Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கிப் பணிகள் கடும் பாதிப்பு

Posted: 01 Sep 2015 10:33 PM PDT

அரசு வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது மற்றும் அரசுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பகுதி நேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரமாக நிர்ணயிப்பது, மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய பொது வேலை

கேரளாவில் கடை அடைப்பு – பஸ்கள் ஓடவில்லை: தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்

Posted: 01 Sep 2015 10:12 PM PDT

தொழிலாளர் நல சட்ட விதிகளை எந்தவித விதிவிலக்கின்றி அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.15 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன.

நள்ளிரவில் ஆண்களுடன் நிர்வாணப் பூஜை: டி.வி. நடிகை பகீர் புகார் - பெண் சாமியார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

Posted: 01 Sep 2015 10:07 PM PDT

தோண்டத் தோண்ட ஆபாச தகவல்களை வாரிவழங்கும் சுரங்கமாக மாறிப்போன பெண் சாமியார் ராதே மா மீது பிரபல டி.வி. நடிகை அளித்த பகீர் புகாரையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த பெண் சாமியார் மீது மும்பை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிக் பாஸ் தொடரில் தோன்றியதன் மூலம் பிரபலமடைந்த டாலி பிந்த்ரா(45), சில இந்தி நாடகங்களிலும், சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்கும் விவகாரத்தில் முட்டுக்கட்டை தகர்ந்தது

Posted: 01 Sep 2015 10:02 PM PDT

பிரான்சிடம் இருந்து ரபேல் போர்விமானங்களை வாங்கும் விவகாரத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு டிஏசி(Defence Acquisition Council) தற்போது அனுமதி வழங்கியுள்ளதால் 24 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 126 ரபேல் ரகப் போர் விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. 3 ஆண்டுகளாக பேரம் பேசியும், விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இதில் இறுதி

யோகாவை விளையாட்டு போட்டியாக நடத்தலாம்: மத்திய அரசு முடிவு

Posted: 01 Sep 2015 09:52 PM PDT

உடல் ஆரோக்கியத்துக்கு யோகா பயிற்சி இன்றியமையாத ஒன்றாகும். யோகாவை விளையாட்டின் ஒரு பிரிவாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் முதன்மை பிரிவு, பொதுப்பிரிவு, இதர பிரிவு என தனித்தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதன்மை பிரிவின் கீழ் உள்ள

காஷ்மீர் கிராமத்துக்குள் ஊடுருவல்: பாக். தீவிரவாதிகளுடன் ராணுவம் துப்பாக்கி சண்டை

Posted: 01 Sep 2015 09:49 PM PDT

இந்தியாவில் நாசவேலை சதித்திட்டத்துடன் காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலும், எல்லை கிராமங்களிலும் ராணுவம் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை வடக்கு காஷ்மீரின் ரபியாபாத் பகுதியில் லதுரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருப்பதாக தகவல்

கேரளாவில் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

Posted: 01 Sep 2015 09:00 PM PDT

பிரபல நிதி நிறுவனமான முத்தூட் கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தின் அதிபர் பால் முத்தூட் ஜார்ஜ். கடந்த 2009–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21–ந்தேதி பால் முத்தூட் ஜார்ஜ் தனது காரில் ஆலப்புழா மாவட்டம் சம்பக்குளத்திலுள்ள அவருக்கு சொந்தமான விருந்தினர் மாளிகைக்கு சென்றபோது, காரில் வைத்தே படுகொலை

இடைநீக்கத்தை எதிர்த்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted: 01 Sep 2015 08:30 PM PDT

சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையின்போது குறுக்கிட்டு ரகளை செய்ததாகவும் சபாநாயகர் உள்ளிட்டோரை தாக்க முயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், எல்.வெங்கடேசன், சி.எச்.சேகர், கே.தினகரன், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 01 Sep 2015 08:16 PM PDT

மத்திய அரசு சார்பில் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவை போற்றும்விதமாக ஆண்டுதோறும் நாடுமுழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்-நாடு முழுவதும் வங்கிப்பணிகள் இன்று முடங்கும்: மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பு

Posted: 01 Sep 2015 08:05 PM PDT

'குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்ட விதிகளை எந்தவித விதிவிலக்கும் இன்றி அமல்படுத்த வேண்டும், அமைப்புசாரா தொழில் துறைக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப்பெற வேண்டும், விண்ணப்பித்த 45 நாளில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. இறுதிவாதம் தொடங்கியது

Posted: 01 Sep 2015 07:50 PM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது.

ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு: தமிழக அரசின் மேல்முறையீடு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

Posted: 01 Sep 2015 07:24 PM PDT

தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71-ல் வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போனில் மாதாந்திர ரெயில் சீசன் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்: ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவிப்பு

Posted: 01 Sep 2015 05:09 PM PDT

செல்போனில் மாதாந்திர ரெயில் சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் எடுக்கும் வசதி அடுத்த சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் என ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்தார். டெல்லி பல்வால் புறநகர் ரெயில் பிரிவில், செல்போனில் சாதாரண ரெயில் டிக்கெட் (முன் பதிவு இல்லாதது) பெறும் முறையை ரெயில்வே மந்திரி

ஆபாசமாக திட்டுகிறார்கள் - மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் போலீசில் புகார்

Posted: 01 Sep 2015 04:56 PM PDT

நடிகர் அமிதாப்பச்சன் (72) 'டுவிட்டர்' சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடனும், ஆதரவாளர்களுடன் தொடர்பு கொண்டு கருத்து வெளியிட்டு வருகிறார். டுவிட்டரில் அவரை சுமார் ஒன்றரை கோடி அபிமானிகள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

புதுச்சேரியில் 28-ந்தேதி மேல்-சபை எம்.பி. தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted: 01 Sep 2015 02:50 PM PDT

டெல்லி மேல்-சபையில் எம்.பியாக உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பி.கண்ணனின் பதவி காலம் அடுத்த மாதம்(அக்டோபர்) 6-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி புதுச்சேரியில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு புதிய எம்.பி.யை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற

நிலத்தடி நீரை அதிகரிக்க தமிழகத்துக்கு ரூ.64 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு

Posted: 01 Sep 2015 01:03 PM PDT

இந்த ஆண்டு இதுவரை பருவமழை சரிவர பெய்யாததால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வறட்சியும், வறட்சி ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. தொடர் வறட்சி காரணமாக பல மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துகொண்டே வருகிறது.

ஆஸ்திரேலிய பாதுகாப்பு மந்திரி கெவின் ஆண்ட்ருவ்ஸ் பிரதமர் மோடி மற்றும் சுஷ்மாவுடன் சந்திப்பு

Posted: 01 Sep 2015 11:13 AM PDT

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு மந்திரி கெவின் ஆண்ட்ருவ்ஸ், இன்று பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே கூட்டு கடற்படை ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில்

கொச்சி படகு விபத்தில் பலி 11 ஆக அதிகரிப்பு

Posted: 01 Sep 2015 10:36 AM PDT

கொச்சி துறைமுகத்தில், கடந்த வாரம் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பயணிகளுடன் வந்த படகின் மீது, மீன்பிடி படகு மோதியது. இதனால்

ஆகஸ்டு 15, மற்றும் ஜனவரி 26-ல் உ.பி மதரசாக்களில் தேசிய கொடி ஏற்றியதை உறுதி செய்யுங்கள்: நீதிமன்றம்

Posted: 01 Sep 2015 10:07 AM PDT

உத்தரப்பிரதேசத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாநிலம் முழுவதுமுள்ள மதரசாக்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டதை மாநில அரசு உறுதி செய்திட வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளி என்றால் இந்திராணிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: ஷீனாவின் தந்தை பேட்டி

Posted: 01 Sep 2015 09:00 AM PDT

ஷீனா போரா கொலை வழக்கு விவகாரம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், போராவின் உண்மையான தந்தை என்று கூறப்படும் சித்தார்த் தாஸ், இந்திராணி குற்றவாளி என்றால் அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திராணி இந்த குற்றத்தை செய்துள்ளாரா? என்று எனக்கு தெரியாது. ஆனால், ஒருவேளை அவர் இதை செய்திருந்தால், அவருக்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டுமென நான் இறைவனை வேண்டி கொள்கிறேன் என கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™