Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஆட்கடத்தல் விசாரணையில் தேடப்பட்டுவந்த மூன்றாவது நபரும் கைது

Posted: 30 Sep 2015 09:04 PM PDT

s

sரொரன்ரோ மற்றும் மொன்றியல் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டுவந்த மூன்றாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 வயது பெண் ஒருவர் பாலியல் தொழில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான இந்த விசாரணைகளை அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்ததாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த பெண்ணை மொன்றியலில் சந்தித்த ஆண் ஒருவர், பிறிதொரு ஆண் மற்றும் பெண்ணொருவரின் துணையுடன் அவரை பாலியல் தொழிலில் தள்ளியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து குறித்த அந்த பதின்மவயது பெண் பாலியல் தொழிலுக்காக ரொரன்ரோவுக்கும் மொன்றியலுக்கும் மாறிமாறி கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் குறித்த அந்த பெண் பலமுறை தாக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் ரீதியாக துண்புறுத்தப்பட்டதாகவும், அவற்றால் ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவ உதவி நாடுவதும் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் அந்த பெண்ணிடமிருந்த அடையாள ஆவணங்கள், பணம் அனைத்தையும் சந்தேக நபர்க்ள அபகரித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட காவல்த்துறையினர் கடந்த சனவரி மாதம் ரொரன்ரோவைச் சேர்ந்த 29 வயதான Albert Markareh என்பவரையும், 21 வயதான Iman Ben Youssef என்பவரையும் கைது செய்து அவர்கள் மீது 13 குற்றச்சாட்டுககைளை பதிவு செய்தனர்.

மூன்றாவது சந்தேக நபரை மிக நீண்ட நாட்களாக தேடிவந்த காவல்த்துறையினர் கடந்த 24ஆம் திகதி 28 வயதான Lawrence Mikaelian என்பவரை கைது செய்ததுடன், இவரை தேடும் நடவடிக்கையின் போது பெருமளவிலான போதைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

The post ஆட்கடத்தல் விசாரணையில் தேடப்பட்டுவந்த மூன்றாவது நபரும் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மே மாதம் ஒன்ராறியோவில் வாகனம் வாங்கிய 6,500 பேர் மேலதிக வரி செலுத்த வேண்டும்

Posted: 30 Sep 2015 09:00 PM PDT

d

dகடந்த மே மாதத்தில் ஒன்ராறியோவில் பயன்படுத்திய வானங்களை கொள்வனவு செய்த 6,500 பேர் மேலதிக வரித் தொகையினை செலுத்த வேண்டியிருக்கும் என மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த ஒரு வாகன விற்பனை முகவரிடம் வாகனங்களை வாங்கியோருக்கு உரிய முறையில் வரித் தொகை அறவிடப்படவில்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வாகனங்களை வாங்கிய 6,500 பேருக்கும் உரிய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஒன்ராறியோ நிதி அமைச்சு, அந்த வகையில் அவர்கள் மேலதிகமாக 100 இலிருந்து 500 டொலர்கள் வரையில் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது.
குறித்த அந்த விற்பனை முகவர் வாகன விற்பனை ஆவணங்களை அரசாங்க இணையத்தில் தரவேற்றும் போதே இந்த தவறு நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் Charles Sousa, இந்த விவகாரத்தில் வாடிக்கையாளர்கள் தரப்பில் எந்தவித தவறும் இல்லை எனவும். அவர்கள் குறித்த அந்த மேலதிக வரித் தொகையினை செலுத்தினால் போதும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த தவறு காரணமாக கடந்த மே மாதம் முதலாம் திகதியில் இருந்து 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பயன்படுத்திய வாகன விற்பனையால் கிடைத்திருக்க வேண்டிய 2.4 மில்லியன் டொலர்கள் தமக்கு கிடைக்கவில்லை எனவும் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

The post மே மாதம் ஒன்ராறியோவில் வாகனம் வாங்கிய 6,500 பேர் மேலதிக வரி செலுத்த வேண்டும் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Sammy Yatim மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல்த்துறை உத்தியோத்தர் தான் குற்றமற்றவர் என தெரிவித்துள்ளார்

Posted: 30 Sep 2015 08:56 PM PDT

g

gஇரண்டு வருடங்களின் முன்னர் தடப் பேரூந்து ஒன்றில் வைத்து காவல்த்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பதின்ம வயது Sammy Yatim என்பவரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரொரன்ரோ காவல்த்துறை உத்தியோகத்தர் தான் குற்றமற்றவர் என தெரிவித்துள்ளார்.

18 வயதா Sammy Yatimஇன் மரணம் தொடர்பில் James Forcill எனப்படும் அந்த காவல்த்துறை உத்தியோகத்தர் மீது இரண்டாம் தர கொலைக் குற்றச்சாட்டு மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு ஆகியன சுமத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அந்த உத்தியோகத்தர் ரொரன்ரோ குற்றத் தடுப்பு பிரிவின் நிர்வாக அலுவலர்களில் ஒருவராக கடமையாற்றி வருகிறார்.g

இவ்வாறான நிலையிலேயே தன் மீதான வழக்கு விசாரணைகளை விரைவில் ஆரம்பிக்குமாறும், தான் குற்றமற்றவர் என்பதனை நிரூபிப்பதற்கான தனது தரப்பு நியாயத்தினை நீதிபதிகளுக்க விளக்க அவர் ஆவலாக உள்ளதாகவும் அவரின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு யூலை மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் ஒளிப்பதிவுகள் பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிடப்பட்டு அது பலதரப்பினரதும் சர்ச்சைகளுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

The post Sammy Yatim மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல்த்துறை உத்தியோத்தர் தான் குற்றமற்றவர் என தெரிவித்துள்ளார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆட்கடத்தல் விசாரணையில் ரொரன்ரோ நபர் கைது

Posted: 30 Sep 2015 03:29 PM PDT

h

hஆட்கடத்தல் சம்பவம் தொடர்பிலான விசாரணையில், நாடு தழுவிய நிலையில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த 24 வயதான ரொரன்ரோ ஆண் ஒருவரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இந்த நபரால் கடத்தப்படட 21 வயது பெண் ஒருவர் ரொரன்ரோவின் மேற்கு பிராந்தியம் மற்றும் ரொரன்ரோ பெரும்பாக பகுதிகளில் உள்ள பல்வேறு விடுதிகளில் பாலியல்சார் தொழில்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த பெண்ணின் அடையாள ஆவணங்கள் மற்றும் பணம் அனைத்தையும் கைப்பற்றி வைத்துக் கொண்ட அந்த சந்தேக நபர், குறித்த அந்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளதுடன் பலமுறை தாக்கியுள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த அந்த நபரைக் கைது செய்வதற்கான நாடு தழுவிய ஆணையை கடந்த ஓகஸ்ட் மாதம் ஆறாம் திகதி பிறப்பித்த அதிகாரிகள், தீவிர தேடுதல்களின் பின்னர் நேற்றைய தினம் அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து ரொரன்ரோவுக்கு திரும்பிய வேளையில், நியூ வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ரொரன்ரோவைச் சேர்ந்த 24 வயதான Ambrosie Dhine என்பவர் மீது, ஆட்கடத்தல், தாக்குதல், ஆட்கடத்தல் மூலம் பொருளீட்டுதல், பாலியல் சேவைக்கான விளம்பரம் உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த இந்த நபர் மூலம் வேறு யாராவதும் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ஆட்கடத்தல் விசாரணையில் ரொரன்ரோ நபர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வட பிராந்திய மக்களின் ஊட்டச் சத்துக்காக 32 மில்லியன் செலவிடப்படும் – உறுதியளிக்கிறார் Tom Mulcair

Posted: 30 Sep 2015 12:04 PM PDT

NDP_leader_Tom_Mulcair_930

NDP_leader_Tom_Mulcair_930கனடாவின் வட பிராந்தியங்களில் நேற்றைய தினம் தேர்தல் பரப்புரையினை மேற்கொண்ட புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair, அந்த பகுதி மக்கள் மேலும் சத்தான உணவினை பெற்றுக்கொள்ளும் வகையில் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு தமது அரசாங்கம் 32 மில்லியன் டொலர்களை செலவிடும் என உறுதியளித்துள்ளார்.

நாட்டின் வட பிராந்திய மக்கள் போதிய ஊட்டச் சத்துள்ள உணவினை பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்துவதனை தற்போதய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என சாடியுள்ளதுடன்,

வட பிராந்திய மக்களை தமது வெவ்வேறு நலன்களுக்காகவும் பயன்படுத்திக் கொண்ட ஸ்டீபன் ஹார்ப்பர், அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவில்லை எனவும் Mulcair குற்றஞ்சாட்டியுள்ளார்.NDP_leader_Tom_Mulcair_930

அத்துடன் நாட்டின் நிர்வாக மையங்களில் இருந்து நெடுந் தொலைவில் இருக்கும் மக்களின் நலன்களை கவனிக்காது விடுவது நியாமற்ற செயல் எனவும் தெரிவித்துள்ள Tom Mulcair, இந்த விவகாரத்தில் தமது அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கனடாவின் வட பிராந்தியங்களில் வாழும் மக்கள் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவினை பெற்றுக் கொள்வதனை தமது அரசாங்கம் உறுதிசெய்யும் என்றும் புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair தெரிவித்துள்ளார்.

The post வட பிராந்திய மக்களின் ஊட்டச் சத்துக்காக 32 மில்லியன் செலவிடப்படும் – உறுதியளிக்கிறார் Tom Mulcair appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Lytton Park பகுதியில் இரண்டு பதின்மவயதினர் மீது கத்திக்குத்து

Posted: 30 Sep 2015 11:57 AM PDT

stabbing_in_Lytton_Park_area_-_930

stabbing_in_Lytton_Park_area_-_930Lawrence Park மற்றும் அவனியூ வீதிப் பகுதியில் உள்ள உயர் தரப் பாடசாலையின் வாகனத் தரிப்பிடத்தில் இரண்டு பதின்ம வயதினர் கத்திக்குத்துக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் காவல்த்துறையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் 17 வயதுடையவர்கள் என்றும், அவர்களுக்கு உயிராபத்தான காயங்கள் இல்லை என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.stabbing_in_Lytton_Park_area_-_930

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில், சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவி்ல்லை என காவல்த்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

அதேவேளை இந்த கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களை காவல்த்துறையினருடன் தொடர்புகொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post Lytton Park பகுதியில் இரண்டு பதின்மவயதினர் மீது கத்திக்குத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடலாமா?

Posted: 30 Sep 2015 08:25 AM PDT

ik

ikசாப்பிடும் முறைகளும், சாப்பிட்ட பின்னர் என்ன செய்யக்கூடாது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது

உணவு வகைகள் ஜீரணமாவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரண கோளாறுகள் ஏற்படும்.

சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது

உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ஜீரண உறுப்புகள் முறையாகச் செயல்பட, போதிய ரத்தம் கிடைக்காது.

சாப்பிட்டு, 3 அல்லது 4 மணி நேரத்துக்குப் பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பொதுவாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால், ஜீரண உறுப்புக்களால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக் கொள்ள முடியாது.

சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது

இதனால், கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்று, ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது.

நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வலுவிழந்து விடும். குளித்தால் முக்கால் மணி நேரத்திற்கு பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தான் குளிக்க வேண்டும்.

உருளைக் கிழங்கு சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் சாப்பிட வேண்டும்.ik

சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடலாமா?

சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

இதனால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும்.

உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உண்ட உணவு செரிக்காத நிலையில், பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

சாப்பிட்ட உடனே பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும்.

சாப்பிட்டு, 1-2 மணி நேரம் கழித்துதான் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு, 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

The post சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடலாமா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™