Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அரவிந்த்சாமியின் நடிப்பை ரசித்த ஜெயம்ரவி!

Posted:

தனி ஒருவன் படத்தை முதன்முதலாக சொந்த கதையில் இயக்கி வெற்றி பெற்றிருக்கும் மோகன்ராஜா, இதுதான் திரையுலகில் தான் சந்தித்த முதல் வெற்றி என்று பூரித்துப்போயிருக்கிறார். அதோடு, இத்தனை நாளும் என் வெற்றியைத்தான் கொண்டாடி வந்தார் என் அண்ணன். இப்போதுதான் அவரது முதல் வெற்றியை அவர் கொண்டாடுகிறார் என்று ஜெயம்ரவியும் ...

தற்கொலை வதந்தியில் சிக்கிய சீரியல் நடிகர் தாடி பாலாஜி!

Posted:

பல சின்னத்திரை சீரியல்கள் காமெடியனாக நடித்து வருபவர் தாடி பாலாஜி. இவர் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வருங்கி வருகிறார். அதோடு, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் பங்கேற்று வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு பாலாஜி யாதவ் என்கிற இயக்குனர் தற்கொலை செய்து கொண்டபோது, இந்த தாடி பாலாஜிதான் தற்கொலை செய்து ...

நான் அவனில்லை பாணியில் மீண்டும் ஜீவன்!

Posted:

கெளதம்மேனன் இயக்கிய காக்கா காக்க படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஜீவன். அதையடுத்து சுசிகணேசன் இயக்கிய திருட்டுப்பயலே படத்தில் ஹீரோவான அவர், நான் அவனில்லை. மச்சக்காரன், தோட்டா, நான் அவனில்லை-2 என பல படங்களில் நடித்தார். பின்னர் கவிதாலயா தயாரிப்பில் அவர் நடித்த கிருஷ்ணலீலை படம் வெளிவர முடியாமல் சிக்கிக்கொண்டது. விளைவு, அந்த ...

தாதாவாகிறார் அபிஷேக்!

Posted:

அபிஷேக் பச்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ''ஆல் இஸ் வெல்''. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அபிஷேக் அடுத்தப்படியாக சஞ்சய் குப்தா இயக்கும் புதிய படத்தில் நடிக்க போகிறார். இப்படத்தில் அபிஷேக் பச்சன், தாதாவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சஞ்சய் குப்தா, ஐஸ்வர்யா ராயை வைத்து ஜாஸ்பா ...

ரசிகர்களை ஏமாற்றிய 'புலி புரோமோ சாங்'

Posted:

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடித்துள்ள 'புலி' படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. அதற்கடுத்து 'புலி' படத்தின் டிரைலரை மூன்று வாரங்களுக்கு முன் வெளியிட்டார்கள். 'புலி' பாடல்களுக்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ 'புலி' டிரைலரை ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள். யு டியூபில் ...

மீண்டும் மும்பைக்கு பயணிக்கும் துல்கர் சல்மான்..!

Posted:

துல்கர் சல்மானுக்கு அமையும் கதைகள் ஸாரி.. கதைக்களங்கள் பெரும்பாலும் கேரளாவை விட்டு வெளியே அமைவது வாடிக்கையாகவே ஆகிவிட்டதோ என்றே நினைக்க தோன்றுகிறது. பின்னே.. கடந்த வருடம் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படத்திலும், இந்த வருடம் வெளியான '100 டேய்ஸ் ஆப் லவ்' படத்திலும் பெங்களூர்வாசியாக நடித்திருந்தார். கதைக்களமும் பெங்களூர் தான். ...

“ஹீரோக்களிடம் தேதி கேட்டு அலையாதீர்கள்” - இயக்குனருக்கு மம்முட்டி அட்வைஸ்..!

Posted:

கேரள சினிமாவின் பாக்யராஜ் என்று பாராட்டப்படும் அளவுக்கு குடும்பத்தை மையமாக வைத்து படங்களை இயக்கும் இயக்குனர் என பெயர் பெற்றவர்தான் மலையாள இயக்குனர் பாலச்சந்திர மேனன்.. கடைசியாக இவர் படம் இயக்கியது 2008ல் தான். படத்தின் பெயர் 'டா இங்கோட்டு நோக்கியே'.. அதாவது 'டே இந்தப்பக்கம் பாருடா' என்பதுதான் அர்த்தம்.. ஆனால் படத்தையும் சரி.. ...

அசினுக்கு 'ஆறு கோடி' காதல் பரிசு...?

Posted:

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு காலத்தில், அதாவது, சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்தவர் அசின். தமிழிலும், தெலுங்கிலும் நல்ல மார்க்கெட்டுன் இருந்தவர் ஹிந்தியிலும் நடிக்க ஆசைப்பட்டு மும்பைக்குச் சென்றார். அவர் நடித்த 'கஜினி' படம் மட்டுமே சூப்பர் ஹிட்டாகியது. மற்ற படங்கள் குறிப்பிடத்தக்க ...

பணக்கார பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி: இயக்குனர் சசி சொல்கிறார்

Posted:

555 படத்துக்கு பிறகு சசி இயக்கும் படம் பிச்சைக்காரன். விஜய் ஆண்டனி தயாரித்து, இசை அமைத்து நடிக்கிறார். சேத்னா டைட்டன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு அறிமுகமாகிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. பிச்சைக்காரன் பற்றி இயக்குனர் சசி கூறியிருப்பதாவது:

உலகில் பிச்சைக்காரர்கள் இல்லாத நாடே கிடையாது. அவர்கள் ...

விழித்திரு படத்தில் 4 கதைகள்

Posted:

அவள் பெயர் தமிழரசி படத்துக்கு பிறகு எழுத்தாளர் மீரா கதிரவன் இயக்கும் படம் விழித்திரு. அவரே தயாரிப்பாளராகவும் இருக்கிறார். விதார்த், வெங்கட்பிரபு, கிருஷ்ணா, எஸ்.பி.பி.சரண், கிருஷ்ணா, தம்பி ராமய்யா, ராகுல், தன்ஷிகா, எரிக்கா பெர்ணாண்டஸ், அபிநயா, நாகேந்திரபாபு, பேபி சாரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சத்யன் மகாலிங்கம் இசை ...

தெலுங்கு சினிமாவின் மற்றுமொரு பிரமாண்டம் காஞ்சே

Posted:

தெலுங்கு சினிமா இப்போது ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு பிரமாண்ட சினிமாக்களை தயாரிக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு ஷங்கர்தான் இருக்கிறார். தெலுங்கில் நான்கைந்து பேர் இருக்கிறார்கள். 250 கோடியில் தயாரிக்கப்பட்ட பாகுபாலி 600 கோடி வசூலித்து புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. அடுத்து அதன் இரண்டாம் பாகம் வர இருக்கிறது. 150 கோடியில் தயாரிக்ககப்பட்ட ...

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் கூரியர்பாய் கதை

Posted:

கவுதம் மேனன் தயாரிப்பில், பிரபுதேவாவின் உதவியாளர் பிரேம் சாய் இயக்கி உள்ள படம் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும். ஜெய், யாமி கவுதம் நடித்துள்ளனர். படத்தின் டிரைய்லருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாள் கிடப்பில் கிடந்த இந்தப் படம் தற்போது வெளிவர தயாராக உள்ளது. படத்தைப் பற்றி இயக்குனர் பிரேம் சாய் ...

வெனிஸ் நகரில் வேட்டியின் புகழ் பரப்பிய விசாரணை குழு

Posted:

72வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கி உள்ள விசாரணை திரைப்படம் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருது பெற்றுள்ளது. வெனிஸ் திரைப்பட வரலாற்றில் ஒரு தமிழ் படம் விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்தப் படத்தில் தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி, சரவண சுப்பையா, கிஷோர், முருகதாஸ், முத்துகுமார் உள்பட பலர் ...

அமோக வரவேற்பை பெற்றுள்ள ஸ்ரீகாந்த் தேவாவின் ஸ்மைல் ப்ளீஸ் ஆல்பம்

Posted:

இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஸ்மைல் ப்ளீஸ் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவரே பாடி, இசை அமைத்து ஆடியுள்ளார். உலக மக்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் பலரின் சிரிப்பை பதிவு செய்து அதோடு ஸ்ரீகாந்த் தேவா ஆடிப்பாடியுள்ளார். இந்த ஆல்பத்துக்கு ...

இடைவெளி ஏன்? மாகலட்சுமி விளக்கம்

Posted:

சின்னத்திரை தொகுப்பாளினி மற்றும் நடிகை மகாலட்சுமி. வாணி ராணி தொடரில் நடித்துக் கொண்டிருந்தவரை திடீரென்று காணவில்லை. என்ன காரணம் என்று அவரே விளக்கம் அளித்தார்.

வாணி ராணி தொடரிலேயே அதற்கான காரணம் இருக்கிறது. வாணி ராணி கதைப்படி என் கேரக்டர் பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு சென்று விடுகிறது. அதுபோல நிஜத்திலும் நான் ...

சினிமாவாகிறது முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை

Posted:

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுதந்திர போராட்ட வீரர். ஆன்மீக வாதி. தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கருதியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் தலைமையேற்று பணியாற்றிவர். அவரை தெய்வமாக மதிக்கும் மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பலர் முயற்சித்தும் அவை வெற்றி பெறவில்லை. ...

தியேட்டர்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: தேசிய குறைதீர் ஆணையம் உத்தரவு

Posted:

அந்தக் காலத்தில் தியேட்டருக்கு சென்றால் எவர்சில்வர் டிரம்மில் குடிக்க தண்ணீர் வைத்திருப்பார்கள். கோடை காலங்களில் மண்பானையில் தண்ணீர் வைத்திருப்பார்கள். ஆனால் குடிதண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்த பிறகு தண்ணீர் பானை வைப்பதை நிறுத்தி விட்டார்கள். தியேட்டர் கேண்டீனில் தண்ணீர் பாட்டில் வாங்கித்தான் தண்ணீர் ...

மாங்கா படம் மீது வழக்கு

Posted:

பிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடித்துள்ள படம் மாங்கா. அத்வைதா, லீமா ஹீரோயினாக நடித்திருந்தார்கள். ஆர்.எஸ்.ராஜா இயக்கி இருந்தார். கடந்த 11ந் தேதி படம் வெளிவந்தது. இதனை ட்ரீம் சோன் மூவீஸ் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரித்து இருந்தார். இந்தப் படத்தை வெளிநாட்டில் திரையிடக்கூடாது என்று சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த ...

சமூக வலைத்தளங்களின் குறைபாடு - மகேஷ் பாபு வருத்தம்

Posted:

சமூக வலைத்தளங்கள் எந்த மாதிரியான பிரச்சனையை உருவாக்குகின்றன என்பது விவாதத்துக்குரிய விஷயமாகவே உள்ளது. சில குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் அவர்களுடைய அபிமான நடிகர்களின் போட்டியாளர்களைப் பற்றி தரக்குறைவான கருத்துக்களையும், விமர்சனங்களையும் அதிகமாகப் பதிவிட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அது விஜய் ...

திலீப்புடன் ஜோடி சேர்ந்த இஷா தல்வார்..!

Posted:

மெழுகு பொம்மையோ என சந்தேகப்பட வைக்கூடிய நடிகை இஷா தல்வாருக்கு மலையாள சினிமா சீரான இடைவெளியில் அவ்வப்போது சிவப்பு கம்பளம் விரிக்கவே செய்கிறது. தேசிய விருது பெற்ற 'தட்டத்தின் மறயத்து' படத்திற்கு பின்னர், மம்முட்டியுடன் 'பால்யகால சகி' மற்றும் 'காட்ஸ் ஓன் கன்ட்ரி' படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக கதாநாயகியாகவே நடித்தார் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™