Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Mt. Dennis பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம்

Posted: 18 Sep 2015 07:45 PM PDT

y

yMt. Dennis பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், அதில் ஒருவர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Weston வீதி மற்றும் Barr அவனியூ ஆகியவற்றின் சந்திப்பிற்கு அருகில் அதிகாலை 3 மணிக்கு சற்று முன்னதாக இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு ஆளான நபர் 30 வயதுகளை மதிக்கத் தக்கவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஏற்பட்ட கத்திக்குத்துக் காயம் உயிராபத்தானது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த குறித்த நபரை சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

y

1080 Weston வீதிக்கு அருகில் உள்ள நடைபாதையில் இரத்தம் சிந்தப்பட்டு இருந்ததைக் காணமுடிந்தாகவும், இது தொடர்பில் அந்த இடத்தில் காவல்த்துறையினர் இன்னமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பான சந்தேக நபரின் விபரங்கள் எதுவும் இன்னமும் வெளியிடப்படவில்லை.

The post Mt. Dennis பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Leslieville பகுதி விபத்தில் உந்துருளி ஓட்டுநர் பலி

Posted: 18 Sep 2015 07:40 PM PDT

yu

yuLeslieville பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் TTC தடப் பேருந்தும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அவசர மருத்துவப் பிரிவினர் விபரிக்கையில்,உந்ருளி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு, கிழக்கு Queen வீதி மற்றும் Hiltz அவனியூவிற்கு காலை 6.10 மணியளவில் தாம் வரவழைக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

அதேவேளை விபத்துடன் சம்பந்தப்பட்ட TTC தடப் பேருந்து சம்பவ இடத்தில் தரிந்து நின்றதாகவும், அதன் முன் பகுதியின் இடது பக்கத்தில் சேதம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.yu

இது தொடர்பில் காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், TTC தடப்பேருந்து Queen வீதியின் மேற்குத் தடத்தில் பயணித்துக்கொண்டிருந்தாகவும், அப்போது உந்துருளி Queen வீதியின் கிழக்கு தடமாக வந்திருந்த நிலையில் விபத்து இடம்பெற்றதாகவும் விபரித்துள்ளனர்.

அதாவது உந்துருளி ஓட்டுனர் கிழக்கு Queen வீதியின் கிழக்குத் தட வீதியில் இருந்து இடதுபக்கமாக திரும்ப முயற்சித்திருந்த போது, உந்துருளி ஓட்டுநர் வாகனத்தின் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக அது தடப் பேருந்துடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த உந்துருளி ஓட்டுநர் 20 வயதுகள் மதிக்கத்தக்க நபர் என்றும் கூறப்பட்டுள்ளது.

The post Leslieville பகுதி விபத்தில் உந்துருளி ஓட்டுநர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரிய அகதிகளுக்கான உதவித் திட்டங்களுக்கு 1.4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ள மணிட்டோபா அரசாங்கம்

Posted: 18 Sep 2015 10:44 AM PDT

Premier_Greg_Selinger__-_9182015

Premier_Greg_Selinger__-_9182015சிரிய நாட்டு அகதிகளின் உதவித் திடடங்களுக்காக 1.4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது மணிட்டோபா அரசாங்கம்.

மனிட்டோபா முதல்வர் Greg Selinger இதற்கான அறிவிப்பை நேற்றைய தினம் விடுத்திருந்தார்.

இந்த நிதி வெளிநாட்டில் துன்புறும் சிரிய நாட்டு அகதிகளின் தேவைகளுக்கும், மனிட்டோபாவுக்குள் குடியேற வரும் அகதிகளின் தேவைகளுக்குமாக பயன்படுத்தப்படும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

முதற்கட்டமாக தற்போது அறிவிக்கப்பட்ட நிதியில் இரண்டு இலட்சம் டொலர்களை மத்திய கிழக்கு எல்லைகளில் அல்லலுறும் சிரிய அகதிகளின் தேவைகளுக்காக வழங்கப்படவிருப்பதாகவும், இலாப நோக்கற்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவே அந்த நிதியை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சிய நிதி சிரிய நாட்டு அகதிகள் மனிட்டோபாவுக்குள் வந்ததும் அவர்களின் குடியேற்ற தேவைகளுக்காகவும், சுகாதாரம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்Premier_Greg_Selinger__-_9182015

நாட்டுக்குள் வந்து சேரும் சிரிய அகதிகளுக்கான சுகாதார பராமரிப்புச் செலவுகளை வழங்குவதில்லை என கனேடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அந்த செலவீனத்தினை தாம் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாகவும் மனிட்டோபா முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அகதி மக்களின் பாடசாலை தேவைகள், அவர்கள் தொழில் தேடுவதற்கான உதவிகள், சமூகத்தில் இயல்பாக குடியேறி வாழ்வதற்கான உதவிகளையும் தமது அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post சிரிய அகதிகளுக்கான உதவித் திட்டங்களுக்கு 1.4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ள மணிட்டோபா அரசாங்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப் பட்டோருக்காக கூடுதல் நிதி ஒதுக்குகிறது ஒன்ராறியோ அரசாங்கம்

Posted: 18 Sep 2015 10:31 AM PDT

mn,j

mn,jபாலியல் தாக்குதல்களால் பாதிக்கப் பட்டோரை பராமரிக்கும் நிலையங்களுக்கான நிதியினை ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் அதிகரித்துள்ளது.

ஒன்ராறியோவின் Guelph இல் அமைந்துள்ள பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருக்கான புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் முதல்வர் கத்தலின் வின்னும் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றும் போதே, ஆண்டுக்கு 14.8 மில்லியனாக ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் அதிகாரிக்கவுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோவில் உள்ள 42 பாலியல் பாதிப்புக்குளானோருக்கான புணருத்தாரண நிலையங்களுக்குமான வருடாந்த நிதி உதவியை தமது மாநில அரசாங்கம் அதிகரிக்கவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், அதிஸ்டவசமாக பாலியல் தாக்குதல்களுக்கு தான் ஒருபோதும் இலக்காகவில்லை என தெரிவித்துள்ள அவர், அனைத்து பெண்களும் சந்தித்துள்ளதனைப் போலவே அவ்வாறான தாக்குதல் முனைப்புகளில் இருந்து மயிரிழையில் தப்பித்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.mn,j

வார்த்தைகள் மூலமாகவோ, உடலியல் ரீதியிலோ பாலியல் தாக்குதல்களை சந்திக்காதாவர்கள் அல்லது தாக்குதல் முனைப்புக்களையேனும் சந்திக்காதவர்கள் என தான் எந்தவொரு பெண்ணையும் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், தனது அதிகாரத்திற்கு இயன்ற வரையில் இவ்வாறான பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாடுபடப் போவதாக உறுதியளித்துள்ளார்.

பாதிக்ப்பட்டோருக்கான உதவித் திட்டங்களை அதிகரிப்பதுடன், ஒன்ராறியோவில் பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாகவும் அவர் சூழுரைத்துள்ளார்.

The post பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப் பட்டோருக்காக கூடுதல் நிதி ஒதுக்குகிறது ஒன்ராறியோ அரசாங்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தற்போதய பொருளியல் திட்டமே கனடாவுக்கும் அதன் பொருளதாரத்திற்கும் பாதுகாப்பானது – பிரதமர்

Posted: 18 Sep 2015 10:25 AM PDT

leaders_debate__918

leaders_debate__918தற்போதய பொருளியல் திட்டமே கனடாவுக்கும் அதன் பொருளதாரத்திற்கும் பாதுகாப்பானது என கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பரப்புரைகள் தீவிரம் பெற்று வருவதுடன்,அதன் ஒரு பகுதியாக கட்சித் தலைவர்களுக்க இடையிலான விவாதங்களும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறான விவாதம் ஒன்று கல்கரியில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது.

இந்த நேரடி விவாத நிகழ்வில் கனடாவின் மூன்று பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு நாட்டின் பொருளாதாரம் குறித்த தமது கட்சிகளின் நிலைப்பாடுகளை முன்வைத்து விவாதித்தனர்.

இதன்போதே தற்போது நடப்பில் உள்ள தமது பொருளாதார முறைமையை தற்காத்து பேசிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், மீண்டும் தமது கட்சி ஆட்சியமைத்தால், அடுத்த ஆட்சிக் காலத்திலும் இதே நடைமுறையை பின்னபற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.

வரிகளைக் குறைத்து, மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தினை சமப்படுத்தும் தமது தற்போதய பொருளியல் திட்டமே கனடாவுக்கும் அதன் பொருளதாரத்திற்கும் பாதுகாப்பானது எனவும் அவர் வாதிட்டார்.

லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeau நாட்டின் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பிலான தனது நிலைப்பாடு குறித்து விபரிக்கையில், அதிகரிக்கப்படும் முதலீடு வரவு செலவுத் திட்டத்தின சமப்படுத்துவதில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற போதிலும் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்கு அதுவே சிறந்த தீர்வு என வாதிட்டுள்ளார்.leaders_debate__918

கனேடியர்களுக்கு பொருளாதார ரீதியிலன அரசாங்கத்தின் ஆதரவு தேவை என்ற விடயத்தினை மறந்துவிட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் பேசுவதாகவும் Justin Trudeau குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஓய்வூதியக் கட்டணத்தினையும், வரிக் கட்டணத்தினையும் பிரமர் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்வதாகவும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

இளைப்பாறிய பின்னர் ஓய்வூதியம் திரும்பக் கிடைக்கும் என்ற நிலையில், செலுத்தப்பட்ட வரி திரும்பக் கிடைக்காது என்றும் Justin Trudeau சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை புதிய சனநாயக கட்சித் தலைவர் Tom Mulcair தனது பொருளியல் திட்டம் தொடர்பில் விபரிக்கையில், ஸ்டீபன் ஹார்ப்பரின் மந்தமான பொருளாதார திட்டங்களையும், Justin Trudeauவின் துரித பொருளியல் திட்டங்களையும் தவிர்த்துவிட்டு இரண்டுக்கும இடைப்பட் ஒரு திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

The post தற்போதய பொருளியல் திட்டமே கனடாவுக்கும் அதன் பொருளதாரத்திற்கும் பாதுகாப்பானது – பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தூங்கும் முன் காபி அருந்துபவரா நீங்கள்? காத்திருக்கும் பேராபத்து

Posted: 18 Sep 2015 08:17 AM PDT

j

jஉடலுக்கு உற்சாகம் தரக்கூடிய காபி மற்றும் செயற்கையான உற்சாக பானங்களை மாலை நேரங்களிலேயே அதிகமானவர்கள் விரும்பி அருந்துவார்கள்.

இவற்றில் இயற்கை பானமான காபியில் காணப்படும் காபைன்(caffeine) எனப்படும் பதார்த்தமே உடலுக்கு உற்சாகத்தை தருகின்றது.

தூக்கத்திற்கு செல்லும் முன் 3 மணித்தியாலங்களுக்குள் காபி அருந்துவதனால் வழமையான தூக்கம் 40 நிமிடங்களால் பிற்போடப்பட்டு 24 மணி நேரத்திற்குரிய உயிரியல் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகின்றது என புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.y

இந்த ஆய்வினை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள Laboratory of Molecular Biology அமைப்பு மேற்கொண்டுள்ளது.

The post தூங்கும் முன் காபி அருந்துபவரா நீங்கள்? காத்திருக்கும் பேராபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல்: கிடைக்கும் நன்மைகள் என்ன?

Posted: 18 Sep 2015 08:10 AM PDT

yu

yuநல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன.

நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன.

இதே எண்ணெயை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம்.

மேலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அதில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

நவ நாகரீகம் என்கிற பெயரில் இதையெல்லாமல் மறந்ததன் விளைவால் தான், முடி உதிர்வதோடு, பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது.

வாரமொரு முறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகளின் பட்டியல் இதோ:yu

அடர்த்தியான முடி வளரும்: நல்லெண்ணெய் குளியலின் மூலம், மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.

உடல் சூட்டை தணிக்கும்: நல்லெண்ணெய் கொண்டு, வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும். உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பொலிவான சருமம்: எண்ணெய் குளியல் என்று சொல்லும் போது, தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும்.

பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.

The post வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல்: கிடைக்கும் நன்மைகள் என்ன? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™