Tamil News | Online Tamil News |
- கீதா டில்லியில் அடைக்கலம்?
- 'சண்டைக்கு வந்தா விட மாட்டோம்': ராஜ்நாத் எச்சரிக்கை
- ரூ.300 கோடி பாக்கி கிடைக்குமா என பால் உற்பத்தியாளர்கள் ஏக்கம்: தினமும் 5 லட்சம் லிட்டர் வீணாவதையும் தடுப்பாரா முதல்வர்?
- அமைச்சர்களுக்கு பங்களா ரூ.4.84 கோடியில் ஏற்பாடு
- குவாரியில் நரபலி? 4 எலும்புக்கூடுகள் தோண்டி எடுப்பு
- 'பேஸ்புக்' தலைமையகம் செல்கிறார் மோடி
- ரஜினியின் 'நீதிமன்ற' பேச்சுக்கு கருணாநிதி அமோக வரவேற்பு
- சகாயத்திற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை : தர்மபுரியில் விஜயகாந்த் குற்றச்சாட்டு
- இலங்கை போர்க்குற்றம்: ஐ.நா., இன்று விவாதம்
- பீகாரில் பா.ஜ., கூட்டணியில் குழப்பம்: கூடுதல் 'சீட்' கேட்டு கட்சிகள் அடம்
| Posted: புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள, மாற்றுத்திறனாளியான இந்தியப் பெண் கீதாவிற்கு, டில்லியில், அடைக்கலம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் செய்துள்ளது. இதுகுறித்து, இந்த அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மையத்தில், கீதா, 23, தங்க வைக்கப்படுவார். காது கேளாத, வாய் பேச இயலாத கீதாவிற்கு, சிகிச்சை அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி கோரி, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ... |
| 'சண்டைக்கு வந்தா விட மாட்டோம்': ராஜ்நாத் எச்சரிக்கை Posted: போபால்: ''நாம் யாருடனும் வம்பு சண்டைக்கு போக மாட்டோம். எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் நம் விருப்பம். அதற்காக, தொடர்ந்து நம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்; பதில் தாக்குதல் நடத்துவோம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேசத்தில் நேற்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், தலைநகர் போபாலில் கருத்தரங்கு ஒன்றை துவக்கி பேசியதாவது:டில்லியில் சமீபத்தில் நடந்த, இந்தியா - பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை ... |
| Posted: ஆவின் நிறுவனத்தில், கையாளும் திறன் குறைவு, விற்பனையை மேம்படுத்த அக்கறை காட்டாததாலும், தினமும், 5 லட்சம் லிட்டர் பால் வீணாகிறது. 300 கோடி ரூபாய் வரை பாக்கி வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளும் போராட்டத்தில் குதித்து வரும் நிலையில், சிக்கலுக்கு தீர்வு காண, அரசு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், விவசாயத்திற்கு அடுத்ததாக பால் பண்ணைத் தொழில், கிராமப்புற மக்களுக்கு, தினமும் நிலையான வருமானத்தை தருகிறது. பால் உற்பத்தியை பெருக்க, தமிழக அரசு, இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், 40 லட்சம் கறவை ... |
| அமைச்சர்களுக்கு பங்களா ரூ.4.84 கோடியில் ஏற்பாடு Posted: சென்னை, அடையாறில், அமைச்சர்களுக்காக நான்கு புதிய பங்களாக்கள், 4.84 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளன. சென்னை, அடையாறு கிரின்வேஸ் சாலையில், 80 அரசு பங்களாக்கள் உள்ளன; இவற்றில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் வசிக்கின்றனர். நான்கு ஆணைய அலுவலகங்களும் இங்கு இயங்குகின்றன. 15 ஆண்டுகளாக, இப்பகுதியில், அமைச்சர்களுக்காக, புதிதாக எந்த கட்டடமும் கட்டப்படவில்லை. தற்போதைய பங்களாக்களில், வாஸ்துப்படி, அவ்வப்போது, மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், நான்கு அமைச்சர்களுக்காக, புதிதாக பங்களாக்கள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது; இதற்காக, 4.84 கோடி ரூபாய் ... |
| குவாரியில் நரபலி? 4 எலும்புக்கூடுகள் தோண்டி எடுப்பு Posted: மேலுார்: மதுரை மாவட்டம், மேலுார் கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுத்து புதைக்கப்பட்டதாக கருதப்படும், இ.மலம்பட்டி மயானத்தில், நான்கு பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன; அவற்றை, தடயவியல் சோதனைக்கு அனுப்ப, கிரானைட் முறைகேடு விசாரணை அதிகாரி சகாயம் உத்தரவிட்டார்.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மதுரை கிரானைட் முறைகேடுகள் குறித்த இறுதிகட்ட விசாரணையில் சகாயம் ஈடுபட்டுள்ளார்.அவரிடம், சேவற்கொடியோன் என்ற பிரபு பி.ஆர்.பி., கிரானைட் நிறுவத்தினர் நரபலி கொடுத்திருப்பதாக சகாயத்திடம் குற்றம் சாட்டினார். சேவற்கொடியோன் கூறியதாவது:- 1999 முதல் 2003 ... |
| 'பேஸ்புக்' தலைமையகம் செல்கிறார் மோடி Posted: நியூயார்க்: பிரதமர் மோடி, அமெரிக்காவில், 'பேஸ்புக்' நிறுவனத் தின் தலைமை அலுவலகத்தை பார்வையிட உள்ளார். இதுகுறித்து, 'பேஸ்புக்' நிறுவனர், மார்க் ஜுக்கர்பர்க், வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: |
| ரஜினியின் 'நீதிமன்ற' பேச்சுக்கு கருணாநிதி அமோக வரவேற்பு Posted: சென்னை: தி.மு.க., தலைவர் கருணநிதியின் நேற்றைய அறிக்கை:முன்னாள் நீதிபதி கைலாசத்தின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்ற விழாவில், நடிகர் ரஜினி பேசும் போது, 'நீதிமன்றங்களை நம்பித்தான் நாடு உள்ளது; நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது' என, பேசியுள்ளார்.அவருடைய ஆழமான, அர்த்தச்செறிவான பேச்சு, இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. சமீப காலமாக, நீதிமன்றங்களை பற்றியும், நீதிபதிகளை பற்றியும் எதிர்மறை கருத்துகள் வரத் துவங்கியுள்ளன.எவ்வளவு கடுமையான வழக்குகளாக இருந்தாலும், ... |
| சகாயத்திற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை : தர்மபுரியில் விஜயகாந்த் குற்றச்சாட்டு Posted: தர்மபுரி: ""கிரானைட் முறைகேடு குறித்து, விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு, அரசு ஒத்துழைக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தலைமையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி, தே.மு.தி.க.,வில் இணையும் நிகழ்ச்சி, தர்மபுரியில் நடந்தது. மாவட்ட செயலாளர் டாக்டர் இளங்கோவன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பாஸ்கர், கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., மொரப்பூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் பொன்னுசாமி ... |
| இலங்கை போர்க்குற்றம்: ஐ.நா., இன்று விவாதம் Posted: ஜெனீவா : இலங்கையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தினருடன், 2009ல் நடந்த இறுதிப் போரின்போது, நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் விவகாரம் குறித்து, ஜெனீவாவில், இன்று துவங்கும், ஐ.நா., மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மனித உரிமை மீறல் : இலங்கையில், நடந்த இறுதிப் போரின்போது, எண்ணற்ற மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா., மனித உரிமைக் கமிஷன் ஆய்வு செய்து, விசாரணை அறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கை, இலங்கை அரசிடம், அதன் கருத்தை கேட்டு பெறுவதற்காக ... |
| பீகாரில் பா.ஜ., கூட்டணியில் குழப்பம்: கூடுதல் 'சீட்' கேட்டு கட்சிகள் அடம் Posted: பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ஜிதன்ராம் மஞ்சி, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரின் கட்சிகள், கூடுதல் தொகுதிகள் கேட்டு, போர்க்கொடி துாக்கியுள்ளன. இதனால், தொகுதி பங்கீட்டில் குழப்பம் நீடிக்கிறது. பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, அக்டோபர், 12ம் தேதியில் இருந்து, ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது; இதில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 14,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |