Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'பாகுபலி 2' வேலைகளை ஆரம்பித்த ராஜமௌலி!

Posted:

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் இந்திய அளவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிகப் பெரிய வசூலை அள்ளியது. பல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தையும், படத்தை இயக்கிய ராஜமௌலியையும் பாராட்டினர். எதிர்பார்ப்புகளையும் மீறி பல கோடிகளை வசூலித்த 'பாகுபலி' திரைப்படம் ...

'ருத்ரமாதேவி' மீண்டும் தள்ளி வைப்பு ?

Posted:

'தள்ளி வைப்பு, ரிலீஸ்' என்ற இரண்டு வார்த்தைகளை இதுவரை வேறு எந்தப் படத்திற்கும் பயன்படுத்தாத அளவிற்கு 'ருத்ரமாதேவி' படத்திற்காகப் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. அக்டோபர் 9ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'ருத்ரமாதேவி' படம் தற்போது மீண்டும் தள்ளிவைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ...

தமிழ் சினிமாவுக்கு இது புதுசு...!

Posted:

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆர்யா, கிருஷ்ணா, சுவாதி, தீபா சனனதி நடிப்பில் உருவாகியுள்ள யட்சன் படம், செப்., 11ம் தேதி வெள்ளியன்று வெளியாகியுள்ளது. எழுத்தாளர்கள் சுபா எழுதிய கதை ஒன்று வாரஇதழில், யட்சன் என்ற பெயரில் வெளியானது. அதைத்தான் படமாக இயக்கியுள்ளார்கள். இந்நிலையில் இப்படம் நாளை வெளியாக உள்ளநிலையில், படத்தின் ரிலீஸ்க்கு முன்பாக ...

ரஜினி முருகன் தேதியில் மாப்ள சிங்கம், த்ரிஷா இல்லைனா நயன்தாரா!

Posted:

ஒருவருடைய வீழ்ச்சியில்தான் மற்றவர்களின் வளர்ச்சி இருக்கிறது என்று சொல்வார்கள். அது எந்தத்துறைக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கு மிகச்சரியாய் பொருந்தும். அதை உண்மையாக்குவதுபோல் தற்போது ஒரு விஷயம் நடைபெற்று வருகிறது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரஜினி ...

நயன்தாரா காதலருடன் சண்டைபோட்ட தனுஷ்!

Posted:

சிம்புவை வைத்து போடாபோடி என்ற தோல்விப்படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். முதல் படம் தோல்வியடைந்ததினால் பல வருடங்களாக பட வாய்ப்பில்லாமல் இருந்த விக்னேஷ்சிவனுக்கு நானும் ரௌடிதான் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் நடிகர் தனுஷ். விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்த அந்தப் படத்துக்கு நயன்தாராதான் கதாநாயகியாக வேண்டும் என்று ...

நடிகர்களின் அடுத்த 'ஸ்டண்ட்'

Posted:

நமது நடிகர்கள் சினிமாவில் மட்டும்தான் அதிரடியாக 'ஸ்டண்ட்' செய்வார்களா என்ன ?, நிஜ வாழ்விலும் நிறையவே ஸ்டண்ட் அடிப்பார்கள். இப்போது புதுவிதமான 'ஸ்டண்ட்' ஒன்று, அரசியல்வாதிகள் அடிக்கும் ஸ்டண்ட்டை விட பெரிய ஸ்டண்டாக ஆரப்மாகியுள்ளது. மகேஷ் பாபு நடித்த 'ஸ்ரீமந்துடு' படத்தில் அவர் சொந்த கிராமத்தை தத்து எடுத்து அதை ஹைடெக் ...

மூன்றாவது முறையாக பெண் இயக்குனர் படத்தில் நடிக்கும் பிருத்விராஜ்..!

Posted:

மலையாள சினிமாவே 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை தந்ததற்காக கடந்த வருடம் போற்றி கொண்டாடியதே பெண் இயக்குனர் அஞ்சலி மேனனை.., அவரது முதல் படம் 'மஞ்சாடிக்குறு' என்பதும் அதில் சிறப்பு தோற்றத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார் என்பதும் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. தான் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் ஒரு சின்ன ரோலில் ...

செப்டம்பர் 17 ரஜினி முருகன் ரிலீஸ் இல்லை!

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்த ரஜினிமுருகன் படம் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளிவருவதாக சொல்லப்பட்டது. இதற்கு முன் பல தேதிகள் அறிவிக்கப்பட்டும் குறிப்பிட்ட தேதியில் அப்படம் வெளிவரவில்லை. ரஜினி முருகன் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட ...

விதியை மீறி விளம்பரம்... கல்பாத்தி அகோரம் மீது நடவடிக்கையா!?

Posted:

ஜெயம்ரவி நடித்த தனி ஒருவன் படமும், ஜீவன் நடித்த அதிபர் படமும் ஒரே தினத்தில் அதாவது கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகின. இவற்றில் தனி ஒருவன் படம் வெற்றி பெற்றது. அதிபர் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. தனி ஒருவன் படத்தின் வெற்றியடைந்ததற்கும், அதிபர் படம் தோல்வியடைந்ததற்கும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த ...

கமல் அவதாரம் எடுத்த லட்சுமி பிரியா!

Posted:

வளர்ந்து வரும் திறமையான நடிகைகளில் ஒருவர் லட்சுமி பிரியா. முன்தினம் பார்த்தேனே படத்தில் அறிமுகமாகி கவுரவம், சுட்டகதை, கள்ளப்படம், யாகாவாராயினும் நாகாக்க படத்தில் நடித்தார். தற்போது மாயா, களம் படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாக வளரும் நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு தேடுவதற்காக போட்டோ ஷூட் நடத்துவது வழக்கமான ஒன்று. ...

படம் முழுக்க ஒரே உடைதான்: மிருதுளாவின் வருத்தம்

Posted:

மலையாளத்தில் ரெட் சில்லி, எல்சம்மா என்ன ஆன்குட்டி, 10.30ஏம் லோக்கல் கால், ஆயாள் நெஞ்சில உள்பட பல படங்களில் நடித்தவர் மிருதுளா முரளி. தமிழில் நாகராஜசோழன் எம்.எல்.ஏ படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்தில் முழுமையான ஹீரோயினாக நடித்திருக்கிறார் நாளை படம் வெளிவருகிறது. படத்தில் நடித்திருப்பது பற்றி ...

நடிகர் சங்க தேர்தல்: நீதியை நிலைநாட்டும் தர்மயுத்தம்: சரத்குமார் அறிக்கை

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் 18ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் சரத்குமார் நேற்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் நடிகர் சங்கத் தேர்தல் நீதியை நிலைநாட்ட நடக்கும் தர்மயுத்தம் என்று ...

நாடக தயாரிப்பில் குதிக்கிறது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

Posted:

தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். மறைந்த இயக்குனர் ராம.நாராயணனால் 1976ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது. 750க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ளது. ராமநாராணயனுக்கு பிறகு அவரது மகன் முரளி ராமசாமி இதனை நடத்தி வருகிறார். சமீபகாலத்தில் பெரிய ...

50 ரூபாய்க்கு கூலி வேலை பார்த்த ஹீரோ, ஹீரோயின்கள்

Posted:

ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி தயாரிக்கும் படம் மேற்கு தொடர்ச்சி மலை. விஜய் சேதுபதியின் நண்பர் லெனின் பாரதி இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார். களவாணி, வெண்ணிலா கபடி குழு படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார், புதுமுகம் காயத்ரி ஹீரோயினாக ...

வீரவம்சம் ஜாதியை பற்றிய படம் அல்ல: இயக்குனர் விளக்கம்

Posted:

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் வீரவம்சம். ஸ்ரீ பெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் செல்வம், அனிதா என்ற புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர ராதாரவி, வடிவுக்கரசி, சீதா, நிழல்கள்ரவி, மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கபிலேஸ்கர், குட்லக் ரவி இசை அமைக்கிறார்கள். ஒளிப்பதிவு செய்து ...

சினிமாவில் நடிக்கிறார் அர்ச்சனா

Posted:

சின்னத்திரையுலகின் நட்சத்திர தொகுப்பாளினி அர்ச்சனா. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ச்சனா, இப்போது சினிமாவிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். முதன் முறையாக ஆர்.கே தயாரித்து இயக்கும் வைகை எக்ஸ்பிரஸ் என்ற ...

ஹிந்தி பயிலும் ஜாக்குலின், லிசா மற்றும் நர்கீஸ்!

Posted:

ஹவுஸ்புல், ஹவுஸ்புல்-2 படத்தை தொடர்ந்து ஹவுஸ்புல்-3 படம் உருவாக இருக்கிறது. இதில் ஹீரோக்களாக அக்ஷ்ய், அபிஷேக் மற்றும் ரித்தேஷ் நடிக்கிறார்கள். இந்த மூன்று ஹீரோக்களும் நன்றாக ஹிந்தி பேசக்கூடியவர்கள், ஆனால் ஹீரோயின்களாக நடிக்கும் லிசா ஹைடன், ஜாக்குலின் பெர்ணான்ட்ஸ், நர்கீஸ் பக்ரி ஆகியோருக்கு ஹிந்தி தெரியாது. ஆகையால் இவர்களுக்கு ...

சூப்பர்உமனாக நடிக்கிறார் சன்னி லியோன்!

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். தனது அதிரடி கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கிறங்கடித்து வரும் இவர், அடுத்தப்படியாக ஆக்ஷ்ன் ரோலில், அதாவது சூப்பர்உமனாக நடிக்க போகிறார். இதுப்பற்றி சன்னி லியோன் கூறியிருப்பதாவது... இந்தப்படத்தை பற்றி இப்போது என்னால் எதுவும் கூற முடியாது. படத்தில் நான் சண்டை காட்சிகளில் எல்லாம் நடிக்கிறன். ...

இந்தியாவில் நான் தான் நம்பர்-1 நடிகை - கங்கனா!

Posted:

தற்போதைய சூழலில் நமது நாட்டில் நான் தான் நம்பர்-1 நடிகை என்று பெருமிதம் கொள்கிறார் கங்கனா ரணாவத். தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத். அதன்பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியவர் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வெற்றியின் உச்சத்தில் இருந்து வருகிறார். இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்... இது வெறும் ...

ஏய் தில் ஹே முஷ்கில் எந்தமாதிரி படம்.? - கரண் விளக்கம்!

Posted:

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர், ஏய் தில் ஹே முஷ்கில் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஆரம்பமாக இருக்கிறது. இப்படம் பற்றி கரண் ஜோகர் கூறியிருப்பதாவது... புதிய பாதையில் நான் பயணிக்க இருக்கிறேன். முதன்முறையாக ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோவை வைத்து ஏய் தில் ஹே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™