Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

Posted: 10 Oct 2015 01:31 PM PDT

சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியில் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வரை பாராட்டி கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலர்கள் தீர்மானம்

Posted: 10 Oct 2015 01:31 PM PDT

தணிக்கையாளர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் பாராட்டி தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலர் ஒன்றிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை சிறைக்கு தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம்

Posted: 10 Oct 2015 01:30 PM PDT

மதுரை மத்திய சிறைக்கு தீவிரவாத அமைப்பின் பெயரில் வெள்ளிக்கிழமை மிரட்டல் கடிதம் வந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே பைக் மீது கார் மோதல்: பொறியாளர் உள்பட 2 பேர் சாவு: ஒரே குடும்பத்தினர் 7 பேர் காயம்

Posted: 10 Oct 2015 01:30 PM PDT

விருதுநகர் அருகே சனிக்கிழமை கார் டயர் வெடித்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் பொறியாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். காரில் சென்ற 7 பேர் காயமடைந்தனர்.

ஓஎன்ஜிசி துரப்பண நிலையம் முற்றுகை

Posted: 10 Oct 2015 01:30 PM PDT

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், மாதிரிமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் அருகே 2 பேர் கொலை: 7 பேர் மீது வழக்கு

Posted: 10 Oct 2015 01:29 PM PDT

விருதுநகர் அருகே நிலத்தகராறில் கூலிப்படையை ஏவி 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உறவினர்கள் 7 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆன்மிகத்தின் கலங்கரை விளக்கம் கொங்கு மண்டலம்:கேரள ஆளுநர் ப.சதாசிவம்

Posted: 10 Oct 2015 01:29 PM PDT

ஆன்மிகத்தின் கலங்கரை விளக்கமாக கொங்கு மண்டலம் திகழ்வதாக கேரள ஆளுநர் ப.சதாசிவம் பேசினார்.

பொது இடங்களிலுள்ள பதாகைகளை அகற்ற கெடு

Posted: 10 Oct 2015 01:29 PM PDT

ராஜபாளையத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சமுதாய தலைவர்களின் படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய நிரந்தர பதாகைகளை வரும் 13ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என வட்டாட்சியர் வலியுறுத்தி உள்ளார்.

நீர்வரத்து கண்மாயை தூர்வாரிய கிராம மக்கள்

Posted: 10 Oct 2015 01:28 PM PDT

மழைக்காலம் தொடங்கிய பின்னரும் கண்மாயை தூர்வார ஊராட்சி நிர்வாகம் முன்வராததால் எம்.ரெட்டியபட்டி பொதுமக்கள் தாங்களாகவே கண்மாயை தூர்வாரினர்.

கும்பகோணம் மகாமகப் பணிகள்: தமிழக அரசின் உயர்நிலைக் குழு ஆய்வு

Posted: 10 Oct 2015 01:28 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மகாமகத்தையொட்டி, அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் பணிகளைத் தமிழக அரசின் உயர்நிலைக் குழுவினர் சனிக்கிழமை மாலை ஆய்வு செய்தனர்.

மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு: மத்திய அரசு கைவிட வேண்டும்

Posted: 10 Oct 2015 01:28 PM PDT

மருத்துவக் கல்விக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.

தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தவர் கைது

Posted: 10 Oct 2015 01:26 PM PDT

சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததாக ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்: கணவன் உள்பட மூவர் மீது வழக்கு

Posted: 10 Oct 2015 01:26 PM PDT

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த, அப்பெண்ணின் கணவன் உள்ளிட்ட மூவர் மீது சிவகாசி அனைத்து மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகாசியில் குழந்தையுடன் தாய் மாயம்

Posted: 10 Oct 2015 01:25 PM PDT

சிவகாசியில் குழந்தையுடன் தாயை காணவில்லை என அப்பெண்ணின் கணவர் வெள்ளிக்கிழமை போலீஸில் புகார் செய்துள்ளார்.

திமுகவில் பிரசார பலம் இல்லை: டி.ராஜேந்தர்

Posted: 10 Oct 2015 01:24 PM PDT

திமுகவில் தற்போது பிரசார பலம் இல்லை என திரைப்பட நடிகரும், இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான டி. ராஜேந்தர் கூறினார்.

சிவகாசி

Posted: 10 Oct 2015 01:24 PM PDT

காரியாபட்டி பகுதியில் அக்.13-இல் மின்தடை

Posted: 10 Oct 2015 01:23 PM PDT

அருப்புக்கோட்டை கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் செயற்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி  கூறியுள்ளதாவது: அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆவியூர், காரியாபட்டி, புல்வாய்க்கரை, அரசகுளம், குரண்டி, மாங்குளம், கரிசல்குளம், கம்பிக்குடி, முஷ்டக்குறிச்சி, திம்மாபுரம், அ.முக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 2340 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.15.80 லட்சத்திற்கு இழப்பீடு உத்தரவு

Posted: 10 Oct 2015 01:23 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2340 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.15.80 லட்சத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிவகாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம்

Posted: 10 Oct 2015 01:22 PM PDT

சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில், மாற்றுத்திறனாளிகளுக்கு, ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்டவை வழங்குவற்கு பயனாளிகள் தேர்வு முகாம் சனிக்கிழமை சிவகாசியில் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

Posted: 10 Oct 2015 01:21 PM PDT

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு குறித்த பேரணியை, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.  

திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் வசூலித்த கடன் தொகை இணையத்துக்கு திரும்ப செலுத்தவில்லை: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

Posted: 10 Oct 2015 01:21 PM PDT

திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கடன் தொகை, கூட்டுறவு இணையத்துக்கு முறையாக திரும்ப செலுத்தப்படவில்லை என்று, சனிக்கிழமை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

மனைவி பைக்கை எரித்த கணவர் கைது

Posted: 10 Oct 2015 01:20 PM PDT

சின்னமனூரில் மனைவியின் இரு சக்கர வாகனத்தை தீயிட்டு எரித்த ஒய்வுபெற்ற கால்நடை மருத்துவரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பழனி கோயிலில் மேகாலயா ஆளுநர் சுவாமி தரிசனம்

Posted: 10 Oct 2015 01:19 PM PDT

பழனி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் சனிக்கிழமை வருகை புரிந்தார்.

உத்தமபாளையத்தில் ரூ.15 கோடியில் நலத்திட்ட உதவிகள்: ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

Posted: 10 Oct 2015 01:19 PM PDT

உத்தமபாளையத்தில் ரூ. 15 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சனிக்கிழமை வழங்கினார்.

குவாரியில் கல் விழுந்து பெண் சாவு

Posted: 10 Oct 2015 01:18 PM PDT

ஆண்டிபட்டி அருகே குவாரியில் பணியாற்றிய பெண் மீது கல் விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரியகுளம் நீதிமன்றத்தில் 6 நக்ஸல்கள் ஆஜர்

Posted: 10 Oct 2015 01:17 PM PDT

பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நக்ஸல்கள் (தீவிரவாதிகள்) 6 பேர் விசாரணைக்காக சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

புரட்டாசி 4 ஆவது சனிக்கிழமை முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள்

Posted: 10 Oct 2015 01:17 PM PDT

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை 4 ஆவது வாரத்தை முன்னிட்டு, பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது.

கொடைக்கானலில் தொடர் மழை: நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 10 Oct 2015 01:16 PM PDT

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நீரோடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

பணத்தை மனைவி ஏமாற்றிவிட்டதாக கணவர் புகார்

Posted: 10 Oct 2015 01:16 PM PDT

வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்தை மனைவி வேறொருவருக்கு செலவு செய்துவிட்டதாக, கணவர் சனிக்கிழமை புகார் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டியில் அக்டோபர் 12 மின்தடை

Posted: 10 Oct 2015 01:15 PM PDT

வீரபாண்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (அக்.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம்

Posted: 10 Oct 2015 01:14 PM PDT

கொடைக்கானலில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

பைக்கில் சென்ற ஆசிரியர் தவறி விழுந்து சாவு

Posted: 10 Oct 2015 01:14 PM PDT

நத்தத்தில் ஆடு குறுக்கே சென்றதால், இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த ஆசிரியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

வாகரை  பகுதிகளில் அக்டோபர் 12 மின்தடை

Posted: 10 Oct 2015 01:13 PM PDT

பழனி அருகே வாகரையில் உள்ள துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

பழனி

Posted: 10 Oct 2015 01:12 PM PDT

பள்ளி மாணவர்களுக்கான புகார் பெட்டி திறப்பு விழா

Posted: 10 Oct 2015 01:12 PM PDT

போடியில் பள்ளி மாணவர்களுக்கான புகார் பெட்டி தொடக்க நிகழ்ச்சி, தேனி மாவட்ட சைல்டு-லைன் அமைப்பின் சார்பில் நடைபெற்றது.

நத்தம் பேரூராட்சி கூட்டம்: 29 பசுமை வீடுகள் கட்ட தீர்மானம்

Posted: 10 Oct 2015 01:11 PM PDT

நத்தம் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 29 பசுமை வீடுகள் கட்டுவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Oct 2015 01:11 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

ஆண்டிபட்டி அருகே பாதை பிரச்னை: 3 பேர் கைது

Posted: 10 Oct 2015 01:11 PM PDT

ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கும்,  பக்கத்திலுள்ள சுப்புராஜ் என்பவருக்கும் பாதை பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

கௌரவ கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி நடைபயணம்

Posted: 10 Oct 2015 01:10 PM PDT

உத்தமபாளையத்தில் கௌரவ கொலைக்கு எதிராக புதிய தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் நடைபயண பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போடி அருகே பள்ளி மாணவிகள் திருமண ஏற்பாடு தடுத்து நிறுத்தம்

Posted: 10 Oct 2015 01:10 PM PDT

போடி அருகே பள்ளி மாணவிகள் இருவருக்கு நடைபெற்றுவந்த திருமண ஏற்பாடுகளை, சைல்டு-லைன் குழுவினர் தடுத்து நிறுத்தினர்.

அவசர நிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை கெளரவிக்கிறார் மோடி

Posted: 10 Oct 2015 01:08 PM PDT

""சமுதாய புரட்சியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளையொட்டி, அவசர நிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி கெளரவப்படுத்துவார்'' என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

குஜராத் காவல் துறையில் பெண் வாத்தியக் குழு

Posted: 10 Oct 2015 01:07 PM PDT

குஜராத் காவல் துறையில் முதல் முறையாகப் பெண் காவலர்கள் அடங்கிய வாத்தியக் குழுவை ஏற்படுத்த அந்த மாநில உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரச்னைகளை வெளிப்படையாக தெரிவியுங்கள்: பெண்களுக்கு தில்லி காவல்துறை ஆணையர் அறிவுரை

Posted: 10 Oct 2015 01:07 PM PDT

"பிரச்னையான தருணங்களில், அமைதியாக இருந்து கஷ்டப்படக் கூடாது; போலீஸாரின் உதவியை நாட வேண்டும்' என்று பெண்களுக்கு தில்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி அறிவுரை வழங்கினார்.

புது தில்லி

Posted: 10 Oct 2015 01:06 PM PDT

விமானத்தின் கழிப்பறையில் 3.5 கிலோ தங்கம்

Posted: 10 Oct 2015 01:05 PM PDT

ஷார்ஜாவில் இருந்து தில்லிக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தின் கழிப்பறையில் கேட்பாறற்று கிடந்த ரூ. 93 லட்சம் மதிப்புள்ள 3.5 கிலோ தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டதாக தில்லி சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத் துறை கூடுதல் ஆணையர் விநாயக் ஆசாத் தெரிவித்தார்.

காஜியாபாதில் 5 மேம்பாலங்கள்

Posted: 10 Oct 2015 01:05 PM PDT

தேசிய தலைநகர் வலயப் பகுதியில் உள்ள காஜியபாதில் 5 புதிய மேம்பாலங்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற காஜிபாத் மேம்பாட்டு ஆணையக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

போலி ஆவணம்: கல்லூரி மாணவர்கள் 4 பேரின் சேர்க்கை ரத்து

Posted: 10 Oct 2015 01:04 PM PDT

தில்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங் கல்லூரியில் சேர 4 மாணவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்திருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அந்த நால்வரின் சேர்க்கையை (அட்மிஷன்) கல்லூரி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

தலித் குடும்பம் நிர்வாணப் போராட்டம்: விசாரணைக்கு எஸ்.பி. உத்தரவு

Posted: 10 Oct 2015 01:04 PM PDT

தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள கெளதம் புத்த நகர் தங்கூர் மார்க்கெட் பகுதியில் காவல் துறையினருக்கு எதிராக தலித் குடும்பத்தினர் நிர்வாண நிலையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் எஸ். கிரண் உத்தரவிட்டுள்ளார்.

தில்லியில் லேசான நில அதிர்வு

Posted: 10 Oct 2015 01:02 PM PDT

தில்லி மற்று தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 1.40 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

தில்லிகை இலக்கியச் சந்திப்பு

Posted: 10 Oct 2015 01:01 PM PDT

தில்லிகை இலக்கிய வட்டத்தின் அக்டோபர் மாத சந்திப்பு நிகழ்ச்சி தில்லி தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆக்ரா, ஜெய்ப்பூர் சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு ஏற்பாடு

Posted: 10 Oct 2015 01:01 PM PDT

தில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றிப்பார்க்க 3 சதாப்தி ரயில்களை இணைக்கும் புதிய சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி) அறிமுகம் செய்துள்ளது.

கேஜரிவால் மீது பிரசாந்த் பூஷண் சாடல்: அமைச்சர் பதவி நீக்க விவகாரம்

Posted: 10 Oct 2015 01:00 PM PDT

லஞ்சப் புகாரில் சிக்கிய தில்லி உணவுத் துறை அமைச்சர் ஆசிம் கான் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

அறிவியல், தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்

Posted: 10 Oct 2015 01:00 PM PDT

அறிவியல் - தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய அளவில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா வலியுறுத்தினார்.

தில்லி பல்கலை. துணைவேந்தர் தேர்வு குழுவுக்கு புதிய பெயரை பரிந்துரைக்க பிரணாப் அறிவுறுத்தல்

Posted: 10 Oct 2015 12:59 PM PDT

தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு குழுவின் உறுப்பினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கள் நியமிக்கப்பட்டதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ரத்து செய்துள்ளார். அவருக்கு பதிலாக புதிய உறுப்பினரின் பெயரை பரிந்துரை செய்யுமாறு, பல்கலைக்கழகத்துக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ராஜீவ் செளக்கில் "நோபல் சுவர்' கண்காட்சி

Posted: 10 Oct 2015 12:58 PM PDT

நோபால் பரிசு பெற்ற இந்தியர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஸ்வீடன் தூதரகமும், தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனும் (டிஎம்ஆர்சி) இணைந்து ஏற்பாடு செய்துள்ள "நோபல் சுவர்' கண்காட்சி ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

டெங்குவுக்கு தில்லி காவல் துறை அதிகாரி பலி

Posted: 10 Oct 2015 12:58 PM PDT

டெங்கு காய்ச்சலுக்கு தில்லி காவல்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை பலியானார். இதையடுத்து, தில்லியில் நிகழாண்டில் டெங்குவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,438ஆகவும் அதிகரித்துள்ளது.

கங்கை, துணையாறுகளில் 1,263 டால்ஃபின்கள்: கணக்கெடுப்பில் தகவல்

Posted: 10 Oct 2015 12:57 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாயும் கங்கை, அதன் துணையாறுகளில் 1,263க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இன்று "ஆம் ஆத்மி' எம்எல்ஏக்கள் கூட்டம்: குடும்பத்துடன் பங்கேற்க முதல்வர் கேஜரிவால் உத்தரவு

Posted: 10 Oct 2015 12:57 PM PDT

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சந்திக்கவுள்ளார். இக்கூட்டம் தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள கேஜரிவால் இல்லத்தில் நடைபெறுகிறது.

தில்லி தமிழ்ச் சங்கத்தில் பட்டிமன்றம்

Posted: 10 Oct 2015 12:56 PM PDT

தில்லி தமிழ்ச் சங்கத்தில் "இன்றைய சமூக ஊடகங்களும், தொலைத்  தொடர்பு சாதனங்களும் மக்களுக்கு வழி நடத்தும் பாதையா?, வழி மாற்றும் பாதையா' என்ற தலைப்பில் சனிக்கிழமை பட்டிமன்றம் நடைபெற்றது. 

எம்எல்ஏக்களை கைக்குள் வைக்கவே சிறப்புக் கூட்டம்: கேஜரிவால் மீது பாஜக தாக்கு

Posted: 10 Oct 2015 12:56 PM PDT

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை கைப்பிடிக்குள் வைக்கவே, ஞாயிற்றுக்கிழமை சிறப்புக் கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏற்பாடு செய்துள்ளதாக தில்லி பாஜக கூறியுள்ளது.

தில்லி ரயில்களில் 7 லட்சம் பேர் "ஓசி' பயணம்: 6 மாதங்களில் ரூ.15.5 கோடி அபராதம் வசூல்

Posted: 10 Oct 2015 12:55 PM PDT

தில்லி மண்டல ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்ததாக கடந்த 6 மாதங்களில் சுமார் 7.2 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். இந்தக் காலக்கட்டத்தில் அபராதத் தொகையாக ரூ.15.5 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

"பலிகடா' ஆக்கப்பட்டேன்: ஆசிம் கான் பேட்டி

Posted: 10 Oct 2015 12:55 PM PDT

ஆம் ஆத்மி கட்சியில் எனக்கு எதிராக தீட்டப்பட்ட சதிக்கும், உள்கட்சி பூசலுக்கும் நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன் என்று பதவி பறிக்கப்பட்ட தில்லி முன்னாள் அமைச்சர் ஆசிம் கான் தெரிவித்தார்.

விஜய் மல்லையா வீட்டில் சிபிஐ சோதனை: ரூ.900 கோடி முறைகேடாக கடன் பெற்ற வழக்கில் நடவடிக்கை

Posted: 10 Oct 2015 12:54 PM PDT

ஐடிபிஐ வங்கியிடம் ரூ.900 கோடி முறைகேடாக கடன் பெற்றது குறித்தும், கடனை திருப்பிச் செலுத்தாதது குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, "கிங்பிஷர்' மதுபான ஆலை அதிபர் விஜய் மல்லையாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

காவல் ஆணையர் பணி சவாலானது:தே.க.ராஜேந்திரன்

Posted: 10 Oct 2015 12:39 PM PDT

சென்னைப் பெருநகரக் காவல் துறையின் ஆணையர் பணி சவாலானது என ஆணையர் தே.க.ராஜேந்திரன் கூறினார்.

லோக் அதாலத்தில் 2.81 லட்சம் வழக்குகளுக்கு முடிவு: முறையீட்டாளர்களுக்கு ரூ.121 கோடி தீர்வுத் தொகை

Posted: 10 Oct 2015 12:38 PM PDT

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (அக். 10) நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றம் ("லோக் அதாலத்') மூலம் 2.81 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதில், முறையீட்டாளர்களுக்கு சுமார் ரூ.121 கோடி மதிப்பில் தீர்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டம் அக். 17-க்கு ஒத்திவைப்பு

Posted: 10 Oct 2015 12:38 PM PDT

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் அக். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

3 வயது குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை ஜிப்மர் மருத்துவர்கள் சாதனை

Posted: 10 Oct 2015 12:38 PM PDT

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 3 வயது குழந்தைக்கு சனிக்கிழமை, அரிதான இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.

புதுகை: மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

Posted: 10 Oct 2015 12:37 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்கு சென்றனர்.

ஒளவையின் அறிவியல் பார்வை!

Posted: 10 Oct 2015 12:37 PM PDT

ஒளவை - தனித்தன்மை படைத்தத் தண்டமிழ்க் கவிதாயினி. அவருடைய சொற்கள் எளிமையானவை; ஆனால், வலிமையானவை. இயல்பான எளிய நடையில் புதிய உவமைகளைக் கையாண்டு அரிய

தங்கையின் நூலுக்கு அக்கா எழுதிய பாராட்டுக் கவி!

Posted: 10 Oct 2015 12:35 PM PDT

கவிஞர் எழுதிய கவிதையைப் பாராட்டி ஆண் கவிஞர்கள் பலர் எழுதிய அணிந்துரைக் கவிதைகள் பல தமிழ் இலக்கியங்களில் உள்ளன. ஆனால், பெண்கள் போற்றி ஏற்றும் அணிந்துரை மரபு பிற்காலத்தில்

இந்தவாரம் கலாரசிகன்

Posted: 10 Oct 2015 12:35 PM PDT

காரைக்குடி சென்றால், தவறாமல் பிள்ளையார்பட்டிக்கும், குன்றக்குடிக்கும் சென்று வருவது வழக்கம். கடந்த வாரம் காரைக்குடி சென்றபோது, அரியக்குடிக்கும் செல்லும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சங்கீதத்தை ரசித்திருக்கிறேனே தவிர, இதுநாள்வரை அரியக்குடி சென்றதில்லை. இந்த முறை அந்தப் பாக்கியம் கிடைத்தது.

கொம்பை வெட்டிக் காலை நடு!

Posted: 10 Oct 2015 12:34 PM PDT

பிறவியிலேயே கண்பார்வை இழந்தவராய் பிறந்திருந்தும் தமிழ்ப் புலமை நிரம்பியவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார். இவருடைய பாடல்கள் சொற்சுவையும் பொருள் நயமும் உடையவை. ஒருமுறை இவர் சந்திரவாணன் மீது கோவை பாடிக்கொண்டிருந்தார்.

சொல் தேடல் -29

Posted: 10 Oct 2015 12:33 PM PDT

தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் பரந்து விரிந்து திகழ்ந்து இன்று குறுகிச் சுருங்கி இன்னும் ஆக்கிரமிப்பு நடக்குமோ என்ற அச்சத்தில் உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கும் ஏரி குளங்களைக் காணும்போது வியப்பு மேலிடுகிறது!

இஸ்ரேல் உள்ளிட்ட 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் பிரணாப்

Posted: 10 Oct 2015 12:29 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் ஆகிய 3 நாடுகளில் மேற்கொள்ளவுள்ள 6 நாள் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை தொடங்கினார்.

சர்ச்சைக்குரிய பேச்சுகள் பாஜகவின் கருத்துகள் அல்ல

Posted: 10 Oct 2015 12:28 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரியில் முஸ்லிம் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் கூறி வரும் சர்ச்சைக்குரிய பேச்சுகள், கட்சியின் கருத்துகள் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

உள்கட்சி பூசலுக்கு "பலிகடா' ஆக்கப்பட்டேன்

Posted: 10 Oct 2015 12:28 PM PDT

ஆம் ஆத்மி கட்சியில் எனக்கு எதிராக தீட்டப்பட்ட சதிக்கும், உள்கட்சி பூசலுக்கும் நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன் என்று பதவி பறிக்கப்பட்ட தில்லி முன்னாள் அமைச்சர் ஆசிம் கான் தெரிவித்தார்

பயிர்க் கடனுக்கான வட்டி தள்ளுபடி

Posted: 10 Oct 2015 12:27 PM PDT

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்:மேதா பட்கர்

Posted: 10 Oct 2015 12:26 PM PDT

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார் சமூக ஆர்வலரும், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமான மேதா பட்கர்.

மாட்டிறைச்சிக்குத் தடை :3 நீதிபதிகள் அமர்வை அமைத்தது ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம்

Posted: 10 Oct 2015 12:25 PM PDT

மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மனுவை விசாரிப்பதற்கு ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைத்துள்ளது.

இன்று "ஆம் ஆத்மி' எம்எல்ஏக்கள் கூட்டம்:குடும்பத்துடன் பங்கேற்க முதல்வர் கேஜரிவால் உத்தரவு

Posted: 10 Oct 2015 12:25 PM PDT

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சந்திக்கவுள்ளார். இக்கூட்டம் தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள கேஜரிவால் இல்லத்தில் நடைபெறுகிறது.

மும்பையில் அம்பேத்கர் நினைவு மண்டபம்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் மோடி

Posted: 10 Oct 2015 12:25 PM PDT

மறைந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கருக்கு, மும்பையில் நினைவு மண்டபம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 2 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

விவசாயிகளை மோடி பலவீனப்படுத்தி வருகிறார்:ராகுல் தாக்கு

Posted: 10 Oct 2015 12:24 PM PDT

தனக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு உதவுவதற்காக விவசாயிகளை மோடி பலவீனப்படுத்தி வருகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறைகூறினார்.

சாத்வி பிராச்சி மீதான புகார்: மாநிலங்களவை உரிமைக் குழுவுக்கு அனுப்பிவைப்பு

Posted: 10 Oct 2015 12:23 PM PDT

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பெண் துறவி சாத்வி பிராச்சி மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த புகாரை, உரிமைக்குழுவின் பரிசீலனைக்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுப்பிவைத்தார்.

ஜம்மு-காஷ்மீர்: லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு:3 பேர் காயம்; 6 பேர் கைது

Posted: 10 Oct 2015 12:23 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த லாரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், போலீஸ்காரர் ஒருவர் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொட

சாகித்ய அகாதெமி விருதை திரும்ப ஒப்படைக்கிறார் மேலும் ஓர் எழுத்தாளர்

Posted: 10 Oct 2015 12:21 PM PDT

எழுத்தாளர்கள் நயன்தாரா ஷகல், அசோக் வாஜ்பாய் ஆகியோரைத் தொடர்ந்து மலையாள நாவலாசிரியரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுள் ஒருவருமான சாரா ஜோசப்பும், தனது சாகித்ய அகாதெமி விருதை திரும்ப ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

குஜராத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்துவோம்: ஹார்திக் படேல்

Posted: 10 Oct 2015 12:17 PM PDT

ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் குஜராத் மாநிலத்தை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று கூறப்படுவதின்

ரிஷிகளும் மாட்டிறைச்சி உண்டார்கள்: ஆர்ஜேடி தலைவர் ரகுவம்ச பிரசாத்

Posted: 10 Oct 2015 12:16 PM PDT

பழங்காலத்தில் ரிஷிகளும், மகரிஷிகளும் கூட மாட்டிறைச்சி உண்டார்கள் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மூத்த தலைவர் ரகுவம்ச பிரசாத் கூறினார்.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பஞ்ச கருடசேவை

Posted: 10 Oct 2015 12:16 PM PDT

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் கோயிலில் சனிக்கிழமை இரவு பஞ்ச கருட சேவை நடைபெற்றது.

பிகார் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு:ஜகன்னாத் மிஸ்ரா

Posted: 10 Oct 2015 12:16 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு தனது பாரதிய ஜன் காங்கிரஸ் ராஷ்ட்ரீய கட்சி ஆதரவளிக்கும் என்று முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

கோயில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு

Posted: 10 Oct 2015 12:16 PM PDT

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் சனிப்பிரதோஷம் சனிக்கிழமை நடைபெற்றது.

தாத்ரி விவகாரத்தை எழுப்பி பிகார் மக்களை திசை திருப்ப மதச்சார்பற்ற கூட்டணி முயற்சி:பாஜக குற்றச்சாட்டு

Posted: 10 Oct 2015 12:16 PM PDT

பிகார் தேர்தல் பிரசாரத்தில் தாத்ரி சம்பவத்தைப் பிரச்னையாக எழுப்புவதன் மூலம் மக்களின் கவனத்தைத் திசை

13இல் திருச்செந்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் சில்லறை விநியோகம்

Posted: 10 Oct 2015 12:15 PM PDT

திருச்செந்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, அக். 13ஆம் தேதி ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை விநியோகம் செய்யப்பட உள்ளது.

இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி:எழுச்சி பெறுமா இந்திய அணி?

Posted: 10 Oct 2015 12:14 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அடுத்தடுத்த தோல்விகளை தொடர்ந்து எழுச்சி பெறும் முனைப்புடன் இந்திய அணியினர் களமிறங்குகின்றனர்.

மகளிர் கல்லூரியில் பயிலரங்கு

Posted: 10 Oct 2015 12:14 PM PDT

காயல்பட்டினம் மகளிர் கல்லூரியில் பயிலரங்கு நடைபெற்றது.

ரத்த தான முகாம் நடத்தியதில் நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் மாவட்டத்தில் முதலிடம்

Posted: 10 Oct 2015 12:13 PM PDT

ரத்ததானம் முகாம் நடத்தியதில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தூத்துக்குடி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Posted: 10 Oct 2015 12:13 PM PDT

பழம்பெரும் நடிகை 'ஆச்சி' மனோரமா காலமானார்.

கோவில்பட்டி பால் குளிரூட்டும் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

Posted: 10 Oct 2015 12:12 PM PDT

கோவில்பட்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தை பால்வளத் துறை அமைச்சர் பி.வி. ரமணா ஆய்வு செய்தார்.

மானியத்துடன் கூடிய பயிர் ஊக்கி பெற அழைப்பு

Posted: 10 Oct 2015 12:11 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிறு வகைகளைப் பயிரிடும் விவசாயிகள் மானியத்துடன் கூடிய பயிர் ஊக்கி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கபடிப் போட்டி: சாத்தான்குளம் அணிக்கு முதல் பரிசு

Posted: 10 Oct 2015 12:10 PM PDT

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் சாத்தான்குளம் கந்தப்பன் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

சர்வதேச அஞ்சல் தினம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விரைவுபடுத்த கோரி தமிழக முதல்வருக்கு கடிதம்

Posted: 10 Oct 2015 12:10 PM PDT

சர்வதேச அஞ்சல் தினத்தை முன்னிட்டு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோவில்பட்டி பள்ளி மாணவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™