Tamil News | Online Tamil News |
- இந்திய வி.ஐ.பி.,க்களுக்கு அமெரிக்காவில் சலுகை
- நிலக்கரி ஊழல் வழக்கு: மன்மோகனுக்கு தற்காலிக நிம்மதி
- கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பால் ஆந்திரா முன்னேறும்: முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டங்களால் வளர்ச்சி உறுதி
- அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அதிகார பரவல்: ரணில்
- கர்நாடகாவுக்கு மின்சாரம்: தமிழகம் கைவிரிப்பு?
- அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்: கட்டாயமாக்க சட்டத்தை திருத்த தமிழக அரசு முடிவு
- '100 வயசு வாழ விருப்பமில்லே... ஆனால், வாழ்வோம்!'
- 'டாஸ் மாக்' போலீஸ்: விஜயகாந்த் விமர்சனம்
- அண்ணா நூலகத்தில் வசதிகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் 'குட்டு'
- கோஹினூர் வைரத்தை ஒப்படைக்க இந்திய வம்சாவளி எம்.பி., கோரிக்கை
| இந்திய வி.ஐ.பி.,க்களுக்கு அமெரிக்காவில் சலுகை Posted: புதுடில்லி: நம் நாட்டின் வி.ஐ.பி.,க்கள், அமெரிக்க விமான நிலையங்களில், பாதுகாப்பு சோதனையில்லாமல் செல்வதற்காக, 2,000 வி.ஐ.பி.,கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இங்கிருந்து, அமெரிக்கா செல்லும் வி.ஐ.பி.,கள், அந்நாட்டு விமான நிலையங்களில், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, பாதுகாப்பு சோதனைகளை முடிக்க வேண்டி உள்ளது. சிலரை, சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்துவதும், நாள் முழுக்க அவர்களை காத்திருக்க வைப்பதும் நடக்கிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் நடிகர் ஷாரூக்கான் ஆகியோரிடம், அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் நடத்திய ... |
| நிலக்கரி ஊழல் வழக்கு: மன்மோகனுக்கு தற்காலிக நிம்மதி Posted: புதுடில்லி: காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டுள்ள முன்ஜாமின், அடுத்த வாரம் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணையை, தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளதால், அவரின் முன்ஜாமினும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நிலக்கரி துறையையும் தன் வசம் வைத்திருந்தார். அப்போது, 'பொதுத்துறை நிலக்கரி நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில், நிலக்கரி சுரங்க உரிமங்களை தனியார்களுக்கு வழங்கி, முறைகேடு செய்தார்' ... |
| Posted: நதிகள் இணைப்பு குறித்து, நாடு முழுவதும், பல ஆண்டுகளாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்,சத்தமே இல்லாமல், ஆந்திர மாநில அரசு, பொங்கிப் பெருகும் கோதாவரி நதியையும், கிருஷ்ணா நதியையும், இன்று இணைக்க உள்ளது. இதனால், அம்மாநிலத்தில் விவசாய விளைச்சல் அதிகரிக்கும்; மின் உற்பத்தி அதிகரித்து, தொழில்வளங்களும் பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன்மூலம், தமிழகத்திற்கும் தண்ணீர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. நாட்டிலேயே முதன்முறையாக, சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு, நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. கோதாவரி- - கிருஷ்ணா ஆறுகள் ... |
| அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அதிகார பரவல்: ரணில் Posted: புதுடில்லி:''தமிழர்களுக்கு அதிகார பரவல், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்,'' என, இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார். இலங்கை அதிபராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற மைத்ரிபால சிறிசேன, தன் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார். அதுபோல, கடந்த மாதம் பிரதமராக தேர்வாகியுள்ள, ரணில் விக்ரமசிங்கேயும், தன் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். டில்லியில் நேற்று அவர், பிரதமர் மோடியை, அதிகாரிகளுடனும், தனித்தும் சந்தித்து, சர்வதேச ... |
| கர்நாடகாவுக்கு மின்சாரம்: தமிழகம் கைவிரிப்பு? Posted: காற்றாலை சீசன் முடிவடைவதால், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க வாய்ப்பில்லை என, தெரிய வந்துள்ளது. 2,500 மெகாவாட்: தமிழகத்தில், கடந்த, 2008ல், மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்தடை அமல்படுத்தப்பட்டது. வல்லுார், வட சென்னை, மேட்டூர் ஆகிய புதிய மின் நிலையங்களில் இருந்து கூடுதல் மின்சாரம் கிடைத்ததால், தமிழக அரசு மின்தடையை விலக்கியது.தமிழகத்தில், 7,470 மெகாவாட் திறன் கொண்ட, காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றிலிருந்து, மே முதல் செப்., வரை, தினமும் சராசரியாக, 2,500 மெகாவாட் மின்சாரம் ... |
| Posted: சென்னை: 'தொகுப்பு மற்றும் பல மாடி கட்டடங்களில் சூரிய மின் சக்தி அமைப்பை கட்டாயமாக்க, சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன் மூலம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்தி கட்டமைப்பு கட்டாயம் என்ற நிலை உருவாகி உள்ளது. சட்டசபையில் நேற்று, வீட்டு வசதித் துறை தொடர்பாக, 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:துரித நகர வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை முறை மாற்றத்தினால், தனி நபர் உபயோகப்படுத்தும் மின்சக்தி நுகர்வு அதிகமாகி வருகிறது. இதனால், மின்சக்தி பாதுகாப்பு ... |
| '100 வயசு வாழ விருப்பமில்லே... ஆனால், வாழ்வோம்!' Posted: சென்னை : ''நானும், அன்பழகனும், 90 வயதை கடந்து விட்டோம். நுாறு வயது வரை வாழ விரும்பினால், அது உங்களையும், எங்களையும் ஏமாற்றுவதாக இருக்கும். எனினும், நானும், அன்பழகனும் இன்னும், 10, 15 ஆண்டுகள் வாழ்வோம். அதுவரை, தி.மு.க.,வை இளைஞர்கள், மாணவர்கள், தொண்டர்கள் கட்டிக் காக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.தி.மு.க., முப்பெரும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் வரவேற்றார். விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மேலும் பேசியதாவது:சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சி, மாயா ஜாலங்கள் காட்டி மீண்டும் ... |
| 'டாஸ் மாக்' போலீஸ்: விஜயகாந்த் விமர்சனம் Posted: குன்னுார்: "ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் நேர்மையான முறையில் நடத்தும் விசாரணைக்கு, தமிழக அரசு மதிப்பளிப்பதில்லை," என, விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.நீலகிரி மாவட்டம், குன்னுாரில், தே.மு.தி.க., சார்பில் பழங்குடியினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம், நேற்று மாலை நடந்தது. கட்சியின் மாநில மகளிரணி தலைவி பிரேமலதா பேசியதாவது:நீலகிரியில் தேயிலைக்கு விலை இல்லை. தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. விதிகளை மீறி பல கட்டடங்கள் கட்டப்பட்டும், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும்கட்சியினர்தான் முக்கிய ... |
| அண்ணா நூலகத்தில் வசதிகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் 'குட்டு' Posted: சென்னை: 'சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வசதிகளை நிறைவேற்ற, ஐந்தாண்டு திட்டம் தேவையா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.சென்னை, கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை, நுங்கம்பாக்கத்துக்கு இடமாற்றம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர் மனோன்மணி, வழக்கு தொடுத்தார். நுாலகத்தை இடமாற்றம் செய்ய, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.அதைத்தொடர்ந்து, 'நுாலகத்தை சரிவர பராமரிக்கவில்லை; நுால்கள், இதழ்கள் வாங்குவது குறைக்கப்பட்டு விட்டது; படிப்படியாக மூடுவதற்கு ... |
| கோஹினூர் வைரத்தை ஒப்படைக்க இந்திய வம்சாவளி எம்.பி., கோரிக்கை Posted: லண்டன் : பிரிட்டன் அரசிடம் உள்ள, உலக புகழ் பெற்ற, கோஹினுார் வைரத்தை, இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி., கோரியுள்ளார்.பல நுாறு ஆண்டுகளுக்கு முன், இந்திய கோவில் ஒன்றில், அம்மனின் கண்களில் பொருத்தப்பட்டிருந்த கோஹினுார் வைரம், அப்போது ஆட்சி புரிந்த, காகதீய ராஜவம்சத்தினருக்கு சொந்தமானது. அதன் பின், அந்த வைரம் பல ஆக்கிரமிப்பாளர்களின் கை மாறி, இறுதியில் ஆங்கிலேயர்கள் கைக்கு வந்தது. தற்போது, பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் மணி மகுடத்தை கோஹினுார் வைரம் அலங்கரிக்கிறது. இந்த வைரத்தை திரும்ப ஒப்படைக்கும்படி, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 16,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |