Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நுகர்வோரே விழித்திருங்கள்...

Posted: 18 Oct 2015 01:31 PM PDT

நாம் கடையில் சென்று ஒரு பொருளை வாங்கும்போது, பெரும்பாலானோர் அதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை அல்லது அக்மார்க் முத்திரை உள்ளதா என கவனிப்பதில்லை.

சனநாயகம் காக்க திரள்வீர்!

Posted: 18 Oct 2015 01:30 PM PDT

அவசர நிலை என்பது சனநாயகத்தின் மீது விழுந்த பேரிடியாகும். அந்தக் காலக்கட்டத்தில் நாட்டிற்கு ஏற்பட்ட நெருக்கடியானது

திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு!

Posted: 18 Oct 2015 01:28 PM PDT

உச்சநீதிமன்றம், 99-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தையும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014-ஐயும், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும், நீதிபதிகளே நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழிமுறையே தொடர வேண்டும் என்று ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறிவிட்டது.

பாகிஸ்தானில் 8 பயங்கரவாதிகள் பலி

Posted: 18 Oct 2015 01:23 PM PDT

பாகிஸ்தானின் கராச்சி நகரில் போலீஸார் சனிக்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையின்போது 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வரப்பெற்றோம்

Posted: 18 Oct 2015 01:23 PM PDT

நான், ஜிபு மற்றும் புற்றுநோய் - ம.அஹமது நவ்ரோஸ் பேகம்; பக்.96; ரூ.30; என்.ஜே.பதிப்பகம், ப.எண்.22, பு.எண்.45,

இலக்கியச் சங்கமம்

Posted: 18 Oct 2015 01:22 PM PDT

புதுமை இலக்கியத் தென்றல் நடத்தும் "துருக்கி முஸ்தபா கமால்பாட்சா' நூல் அறிமுக விழா.

நூல் அரங்கம்

Posted: 18 Oct 2015 01:21 PM PDT

இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளராக விளங்கி, வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கி,

சூரியனில் மிகப் பெரிய துளை! நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Posted: 18 Oct 2015 01:17 PM PDT

பூமியின் அளவைப் போல 50 மடங்கு பெரிதான துளை, சூரியனில் உருவாகியுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான

இந்த கடிகாரத்தை பழுது பார்க்க ரூ. 400 கோடி!

Posted: 18 Oct 2015 01:16 PM PDT

உலகின் மிகப் பிரபலமான கடிகாரமான லண்டனில் உள்ள "பிக்பென்'னைப் பழுது பார்க்க ரூ. 400 கோடி செலவாகும் என்று

அமெரிக்காவை மீண்டும் பிரிட்டனின் காலனியாக்க மன்றாடும் கடிதம்! கோரிக்கையை நிராகரித்து அரசி பதில்

Posted: 18 Oct 2015 01:14 PM PDT

பிரிட்டன் முடியாட்சியின் கீழ் அமெரிக்காவை மீண்டும் காலனியாகத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள் என்று

யேமன் ராணுவ முகாம் மீது சவூதி தவறுதலாகத் தாக்குதல்: 20 வீரர்கள் சாவு

Posted: 18 Oct 2015 01:13 PM PDT

யேமனில் ராணுவ முகாம் மீது சவூதி கூட்டுப் படையினரின் விமானங்கள் தவறுதலாக நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

எகிப்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியது

Posted: 18 Oct 2015 01:12 PM PDT

எகிப்து நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கடைசி நேரத்தில் ரிச்சர்ட் காட்ஜீ கோல்: கேரளத்தை வீழ்த்தியது தில்லி டைனமோஸ்

Posted: 18 Oct 2015 01:11 PM PDT

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ரிச்சர்ட் காட்ஜீ கடைசி நேரத்தில் கோல் அடித்து உதவ

ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இரு அணிகள்: சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2018இல் மீண்டும் இடம்பெறுகின்றன

Posted: 18 Oct 2015 01:09 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிதாக இரு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது.

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி

Posted: 18 Oct 2015 01:07 PM PDT

மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி, தோல்வியைத் தழுவியது.

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் சிந்து தோல்வி

Posted: 18 Oct 2015 01:07 PM PDT

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியா வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் லீ சூரூயிடம் தோல்வியடைந்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா மீண்டும் தோல்வி

Posted: 18 Oct 2015 01:04 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

எனக்குத் திருமணமாகவில்லை: பாகிஸ்தானில் உள்ள இந்திய பெண் மறுப்பு

Posted: 18 Oct 2015 12:59 PM PDT

சிறுவயதிலேயே எதிர்பாராதவிதமாக பாகிஸ்தானுக்குச் சென்ற வாய் பேச முடியாத, காது கேட்க இயலாத இந்தியப் பெண் கீதாவினால்

இட ஒதுக்கீடு போராட்டம்: ஹார்திக் படேல் கைது

Posted: 18 Oct 2015 12:58 PM PDT

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் படேல் சமுதாயத்தினரை சேர்க்கக்கோரி போராட்டம் நடத்தி வரும் ஹார்திக் படேல்,

பிரசாரம் செய்ய அழைத்தால் மட்டுமே செல்வேன்: சத்ருகன் சின்ஹா

Posted: 18 Oct 2015 12:58 PM PDT

பிரசாரம் செய்ய தனக்கு கட்சி சார்பில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது தவறு என்றும், கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கும்

தால் ஏரியைச் சுற்றிய ஆக்கிரமிப்புகளை கையகப்படுத்த உத்தரவு

Posted: 18 Oct 2015 12:57 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பிரசித்தி பெற்ற தால் ஏரியைச் சுற்றிலும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகள்,

கருப்புப் பண புகார்: சுரங்க நிறுவனங்களிடம் விசாரணையை தொடங்கியது வருமான வரித் துறை

Posted: 18 Oct 2015 12:56 PM PDT

கருப்புப் பணப் பதுக்கலில் சுரங்க நிறுவனங்கள் ஈடுபட்டதாக எழுந்தப் புகாரை அடுத்து, நாடு முழுவதும் உள்ள

விருதுகளை திருப்பியளிக்க மேலும் 2 எழுத்தாளர்கள் முடிவு

Posted: 18 Oct 2015 12:56 PM PDT

மத்திய அமைச்சர்கள் சிலரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாகித்ய அகாதெமி விருதுகளை திருப்பி அளிக்க

மோகன் பாகவத்தின் பேச்சால் பிகாரில் பாஜகவுக்கு பாதிப்பு: லாலு பிரசாத்

Posted: 18 Oct 2015 12:55 PM PDT

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ளதால்,

நடிகை பலாத்காரம்: பாலிவுட் நடிகர் மீது வழக்குப்பதிவு

Posted: 18 Oct 2015 12:54 PM PDT

தொலைக்காட்சி நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாலிவுட் நடிகர் விஷால் தாக்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சர்வதேச குழந்தைகள் பட விழா நவ.14-இல் தொடக்கம்

Posted: 18 Oct 2015 12:53 PM PDT

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில், 19ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா அடுத்த மாதம் 14ஆம் தேதி தொடங்குகிறது.

செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கும் இலவச அழைப்பு வசதி: பிஎஸ்என்எல்

Posted: 18 Oct 2015 12:53 PM PDT

பிஎஸ்என்எல் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இலவச அழைப்புகள் திட்டத்தை செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களும்

சத்தீஸ்கர்: 2 வியாபாரிகளைக் கடத்திய மாவோயிஸ்டுகள்

Posted: 18 Oct 2015 12:52 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள யாம்பூர் கிராமத்தில் தெருவோர வியாபாரிகள் இருவரை

சீட்டு நிதி மோசடிகளைத் தடுக்க மாதிரி சட்டம்: நாடாளுமன்றக் குழு பரிந்துரை

Posted: 18 Oct 2015 12:51 PM PDT

சீட்டு நிதி மோசடிகளில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்களிடம் இருந்து பணம் திரட்டுவதைத் தடுப்பதற்கும்

நாடெங்கிலும் உயர் நீதிமன்றங்களில் 400 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலி

Posted: 18 Oct 2015 12:51 PM PDT

நாடெங்கிலும் உள்ள உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் உள்பட 400 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

பசு விற்பனைக்கு தடை விதிக்க முடியுமா? பஞ்சாப், ஹரியாணா அரசுகளுக்கு ஆஸம் கான் கேள்வி

Posted: 18 Oct 2015 12:50 PM PDT

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் பசுக்களைக் கடத்தியதாக இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு

உச்சவரம்பைத் தாண்டி பருப்பு வகைகளை இருப்பில் வைத்திருக்கக் கூடாது: வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted: 18 Oct 2015 12:50 PM PDT

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் பதுக்கலைத் தடுக்கவும், அவற்றின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் ஏற்றுமதியாளர்கள்,

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படையினரின் கப்பல் மோதி படகு சேதம்

Posted: 18 Oct 2015 12:45 PM PDT

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த மீனவர்கள் மீது சனிக்கிழமை நள்ளிரவு கற்களை வீசி இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்தனர்.

"ஸ்கார்பீன்' நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை: மத்திய அரசு

Posted: 18 Oct 2015 12:45 PM PDT

பிரான்ஸில் இருந்து இந்தியக் கடற்படைக்கு "ஸ்கார்பீன்' நீர்மூழ்கிக் கப்பல் வாங்கியதில், இந்தியத் தரப்பில் யாருக்கும்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு

Posted: 18 Oct 2015 12:43 PM PDT

கேரள மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக எஸ்.இ. சங்கரன் நம்பூதிரி ஞாயிற்றுக்கிழமை தேர்வு

புதிய மின் இணைப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: அடுத்த ஆண்டு மார்ச்சில் அறிமுகம்

Posted: 18 Oct 2015 12:42 PM PDT

புதிய மின் இணைப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என

அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா உரிய முறையில் கொண்டாடப்படவில்லை

Posted: 18 Oct 2015 12:41 PM PDT

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாள் விழாவை உரிய முறையில் மாநில அரசு கொண்டாடவில்லை என்று

பட்டாசுகளால் ஏற்படும் தீமைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 18 Oct 2015 12:39 PM PDT

""பட்டாசுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்; பட்டாசுகள் பயன்படுத்த வேண்டாம் என்றும்

தில்லி சிறுமிகள் பாதிக்கப்பட்ட விவகாரம்: இரட்டை வேடம் போடுகிறார் கேஜரிவால்; பிரசாந்த் பூஷண்

Posted: 18 Oct 2015 12:39 PM PDT

தில்லியில் இரண்டு சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மலிவான அரசியலில்

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி மார்ச் மாதத்துக்குள் பதவியேற்பார்

Posted: 18 Oct 2015 12:37 PM PDT

""காங்கிரஸ் கட்சியின் தலைவராக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளோ அல்லது அதற்கு முன்னதாகவோ புதிய அணியினருடன்

"தமிழக கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டங்கள்'

Posted: 18 Oct 2015 12:31 PM PDT

தமிழக கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கடலோரக்

குமரி மலைப் பகுதியில் மீண்டும் பலத்த மழை

Posted: 18 Oct 2015 12:30 PM PDT

குமரி மாவட்டத்தில் இரண்டு நாள்களாக ஓய்ந்திருந்த மழை, மலைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொட்டித்தீர்த்தது.

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளம்

Posted: 18 Oct 2015 12:30 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால், அறுவடை இயந்திரத்தை

இளைஞர் எழுச்சி நாள்

Posted: 18 Oct 2015 12:29 PM PDT

தண்டராம்பட்டிலுள்ள பாரத் வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா, உலக கை கழுவும் தினம், உலக இளைஞர் எழுச்சி தினம் ஆகிய விழா முப்பெரும் விழா பள்ளியில் அண்மையில் கொண்டாடப்பட்டது.

டெங்கு, சிக்குன்குனியா தடுப்பு விழிப்புணர்வுப் பயிற்சி

Posted: 18 Oct 2015 12:29 PM PDT

செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் டெங்கு, சிக்குன்குனியா நோய் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

கலாம் பிறந்த நாள் விழா: போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசு

Posted: 18 Oct 2015 12:29 PM PDT

திருவண்ணாமலையில் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மைய நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம்

Posted: 18 Oct 2015 12:28 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 18 Oct 2015 12:28 PM PDT

ஆரணியில் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஆரணியில் அண்மையில் நடைபெற்றது.

மின்னல் தாக்கியதில் 2 பேர் சாவு

Posted: 18 Oct 2015 12:28 PM PDT

நத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில், கல்லூரி மாணவர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.

திறன் வளர்த்தல் பயிற்சி முகாம்

Posted: 18 Oct 2015 12:27 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழ் படித்தல், எழுதுதல், திறன் வளர்த்தல் குறித்த 2 தின பயிற்சி முகாம் வந்தவாசி வட்டார வளமையத்தில் அண்மையில் நடைபெற்றது.

மாவட்டத்தின் 14 இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

Posted: 18 Oct 2015 12:27 PM PDT

 திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர் 31-இல் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் மேற்கொள்ளும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்காக, 14 இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி தொடக்கம்

Posted: 18 Oct 2015 12:27 PM PDT

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில் மீத்திறன் வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது.

ஆரணி பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளர் அறை திறப்பு

Posted: 18 Oct 2015 12:27 PM PDT

ஆரணி புதிய பேருந்து நிலைய நேர காப்பாளர் அறை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: தொழிலாளி கைது

Posted: 18 Oct 2015 12:26 PM PDT

கீழ்பென்னாத்தூர் அருகே உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 2,296 ஜெலட்டின் குச்சிகள், 1,065 டெட்டனேட்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பள்ளியில் உணவுத் திருவிழா நடத்தி ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி

Posted: 18 Oct 2015 12:26 PM PDT

களியக்காவிளை அருகே 4 ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி, மருத்துவச் செலவுக்காக பள்ளியில்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

Posted: 18 Oct 2015 12:26 PM PDT

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: தாத்தா, பாட்டியை தேடும் போலீஸார்

Posted: 18 Oct 2015 12:25 PM PDT

சிவகங்கையைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அவரது தாத்தா, பாட்டியைத் தேடி சிபிசிஐடி தனிப்படை போலீஸார் திருப்பூர் சென்றுள்ளனர்.

கார்-லாரி மோதல்: 4 பேர் சாவு

Posted: 18 Oct 2015 12:21 PM PDT

திட்டக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை காரும், லாரியும் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

Posted: 18 Oct 2015 12:19 PM PDT

சோளிங்கர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 364 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

கோயில் குளத்தில் மூழ்கிய ரயில்வே ஊழியர் சாவு

Posted: 18 Oct 2015 12:18 PM PDT

சோளிங்கர் கோயில் குளத்தில் மூழ்கி, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சனிக்கிழமை உயிரிழந்தார். சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (65). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவர், கடந்த சில ஆண்டுகளாக சோளிங்கரில் தனியாக வசித்து வந்தார்.

நவம்பர் 8-ஆம் தேதி ஆசிரியர்கள் தர்னா போராட்டம்

Posted: 18 Oct 2015 12:18 PM PDT

கல்வி அலுவலர்களின் போக்கைக் கண்டித்து வேலூரில் நவம்பர் 8-ஆம் தேதி மிகப் பெரிய தர்னா போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலர் சி.பாலசந்தர் தெரிவித்தார்.

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 18 Oct 2015 12:18 PM PDT

திருமணத்துக்கு காதலன் மறுத்ததால், பொறியியல் கல்லூரி மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து வாலாஜாபேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

செம்மரக் கட்டைகள் காருடன் பறிமுதல்

Posted: 18 Oct 2015 12:18 PM PDT

ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகளை அரக்கோணம் போலீஸார் காருடன் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்

Posted: 18 Oct 2015 12:17 PM PDT

அழிவுப் பாதையில் செல்லும் தமிழகத்தை மீட்க ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் சாவு

Posted: 18 Oct 2015 12:17 PM PDT

வேலூரில் சனிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.

வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியல்

Posted: 18 Oct 2015 12:17 PM PDT

நாட்டறம்பள்ளியில் சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரி வியாபாரிகள் சனிக்கிழமை மறியல் செய்தனர்.

அகில இந்திய சிலம்பப் போட்டி:ஆம்பூர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 18 Oct 2015 12:16 PM PDT

அகில இந்திய சிலம்பப் போட்டியில் ஆம்பூர் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.

மாநில விளையாட்டுப் போட்டி:வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு

Posted: 18 Oct 2015 12:16 PM PDT

வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

"இயற்கை நிகழ்வுகளே புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கு அடிப்படை காரணம்'

Posted: 18 Oct 2015 12:16 PM PDT

இயற்கை நிகழ்வுகளே புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படை காரணம் என விஞ்ஞானி சி.திருஞானசம்பந்தம் தெரிவித்தார்.

யானைகள் தாக்கியதில் 4 பேர் காயம்

Posted: 18 Oct 2015 12:16 PM PDT

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த 4 காட்டு யானைகள் தாக்கியதில் தம்பதி உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சுயஉதவிக் குழு சார்பில் கலாம் பிறந்த நாள் விழா

Posted: 18 Oct 2015 12:16 PM PDT

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் ஊராட்சியில், மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பினர் சார்பில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

"கூட்டுறவுப் பணியாளர் பேரணியில் தொமுச பங்கேற்காது'

Posted: 18 Oct 2015 12:16 PM PDT

தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளர்கள் சார்பில், வேலூரில் திங்கள்கிழமை (19-ஆம் தேதி) நடைபெறும் பேரணியில் நியாய விலைக்கடை

அக். 31-இல் உண்ணாவிரதப் போராட்டம்:தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு

Posted: 18 Oct 2015 12:15 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வாணியம்பாடி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Posted: 18 Oct 2015 12:15 PM PDT

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இசுலாமிய ஆண்கள் கல்லூரியின் 68-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆண்களைவிட பெண்கள் வலிமையானவர்கள்: இறையன்பு

Posted: 18 Oct 2015 12:15 PM PDT

ஆண்களை விடவும் மனதளவில் வலிமை மிக்கவர்களாக இருப்பதால்தான் பெண்களால் சிறப்பான வெற்றியை எளிமையாக அடைய

உலக சத்துணவு தின கண்காட்சி

Posted: 18 Oct 2015 12:15 PM PDT

குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் உலக சத்துணவு தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்: நிலைய அலுவலர்கள் உள்பட 9 பேர் திடீர் இடமாற்றம்

Posted: 18 Oct 2015 12:15 PM PDT

திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற தீயணைப்பு வீரர், நிலைய அலுவலர்கள் இருவர் உள்பட 9 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் தகுதியிழப்பை உடனே அறிவிக்க வேண்டும்

Posted: 18 Oct 2015 12:14 PM PDT

வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களை தகுதியிழப்பு செய்வது தொடர்பான அறிவிக்கையை காலதாமதமின்றி உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற, சட்டப் பேரவைச் செயலர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

வடகிழக்கு மாநில கலாசாரத்தை பறைசாற்றும் கலை விழா!

Posted: 18 Oct 2015 12:13 PM PDT

தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தில் சனிக்கிழமை தொடங்கிய 3-ஆம் ஆண்டு வட கிழக்கு மாநிலக் கலை விழா, கலை மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

"கத்துக்குட்டி' திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளருக்கு பாராட்டு

Posted: 18 Oct 2015 12:13 PM PDT

"கத்துக்குட்டி' திரைப்படத்தின் இயக்குநர் இரா.சரவணன், இசையமைப்பாளர் அருள் தேவ் ஆகியோர் தில்லி தமிழ்ச் சங்கத்தில் பாராட்டப்பட்டனர்.

பிரதமரை நிம்மதியாக தூங்க விடமாட்டேன்: கேஜரிவால் ஆவேசம்

Posted: 18 Oct 2015 12:13 PM PDT

தில்லியில் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் தடுக்கப்படாவிட்டால், பிரதமரை நிம்மதியாக தூங்க விடமாட்டேன் என்று முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

ஜேஎன்யு வளாகத்தில் விரைவில் வைஃபை சேவை

Posted: 18 Oct 2015 12:13 PM PDT

தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகம் முழுவதும், கம்பியில்லா இணைய சேவையை (வைஃபை) விரைவில் அளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

குப்பைகள் மூலம் மின்சாரம்:மத்திய, தில்லி அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 18 Oct 2015 12:12 PM PDT

குப்பைக் குவியல்களின் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய மற்றும் தில்லி அரசுகளை தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சிறுமி பலாத்கார சம்பவத்தில் 2 சிறுவர்கள் கைது

Posted: 18 Oct 2015 12:12 PM PDT

மேற்கு தில்லியில் இரண்டரை வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 வயதுடைய 2 சிறுவர்களை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் கண்காட்சி அரங்குகள்

Posted: 18 Oct 2015 12:11 PM PDT

மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களில் கண்காட்சி அரங்குகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) நிர்வாக இயக்குநர் மங்கு சிங் தெரிவித்தார்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 26, 27- இல் இடமாறுதல் கலந்தாய்வு

Posted: 18 Oct 2015 12:11 PM PDT

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

மெட்ரோ ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும்

Posted: 18 Oct 2015 12:11 PM PDT

மெட்ரோ ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு (டிஎம்ஆர்சி) முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.

2ஆவது பிரமாண்ட கொடிக் கம்பம் சாணக்கியபுரியில் நிறுவப்பட்டது

Posted: 18 Oct 2015 12:11 PM PDT

புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) அதிகாரத்துக்குள்பட்ட சாணக்கியபுரி பகுதியில், 105 அடி உயர பிரமாண்ட கொடிக் கம்பம் ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டது. தலைநகரில் அமைந்த 2ஆவது மிகப்பெரிய கொடிக் கம்பம் இதுவாகும்.

மக்களின் வாழ்க்கை முதலில் நவீனமாக்கப்பட வேண்டும்

Posted: 18 Oct 2015 12:11 PM PDT

சாதாரண மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள இயலாத வகையில் இருக்கும் பட்சத்தில், நவீன நகரம் திட்டமானது சாத்தியப்படாது என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமர்சித்துள்ளார்.

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பக் கூடாது

Posted: 18 Oct 2015 12:10 PM PDT

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பக் கூடாது என்று அனைத்து அரசுப் பள்ளி முதல்வர்களுக்கும் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி முதல்வர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

டிடிசி பேருந்துகளில் டிசம்பருக்குள் சிசிடிவி கேமராக்கள், வைஃபை வசதி

Posted: 18 Oct 2015 12:10 PM PDT

தில்லி போக்குவரத்துக் கழக (டிடிசி) பேருந்துகளில் கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள், கம்பியில்லா இணையம் (வைஃபை) வசதிகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அமைக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

ஏசிபி தலைவர் மீனாவுக்கு எதிராக விசாரணை: தில்லி அரசு எச்சரிக்கை

Posted: 18 Oct 2015 12:10 PM PDT

லஞ்ச ஒழிப்புத் துறை (ஏசிபி) தலைவர் எம்.கே.மீனா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டுள்ள தில்லி அரசு, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

நவீன கைரேகை அறியும் கருவிகளை வாங்க தில்லி காவல் துறை முடிவு

Posted: 18 Oct 2015 12:10 PM PDT

கொலை, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், அதி நவீன கைரேகை அறியும் கருவிகளை வாங்குவதற்கு தில்லி காவல் துறை முடிவு செய்துள்ளது. இக்கரு

நறுமணப் பொருள்கள் அறிமுகம்

Posted: 18 Oct 2015 12:09 PM PDT

பழனி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீகந்தவிலாஸ் தயாரித்த, நறுமணப் பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

மின் ஆளுமை விருதுக்கு தேர்வானவர்களுக்கு சான்று

Posted: 18 Oct 2015 12:09 PM PDT

தமிழக முதல்வரின் மின் ஆளுமை விருதுக்காக திருவள்ளூர் மாவட்ட அளவில் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ரொக்கப் பரிசுகளையும்,

அதிமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர்கள் வாழ்த்து

Posted: 18 Oct 2015 12:08 PM PDT

ஊத்துக்கோட்டை பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மாதவரத்தில் குத்துச்சண்டைப் போட்டி

Posted: 18 Oct 2015 12:08 PM PDT

செங்குன்றத்தை அடுத்த மாதவரம் ரிங்ரோடு ஹவுசிங் செக்டரில், அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் குத்துச்சண்டை போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுக உறுப்பினர்கள் கூட்டம்

Posted: 18 Oct 2015 12:08 PM PDT

பூண்டி கிழக்கு ஒன்றியம், போந்தவாக்கம் கிராமத்தில் "விடியல் மீட்புப் பயணம்' விளக்க திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Posted: 18 Oct 2015 12:08 PM PDT

பூந்தமல்லி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெண் கொலை: கணவர் கைது

Posted: 18 Oct 2015 12:07 PM PDT

திருவள்ளூர் அருகே மனைவியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த வழக்கில் அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™