மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மத்திய பிரதேசத்தில் கழிப்பறை இல்லாவிட்டால் கணவரை கை கழுவும் பெண்கள்
- மலையே சிலையான அதிசயம்: திருப்பதி மலையில் ஏழுமலையான் சிலை
- ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்திய யாத்ரீகர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு: 78 பேர் மாயம்
- ஆறாண்டுகளாக வீட்டினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மீட்பு
- மும்பையில் செயின் கொள்ளையர்களுக்கு துப்பாக்கிகளை விற்று, வாடகைக்கு விட்ட பெண் கைது
- நடுரோட்டில் மனைவியை மானபங்கம் செய்த இந்தி நடிகர் கைது
- பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்: 10 பேர் கைது
- சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக மும்பையில் இடி, மின்னலுடன் பலத்த மழை
- பீகார் சட்டசபை தேர்தல்: சோனியா காந்தி பிரசாரம் - நிதிஷ்குமார், லாலு புறக்கணிப்பு
- பசுவின் இறைச்சியை சாப்பிட்டதாக தாக்குதல்: கொலையானவர் குடும்பத்தினருடன் ராகுல்காந்தி சந்திப்பு
- போலீசை கொல்லுங்கள் - தற்கொலை செய்துக்கொள்ள வேண்டாம்: வாட்ஸ் அப்பில் வேகமாக பரவும் ஹர்தீக் படேல் வீடியோ
- ராஜஸ்தான்: பாத்திரத்தை தொட்டதால் தலித் மாணவனை அடித்த ஆசிரியர்
- லாரிகள் வேலைநிறுத்தம்: மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நாளை பேச்சுவார்த்தை
- அறக்கட்டளையில் நிதி மோசடி வழக்கு: நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
- காஷ்மீர் காட்டுப்பகுதியில் பயங்கர தீ: கண்ணி வெடிகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
- எம்.பி. மாளிகையில் இரண்டு பப்பாளி பழங்களை திருடியவரை தேடும் டெல்லி போலீஸ்
- மருத்துவமனையின் இருக்கும் இந்திராணியின் உடல் நிலை கவலைக்கிடம்: மருத்துவர்கள்
- உத்தரபிரதேசத்தில் கிராமவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: மேலும் 2 பேர் கைது
- குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரைத் தொடர்ந்து இடஒதுக்கீடு கேட்கும் பிராமணர்கள்
- உ.பி.யில் பஞ்சாயத்து தேர்தலில் மோதல்: ஒருவர் சுட்டுக்கொலை
| மத்திய பிரதேசத்தில் கழிப்பறை இல்லாவிட்டால் கணவரை கை கழுவும் பெண்கள் Posted: 03 Oct 2015 11:02 PM PDT திருமண பேச்சை தொடங்கும் போது பையனுக்கு சொந்த வீடு இருக்கிறதா? என்று கேட்பது தான் வழக்கம். ஆனால் வீட்டில் கழிப்பறை இருக்கிறதா? என்று கேட்கும் சூழ்நிலை மத்திய பிரதேச மாநிலத்தில் எழுந்துள்ளது. பேதுல் மாவட்டம் சிசோலி கிராமத்தில் கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாததால் கடந்த 2011–ம் ஆண்டு அனிதா நரே என்ற இளம் பெண் கணவரை பிரிந்து சென்றார். |
| மலையே சிலையான அதிசயம்: திருப்பதி மலையில் ஏழுமலையான் சிலை Posted: 03 Oct 2015 10:59 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி 3–வது சனிக்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இங்குள்ள 7 மலைகளில் கடைசி மலையாக திகழும் அஞ்சனாத்ரி மலையில் ஏழுமலையான் போன்ற சிலை தானே உருவாகி உள்ளது. கடந்த 2012–ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சிலை பக்தர்கள் பார்வையில் பட்டது. |
| ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்திய யாத்ரீகர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு: 78 பேர் மாயம் Posted: 03 Oct 2015 09:55 PM PDT ஹஜ் யாத்திரையின் நிறைவுக்கட்டமாக சவுதி அரேபியா நாட்டிலுள்ள மினா நகரில் கடந்த மாதம் சாத்தான் மீது கல் எறியும் சம்பிரதாயத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்திய யாத்ரீகர்களின் எண்ணிக்கை தற்போது 58 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை தனது 'டுவிட்டர்' பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இவ்வாண்டு ஹஜ் |
| ஆறாண்டுகளாக வீட்டினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மீட்பு Posted: 03 Oct 2015 08:50 PM PDT மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள வீட்டின் ஜன்னலில் வாலிபர் ஒருவர் சம்பவத்தன்று நிர்வாணமான நிலையில் வெளியே எட்டி பார்த்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்தப் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இதுகுறித்து சாந்தாகுருஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த வாலிபர் பெயர் ரோனக் |
| மும்பையில் செயின் கொள்ளையர்களுக்கு துப்பாக்கிகளை விற்று, வாடகைக்கு விட்ட பெண் கைது Posted: 03 Oct 2015 07:54 PM PDT மும்பையில் சமூக விரோதிகள், வழிப்பறி கொள்ளையர்களுக்கு துப்பாக்கிகளை விற்றும், வாடகைக்கு விட்டும் தொழில் செய்துவந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரி பஜாரில் காய்கறி கடை நடத்திவந்த ஒரு பெண், சமூக விரோதிகள், வழிப்பறி கும்பல் மற்றும் |
| நடுரோட்டில் மனைவியை மானபங்கம் செய்த இந்தி நடிகர் கைது Posted: 03 Oct 2015 07:49 PM PDT மும்பை பாந்திரா பகுதியை சேர்ந்தவர் காலித் சித்திக்(வயது41). இவர் கஜினி, டோல், வாஸ்தவ் உள்ளிட்ட இந்திப்படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி ரகாத். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களது 2 குழந்தைகளும் காலித் சித்திக் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். வெர்சோவாவில் பெற்றோருடன் தங்கியிருக்கும் ரகாத் விடுமுறை |
| பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்: 10 பேர் கைது Posted: 03 Oct 2015 07:32 PM PDT மராட்டியத்தில் வறட்சியை எதிர்கொள்ள மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. சிகரெட், மதுபானம் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றின் மதிப்புக் கூட்டு வரியும் 5 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளும் பா.ஜனதா அரசின் |
| சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக மும்பையில் இடி, மின்னலுடன் பலத்த மழை Posted: 03 Oct 2015 07:16 PM PDT சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக மும்பையில் இடி, மின்னலுடன் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மராட்டியத்தில் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதன்காரணமாக ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளின் நிலை பரிதவிப்புக்குள்ளாகி உள்ளது. மாநிலத்தின் தலைநகரான மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மூன்று |
| பீகார் சட்டசபை தேர்தல்: சோனியா காந்தி பிரசாரம் - நிதிஷ்குமார், லாலு புறக்கணிப்பு Posted: 03 Oct 2015 04:51 PM PDT பீகார் சட்டசபைக்கு வரும் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில், ஆட்சியை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதா அணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் மதசார்பற்ற கூட்டணி அமைத்துள்ளது. |
| பசுவின் இறைச்சியை சாப்பிட்டதாக தாக்குதல்: கொலையானவர் குடும்பத்தினருடன் ராகுல்காந்தி சந்திப்பு Posted: 03 Oct 2015 04:37 PM PDT பசுவதை தடைச்சட்டம் அமலில் உள்ள உத்தரபிரதேசத்தின் தாத்ரி மாவட்டம் பிசடா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை பசுவின் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக கூறி 200-க்கும் மேற்பட்டோரால் இக்லாக்(வயது 50) என்பவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவருடைய 22 |
| Posted: 03 Oct 2015 04:30 PM PDT குஜராத் மாநிலத்தில் வாழும் படேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சமீபகாலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு ஹர்திக் படேல்(22) என்ற இளைஞர் தலைமை |
| ராஜஸ்தான்: பாத்திரத்தை தொட்டதால் தலித் மாணவனை அடித்த ஆசிரியர் Posted: 03 Oct 2015 03:49 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் பாத்திரத்தை தொட்ட தலித் மாணவனை ஆசிரியர் அடித்தது அங்கு பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது. ஜோத்பூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஓசியன் தாலுகாவில் உள்ள அரசாங்கத்தின் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவரும் தினேஷ். இவர் ஒரு தலித் மாணவர். கடந்த வெள்ளிகிழமை அன்று பள்ளியில் மதிய உணவு |
| லாரிகள் வேலைநிறுத்தம்: மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நாளை பேச்சுவார்த்தை Posted: 03 Oct 2015 03:41 PM PDT லாரி அதிபர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள். |
| அறக்கட்டளையில் நிதி மோசடி வழக்கு: நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு Posted: 03 Oct 2015 03:31 PM PDT அமைதிக்கான நோபல் பரிசு, கடந்த ஆண்டு நமது நாட்டை சேர்ந்த குழந்தைகள் உரிமை ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் கூட்டாக வழங்கப்பட்டது. இந்த கைலாஷ் சத்யார்த்தி மீதும், அவரது மனைவி சுமேதா மற்றும் முக்தி |
| காஷ்மீர் காட்டுப்பகுதியில் பயங்கர தீ: கண்ணி வெடிகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு Posted: 03 Oct 2015 01:56 PM PDT காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பூஞ்ச் மாவட்டத்தில் அடர்ந்த காடு உள்ளது. இந்த காட்டில் நேற்று முன்தினம் இரவில் திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீயின் வேகம் அதிகமாகி பயங்கரமாக எரிய தொடங்கியது. |
| எம்.பி. மாளிகையில் இரண்டு பப்பாளி பழங்களை திருடியவரை தேடும் டெல்லி போலீஸ் Posted: 03 Oct 2015 12:54 PM PDT டெல்லியில் உள்ள பிஜு ஜனதா எம்.பி. மாளிகையில் இருந்து இரண்டு பப்பாளி பழங்களை திருடியவரை தீவிரமாக போலீஸ் தேடிவருகிறது. ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா எம்.பி. அர்ஜூன் சரண் சேத்தியின் டெல்லி மாளிகையிலிருந்து மர்ம நபர் ஒருவர் இரண்டு பப்பாளி பழங்களை |
| மருத்துவமனையின் இருக்கும் இந்திராணியின் உடல் நிலை கவலைக்கிடம்: மருத்துவர்கள் Posted: 03 Oct 2015 11:23 AM PDT மும்பை ஆர்தூர் சாலை சிறைக்குள் அளவுக்கு அதிகமாக வலிப்பு மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்த இந்திராணியை சந்திக்கவந்த அவரது வக்கீலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். மராட்டிய மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி பிரபல தொழில் அதிபர் மனைவி இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா |
| உத்தரபிரதேசத்தில் கிராமவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: மேலும் 2 பேர் கைது Posted: 03 Oct 2015 10:35 AM PDT உத்தரபிரதேசத்தில் தாத்ரி கிராமத்தில் பசுவின் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக கிராமவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சிவம் மற்றும் விஷாலை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். |
| குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரைத் தொடர்ந்து இடஒதுக்கீடு கேட்கும் பிராமணர்கள் Posted: 03 Oct 2015 08:03 AM PDT குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு பட்டேல் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிராமணர்களும் தங்களுக்கு மாநிலத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். |
| உ.பி.யில் பஞ்சாயத்து தேர்தலில் மோதல்: ஒருவர் சுட்டுக்கொலை Posted: 03 Oct 2015 07:42 AM PDT உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் தேர்தல் மோதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஹ்ரைச் மாவட்டம் கய்சர்கஞ்ச் பகுதியில் உள்ள ரசூல்பாத் கிராம |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |