மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- செம்மரக்கடத்தல் வழக்கில் சர்வதேச கடத்தல்காரன் கேரளாவில் பிடிபட்டான்
- திருவனந்தபுரம் அருகே மிட்டாய் என்று மாத்திரையை சாப்பிட்ட குழந்தை சாவு
- கேரளாவில் தனியார் யானைகள் விவரத்தை பதிவு செய்ய உத்தரவு
- திருப்பதி பிரம்மோற்சவத்தில் மலையப்பசாமி மீது அபூர்வ ஒளி: பக்தர்கள் பரவசம்
- கடும் எதிர்ப்பு எதிரொலி: வாட்ஸ்அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது
- ஆலய விழாவில் திருநங்கையரின் ஆபாச நடனம்: தடுத்த போலீசாரை அடித்து, உதைத்த கிராம மக்கள்
- ஒருவார பயணமாக அயர்லாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு பிரதமர் மோடி நாளை புறப்பட்டுச் செல்கிறார்
- பருவம் தவறிய மழையால் வறட்சி பயம் நீங்கியது: முதல்-மந்திரி பட்னாவிஸ் மகிழ்ச்சி
- மாட்டிறைச்சிக்கு முழுமையாக தடை விதியுங்கள், மீறுபவர்களை தூக்கிலிடுங்கள்: ஜம்முவில் பஜ்ரங்தள் போராட்டம்
- 28-ந்தேதி டெல்லியில் பிரதமர் தலைமையில் காவிரி நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது
- அதிரடி சோதனை: மருத்துவரை சஸ்பெண்ட் செய்த சுகாதார அமைச்சர்
- கூகுள் வழங்கும் ஆன்லைன் ஐடி கோர்ஸ்: உதவித்தொகையுடன் படிக்கலாம்
- சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அறைக்குள் புகுந்து கோஷம்: வக்கீல்கள் போராட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
- விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்றுக் கிடந்த 57 லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்கம்
- பீகாரில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கருப்பு பணம் பறிமுதல்
- முழு அரசு மரியாதையுடன் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியா உடல் தகனம்: கிரிக்கெட் உலகத்தினர் அஞ்சலி
- பள்ளிக்கு செல்லாததால் மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட 10 வயது சிறுவன்
- இடஒதுக்கீடு வேண்டாம் என்று மோகன் பகவத் கூறவில்லை: ஆர்.எஸ்.எஸ். விளக்கம்
- ஆந்திராவில் தெலுங்கு தேசம்-காங்கிரஸ் கட்சியினர் மோதல்: 2 பேர் படுகொலை
- பிரதமர் மோடி அவர்களே தைரியமிருந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து பாருங்கள்: லாலு பிரசாத்
| செம்மரக்கடத்தல் வழக்கில் சர்வதேச கடத்தல்காரன் கேரளாவில் பிடிபட்டான் Posted: 21 Sep 2015 10:31 PM PDT திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டையை கடத்தும் கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஆந்திர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அப்பாவி கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வரும் வியாபாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். |
| திருவனந்தபுரம் அருகே மிட்டாய் என்று மாத்திரையை சாப்பிட்ட குழந்தை சாவு Posted: 21 Sep 2015 10:05 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள மாவேலிகரை என்ற இடத்தை சேர்ந்தவர் விஜு. இவரது மனைவி ஸ்ரீஜா. இந்த தம்பதியின் ஒரே மகன் ஆதித்யன் (வயது 3). விஜுவின் பக்கத்து வீட்டில் அவரது உறவினர் வசித்து வருகிறார். இந்த வீடடிற்கு குழந்தை ஆதித்யன் அடிக்கடி சென்று விளையாடுவது வழக்கம். நேற்றும் பக்கத்து வீட்டிற்கு விளையாடுவதற்காக ஆதித்யன் சென்றான். |
| கேரளாவில் தனியார் யானைகள் விவரத்தை பதிவு செய்ய உத்தரவு Posted: 21 Sep 2015 09:57 PM PDT கேரளாவில் ஏராளமான யானைகளை தனியார் வளர்த்து வருகிறார்கள். பாரம்பரிய வழக்கப்படியும், கோவில் விழாக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடவும் இந்த யானைகள் வளர்க்கப்படுகின்றன. தனி பாகன்களை நியமித்து இந்த யானைகள் பராமரிக்கப்படுகிறது. யானைகளை வளர்க்கும் தனியார்களுக்கு கேரள அரசும், வனத்துறையும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன. |
| திருப்பதி பிரம்மோற்சவத்தில் மலையப்பசாமி மீது அபூர்வ ஒளி: பக்தர்கள் பரவசம் Posted: 21 Sep 2015 09:45 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருடசேவை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் மலையப்பசாமியை வரவேற்றனர். |
| கடும் எதிர்ப்பு எதிரொலி: வாட்ஸ்அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது Posted: 21 Sep 2015 09:26 PM PDT நவீனகால தந்தி சேவையாக மாறிப்போன வாட்ஸ்அப் தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரைவு திட்டம் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பையடுத்து உடனடியாக கைவிடப்பட்டது. வாட்ஸ்ஆப் மூலம் மொபைல் வழியாக தகவல்கள், வீடியோ |
| ஆலய விழாவில் திருநங்கையரின் ஆபாச நடனம்: தடுத்த போலீசாரை அடித்து, உதைத்த கிராம மக்கள் Posted: 21 Sep 2015 08:53 PM PDT ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் திருநங்கையரை வைத்து நடத்தப்பட்ட ஆபாச நடன நிகழ்ச்சியை தடுக்க வந்த போலீசாரை கிராம மக்கள் அடித்து, உதைத்ததில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு போலீசார் காயமடைந்ததையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
| ஒருவார பயணமாக அயர்லாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு பிரதமர் மோடி நாளை புறப்பட்டுச் செல்கிறார் Posted: 21 Sep 2015 08:28 PM PDT அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான 7 நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறார். இந்த பயணத்தின் முதல்கட்டமாக அயர்லாந்து தலைநகரான டப்ளின் செல்லும் மோடி, அந்நாட்டுப் பிரதமர் என்டா கென்னியையும், அங்குள்ள இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாடுகிறார். |
| பருவம் தவறிய மழையால் வறட்சி பயம் நீங்கியது: முதல்-மந்திரி பட்னாவிஸ் மகிழ்ச்சி Posted: 21 Sep 2015 08:25 PM PDT மராட்டியத்தில் இந்த வருடம் பருவ மழை பொய்த்ததால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைவாகவே இருந்தது. இதனால் கடும் வறட்சி ஏற்படும் என்ற பயம் மக்களிடையே ஏற்பட்டிருந்தது. இதிலும் வறட்சி பல உயிர்களை குடித்து வந்த மரத்வாடா மண்டலத்தை மேலும் சோகம் ஆட்கொண்டது. ஆனால் கடந்த வாரம் பெய்த பலத்த மழை இந்த வறட்சியின் கோரப்பிடியில் இருந்து மக்களை மீட்டுள்ளது. |
| Posted: 21 Sep 2015 05:04 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தடையை மீறுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய பஜ்ரங்தள் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். |
| 28-ந்தேதி டெல்லியில் பிரதமர் தலைமையில் காவிரி நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது Posted: 21 Sep 2015 04:42 PM PDT தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமருக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார். மேலும் கர்நாடக அரசுக்கும் கடிதம் எழுதி தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டது. |
| அதிரடி சோதனை: மருத்துவரை சஸ்பெண்ட் செய்த சுகாதார அமைச்சர் Posted: 21 Sep 2015 04:21 PM PDT வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், அரசு மருத்துமனைகளில் போதிய மருத்துவ வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக நேற்று ஹரியானா மாநில சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ், பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பி.கே அரசு மருத்துவமனையில் சோதனை நடத்தினார். |
| கூகுள் வழங்கும் ஆன்லைன் ஐடி கோர்ஸ்: உதவித்தொகையுடன் படிக்கலாம் Posted: 21 Sep 2015 04:01 PM PDT தகவல் தொழில்நுட்ப யுகத்தின் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள், மற்றும் கூகுள் போனின் இயங்கு தளத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆப்ஸ் டெவலப்பர்களுக்கான பயிற்சி திட்டம் ஒன்றை நேற்று முதல் தொடங்கியுள்ளது. இவர்களுக்கான வகுப்புகளை |
| Posted: 21 Sep 2015 01:58 PM PDT சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல், சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு குறித்து ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி சி.எஸ்.கர்ணன் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. |
| விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்றுக் கிடந்த 57 லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் Posted: 21 Sep 2015 01:02 PM PDT பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் சர்வதேச விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 2.158 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் நேற்று இரவு பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| பீகாரில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கருப்பு பணம் பறிமுதல் Posted: 21 Sep 2015 12:29 PM PDT பீகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கருப்புபணம் மற்றும் போதிய கணக்கு இல்லாமல் பணத்தைக் கொண்டு செல்பவர்களைப் பிடிப்பதற்காக தேர்தல் அதிகாரிகளும் மாநில போலீசாரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான கருப்பு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். |
| Posted: 21 Sep 2015 12:09 PM PDT இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கொல்கத்தாவை சேர்ந்த 75 வயது தொழில் அதிபரான ஜக்மோகன் டால்மியா இருந்து வந்தார். கடந்த வியாழக்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டால்மியா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவரது உயிர் பிரிந்தது. |
| பள்ளிக்கு செல்லாததால் மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட 10 வயது சிறுவன் Posted: 21 Sep 2015 10:34 AM PDT பள்ளிக்கு செல்ல மறுத்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டான் என்பதற்காக சொந்த மாமாவே தன் 10 வயது மருமகனை கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்சிம் மாவட்டத்தில் உள்ள ஒபிதுல்லாங் என்ற பகுதியில் வசிக்கும் |
| இடஒதுக்கீடு வேண்டாம் என்று மோகன் பகவத் கூறவில்லை: ஆர்.எஸ்.எஸ். விளக்கம் Posted: 21 Sep 2015 10:06 AM PDT இடஒதுக்கீடு வேண்டாம் என்று மோகன் பகவத் கூறவில்லை என ஆர்.எஸ்.எஸ். விளக்கம் அளித்துள்ளது. "இடஒதுக்கீடு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இடஒதுக்கீடு கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும். |
| ஆந்திராவில் தெலுங்கு தேசம்-காங்கிரஸ் கட்சியினர் மோதல்: 2 பேர் படுகொலை Posted: 21 Sep 2015 09:07 AM PDT ஆந்திர பிரதேசத்தில் எருமை மாடு திருட்டு தொடர்பாக ஆளும் தெலுங்குதேசம் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கர்னூல் மாவட்டம் முனிமடுகு கிராமத்தில் எருமை மாடுகள் திருட்டு போனது தொடர்பாக இரு தரப்பினரிடையே நேற்று இரவு வாக்குவாதம் |
| பிரதமர் மோடி அவர்களே தைரியமிருந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து பாருங்கள்: லாலு பிரசாத் Posted: 21 Sep 2015 08:51 AM PDT பீகாரில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், 'பிரதமர் மோடி அவர்களே தைரியமிருந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து பாருங்கள்', என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் சவால் விடுத்துள்ளார். இடஒதுக்கீடு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |