Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு !

Posted:

இலங்கையின் 8வது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 03,2015) சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டிருக்கின்றார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், ஒகஸ்ட் 4, 1977 முதல் ஒக்டோபர் 24, 1983 வரை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்திருந்தார். அதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்த் தலைவர் இரா.சம்பந்தனர் ஆவார்.


Read more ...

பாஜக அரசின் இந்தி மொழித் திணிப்பில் வேகம் - கருணாநிதி

Posted:

 பாஜக அரசின் இந்தி மொழித் திணிப்பு நடவடிக்கைகளில் திடீர் வேகம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


Read more ...

விவசாயி கவுண்டமணி வருகிறார் பராக்... பராக்...

Posted:

நடிச்சதோட நம்ம வேலை முடிஞ்சுப் போச்சு. ரிலீஸ் பண்ணினா பண்ணு. பண்ணாட்டிப் போ கேரக்டர் நம்ம கவுண்டமணி.


Read more ...

எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு!

Posted:

இலங்கையின் 8வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் தெரிவு செய்யப்பட்டார். 


Read more ...

எனது பயணம் வேகமானது அல்ல. அதனால், மீள் திருப்பங்கள் இருக்காது: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு நான் மேற்கொள்ளவுள்ள பயணம் வேகமானது அல்ல. அதனால் பாரிய மீள் திருப்பங்கள் ஏதும் இருக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமானது; மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அம்பாந்தோட்டையில் நிர்மானிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், நேற்று புதன்கிழமை முதல் நெற்களஞ்சிய சாலையாக மாற்றப்பட்டது. 


Read more ...

சர்வதேச விசாரணை கோரி ரெலோ, புளொட், ஈபிஆர்எல்ஃஎப் ஐ.நா.வுக்கு கடிதம்!

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட், ஈபிஆர்எல்ஃஎப் ஆகியன ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹூசைனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன. 


Read more ...

செப்டம்பர் இறுதியில் வானில் தோன்றவுள்ள இரத்தச் சிவப்பு சந்திரன்!

Posted:

இந்த வருடம் செப்டம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதி அளவில் உலகின் பல நாடுகளில் இரத்தச் சிவப்பு நிறத்தில் சந்திரன் தோன்றவுள்ளதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


Read more ...

மிகவும் வண்ணமயமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிய வியட்நாம்!:புகைப் படங்கள்

Posted:

இன்று புதன்கிழமை பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்ற 70 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை மிகவும் வண்ண மயமான இராணுவ கலாச்சார அணிவகுப்புக்களுடன் கண்ணைக் கவரும் விதத்தில் கொண்டாடியுள்ளது வியட்நாம். இன்றைய கொண்டாட்ட அணிவகுப்புக்களை முன்னிட்டு 10 000 மக்கள் தலைநகர் ஹனொயின் பா டின்ஹ் சதுக்கத்தினை நிரப்பியிருந்தனர். இன்று காலை 6 மணி தொடக்கம் பா டின்ஹ் சதுக்கத்தில் வியட்நாம் விடுதலை ஐகொனான ஹோ ச்சீ மின் இன் சமாதியின் அருகே இந்த வண்ண மயமான அணி வகுப்புக்கள் தொடங்கின.

இப்பகுதியில் தான் 1945 ஆம் ஆண்டு வியட்நாமின் சுதந்திரப் பிரகடனமும் மேற்கொள்ளப் பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மிக விமரிசையாக மேற்கொள்ளப் பட்ட அணிவகுப்புக்களில் பார்வையாளர்களாக சொற்பளவு வெளிநாட்டினர் மாத்திரமே கலந்து கொண்டதுடன் உள்ளூர் ஊடகங்களுக்கு மாத்திரமே அனுமதியும் வழங்கப் பட்டிருந்தது. மிக நீண்ட அணிவகுப்புக்களில் வியட்நாமின் இராணுவம், வான் படை, கடற்படை மாத்திரமல்லாது சுமார் 8 மில்லியன் வியட்நாமியர்கள் வெவ்வேறு சீருடைகளுடன் பங்கேற்றிருந்தனர். இவர்களில் முன்னால் போராளிகள், ஊழியர்கள், விவசாயிகள், வணிகர்கள், இளம் ஊழியர்கள், பெண்கள் மற்றும் பூர்விக சிறுபான்மையினர் என அனைவருக்கும் இடமளிக்கப் பட்டிருந்ததுட இதில் பலரும் ஹோ ஹோ என்று கோஷமிட்ட வண்ணம் அணிவகுத்துச் சென்றனர்.


Read more ...

இந்தியாவில் உள்ள சிறு எண்ணெய் கிணறுகளை ஏலத்தில் விட முடிவு

Posted:

இந்தியாவில் உள்ள சிறு எண்ணெய் கிணறுகளை ஏலத்தில் விட பிரதமர் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.


Read more ...

இருபத்து ஐந்து ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பது என்பது இயலாது:நிதி அமைச்சகம்

Posted:

இருபத்து ஐந்து ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பது என்பது இயலாத காரியம் என்று மத்திய நிதி அமைச்சகம், பிரதமரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.


Read more ...

கருத்துக் கணிப்பு வெளியிட்டவர்கள் கனவு கண்டிருப்பார்கள்:மு.க.அழகிரி

Posted:

கருத்துக் கணிப்பு வெளியிட்டவர்கள் கனவு கண்டிருப்பார்கள் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி மகன் மு.க.அழகிரி கூறியுள்ளார்.


Read more ...

இன்று ஒரே நாளில் ஏர் இந்தியா விமானிகள் முப்பது பேர் பணி ராஜினாமா

Posted:

இன்று ஒரே நாளில் ஏர் இந்தியா விமானிகள் முப்பது பேர் பணி ராஜினாமா செய்திருப்பது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


Read more ...

உள்ளக விசாரணைக்கு த.தே.கூ ஒத்துழைக்கக் கூடாது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

டெக்ஸாஸில் கையைத் தூக்கிய நபரைப் போலிசார் சுட்டுக் கொன்ற காட்சி வீடியோவில் அம்பலம்!

Posted:

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பெக்ஸார் என்ற நகராட்சி செரீஃப் இன் பிரதி போலிஸ் பாதுகாவலர்கள் கையைத் தூக்கி சரணடைய முயற்சித்த ஒரு நபரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காட்சி அடங்கிய இரு வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகி போலிசாரின் அராஜகம் இன்னொரு முறை அம்பலமாகியுள்ளது.


Read more ...

எதிர்க்கட்சித் தலைவர் பதவி இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

Posted:

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சச்சின் கிரிக்கெட் வீரர்களின் கடவுள்:தோனி

Posted:

இந்திய கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிகெட் வீரர்களின் கடவுள் என்று, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி புகழாரம் சூட்டியுள்ளார்.


Read more ...

பாரிஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்ட இரு வெடி விபத்துக்களில் சிக்கி 13 பேர் பலி

Posted:

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டின் புறத்தே அமைந்துள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி விட்டதாகவும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

இந்தியாவில் தான் குழந்தைகள் அதிக அளவில் செல்போன் பயன்படுத்துகின்றனர்

Posted:

கார்ட்டூன் சேனல் ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாகத் தெரிய வந்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™