Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Moss Park இல் பெண் ஒருவர் மீது கத்திக் குத்து

Posted: 02 Sep 2015 08:53 PM PDT

pl

plMoss Park பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்த நிலையில், அவரை உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிற்பகல் 1 மணிக்கு சற்று முன்னராக Shuter வீதிக்கு அருகில் உள்ள பூங்காவின் வடகிழக்குப் பகுதியில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம் பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் நெஞ்சில் கத்திக்குத்துக் காயங்களுடன், இரத்தம் சொட்டிக்கொண்டிருந்த நிலையில் அந்த பெண் காணப்பட்டார் எனவும் அவர்கள் விபரித்துள்ளனர்.pl

அதேவேளை அவரைக் கத்தியால் குத்திய சந்தேக நபர் கறுப்பினத்தவர் என்றும், 40 வயதுகளை உடையவர் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், ஏறத்தாழ 200 இறாத்தல் நிறையும், ஆறு அடி ஒரு அங்குல உயரமும் உடையவர் எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

The post Moss Park இல் பெண் ஒருவர் மீது கத்திக் குத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Caledon வாகன விபத்து – பெண் ஒருவர் மருத்துவமனையில்

Posted: 02 Sep 2015 08:39 PM PDT

l

lCaledon பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் அவசர உலங்கு வான்னூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை இரவு இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட அந்த விபத்தில் குறித்த பெண்ணிற்கு தலையில் மோசமான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Dixie மற்றும் பழைய பாடசாலை வீதிப்பகுதியில் உள்ள சந்திப்பிற்கு வருமாறு மாலை 6 மணியளவில் தாம் வரவழைக்கப்பட்டிருந்தாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் சம்பவ இடத்தில் தலையில் மோசமான காயங்களுக்கு ஆளான பெண்ணை உலங்கு வான்னூர்தி மூலம் Sunnybrook மருத்துவ மனைக்கு அவசர மருத்துவப் பிரிவினர் கொண்டு சென்றிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.l

விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்கள் இரண்டும், வீதியை விட்டு விலகி அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்திருப்பதைக் காணமுடிகிறது.

விபத்து சம்பவித்த இடத்தில் காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

The post Caledon வாகன விபத்து – பெண் ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வீடு ஒன்றில் முதியவர் மரணம் – கொலை என காவல்த்துறை தெரிவிப்பு

Posted: 02 Sep 2015 03:54 PM PDT

o

oவீடு ஒன்றில் 80 வயது முதியவர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என டுர்ஹாம் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை Memory வீதிப் பகுதியில் இரவு 8.10 அளவில் முதியவர் திடீர்ரென உயிரிழந்திருதமை தொடர்பில் தமக்கு தவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தாம் அந்த இடத்திற்கு விரைந்திருந்தாகவும் காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.

அங்கு முதியவர் அசைவற்றுக் கிடந்ததாகவும் தெரிவித்த காவல்த்துறையினர்,முன்னெடுத்த விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கைகளில் இருந்த முதியவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தொடர்ந்தும் விசாரணை நடத்திவரும் அவர்கள் உயிரிழந்த முதியவர் உயிரிழந்த தினத்தில் எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்பவற்றைக் நேரில் பார்த்திருந்தால் தமது விசாரணைக்கு உதவுமாறும் அயலவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post வீடு ஒன்றில் முதியவர் மரணம் – கொலை என காவல்த்துறை தெரிவிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

CanJet பயணிகள் விமானச் சேவை நிறுவனத்தின் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தம்

Posted: 02 Sep 2015 11:09 AM PDT

ugyu

ugyuHalifaxஐ தளமாக கொண்டு இயங்கும் CanJet பயணிகள் விமானச் சேவை நிறுவனம், தனது அனைத்து விமான போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் பயணிகளுக்கான விமானப் பயணங்கள் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டிருக்காததன் காரணத்தால், தற்போதய இந்த சேவை இடைநிறுத்த அறிவிப்பினால் பொதுமக்களுக்க பாதிப்புக்கள் இல்லை என விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த விமானச் சேவையினை தொடர்ந்து முன்னெடுப்பதனால் ஆதாயம் ஈட்ட முடியாது என நிறுவனத்தினை அதிகாரபீடம் முடிவு செய்ததை அடுத்தே சேவைகளை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.ugyu

சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்கிய SkyGreece விமான நிறுவனத்தின் பயண நிறுத்தங்கள் சம்பவித்து ஒரு வார காலத்தினுள் CanJet நிறுவனமும் தமது சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post CanJet பயணிகள் விமானச் சேவை நிறுவனத்தின் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய ஊடகவியலாளர் மொஹமட் ஃபாஹ்மி விவகாரம் – கனடாவுக்கான எகிப்திய தூதுவருடன் Tom Mulcair வாதம்

Posted: 02 Sep 2015 11:01 AM PDT

bhbh

bhbhஎகிப்திய நீதிமன்றத்தினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கனேடிய ஊடகவியலாளர் மொஹமட் ஃபாஹ்மி விவகாரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கனடாவுக்கான எகிப்திய தூதுவருடன் புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair விவாதித்துள்ளார்.

நேற்றைய நாள் தொலைபேசி வாயிலான எகிப்திய தூதரருடன் தொடர்பு கொண்டு பேசிய Tom Mulcair, ஊடகவியலாளர் ஃபாஹ்மிக்கு மன்னிப்பு வழங்குமாறு எகிப்திய சனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கான பதிலை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதன் அவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அவரை அங்கிருந்து கனடாவுக்கு அனுப்பி வைக்குமாறு ஊடகவியலாளர் மொஹமட் ஃபாஹ்மியின் குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பிலும் இருநாட்டு முக்கியஸ்தர்களும் விவாதித்துள்ளனர்.

ஊடகவியலாளர் மொஹமட் ஃபாஹ்மியை சிறையில் அடைந்த விவகாரம் தொடர்பில் கனேடியர்கள் மிகுந்த கவலை அடைந்திருப்பதாகவும் எகிப்திய தூதரிடம் புதிய சனநாயக கட்சியின் தலைவர் விபரித்துள்ளார்.bhbh

பயங்கராவதம் தொடர்பிலான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மொஹமட் ஃபாஹ்மிக்கு எகிப்திய நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை மூன்று வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

The post கனேடிய ஊடகவியலாளர் மொஹமட் ஃபாஹ்மி விவகாரம் – கனடாவுக்கான எகிப்திய தூதுவருடன் Tom Mulcair வாதம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது?

Posted: 02 Sep 2015 08:24 AM PDT

uy

uyசெரிமானம், மலம் பிரச்சனை, உடல் பருமன், குமட்டல், வாந்தி, தூக்கமின்மை, இரத்த சோகை, ஆஸ்துமா, கண் எரிச்சல் போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்க கூடியது தேன்.

ஆனால் இந்த தேனை சூடு செய்து சாப்பிடக்கூடாது.

தேனை சூடு செய்யும் போது, உடலுக்கு தேவையற்ற வகையில் இது உருமாறுகிறது. மற்றும் செரிமானம் செய்ய கடினமான பொருளாக தேன் மாறுகிறது என அறிவியல் கூறுகிறது.

தேனை சூடு செய்யும் போது, தேனில் எச்.எம்.எப் (Hydroxymethylfurfuraldehyde), எனப்படம் கெமிக்கல் வெளிப்படுகிறது.

இது விஷத்தன்மை கொண்ட பொருள் ஆகும். மற்றும் புற்று உண்டாக்க கூடிய திறனுடையது.

மற்றும் தேனை சூடு செய்யும் போது, அதில் பெராக்ஸைட்களும் உருவாகின்றன. இது நமது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஓர் பொருள் ஆகும்.uy

தேனை சூடு செய்வதால் செரிமானக் கோளாறு, மற்றும் நச்சுத்தன்மையுள்ள பொருள்கள் உருவாவதுடன். மூலக்கூறுகள் சளி அல்லது அடைப்பு போன்று ஆகிறது.

உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துவிடும் என்பதால் தான் தேனை சூடு செய்து சாப்பிடக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.

பிரெட் போன்ற உணவில் கூட இடையில் தடவி சூடு செய்தல் கூடாது. தேனை அப்படியே சாப்பிடுவது தான் உடல்நலனுக்கு நல்லது.

சுடு நீரில் தாராளமாக தேனை கலந்து சாப்பிடலாம். ஆனால், கலந்த பிறகு மிதமான சூட்டிற்கு வந்த பிறகு உட்கொள்ளவும். கொதிக்கும் நிலையில் அல்லது அதிக சூட்டில் பருகுவதை தவிர்க்கவும்.

The post தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

Posted: 02 Sep 2015 08:17 AM PDT

j

jகோடை காலங்களில் அதிகமானவர்களால் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்கள் விரைவில் உருகிவிடும்.

இதனால் அவற்றினை சுவைப்பவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவர்.

இதனை தவிர்ப்பதற்காக விரைவில் உருகாத ஐஸ்கிரீம்களை தயாரிக்கும் முயற்சியில் ஸ்கொட்லாந்திலுள்ள Edinburgh பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

இவ்வாறு ஐஸ்கிரீம் விரைவில் உருகுவதினை தவிர்ப்பதற்கு BslA எனும் புரதத்தினை சேர்க்க முடியும் என அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் தற்போது ஆய்வு நிலையில் இருக்கும் இவ் வகை ஐஸ்கிரீம்கள் விற்பனைக்கு வருவதற்கு 3 தொடக்கம் 5 வருடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.j

The post ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™