Tamil Star |
- பீல் பிராந்திய காவல்த்துறை அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை
- விபத்தினை அடுத்து யூனியன் நிலையத்தில் தடைபட்டுப் போயிருந்த பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின
- Malvern பகுதியில் வாகனத்தினால் மோதுண்ட பெண் படுகாயம்
- நாட்டின் மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்திற்காக புதிதாக 1.8 பில்லியன் டொலர்கள்
- புதிய சனநாயக கட்சியை சாடுகிறார் லிபரல் கட்சியின் தலைவர்
- நெடுஞ்சாலை 17 விபத்தில் மூவர் உயிரிழப்பு
- ஞாபக சக்தியை அதிகரிக்கும் வசம்பு
- உயிரைக் குடிக்குமா வாழைப்பழம்?
| பீல் பிராந்திய காவல்த்துறை அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை Posted: 14 Sep 2015 09:10 PM PDT
விபத்துகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தவறான அறிக்கைகளை தயாரித்து வழங்கியமை தொடர்பில் அவர் மீது சுமத்தப்பட்ட 42 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. Carlton Watson எனப்படும் அந்த காவல்த்துறை அதிகாரி மீது சுமத்தப்பட்ட 45 குற்றச்சாட்டுகளை அடுத்து கடந்த ஏழு மாத காலமாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளின் முடிவு இன்று காலையில் பிரம்டன் நீதிமன்றில் வாசிக்கப்பட்டது. இந்த நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து கருத்து வெளியிட்ட பீல் பிராந்திய காவல்த்துறை தலைமை அதிகாரி Jennifer Evans, தண்டணை பெற்றுள்ள காவல்த்துறை உத்தியோகத்தர் ஊதியம் அற்ற வகையில் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். The post பீல் பிராந்திய காவல்த்துறை அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| விபத்தினை அடுத்து யூனியன் நிலையத்தில் தடைபட்டுப் போயிருந்த பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின Posted: 14 Sep 2015 09:05 PM PDT
பயண வழித்தடங்களான 31 (Georgetown), 61 (Richmond Hill), 63 (King City), 65 (Newmarket), and 71 (Stouffville) ஆகியவற்றுக்கான சேவைகள் மீள ஆரம்பமாகியுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அறிவிப்பு பலகையில் பயண விபரங்கள் தற்போதைக்கு காட்சிப்படுத்தப்படாமையால் பேரூந்துகளை சரிபார்த்து ஏறிக் கொள்ளுமாறும் சந்தேகம் இருந்தால் அங்குள்ள GO நிறுவன பணியாளர்களிடம் ஆலோசனை கோருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அனேகனமா வழித்தடங்கள் ஊடான போக்குவரத்துக்ள ஆரம்பமாகியுள்ள போதிலும், இன்னமும் இரண்டு வழித்தடங்கள் ஊடான போக்குவரத்துக்ள தடைப்பட்டு போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. The post விபத்தினை அடுத்து யூனியன் நிலையத்தில் தடைபட்டுப் போயிருந்த பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Malvern பகுதியில் வாகனத்தினால் மோதுண்ட பெண் படுகாயம் Posted: 14 Sep 2015 08:32 PM PDT
மார்கம் வீதி மற்றும் Nugget அவனியூ பகுதியில் இன்று காலை 6.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. விபத்தில் படுகாயமடைந்தவர் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் என ரொரன்ரோ அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் அதன் சாரதி தொடர்பிலான விபரங்கள், குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்தாக விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை. The post Malvern பகுதியில் வாகனத்தினால் மோதுண்ட பெண் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாட்டின் மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்திற்காக புதிதாக 1.8 பில்லியன் டொலர்கள் Posted: 14 Sep 2015 09:13 AM PDT
இந்த வாரம் வன்கூவரில் தனது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ள Tom Mulcair, அங்கு இடம்பெற்ற பரப்புரை கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மாநில அரங்கங்கள் முதியோரின் ஆரோக்கிய திட்டங்களை மேம்படுத்தும் வகையில் நான்கு வருடங்களுக்கு 1.8 பில்லியன் டொலர் தமது அரசாங்கத்தினால் செலவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் மேலும் சுமார் 41,000 முதியோருக்கான பராமரிப்பு தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும், மருத்துவ பராமரிப்புகளுக்காக மேலும் 5,000 படுக்கைகளை கொண்ட வசதி வாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் விபரித்துள்ளார். தற்போது மருத்துவமனைகளின் படுக்கைகளும் சிகிச்சை பிரிவுகளும் வயொதிபர்களால் நிரம்பியுள்ள நிலையில், அவ்வாறானவர்களை முதியோர் தங்ககங்களில் பராமரிப்பதன் மூலம் அவ்வாறான நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். The post நாட்டின் மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்திற்காக புதிதாக 1.8 பில்லியன் டொலர்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய சனநாயக கட்சியை சாடுகிறார் லிபரல் கட்சியின் தலைவர் Posted: 14 Sep 2015 08:58 AM PDT
நேற்றைய நாள் ஹமில்ட்டனில் இடம்பெற்ற தேர்தல் பேரணியில், மு்னனாள் பிரதமர் ஜோன் கார்டியனுடன் (Jean Chretien) கலந்துகொண்டு உரையாற்றும் போதே Justin Trudeau இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய சனநாயக கட்சி ஆட்சி அமைக்குமாக இருந்தால் அது கியூபெக்கின் பிரிவினைக்கு உதவிகரமாக அமைந்துவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். பிரிவினையில் இருந்து நாட்டை பாதுகாக்கும், பொது வாக்கெடுப்பில் தெளிவான அறுதிப் பெரும்பான்மையை வலியுறுத்தும் சட்டத்தினை புதிய சனநாயக கட்சி அரசாங்கம் நீக்கிவிடும் எனவும், அவ்வாறான நடவடிக்கை பிரிவினைவாதத்திற்கு உதவிகரமாக அமைந்துவிடும் எனவும் அவர் விபரித்துள்ளார். கியூபெக்கின் பிரிவினை தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டால் சாதாரண பெரும்பான்மை, அதாவது 50 சதவீதததிற்கும் அதிகமான ஒரு வாக்கு கிடைத்தாலே பிரிவினையை அனுமதிக்க முடியும் என்ற நிலைப்பாட்டினையே புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair வெளிப்படுத்தி வருவதாகவும் Justin Trudeau தெரிவித்துள்ளார். The post புதிய சனநாயக கட்சியை சாடுகிறார் லிபரல் கட்சியின் தலைவர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நெடுஞ்சாலை 17 விபத்தில் மூவர் உயிரிழப்பு Posted: 14 Sep 2015 08:48 AM PDT
Dryden ற்கு கிழக்கே இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் இந்த விபத்து சம்பவித்ததாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான ஒரு வாகனத்தில் இருந்த மூவரும் உயிரிழந்து விட்டதாகவும், மற்றைய வாகனத்தில் இருந்த இரண்டு பேர் காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் ஆரம்பித்துள்ள போதிலும், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் தொடர்பிலான பெயர் விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்த விபத்தினை தொடர்ந்து நெடுஞ்சாலை 17 இல் விபத்து இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துக்ள சுமார் ஆறு மணி நேரத்திற்கு தடைப்பட்டு போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. The post நெடுஞ்சாலை 17 விபத்தில் மூவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஞாபக சக்தியை அதிகரிக்கும் வசம்பு Posted: 14 Sep 2015 08:13 AM PDT
வசம்புவுக்கு 'பிள்ளை வளர்த்தி' என்ற பெயர் உண்டு, இது பசியின்மையை போக்க கூடியது. வசம்புவை விளக்கெண்ணெயில் துவைத்து, விளக்கில் கரித்து, பொடியாக்கி பாலில் இழைத்து குழந்தையின் நாவில் தடவும் வழக்கம் இருந்து வருகிறது. இவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி சரியாகும். ஞாபக சக்தி கூடும். நரம்பு மண்டலங்களை தூண்டக் கூடிய வசம்பானது வலியை போக்கவல்லது, பதட்டத்தை தணிக்க கூடியது. இதய ஓட்டத்தை சீர் செய்யும். சிறுநீரக கோளாறை போக்கும், ரத்தத்தை சுத்தப்படும். வசம்பை பயன்படுத்தி இருமல், சளி, அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வசம்பு பொடி, அரை ஸ்பூன் அதிமதுர பொடி, ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டுடன், தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தேனீராக பருகலாம். இது வாயு பிரச்னையை சரிசெய்யும். குடலில் உள்ள புண்களை ஆற்றும், இருமலை தணிக்கிறது, சளியை கரைக்க கூடியது. வயிற்று போக்கு இருந்தால் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன், அரை முதல் ஒரு கிராம் வசம்பு பொடி, சம அளவு சுக்கு பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதை வடிகட்டிய பின் காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை குடிப்பதன் மூலம் வாயு பிரச்னை சரியாகும். The post ஞாபக சக்தியை அதிகரிக்கும் வசம்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உயிரைக் குடிக்குமா வாழைப்பழம்? Posted: 14 Sep 2015 07:25 AM PDT
வாழைப்பழங்களில் உள்ள 'பொட்டாசியம்' இதயம், சிறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானது தான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், ஒரு நாளைக்கு ஆறு வாழைப்பழம் மட்டுமே உண்ணலாம் என்றும், ஏழாவது பழம் உயிருக்கே ஆபத்தாகும் என பலர் நம்புகின்றனர். ஒரேநேரத்தில் 400 பழங்களை உண்டால் மட்டுமே, அதாவது அவற்றிலிருக்கும் பொட்டாசிய சத்து நேடியாக சிறுநீரகத்தை தாக்கினால் மட்டுமே உயிரிழப்பு ஏற்படும். ஆனால், அதை அடைவதற்கு முன் போகும் வழியிலேயே, குடல் பாதி பொட்டாசியத்தை உறிஞ்சிவிடும். அதனால் 400 பழங்களை ஒன்றாய் உட்கொண்டாலும் உயிரிழப்பு ஏற்படாது என லண்டனில் உள்ள கிங் நிலையத்தின் கேத்தரின் கொலின்ஸ் என்னும் டயட்டிஷன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சிலர் வாழைப்பழத்தால் கதிரியக்க விஷம் பரவுவதாக கருதுகின்றனர், நமக்குள்ளும் கதிரியக்கம் இருக்கிறது. கதிரியக்க விஷம் பரவ ஒரு வேளைக்கு பத்து லட்சம் வாழைப்பழங்களை உண்ண வேண்டும். ஒரு நாளில் 274 வாழைப்பழங்களை தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு உட்கொண்டுவந்தால் மட்டுமே கதிரியக்கத்துக்கான அறிகுறிகள் தெரியவரும் என தெரிவித்துள்ளார். The post உயிரைக் குடிக்குமா வாழைப்பழம்? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மோசடி வழக்கு ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பீல் பிராந்திய காவல்த்துறை அதிகாரி ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றினை அடுத்து யூனியன் தொடரூந்து நிலையத்தில் இருந்து செல்லும் GO பேரூந்துகள், மற்றும் யூனியன் நிலையத்திற்கு வரும் பேரூந்து சேவைகள் தடைப்பட்டு போயிருந்த போதிலும், அவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை Malvern பகுதியில் வாகனத்தினால் மோதுண்ட பெண் ஒருவர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமது அரசாங்கம் வெற்றி பெறுமாக இருந்தால், நாட்டின் மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்திற்காக புதிதாக 1.8 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என புதய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair உறுதியளித்துள்ளார்.




பல்வேறு மருத்துவ குணங்களை உடைய வசம்பு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்க கூடியது.


ஒருநாளைக்கு அதிகளவில் வாழைப்பழத்தை உட்கொண்டால் ஆபத்தாகி விடும் என்பதால் பலரும் உண்ணத் தயங்குகின்றனர்.