இல் அடையாள வேலைநிறுத்தம்:தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு
- திருச்செந்தூர் கடலில் அம்மன் சிலை கண்டெடுப்பு
- குமரி: கடல் அலையில் சிக்கி மாணவி சாவு- 4 பேர் மாயம்
- ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் சாவு
- விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு:சிபிசிஐடி விசாரணை வளையத்தில் மற்றொரு பெண் டி.எஸ்.பி.
- ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாலேயே பிரச்னைகள் தீர்ந்துவிடாது: வெங்கய்ய நாயுடு
- உ.பி.: ஃபரூக்காபாத் ரயில் நிலையத்தில் வெடிகுண்டால் பரபரப்பு
- ஐ.நா.வில் இந்தியா மீது நேபாளம் புகார்
- வீரபத்ர சிங் மீது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தி: பாஜக
- ஹஜ் கூட்ட நெரிசல் குறித்து நம்பத்தகுந்த விசாரணை:சவூதி அரசுக்கு முஃப்தி முகமது சயீது வேண்டுகோள்
- "மகதாயி நதிநீர் இணைப்புத் திட்ட விவகாரத்தில் பிரதமர் தலையிடுவது அவசியம்'
- லாரிகள் வேலைநிறுத்தம்: ஒடிஸாவில் பருப்புகள், உருளைக்கிழங்கு விலை கடும் உயர்வு
- ஹார்திக் படேலின் பின்னணியில் ஆர்எஸ்எஸ்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- மேற்கு வங்க நகராட்சித் தேர்தலில் வன்முறை
- 3-ஆம் நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்:சரக்கு விநியோகம் பாதிப்பு
- பிரதமர் மோடிக்கு சுஷ்மா நன்றி
- ஒரே குடும்பத்தைசேர்ந்த 4 பேர் விஷமருந்தி தற்கொலை
- மேற்கு வங்கம்: குண்டு வெடித்து 2 பேர் பலி
- பஞ்சாப்: போதைக்கு எதிராக உறுதிமொழி எடுத்த 10,000 மாணவர்கள்
- கஜேந்திர சௌஹான் நியமன விவகாரம்:புணே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
- ஒடிஸா: வீட்டில் இருந்தே எஃப்ஐஆர் பதிவு செய்ய வசதி
- இறைச்சி விஷயத்தை பாஜக வகுப்புவாதப் பிரச்னையாக்குகிறது
- விவசாயிகளின் வெற்றிகளை டிடி கிசான் தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள்: கட்கரி
- உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது:பாகிஸ்தான் குற்றச்சாட்டு
- மத்தியப் பிரதேசத்தில் விநோதம்:வீட்டில் கழிப்பறை இல்லாததால் கணவரை பிரிந்து சென்ற மனைவி
- இந்திராணி உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்
- கோலாகலமாகத் தொடங்கியது 2ஆவது இந்தியன் சூப்பர் லீக்:சென்னையை வென்றது கொல்கத்தா
- தேசிய ஹாக்கி: ராஜஸ்தான், மேற்கு உ.பி. அணியினர் சாம்பியன்
- பந்து வீச்சாளர்களிடம் நிலைத்தன்மை இல்லை
- காஞ்சிபுரம்
- உஹான் ஓபன்: பட்டம் வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி
| கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசல் Posted: 03 Oct 2015 01:30 PM PDT கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். |
| மோசடி புகாரில் 3 பேர் மீது வழக்கு Posted: 03 Oct 2015 01:29 PM PDT வீட்டு அடமானக் கடனை முழுமையாக திரும்பத் தராமல் மோசடி செய்ததாக பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு கலந்துரையாடல் Posted: 03 Oct 2015 01:29 PM PDT வத்தலகுண்டு பேரூராட்சி சார்பாக, முழு சுகாதார தமிழகம் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| புதிய நூலக கட்டடத்தை திறக்க மாணவர்கள் கோரிக்கை Posted: 03 Oct 2015 01:28 PM PDT சின்னமனூர் அடுத்த கன்னியம்பட்டியில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடத்தை திறக்க, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 03 Oct 2015 01:26 PM PDT திண்டுக்கல் கோபால்நகரில் இயங்கி வரும் ரேஷன் கடையில் 1100 குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், முறையாக பொருள்கள் வழங்கவில்லை எனக்கூறி, பொதுமக்கள் கடை ஊழியர்களை சனிக்கிழமை முற்றுகையிட்டனர். தகவலின்பேரில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில், போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. |
| சுங்கச்சாவடியை மூடக் கோரி லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 03 Oct 2015 12:45 PM PDT செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை மூடக் கோரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| தொகுப்பு வீடுகள் கட்டித் தருமாறு நரிக்குறவர் சமுதாயத்தினர் கோரிக்கை Posted: 03 Oct 2015 12:44 PM PDT பூந்தமல்லியில் தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரவேண்டும் என நரிக்குறவர் சமுதாயத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 03 Oct 2015 12:44 PM PDT கடமலைக்குண்டில் உள்ள தனியார் மனமகிழ்மன்றத்தில் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில் கடமலைக்குண்டு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சோதனை நடத்தினர். இதில் கடமலைக்குண்டை சேர்ந்த முருகன் உள்பட ஒன்பது பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. |
| ம.பொ.சி. நினைவு நாள் அனுசரிப்பு Posted: 03 Oct 2015 12:43 PM PDT தணிகையை மீட்ட ம.பொ.சி. என்று அழைக்கப்படும் ம.பொ.சிவஞானத்தின் 20-ஆம் ஆண்டு நினைவு நாள் திருத்தணியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| அனுமதியில்லாத சாயப்பட்டறைகள்:நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் Posted: 03 Oct 2015 12:43 PM PDT காஞ்சிபுரத்தில் அனுமதியில்லாமல் இயக்கப்படும் சாயப் பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை Posted: 03 Oct 2015 12:43 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் பலத்த சூறைக் காற்றுடன் மழை பொழிந்தது. இதில் நெடுஞ்சாலைகளில் சிறிய, பெரிய மரங்கள் விழுந்தும், மின்சாரம் தடைபட்டும் மக்கள் அவதிக்குள்ளாகினர். |
| ஆண் குழந்தை கடத்தல்: அண்ணன், தங்கைக்கு வலை Posted: 03 Oct 2015 12:42 PM PDT பிறந்து 6 நாள்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்றவர்களை அவனியாபுரம் போலீஸார் தேடி வருகின்றனர். |
| மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரப் பயணம் நிறைவு Posted: 03 Oct 2015 12:42 PM PDT விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரப் பயணம் காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. |
| Posted: 03 Oct 2015 12:42 PM PDT திருவள்ளூர் மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த புளியமரம் சாலையில் விழுந்ததால் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் பலத்த காயமடைந்தனர். |
| கோவை விரைவு ரயில் 4 மணி நேரம் தாமதம் Posted: 03 Oct 2015 12:41 PM PDT நாகர்கோவில்-கோவை விரைவு ரயில், சுமார் 4 மணி நேரம் தாமதமாக திண்டுக்கல் ரயில் நிலையம் வந்ததடைந்ததால், பயணிகள் கடும் அவதியுற்றனர். |
| விளையாட்டு பல்கலை.யை மேம்படுத்த விரைவில் நிதி :யு.ஜி.சி. துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் தகவல் Posted: 03 Oct 2015 12:41 PM PDT தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டு பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார். |
| இளைஞர்களிடம் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை தடுப்பது அவசியம் Posted: 03 Oct 2015 12:40 PM PDT இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டியது அவசியம் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன். |
| சாணார்பட்டி பகுதியில் ரூ.14.63 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் Posted: 03 Oct 2015 12:40 PM PDT சாணார்பட்டி பகுதியில் ரூ.14.63 கோடி மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார். |
| Posted: 03 Oct 2015 12:39 PM PDT தமிழறிஞர் தமிழழகன் (86) சென்னை திருவொற்றியூரில் வெள்ளிக்கிழமை (அக்.2) காலமானார். |
| கேரளத்துக்கு கடத்த முயன்ற 400 கிலோ அரிசி பறிமுதல் Posted: 03 Oct 2015 12:39 PM PDT போடியிலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். |
| திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊராட்சிகளில் 100 சதவீத கழிப்பறை வசதி திட்டம் நிறைவேற்றம் Posted: 03 Oct 2015 12:38 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில், திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கம் இல்லாத ஊராட்சிகளாக 18 ஊராட்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| Posted: 03 Oct 2015 12:38 PM PDT நத்தம் அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை முருகப்பெருமானுக்கு சஷ்டி விழா நடந்தது. |
| புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 03 Oct 2015 12:37 PM PDT புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| கோம்பை திருமலைராய பெருமாள் கோயிலில் புரட்டாசி வழிபாடு Posted: 03 Oct 2015 12:37 PM PDT உத்தமபாளையம் அடுத்த கோம்பை திருமலைராயப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். |
| பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நாளை முதல் மக்கள் சந்திப்பு பிரசாரப் பயணம் Posted: 03 Oct 2015 12:37 PM PDT தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, மக்கள் சந்திப்பு பிரசாரப் பயணம் கன்னியாகுமரியில் இருந்து திங்கள்கிழமை தொடங்கப்படும் என, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். |
| Posted: 03 Oct 2015 12:36 PM PDT |
| ரயில் நிலையப் பிரச்னை: நவ. 22 இல் வடமதுரையில் மறியல் Posted: 03 Oct 2015 12:36 PM PDT ரயில் நிலையத்தை அகற்றுவது தொடர்பான பிரச்னையில், ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து நவம்பர் 22ஆம் தேதி வடமதுரையில் மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. |
| 4 கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி நாளை அறிவிப்பு:வைகோ Posted: 03 Oct 2015 12:35 PM PDT தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி, நான்கு கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி திருவாரூரில் திங்கள்கிழமை (அக். 5) முறைப்படி அறிவிக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். |
| Posted: 03 Oct 2015 12:35 PM PDT பழனியில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 03 Oct 2015 12:35 PM PDT நத்தத்தில் த.மா.கா. சார்பில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. |
| பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Posted: 03 Oct 2015 12:34 PM PDT பாடலாசிரியர் பி.கே.முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியும், மாதம்தோறும் ரூ.5 ஆயிரமும் அளிக்க அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| முந்து தமிழ் வட்டெழுத்துடன் மூத்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு Posted: 03 Oct 2015 12:33 PM PDT விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஆலகிராமத்தில் எமதண்டீஸ்வரர் கோயிலில் அரிய வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
| 8.50 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா: நிதியமைச்சர் தகவல் Posted: 03 Oct 2015 12:33 PM PDT தமிழகத்தில் வருவாய்த்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 8.50 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். |
| இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தனித் தமிழீழமே தீர்வு Posted: 03 Oct 2015 12:33 PM PDT இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தனித் தமிழீழமே தீர்வாகும். இதற்காக அவர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். |
| நத்தம் அருகே சுகாதாரப் பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் Posted: 03 Oct 2015 12:32 PM PDT காந்தி ஜயந்தியையொட்டி, நத்தம் அருகே பொடுகம்பட்டியில் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட சிரமதானப் பணி நடைபெற்றது. |
| மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் Posted: 03 Oct 2015 12:32 PM PDT தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய-மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். |
| லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது Posted: 03 Oct 2015 12:32 PM PDT உத்தமபாளையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீஸார் கைது செய்து ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரிகளை பறிமுதல் செய்தனர். |
| நிர்வாகத்தை நடத்தி மக்களுக்கு நல்லது செய்வார் ஸ்டாலின் Posted: 03 Oct 2015 12:31 PM PDT நிர்வாகத்தை நடத்தி, நாட்டுக்கு, மக்களுக்கு நல்லுதவிகளைச் செய்வார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறித்து அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி கருத்துத் தெரிவித்தார். |
| வீடு புகுந்து நகை திருடியவர் கைது Posted: 03 Oct 2015 12:31 PM PDT தேவாரம் அருகே வீடு புகுந்து 2 பவுன் நகை திருடியவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| Posted: 03 Oct 2015 12:31 PM PDT கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் ஆகியன சார்பில் கண் தான விழிப்புணர்வு முகாம் பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற்றது. |
| தங்கம்: பவுனுக்கு ரூ. 320 உயர்வு Posted: 03 Oct 2015 12:30 PM PDT சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 320 அதிகரித்து ஒரு பவுன் ரூ.19,944-க்கு விற்பனையானது. |
| என்டிஎம்சி அதிகாரியை தாக்கியதாக பாஜக மூத்த தலைவர் மீது புகார் Posted: 03 Oct 2015 12:30 PM PDT பாஜக மூத்த தலைவரும், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) துணைத் தலைவருமான கரண் சிங் தன்வார், தன்னைத் தாக்கியதாக என்டிஎம்சியின் அமலாக்கத் துறை இயக்குநர் நீரஜ் பார்தி புகார் தெரிவித்துள்ளார். |
| Posted: 03 Oct 2015 12:30 PM PDT அகம் கருத்து, புறம் வெளுத்து கண்டதே காட்சி கொண்டதே கோலமென இருள் நெறியில் வாழ்ந்திருந்த மக்களை சன்மார்க்க நெறிக்கு அழைத்திட இறைவன் என்னை இந்த உலகத்தில் பிறக்கச் செய்தான் என்பதை, |
| நகை கடைகளில் திருட்டு: 3 பெண்கள் கைது Posted: 03 Oct 2015 12:29 PM PDT தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதியில், சிறிய நகைக் கடைகளில் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த 3 பெண்களை, தில்லி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். |
| தில்லி விமான நிலையத்தில் காவலரின் மனைவியிடம் தோட்டாக்கள் பறிமுதல் Posted: 03 Oct 2015 12:28 PM PDT தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகருக்கு செல்வதற்காக வந்த காவலர் ஒருவரின் மனைவியிடம் இருந்து 2 துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 03 Oct 2015 12:28 PM PDT கொறுக்கையூர் காரிநாயனார் என்பவரால் இயற்றப்பெற்ற நூல் கணக்கதிகாரம். இந்நூலை சிதம்பர முதலியார் 1902-ஆம் ஆண்டு பதிப்பித்து வழங்கியுள்ளார். அப்பதிப்பை அடியாகக்கொண்டு அக்காலக் கணக்கியலின் நுட்பங்களுள் ஒன்றாகிய எலுமிச்சம் பழக் கணக்கைக் காண்போம். |
| சோம்நாத் பார்திக்கு எதிரான வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 03 Oct 2015 12:28 PM PDT தெற்கு தில்லி, கிர்க்கி பகுதியில் உள்ள பெண்கள் குடியிருப்பில் நள்ளிரவில் சோதனை நடத்தியது தொடர்பான வழக்கில் தில்லி முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சோம்நாத் பார்திக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்துள்ளது. |
| Posted: 03 Oct 2015 12:28 PM PDT "பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற தமிழின் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தது 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் நாள். |
| Posted: 03 Oct 2015 12:26 PM PDT |
| Posted: 03 Oct 2015 12:26 PM PDT இந்தவாரம் கலாரசிகன் |
| Posted: 03 Oct 2015 12:25 PM PDT கல்வியே மனிதனுக்குக் கண். காக்கைக்கு இரவில் கண்தெரியாது; கூகைக்குப் பகலில் கண்தெரியாது; கல்லாதவனுக்கோ இருவேளைகளிலும் கண்தெரியாது என்று கல்லாமையின் புன்மையைத் தெரிவிக்கிறது |
| பிகார் தேர்தல்: ரூ. 14 கோடி பறிமுதல் Posted: 03 Oct 2015 12:25 PM PDT பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இம்மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இதுவரை ரூ.14 கோடியை அந்த மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். |
| டிடிஇஏ பள்ளிகளில் உலக இயற்கை தினக் கொண்டாட்டம் Posted: 03 Oct 2015 12:25 PM PDT தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் உலக இயற்கை தினம் மற்றும் உலக விலங்குகள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| Posted: 03 Oct 2015 12:25 PM PDT வடக்கு தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில், டெங்கு பிரச்னையை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நியமன கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ரவீந்தர் குப்தா கடிதம் எழுதியுள்ளார். |
| Posted: 03 Oct 2015 12:24 PM PDT குஜராத் அரசின் நிலம் கையக மசோதா, பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்க வேண்டாம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| டெங்கு தீவிரம்: பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்காமல் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை Posted: 03 Oct 2015 12:23 PM PDT தில்லியில் டெங்கு தீவிரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, டெங்கு அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு, பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்காமல் மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளிக்கின்றனர். |
| சிங்காரவேலர்-ஜீவரத்தினம் மணிமண்டபங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் Posted: 03 Oct 2015 12:20 PM PDT சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம் ஆகியோரது மணிமண்டபங்களை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் திறந்து வைத்தார். |
| தில்லி முதல்வரை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் Posted: 03 Oct 2015 12:20 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி பகுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி கிராமவாசிகள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் நபரின் குடும்பத்தைச் சந்திக்க சென்ற தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| 7 மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் கடிதம் Posted: 03 Oct 2015 12:18 PM PDT இலங்கை கடற்படையால் கடந்த 1-ஆம் தேதியன்று பிடித்துச் செல்லப்பட்ட 7 தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். |
| பெண்களுக்கு இலவச பெட்ரோல்:பிகாரில் பாஜக தேர்தல் வாக்குறுதி Posted: 03 Oct 2015 12:18 PM PDT பிகாரில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், 10, 12-ஆம் வகுப்புகளில் முதல் 5,000 இடங்களில் வரும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு வழங்கப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு இரண்டு ஆண்டு காலம் இலவச பெட்ரோல் வழங்குவோம் என்று பாஜக வாக்குறுதி |
| "இந்திய விமானப் படைக்கு 108 ரஃபேல் போர் விமானங்கள் தேவை' Posted: 03 Oct 2015 12:17 PM PDT இந்திய விமானப் படைக்கு 108 ரஃபேல் ரக போர் விமானங்கள் அவசரத் தேவையாக இருக்கிறது என்று விமானப் படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹா தெரிவித்தார். |
| இந்திய மீனவர்கள் 65 பேர் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது Posted: 03 Oct 2015 12:17 PM PDT குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 65 பேரை பாகிஸ்தான் கடற்படை சனிக்கிழமை கைது செய்துள்ளது. |
| மதுரை வழக்குரைஞர்கள் இடைநீக்கம் நீடிக்கும்:தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் Posted: 03 Oct 2015 12:17 PM PDT நீதிமன்ற வளாகங்களில் போராட்டம் நடத்திய மதுரை வழக்குரைஞர்கள் 14 பேர் மீதான அகில இந்திய பார் கவுன்சிலின் இடைநீக்க உத்தரவு தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் தெரிவித்தார். |
| Posted: 03 Oct 2015 12:16 PM PDT இடைநீக்கம் செய்யப்பட்ட 14 வழக்குரைஞர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடைபெறுகிறது. |
| தலைமையின்றி செயல்படும் ராணுவ உளவு நிறுவனம்! Posted: 03 Oct 2015 12:16 PM PDT இந்திய ராணுவத்தின் மிக முக்கியமான அமைப்பாகக் கருதப்படும் பாதுகாப்பு உளவு நிறுவனம் (டிஐஏ), அதன் தலைமை இயக்குநரின்றி செயல்படுகிறது. |
| வைகை அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது:பாசனத்துக்கு இன்று மீண்டும் தண்ணீர் திறப்பு Posted: 03 Oct 2015 12:15 PM PDT வைகை அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியதால், முதல் போக பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. |
| காவிரி நீர் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் Posted: 03 Oct 2015 12:15 PM PDT காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்தி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. |
| மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: கருணாநிதி வலியுறுத்தல் Posted: 03 Oct 2015 12:13 PM PDT மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். |
| லாரிகள் வேலைநிறுத்தம்: திண்டுக்கல் சந்தையில் 230 டன் வெங்காயம் தேக்கம் Posted: 03 Oct 2015 12:13 PM PDT லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால், திண்டுக்கல் மண்டிகளில் சுமார் 230 டன் வெங்காயம் தேக்கமடைந்துள்ளது. சுமார் ரூ.1 கோடி அளவில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. |
| அனைத்து ஆசிரியர் சங்கங்கள் 8-இல் அடையாள வேலைநிறுத்தம்:தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு Posted: 03 Oct 2015 12:12 PM PDT அனைத்து ஆசிரியர் சங்கங்கள் இணைந்து 8-இல் நடத்தவுள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார். |
| திருச்செந்தூர் கடலில் அம்மன் சிலை கண்டெடுப்பு Posted: 03 Oct 2015 12:12 PM PDT திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடலில் சுமார் 1 அடி உயரம் கொண்ட உலோகத்தாலான அம்மன் சிலை சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. |
| குமரி: கடல் அலையில் சிக்கி மாணவி சாவு- 4 பேர் மாயம் Posted: 03 Oct 2015 12:12 PM PDT குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே சங்குத்துறையில் சனிக்கிழமை கடல் அலை இழுத்துச் சென்றதில் மாணவி உயிரிழந்தார். மேலும் 4 பேரை காணவில்லை. |
| ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் சாவு Posted: 03 Oct 2015 12:11 PM PDT சங்கராபுரம் அருகே ஆற்றில் குளித்த இரு சிறுமிகள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர். |
| விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு:சிபிசிஐடி விசாரணை வளையத்தில் மற்றொரு பெண் டி.எஸ்.பி. Posted: 03 Oct 2015 12:11 PM PDT டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் மற்றொரு பெண் டி.எஸ்.பி.யையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. |
| ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாலேயே பிரச்னைகள் தீர்ந்துவிடாது: வெங்கய்ய நாயுடு Posted: 03 Oct 2015 12:10 PM PDT ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு அந்த மாநில எதிர்க்கட்சியான ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சிறப்பு அந்தஸ்து வழங்குவதாலேயே அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடாது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
| உ.பி.: ஃபரூக்காபாத் ரயில் நிலையத்தில் வெடிகுண்டால் பரபரப்பு Posted: 03 Oct 2015 12:09 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை, வெடிகுண்டு கண்டறியப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. |
| ஐ.நா.வில் இந்தியா மீது நேபாளம் புகார் Posted: 03 Oct 2015 12:09 PM PDT எல்லை வர்த்தகம் மேற்கொள்ளும் பகுதியில் இந்தியா தடையை ஏற்படுத்தியுள்ளதால், அத்தியாவசியப் பொருள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா.சபையில் நேபாளம் புகார் அளித்துள்ளது. |
| வீரபத்ர சிங் மீது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தி: பாஜக Posted: 03 Oct 2015 12:08 PM PDT ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீது அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தங்களுடன் தொடர்பில் உள்ளதாக அந்த மாநில பாஜக பொதுச் செயலர் ரண்தீர் சர்மா தெரிவித்தார். |
| ஹஜ் கூட்ட நெரிசல் குறித்து நம்பத்தகுந்த விசாரணை:சவூதி அரசுக்கு முஃப்தி முகமது சயீது வேண்டுகோள் Posted: 03 Oct 2015 12:08 PM PDT ஹஜ் பயணத்தின்போது மெக்கா அருகே மினா நகரில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 1,000 பேர் பலியான சம்பவம் குறித்து நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீது வேண்டுகோள் விடுத்தார். |
| "மகதாயி நதிநீர் இணைப்புத் திட்ட விவகாரத்தில் பிரதமர் தலையிடுவது அவசியம்' Posted: 03 Oct 2015 12:07 PM PDT கலச-பண்டூரி கால்வாய்த் திட்ட பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| லாரிகள் வேலைநிறுத்தம்: ஒடிஸாவில் பருப்புகள், உருளைக்கிழங்கு விலை கடும் உயர்வு Posted: 03 Oct 2015 12:07 PM PDT நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்தத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஒடிஸாவில் வர்த்தகர்கள் சிலர் அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கி வருவதாக உணவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பதுக்கலால், அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. |
| ஹார்திக் படேலின் பின்னணியில் ஆர்எஸ்எஸ்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் Posted: 03 Oct 2015 12:06 PM PDT குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி ஹார்திக் படேல் நடத்தும் போராட்டங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியது. |
| மேற்கு வங்க நகராட்சித் தேர்தலில் வன்முறை Posted: 03 Oct 2015 12:06 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வன்முறை ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. |
| 3-ஆம் நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்:சரக்கு விநியோகம் பாதிப்பு Posted: 03 Oct 2015 12:05 PM PDT சுங்கச்சாவடிக் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள தொடர் வேலைநிறுத்தம் சனிக்கிழமை 3-ஆம் நாளை எட்டியது. |
| Posted: 03 Oct 2015 12:04 PM PDT ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் தாம் ஆற்றிய உரைக்குப் பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நன்றி |
| ஒரே குடும்பத்தைசேர்ந்த 4 பேர் விஷமருந்தி தற்கொலை Posted: 03 Oct 2015 12:04 PM PDT மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் 40 வயது நபர், தன் மனைவிக்கும், 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். |
| மேற்கு வங்கம்: குண்டு வெடித்து 2 பேர் பலி Posted: 03 Oct 2015 12:04 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் 3 பேர் ஈடுபட்டபோது, அது வெடித்து 2 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார். |
| பஞ்சாப்: போதைக்கு எதிராக உறுதிமொழி எடுத்த 10,000 மாணவர்கள் Posted: 03 Oct 2015 12:03 PM PDT பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் நகரில் உள்ள கல்சா கல்லூரியில் சுமார் 10,000 மாணவர்கள் கின்னஸ் சாதனை புரியும் வகையில் போதைக்கு எதிராக பிரசார நாட்டியமாடினர். அத்துடன் போதைக்கு எதிராக உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். |
| கஜேந்திர சௌஹான் நியமன விவகாரம்:புணே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு Posted: 03 Oct 2015 12:03 PM PDT புணே திரைப்படக் கல்லூரியின் புதிய தலைவராக பாஜகவைச் சேர்ந்தவரும், நடிகருமான கஜேந்திர சௌஹான் நியமிக்கப்பட்டதால் எழுந்த பிரச்னைக்கு கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களுமே காரணம் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நியமித்த குழு குற்றம்சாட்டியுள்ளது. |
| ஒடிஸா: வீட்டில் இருந்தே எஃப்ஐஆர் பதிவு செய்ய வசதி Posted: 03 Oct 2015 12:02 PM PDT ஒடிஸாவில் குடிமக்கள் இணைய வழியை முதல்வர் நவீன் பட்நாயக் புவனேசுவரத்தில் சனிக்கிழமை தொடங்கிவைத்தார். இந்த இணைய வழி மூலம் குடிமக்கள் காவல்துறையினரிடம் நேரடியாக புகார்களை பதிவு செய்யலாம். |
| இறைச்சி விஷயத்தை பாஜக வகுப்புவாதப் பிரச்னையாக்குகிறது Posted: 03 Oct 2015 12:01 PM PDT ஹிந்துக்களும் மாட்டிறைச்சியை உண்பவர்கள்தான்; பாஜகதான் இந்த விஷயத்தை வகுப்புவாதப் பிரச்னையாக்க முயற்சிக்கிறது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| விவசாயிகளின் வெற்றிகளை டிடி கிசான் தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள்: கட்கரி Posted: 03 Oct 2015 12:00 PM PDT "விவசாயத்தில் வெற்றி பெற்று செல்வந்தர்களாக உயர்ந்தவர்கள் குறித்த தகவல்களை "டிடி கிசான்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். இதன் மூலம் அந்த விவசாயிகள் விளைவித்த பயிர், அதற்கான விதைப்பு முறைகள் குறித்து மற்ற விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும்' என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
| உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது:பாகிஸ்தான் குற்றச்சாட்டு Posted: 03 Oct 2015 12:00 PM PDT பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது என்று அந்நாட்டு தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் குற்றம்சாட்டினார். |
| மத்தியப் பிரதேசத்தில் விநோதம்:வீட்டில் கழிப்பறை இல்லாததால் கணவரை பிரிந்து சென்ற மனைவி Posted: 03 Oct 2015 11:59 AM PDT மத்தியப் பிரதேச மாநிலத்தில், கணவரது வீட்டில் கழிப்பறை இல்லாத காரணத்தால் அவரை விடுத்து மனைவி பிரிந்து சென்ற விநோதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. |
| இந்திராணி உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல் Posted: 03 Oct 2015 11:59 AM PDT ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணி முகர்ஜியின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அவர் அனுமதிக்கப்பட்ட ஜே.ஜே மருத்துமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்தார். |
| கோலாகலமாகத் தொடங்கியது 2ஆவது இந்தியன் சூப்பர் லீக்:சென்னையை வென்றது கொல்கத்தா Posted: 03 Oct 2015 11:58 AM PDT இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால் பந்துப் போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் சனிக்கிழமை தொடங்கியது. |
| தேசிய ஹாக்கி: ராஜஸ்தான், மேற்கு உ.பி. அணியினர் சாம்பியன் Posted: 03 Oct 2015 11:56 AM PDT கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஹாக்கி போட்டியில் மாணவர்கள் பிரிவில் ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச அணியினர் முதல் பரிசைப் பெற்றனர். |
| பந்து வீச்சாளர்களிடம் நிலைத்தன்மை இல்லை Posted: 03 Oct 2015 11:55 AM PDT இந்திய அணியின் பந்து வீச்சாளர்களிடம் நிலைத்தன்மை இல்லாததே தென் ஆப்பிரிக்காவுடனான தோல்விக்குக் காரணம் என்று அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார். |
| Posted: 03 Oct 2015 11:55 AM PDT |
| உஹான் ஓபன்: பட்டம் வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி Posted: 03 Oct 2015 11:55 AM PDT சீனாவில் நடைபெற்ற உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றது சானியா மிர்ஸா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |