Tamil Star |
- மூன்று வருடங்களாக தேடி வந்த சந்தேக நபர் கைது – துப்பு கொடுத்தவருக்கு 25,000 டொலர் சன்மானம்
- Malvern பகுதியில் மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை தேடும் காவல்த்துறையினர்
- நீர் தடாகத்தினுள் காரைச் செலுத்திய 89 வயது மூதாட்டி – பத்திரமாக மீட்கப்பட்டார்
- கட்சிகளுக்கு மக்கள் வழங்கும் ஆதரவு குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள்
- ஆளும் பழமைவாதக் கட்சியில் இருந்து மேலும் ஒரு வேட்பாளர் விலக்கப்பட்டுள்ளார்
- ரொரன்ரோ சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர் ஜெனீவாவில் கைது
- மாங்காயில் இவ்வளவு சத்துக்களா? கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்
- காலையில் இந்த உணவை சாப்பிடுங்கள்: உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்கள்!
| மூன்று வருடங்களாக தேடி வந்த சந்தேக நபர் கைது – துப்பு கொடுத்தவருக்கு 25,000 டொலர் சன்மானம் Posted: 17 Sep 2015 08:57 PM PDT
42 வயதான அந்த சந்தேக நபர் அவர் வசித்து வந்த ரொரன்ரோவின் கிழக்குப் பகுதியில் வைத்து வியாழக்கிழமை காலை 9 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாத வகையில் தாம் அவரைக் கைது செய்தாக கூறியுள்ளனர். அவரின் வசிப்பிடம் தொடர்பில் மொன்றியல் குடியிருப்பாளர் ஒருவர் புதன்கிழமை தமக்கு வழக்கிய தகவலை அடுத்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தங்கியிருந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு பின்னர் கைது ஆணையுடன் வீட்டினுள் நுளைந்து சந்தேக நபரைக் கைது செய்தாக காவல்த்துறையினர் விபரித்துள்ளனர். குறித்த நபர் கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னராக நடத்திய ஊடக மாநாட்டில் குறித்த நபரை கைது செய்வதற்கு உதவுபவர்களுக்கு 25,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த நபரை மொன்றியல் குடியிருப்பாளர் ஒருவர் வழங்கிய தகவலினை அடுத்து கைது செய்யதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டமையானது, மூன்று வருடமாக தாம் எதிகொண்டிருந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மூன்று வருடங்களிற்கு முன்னர் 44 வயதான ayesh Prajapati என்பவர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனம் ஒன்றினால் மோதுண்டு உயிரிழந்திருந்தார். அவரை மோதிய சந்தேக நபரை நிறுத்த முயன்ற போது, அவர் தாம் செலுத்த வேண்டிய எரிபொருள் கட்டணமான 112.85 டொலரையும் செலுத்தாது அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின்னர் வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற குறித்த சந்தேக நபருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மூன்று வருடங்களாக அவர் தேடப்பட்டு வந்திருந்தார். The post மூன்று வருடங்களாக தேடி வந்த சந்தேக நபர் கைது – துப்பு கொடுத்தவருக்கு 25,000 டொலர் சன்மானம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Malvern பகுதியில் மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை தேடும் காவல்த்துறையினர் Posted: 17 Sep 2015 08:39 PM PDT
Finch Avenue East மற்றும் Neilson வீதிப் பகுதியில் இன்று இரவு 10.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனத்தினால் மோதுண்ட ஆண் பாதசாரி ஒருவர் மிகவும் மோசமான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கறுப்பு நிற, புதிய வகை BMW sedan ரக வாகனம் ஒன்றினை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர். மோதியதால் வாகனத்தின் முன் பகுதியில் சேதார அடையாளம் காணப்படும் என நம்பப்படுகிறது. Neilson வீதியின் வடக்கு நோக்கிய தடங்கள் ஊடான போக்குவரத்துகளை தடை செய்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்த்துறையினர், குறித்த அந்த வாகனம் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். The post Malvern பகுதியில் மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை தேடும் காவல்த்துறையினர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீர் தடாகத்தினுள் காரைச் செலுத்திய 89 வயது மூதாட்டி – பத்திரமாக மீட்கப்பட்டார் Posted: 17 Sep 2015 08:35 PM PDT
ரொரன்ரோவின் மேற்குப் பிராந்தியத்தில் வியாழக்கிழமை மதியத்திற்கு சற்று முன்னராக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Eglinton அவனியூ மற்றும் Scarlett வீதிக்கு அருகில் உள்ள Richview வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் அங்கிருந்த இரண்டு வேலிகளை இடித்துச் சென்று நீர் தடாகத்தினுள் விழுந்தாக ரொரன்ரோ தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அப்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து சத்தம் கேட்டதை உணர்ந்த இளம் சோடிகளான இருவர் குறித்த இடத்தை அணுகி காருடன் தடாகத்தில் விழுந்த மூதாட்டியை வெளியில் கொண்டுவர உதவியிருந்தனர். நீர் தடாகத்தினுள் விழுந்த கார் நீரின் அடியில் மூழ்கும் முன்னர் அதில் இருந்த அந்த 89 வயதுடைய மூதாட்டியை அவர்கள் பத்திரமாக மீட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக மூதாட்டிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தாகவும், அவர் சம்பவ இடத்தில் உணர்வுடனும், சீரான சுவாசத்துடனும் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ உதவிக்காக அவர் உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post நீர் தடாகத்தினுள் காரைச் செலுத்திய 89 வயது மூதாட்டி – பத்திரமாக மீட்கப்பட்டார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கட்சிகளுக்கு மக்கள் வழங்கும் ஆதரவு குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் Posted: 17 Sep 2015 11:30 AM PDT
கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கு இன்னமும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியே உள்ள நிலையில் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் 1,200 வாக்காளர்களிடம் தொலைபேசி வாயிலாக கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தலுக்கான பரப்புரைகள் ஆரம்பமாகி ஏழாவது வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மூன்று கட்சிகளுக்கும் இடையேயான மக்கள் ஆதரவு நிலைப்பாடு மூன்று சதவீதத்திற்கும் குறைவான வேறுபாட்டையே கொண்டுள்ளதை அந்த கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது. குறித்த கருத்துக் கணிப்பின் முடிவானது நேற்று வெளியிடப்பட்டிருந்த நிலையில்,புதிய சனநாயக கட்சி 31.6 சதவீத ஆதரவையும், லிபரல் கட்சி 30.1 சதவீத ஆதரவையும், பழமைவாதக் கட்சி 29 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளதை காணமுடிகிறது. அத்துடன் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டோரில் பெரும்பாலானோர், கடந்த காலங்களைப் போலன்றி யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவினை எடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் 16.7 சதவீதமானவர்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்திருக்கவில்லை. எனினும் தற்போது மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில், யாருக்கு வாக்களிப்பது என்பதனை முடிவு செய்யாதோரின் சதவீதம் 9.7 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் யாருக்கு வாக்களிப்பது என்பதனை முடிவு செய்யாதோர் வீதம் 16.7ஆக இருந்த நிலையில், தற்போது அது 9.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. The post கட்சிகளுக்கு மக்கள் வழங்கும் ஆதரவு குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆளும் பழமைவாதக் கட்சியில் இருந்து மேலும் ஒரு வேட்பாளர் விலக்கப்பட்டுள்ளார் Posted: 17 Sep 2015 11:23 AM PDT
நடைபெறவுள்ள கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை இடத்தை அடைவதற்கு கனடியப் பிரதமரும் அவரது சகாக்களும் முயன்றுவரும் நிலையிலேயே குறித்த வேட்பாளர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்னர் அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள் காரணமாகவே அவர் விலக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னராக அவர் பெண்கள், கருக்கலைப்பு, சிறுபான்மையினர் தொடர்பாக பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் ஏனைய வேட்பாளர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பழமைவாதக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனினும் அவர் குறித்த விடயங்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் இதுவரை பெரிதும் கவனிக்கப்படாதவையாகவே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கருத்துக்கணிப்புகளின் படி தற்போது சிறிய அளவு சதவீத வித்தியாசத்தில் பழமைவாதக் கட்சி மூன்றாவது நிலையிலுள்ளது. இந்த நிலையில், முதன்நிலையை பிடிப்பதற்கான முயற்சியாக பல்கலாச்சார சமூக மையங்களில் ஆதரவுப் பேரணிகளை பழமைவாதக் கட்சி நடாத்திவருகிறது. அந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக ரொரன்ரோவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் ஸ்டீபன் ஹாப்பரும், சனிக்கிழமை பாதுகாப்புஅமைச்சர் ஜேசன் கெனியும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. The post ஆளும் பழமைவாதக் கட்சியில் இருந்து மேலும் ஒரு வேட்பாளர் விலக்கப்பட்டுள்ளார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர் ஜெனீவாவில் கைது Posted: 17 Sep 2015 11:06 AM PDT
நேற்று முன்தினம் இந்த கைது இடம்பெற்றதாகவும், 53 வயதான அந்த சந்தேக நபர் ஜெனீவாவில் வாகனம் ஒன்றினைச் ஓட்டிச் சென்றுகொண்டிருந்ததாகவும், குறித்த அந்த நேரத்தில் சிவில் உடையில் சென்ற அதிகாரிகள் அவரைக் கைதுசெய்து தமது தடுப்புக்காவலுக்குள் கொண்டுவந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொரன்ரோவில் இடம்பெற்ற பல்வேறு வங்கிக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் தேடப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. ரொரன்ரோ, யோர்க் பிராந்தியம், பீல் பிராந்தியம், ஹமில்ட்டன், ஒட்டாவா, கல்கரி உள்ளிட்ட இடங்களில் கடந்த ஐந்து வருடங்களாக 22 வங்கிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தார் என்றும், அதனால் இவர்மீது அனைத்துலக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க - பிரஞ்சு குடியுரிமையை பெற்றகுறித்த அந்த சந்தேக நபரின் அடையாளங்களையும், தற்போது அவர் பிரான்சில் வாழ்ந்து வருகின்றார் என்ற விபரங்களையும் கண்டறிந்த யோர்க் பிராந்திய காவல்த்துறையினர், அவர் மீது பிறப்பித்திருந்த கைது ஆணையின் பிரகாரமே அவரின் கைது இடம்பெற்றுள்ளது. குறித்த அந்த நபரை அணுக்கமாக கண்காணித்துவந்த அதிகாரிகள், அவர் சில மணிநேரங்களுக்கு ஜெனீவாவில் உலாவுவார் என்று கிடைத்த தகவலை அடுத்து, உரிய சந்தர்ப்பத்தில் அங்கு வைத்து கைது செய்வதற்கு காத்திருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைது நடவடிக்கை மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும், எந்தவித அசம்பாவிதமும் இன்றி சந்தேக நபரை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடிந்ததாகவும் ஜெனீவா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதாகி தற்போத ஜெனீவாவில் தடுப்புக் காவலில் உள்ள 53 வயதான Jeffrey James Shuman என்பவர் விரைவில் கனடாவுக்கு நாடுகடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. The post ரொரன்ரோ சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர் ஜெனீவாவில் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாங்காயில் இவ்வளவு சத்துக்களா? கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள் Posted: 17 Sep 2015 07:08 AM PDT
மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும். மாங்காயில் உள்ள சத்துக்கள்: மாங்காயில் விட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் மாங்காயில் உள்ள சத்துக்கள் கால்சியம் - 10 மி.கி சுக்ரோஸ் 14.8 மி.கி பைபர் 1.8 கி இரும்பு 0.13 மி.கி மக்னீசியம் 11 மி.கி பொட்டாசியம் 156 மி.கி புரோட்டின் 0.51 மி.கி விட்டமின் ஏ 38 மி.கி விட்டமின் சி 27.7 மி.கி தயமின் 0.058 மி.கி விட்டமின் B12 0.057 மி.கி விட்டமின் பி3 0.548 மி.கி விட்டமின் பி5 0.180 மி.கி
மருத்துவ பயன்கள் 1.மாங்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க நினைப்போர் இதனை சாப்பிடலாம். 2.மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. 3.மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும். 4.கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். 5.சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. 6.தினமும் மாங்காய் சாப்பிட்டடால் ரத்தத்தை சுத்தப்படுத்தி உங்கள் உடலை பலமாக்கும். 7.ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். 8.மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும். 9.சருமத்தை பளபளப்பாக்கி, முதுமை தோற்றத்தை தடுக்கும். மாங்காய் சாதம் முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கிய இஞ்சி, வர மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு துருவிய மாங்காய், உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் அரிசியைப் போட்டு, கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான மாங்காய் சாதம் ரெடி!!! மருத்து பயன்கள் சாப்பிடுவதன் மூலம் புதிய இரத்த அனுக்களை உற்பத்தி செய்யும். மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும், மேலும் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் சாப்பிடுவதற்கு பதிலாக மாங்காய் சாதம் செய்து சாப்பிடலாம். குறிப்பு இதனை, சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
The post மாங்காயில் இவ்வளவு சத்துக்களா? கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| காலையில் இந்த உணவை சாப்பிடுங்கள்: உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்கள்! Posted: 17 Sep 2015 06:58 AM PDT
பழைய சாதத்தில் விட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது. லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன. இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். மேலும், தினமும் காலையில் பழைய சாதத்தினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம். நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழைய சாதத்தினை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள். அதுமட்டுமின்றி எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். பழைய சாதத்தில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். காலையில் பழைய சோற்றினை உட்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம். குறிப்பாக சோர்வு என்ற ஒன்றையே மறந்துவிடலாம். தற்போது பலருக்கும் உள்ள இரத்த அழுத்தத்தை பழைய சோறு கட்டுப்படுத்துமாம். எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பழைய சோற்றினை காலை உணவாக எடுத்து வாருங்கள். இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சனையை பழைய சோறு தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான். எந்த அரிசியில் செய்யலாம்? பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது. ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது. The post காலையில் இந்த உணவை சாப்பிடுங்கள்: உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ரொரன்ரோ மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை காவல்த்தறையினர் மொன்றியலில் வைத்து கைது செய்துள்ளனர்.
சற்று முன்னர் Malvern பகுதியில் பாதசாரி ஒருவரை மோதிவிட்டு சம்பவ இடத்தில் தரித்திருக்காது தப்பிச் சென்ற வாகனம் ஒன்றினை ரொரான்ரோ காவல்த்தறையினர் தேடி வருகின்றனர்.
கார் ஒன்றைச் செலுத்திச் சென்ற மூதாட்டி ஒருவர் நீர் தடாகத்தினுள் விழுந்த நிலையில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதான மூன்று கட்சிகளும் ஓரளவு சரிசமமான மக்கள் ஆதரவினை கொண்டுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன.
ஆளும் பழமைவாதக் கட்சியில் இருந்து மேலும் ஒரு வேட்பாளர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

ரொரன்ரோவில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் சுவீட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுவது போன்று உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

பழைய சாதத்தில் உள்ள சத்துக்கள் குறித்து அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் அவ்வுணவு சிறந்த உணவு என தெரியவந்துள்ளது.