Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஷாந்தார் தோல்வி - ஷாகித் அப்செட்!

Posted:

ஷாந்தார் படத்தின் தோல்வி காரணமாக அப்செட்டில் இருக்கிறார் நடிகர் ஷாகித் கபூர். விகாஸ் பால் இயக்கத்தில், ஷாகித் கபூர், ஆலியா பட் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ஷாந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெறவில்லை, வசூலையும் குவிக்கவில்லை. இதனால் அப்செட்டில் இருக்கிறார் ஷாகித். மேலும் ஷாந்தார் படத்தை ஷாகித், அவரது ...

நேரம் வரும்போது அங்கூர் ரீ-மேக் : ஷாரூக்கான்!

Posted:

சில வருடங்களுக்கு முன்னரே ஷாரூக்கானும், ரோகித் ஷெட்டியும் இணைந்து அங்கூர் படத்தை ரீ-மேக் செய்யப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் அது இன்று வரை நடைபெறவில்லை. இதுதொடர்பாக ஷாரூக்கானிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... முதன்முறையாக நான் ரோகித் ஷெட்டியை சந்தித்தபோது அங்கூர் படத்தை தான் ரீ-மேக் செய்யும் முடிவில் இருந்தோம். ஆனால் ரோகித் ...

பையா ரீ-மேக்கில் அஜித்-விஜய் பட வில்லன்

Posted:

லிங்குசாமி இயக்கத்தில், கார்த்தி - தமன்னா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பையா. இப்படம் இந்தியில் தற்போது ரீ-மேக் ஆக உள்ளது. இதில் கார்த்தி ரோலில் வித்யூத் ஜம்வால் நடிக்க உள்ளார். பில்லா-2, துப்பாக்கி போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ள இவர், காக்க காக்க இந்தி ரீ-மேக்கான ''போர்ஸ்'' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ...

சுல்தானில், சல்மான் உடன் நடிக்கும் சஞ்சய் தத்!

Posted:

சல்மான் கான் நடிப்பில் விரைவில் பிரேம் ரத்தன் தன் பயோ படம் வெளியாக இருக்கிறது. இதனைத்தொடர்ந்து சுல்தான் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சல்மான். இந்தப்படத்தில் சல்மான் உடன் ஹாலிவுட் நடிகர் சில்வர் ஸ்டோலன் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வந்தது. ஆனால் அந்த செய்தி உண்மையல்ல, தற்போது அந்த ரோலில் நடிகர் ...

மணிரத்னத்துக்காக ஒதுக்கியதை 'அன்வர்' இயக்குனருக்கு கொடுத்த துல்கர்..!

Posted:

'சார்லி' படப்பிடிப்பை முடித்துவிட்ட துல்கர் சல்மான், தற்போது ராஜீவ் ரவி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்... இதை முடித்ததும் சமீர் தாஹிருன் மீண்டு கூட்டணி அமைத்துள்ள படத்திற்காக நவம்பரில் ஷூட்டிங் கிளம்புகிறார். அடுத்து மணிரத்னம் படத்திற்காக கொடுத்த கால்ஷீட்டைத்தான் இயக்குனர் அமல் நீரத்திற்கு ...

கமலுக்கும், அஜித்துக்கும் நேரடி போட்டி

Posted:

கமல் நடித்த 'தூங்காவனம்' படமும், சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் ஸ்ருதிஹாசன் நடித்த 'வேதாளம்' படமும் தீபாவளி வெளியீடு என்பதை எப்போதோ அறிவித்துவிட்டனர். ஆனாலும், எந்தப் படம், எந்த தேதியில் ரிலீஸாகிறது என்பதில் குழப்பம் நீடித்தபடி இருக்கிறது. அதாவது, வேதாளம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சாய்பாபா பக்தர். சாய்பாபாவுக்கு ...

விஜய்யை அடுத்து இயக்க நால்வர் போட்டி

Posted:

விஜய் நடித்த 'புலி' படம் இந்த மாதம் 1ம் தேதி வெளியாகி அவருடைய தோல்விப் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. இயக்குனர் சிம்புதேவன் அவருக்கக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டார். மிகப் பெரிய பட்ஜெட், மிகப் பெரிய ஹீரோ கிடைத்தும் கதையையும், திரைக்கதையையும் சரிவரச் செய்யாமல் கோட்டை ...

மலேசியாவில் ரஜினிக்காக வந்த டிரைவர் காருடன் சிறைப்பிடிப்பு!

Posted:

கபாலி' படப்பிடிப்புக்காக மலேசியா சென்ற ரஜினியை அழைத்து செல்ல, வெளிநாட்டு படப்பிடிப்பு பணிகளை கவனிக்கும் தனியார் நிறுவனம் சார்பில், ‛லக்ஸூரி' காரை வாடகைக்கு அமர்த்தினர். ரஜினி, மாலை 6:00 மணிக்கு தான் மலேசியா சென்றார், விமானநிலையத்திலிருந்து வெளியே வர 7:30 மணி ஆனது. ஆனால், ரஜினியை வரவேற்க, வாடகைக்கு அமர்த்தப்பட்ட காரை, 4:00 மணி முதல் 5:00 ...

“டபுள் பேரல் பெயிலியர் ஆனதில் வருத்தம் இல்லை” - பிருத்விராஜ்..!

Posted:

அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்கள் கொடுத்து தெம்பாக இருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.. ஆனால் இந்த இரண்டு படங்களுக்கு முன்னர் அவர் நடிப்பில் வெளியான 'இவிடே', 'டபுள் பேரல்' என இரண்டு படங்களும் பிளாப் லிஸ்ட்டில் தான் இடம்பிடித்தன. இதில் 'இவிடே' படத்தின் தோல்வியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், 'டபுள் பேரல்' ...

18 வருடங்கள் கழித்து சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் நடிக்கிறார் மம்முட்டி..!

Posted:

காலம் மாற மாற, மாற்றத்தை விரும்பும் இளைஞர்களுக்காக சூப்பர் ஹீரோக்கள் தங்களை அப்டேட் பண்ணிக்கொள்வதற்காக இளம் இயக்குனர்களுடன் கூட்டணி சேர்ந்து கொள்வதுதான் வழக்கம்.. ஒரு காலத்தில் அந்த ஹீரோக்களை வைத்து பல ஹிட்டுகள் கொடுத்திருந்தாக்ளும் கூட காலமாற்றத்திற்கு ஏற்ப தங்களை அப்டேட் பண்ணிக்கொள்ளாததால் சீனியர் இயக்குனர்கள் அந்த ...

சினிமாவில் வில்லியானார் சந்தியா

Posted:

அத்திப்பூக்கள் தொடரில் நடித்த சந்தியாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. காயத்ரியாக வாழ்ந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் தொடரில் மலைவாழ் பெண்ணாக நடித்து வருகிறார். இதில் கும்கி படத்தில் லட்சுமி மேனன் வரும் கெட்-அப்பில் நடித்து எல்லோரையும் கவர்ந்து ...

தயாரிப்பாளரின் இயக்கத்தில் நடிக்க தயங்கிய ஹீரோயின்கள்

Posted:

பிரபல தயாரிப்பாளர் சி.பி.குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசு பட்டி, தெகிடி, இன்று நேற்று நாளை என பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தற்போது சி.வி.குமார் இயக்குனராகியிருக்கிறார். அவர் இயக்கும் படத்திற்கு மாயவன் என்று பெயர் வைத்திருக்கிறார். இது ஒரு த்ரில்லர் படம். ...

கத்துக்குட்டி இயக்குனருக்கு "மண்ணின் இயக்குனர்" பட்டம்: விவசாயிகள் வழங்கினர்

Posted:

பத்திரிக்கையாளர் சரவணன் இயக்கிய கத்துக்குட்டி படம் சமீபத்தில் வெளியானது. இதில் தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்த இருந்த மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தால் வரும் ஆபத்தை சுட்டிக்காட்டியிருந்தார் சரவணன். இதனால் அரசியல் கட்சியினரிடையேயும், விவசாயிகளிடையேயும் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூர் ...

நடிகர் விவேக்கின் 13வயது மகன் மரணம்

Posted:

மூளைக்காய்ச்சலால் நடிகர் விவேக் மகன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 13. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவருக்கு அமிர்தாநந்தினி, தேஜஸ்வனி என்ற இரண்டு மகள்களும், பிரசன்னா குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் பிரசன்னா மூளை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். கடந்த ஒன்றரை மாத காலமாக சென்னையில் ...

தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் அபூர்வ மகான்

Posted:

டி.என்.எஸ் தேவர் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் அபூர்வ மகான். கே.ஆர்.மணிமுத்து இயக்கி உள்ளார். இது ஷீரடி சாய்பாபாவின் கதை. ஷீரடி சாய்பாபாவாக தலைவாசல் விஜய் நடித்துள்ளார். சாய்முரளி என்பவர் இளம் ஹீரோவாக நடித்துள்ளார். சுமன் வில்லனாக நடித்துள்ளார். வினு சக்ரவர்த்தி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்தப் படம் சாய்பாபா ஜீவ ...

நடிகர் சங்க பணிகளுக்கு தனித்தனி குழுக்கள் அமைப்பு

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளனர். விஷால் அணியில் போட்டியிட்ட அனைவரும் பிசியான நடிகர்கள். தற்போது அவர்கள் தேர்தல் பரபரப்புகள் முடிந்த தங்கள் படப்பிடிப்புக்கு சென்று விட்டனர். முன்பு இருந்த நிர்வாகத்தில் தலைவர், செயலாளர் என்ற தனி நபர் ...

அரசு விருதுகளை திருப்பி கொடுக்க இயக்குனர்கள் முடிவு

Posted:

பிரபல எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டும், மிரட்டப்பட்டும் வருவதை கண்டித்து சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். அதேபோல புனேயில் உள்ள தேசிய திரைப்பட கல்லூரி தலைவர் நியமனத்தை எதிர்த்து தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் தங்கள் விருதை திருப்பி கொடுக்க முடிவு ...

சிவாஜி சிலைக்கு 2 ஆண்டுகளுக்கு ஆபத்தில்லை: அகற்ற அவகாசம் கேட்கிறது அரசு

Posted:

நடிகர் திலகம் சிவாஜிக்கு சென்னை மெரீனா கடற்கரை காமராசர் சாலையில் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே சிம்சன் கடிகார ஸ்தூபியும், சுதந்திர தின பொன்விழா அசோக ஸ்தூபியும் உள்ளது. ஆனாலும் சிவாஜி சிலை மட்டும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். ...

பசங்க - 2 படத்துக்கு தடை கேட்டு வழக்கு... திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவதில் சிக்கல்?

Posted:

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பசங்க புரடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ் லைன் புரட்யூசராக தயாரித்து இயக்கி உள்ள படம் பசங்க-2. ஹைக்கூ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு தற்போது பசங்க-2 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் பசங்க-2 படத்துக்கு தடைவிதிக்கும்படி வழக்கு ...

'தூங்காவனம்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

Posted:

வெளிநாட்டுப்படங்களை திருடி படம் எடுக்கும் வழக்கத்துக்கு மாறாக, 'ஸ்லீப்லெஸ் நைட்' என்ற பிரெஞ்ச் படத்தின் உரிமையை வாங்கி தயாரிக்கப்பட்டுள்ள படம் 'தூங்காவனம்'. ஒரு நாளில் நடக்கும் பரபர சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். கமலின் உதவியாளரான ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தூங்காவனம்' ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™