Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மிசிசாகா கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு பதின்ம வயதினர் கைது

Posted: 28 Aug 2015 08:46 PM PDT

po

poமிசிசாகாவைச் சேர்ந்த நபர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடை பதின்ம வயதினர் இருவரைக் பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மிசிசாகாவைச் சேர்ந்த 36 வயது William Marcel Maassen என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த மாதம் (ஓகஸ்ட்) 7 ஆம் திகதி பிற்பகல் அளவில் Winston Churchill Boulevard இற்கு அருகில் Dundas வீதியில் உள்ள Woodchester Plazaவிற்கு பின்புறத்தில் குறித்த நபர் உணர்வற்றக் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் உயிரிழந்து கிடந்தாக உறுதிப்படுத்திய காவல்த்துறையினர் அவரின் உயிரிழப்புக்காண காரணத்தை வெளிவிடவில்லை.

இந்த நிலையில் குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பதின்ம வயது இளைஞர்கள் இருவரைக் காவல்த்தறையினர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவர் மீதும் இரண்டாம் தரக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

The post மிசிசாகா கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு பதின்ம வயதினர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மார்க்கம் பகுதியில் வீடு புகுந்து அச்சுறுத்திய நபர்களுக்கு காவல்த்துறையினர் வலைவீச்சு

Posted: 28 Aug 2015 08:41 PM PDT

i

iமார்க்கம் பகுதியில் வீடு ஒன்றினுள் புகுந்து அச்சுறுத்திய நபர்களை தேடி வருவதாக யோர்க் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Yonge வீதி Steeles அவனியூவின் அருகில் உள்ள Grandview அவனியூ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வியாழக்கிழமை இரவு குறிப்பிட்ட நபர்கள் புகுந்து அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

குறித்த நபர்கள் வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதை அடுத்து அந்த வீட்டில் இருந்தவர் உடனடியாக 911 இற்கு அழைத்து தகவல் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் உட்புகுந்த நபர்கள் வீட்டில் இருந்தவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகவும், பின்னர் குறித்த நபர் 911 அழைத்திருப்பதை அனுமானித்த அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் காவல்த்துறையினர் விபரித்துள்ளனர்.

தப்பிச் சென்ற அவர்கள் வீட்டில் இருந்த எதனையும் கொள்ளையிட்டுச் செல்லவில்லை என்றும், அத்துடன் இந்த சம்பத்தினால் வீட்டில் இருந்தவருக்கு உடல் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டிற்குள் புகுந்து பின்னர் தப்பிச் சென்ற மூன்று அல்லது நான்கு பேரைத் தேடி வருவதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், தகவல் தெரிந்தவர்கள் தம்முடன் அல்லது குற்றத் தடுப்புப் பிரிவினருடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post மார்க்கம் பகுதியில் வீடு புகுந்து அச்சுறுத்திய நபர்களுக்கு காவல்த்துறையினர் வலைவீச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நேரடி விவாதத்தை தவிர்ப்பதாக எடுத்த முடிவை மீள் பரிசோதனை செய்யவேண்டும் – பசுமைக் கட்சி

Posted: 28 Aug 2015 09:32 AM PDT

jtgj

jtgjதொலைக்காட்சி நேரடி விவாத நிகழ்ச்சியினை தவிர்ப்பதாக மேற்கொண்டுள்ள முடிவினை பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும், புதிய சனநாயக கட்சித் தலைவர் Tom Mulcairஉம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என பசுமைக் கட்சியின் தலைவர் எலிசபெத் மே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒலிபரப்பாளர்களின் கூட்டிணையம் ஏற்பாடு செய்துள்ள ஆங்கில மொழியிலான நேரடி விவாத நிகழ்வில் பங்குபற்றப் போவதில்லை என பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளார்.

பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கலந்துகொள்ளாத எந்தவொரு நேரடி விவாத நிகழ்விலும் கலந்துகொள்வதில் பலனில்லை என்பதனால் அவ்வாறன நிகழ்வுகளில் தானும் பங்குபற்றப் போவதில்லை என புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcairஉம் தெரிவித்துள்ளார்.jtgj

இவ்வாறான நிலையிலேயே இந்த இரு தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ள பசுமைக் கட்சித் தலைவர் எலிசபெத் மே, இவ்வாறான வழக்கமான, முக்கியமான நிகழ்வுகளில் கலந்துகொள்வதை அரசியல் கட்சிகள் தவிர்ப்பது அறிவுக்கு ஒவ்வாத செயல் என அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விவாத நிகழ்வில் கலந்து கொள்வதனை உறுதிப்படுத்துமாறு லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeauற்கும அவர் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

The post நேரடி விவாதத்தை தவிர்ப்பதாக எடுத்த முடிவை மீள் பரிசோதனை செய்யவேண்டும் – பசுமைக் கட்சி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய உட்கட்டுமான திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு

Posted: 28 Aug 2015 09:08 AM PDT

hjgj

hjgjபுதிய உட்கட்டுமான திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeauவின் உத்தரவாதத்திற்கு ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி வரவேற்பு வெளியிட்டுள்ளார்.

உட்கட்டுமான பணிகளுக்கென மத்திய அரசாங்கம் இதுவரைகாலமும் செலவிட்டுவந்த தொகையினை தமது அரசாங்கம் இரட்டிப்பாக்கும் என்ற உத்தரவாதத்தினை லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeau வெளியிட்டுள்ளார்.

Oakville பகுதியில் நேற்றைய நாள் இடம்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள லிபரல் கட்சித் தலைவர், பொதுப் போக்குவரத்து, வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட ஏனைய உட்கட்டுமான திட்டங்களுக்காக எதிர்வரும் மூன்றுவருட காலத்தில் பில்லியன் கணக்கான நிதியினை செலவிடுவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரையிலும் வரவு செலவுத் திட்டத்தனை சமப்படுத்தும் முனைப்புக்களில் தாம் ஈடுபடப் போவதில்லை எனவும், அதுவரையிலும் வருடத்திற்கு 10 பில்லியன் டொலர்கள் என்ற அளவில் துண்டுவிழும் தொகை காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

hjgj

லிபரல் கட்சித் தலைவரின் இவ்வாறான நீண்டகால, நிலையான நிதிஉதவித் திட்டத்தின் மூலம் நகரின் போக்குவரத்து திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும், இதன் மூலம் ரொரன்ரோவின் போக்குவரத்து நெரிசல், வீட்டு திருத்தவேலை பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் நகரபிதா ஜோன் ரோறி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தனது இந்த உட்கட்டுமான நிதிப் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் எவ்வாறான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதனை நகர நிர்வாகங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும் என்ற உத்தரவாதத்தினை Justin Trudeau தன்னிடம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரொரன்ரோ நகரபிதா மேலும் தெரிவித்துள்ளார்.

The post புதிய உட்கட்டுமான திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய சனநாயக கட்சி பொரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சி – கருத்துக் கணிப்பு

Posted: 28 Aug 2015 09:01 AM PDT

p

pநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதிய சனநாயக கட்சி பொரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

கடந்த 23 மற்றம் 24 ஆகிய திகதிகளில் Forum Research அமைப்பு நடாத்திய கருத்துக் கணிப்புகளில், புதிய சனநாயக கட்சிக்கு 40 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதற்கு அடுத்த நிலையில் லிபரல் கட்சி 30 சதவீத மக்கள் ஆதரவினையும், பழமைவாதக் கடசி 23 சதவீத ஆதரவினை பெற்று மூன்றாவது நிலையிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.

குறிப்பாக இதுவரை அதிகாரத்தில் இருந்துவந்த பழமைவாதக் கட்சி ஆதரவாளர்கள் பலரும் தற்போது புதிய சனநாயக கட்சிக்கு தமது ஆதரவினை தெரிவிக்க ஆரம்பித்துள்ளதாக கருத்துக் கணிப்பினை மேற்கொண்ட நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.p

புதிய சனநாயக கட்சிக்கு கியூபெக்கில் 54 சதவீத ஆதரவும், ஒன்ராறியோவில் 36 சதவீத ஆதரவும் பிரிட்டிஷ் கொலம்பியா, சாஸ்காச்சுவான், மனிட்டோபா உள்ளிட்ட மாநிலங்களில் முன்னணி நிலைமையும் காணப்படுகின்றமை இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை அட்லான்டிக் பிராந்தியங்களில் லிபரல் கட்சியும், அல்பேர்ட்டாவில் பழமைவாதக் கட்சியும் இந்த கருத்துக் கணிப்பின் பிரகாரம் முன்னிலை பெற்றுள்ளன.

கடந்த தேர்தலின் போது பழமைவாதக் கட்சிக்கு வாக்களித்தவர்களில் 40 சதவீதத்தினர் வரவிருக்கும் தேர்தலில் வேறு கட்சிக்கு வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், கடந்த தேர்தலில் லிபரல் கட்சிக்கு வாக்களித்தவர்களில் 28 சதவீதத்தினர் இந்த தேர்தலில் புதிய சனநாயக கட்சிக்கு வாக்களிக்கவுள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

The post புதிய சனநாயக கட்சி பொரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சி – கருத்துக் கணிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நேரடி விவாதத்தை தவிர்ப்பதாக எடுத்த முடிவை மீள் பரிசோதனை செய்யவேண்டும் – பசுமைக் கட்சி

Posted: 28 Aug 2015 08:55 AM PDT

o

oதொலைக்காட்சி நேரடி விவாத நிகழ்ச்சியினை தவிர்ப்பதாக மேற்கொண்டுள்ள முடிவினை பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும், புதிய சனநாயக கட்சித் தலைவர் Tom Mulcairஉம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என பசுமைக் கட்சியின் தலைவர் எலிசபெத் மே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒலிபரப்பாளர்களின் கூட்டிணையம் ஏற்பாடு செய்துள்ள ஆங்கில மொழியிலான நேரடி விவாத நிகழ்வில் பங்குபற்றப் போவதில்லை என பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளார்.

பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கலந்துகொள்ளாத எந்தவொரு நேரடி விவாத நிகழ்விலும் கலந்துகொள்வதில் பலனில்லை என்பதனால் அவ்வாறன நிகழ்வுகளில் தானும் பங்குபற்றப் போவதில்லை என புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcairஉம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே இந்த இரு தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ள பசுமைக் கட்சித் தலைவர் எலிசபெத் மே, இவ்வாறான வழக்கமான, முக்கியமான நிகழ்வுகளில் கலந்துகொள்வதை அரசியல் கட்சிகள் தவிர்ப்பது அறிவுக்கு ஒவ்வாத செயல் என அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விவாத நிகழ்வில் கலந்து கொள்வதனை உறுதிப்படுத்துமாறு லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeauற்கும அவர் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

The post நேரடி விவாதத்தை தவிர்ப்பதாக எடுத்த முடிவை மீள் பரிசோதனை செய்யவேண்டும் – பசுமைக் கட்சி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினசரி உணவில் இதனை சேர்த்துக்கொள்ளுங்கள்

Posted: 28 Aug 2015 08:39 AM PDT

fd

fdதாமரை பூபோலவே அதன் தண்டுகளும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

தாமரை கிழங்குகள் என்று அறியப்படும் இதில் உடலுக்கு தேவையான கலோரிகள் அதிக அளவில் உள்ளன.

உதாரணமாக 100 கிராம் தாமரை கிழங்கில் 74 கலோரிகள் அடங்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்

ஏராளமான சத்துக்கள் , தனிமங்கள் மற்றும் விட்டமின்களான பி6, சி தாமரை கிழங்கில் நிறைந்துள்ளன.

மனிதர்களின் தினசரி உணவு பட்டியலில் கட்டாயம் இருக்க வேண்டிய விட்டமின் சி இந்த தாமரை கிழங்கில் மிகுதியாக உள்ளது.

இதனுடன் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, கந்தகச்சத்து போன்றவைகளும் இதில் அடங்கியுள்ளன.

பொதுவாக தாமரையை போலவே தாமரை கிழங்குகளும் கசப்பாக இருப்பதால், இதனை வேகவைத்து சூப்புகளில் சேர்த்து குடிக்கலாம்.

சில நாடுகளில் இதனை துண்டு துண்டாக வெட்டி அதனுடன் மிளகு, மற்றும் காரம் போன்றவற்றை சேர்த்து நொறுக்கு தீனியாக உண்கின்றனர்.

மேலும் தாமரை தண்டுகளில் செய்யப்படும் வடை சுவையாகவும் , மருத்துவ தேவைகளை சமாளிப்பதாகவும் உள்ளது.

தாமரைக் கிழங்கு துண்டுகளுடன் வெள்ளைப் பூண்டு இஞ்சி மிளகாய் ஆகியவற்றைக் கலந்து எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம்.

தாமரை தண்டுகளை சாப்பிடுவதால் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பத்தை குறைக்கலாம் என்று சீன மருத்துவ முறைகள் கூறுகின்றன.

குறிப்பாக பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை சாப்பிடுவது நல்லது . ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது.

மேலும் சிறு நீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும் ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.fd

தாமரை தண்டு சிப்ஸ்

தாமரை தண்டினை சிறு துண்டுகளா வெட்டி வைத்துக்கொள்ளவும், அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தூள் வகைகளை கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் தாமரை தண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு வறுக்கவும்.

உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடுவது நல்லது.

வெள்ளை பூண்டு, இஞ்சி, மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து தாமரை தண்டை பொறியல் செய்து சாப்பிடலாம்.

இது ஆயுளை அதிகரிக்கும்.

jh

The post உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினசரி உணவில் இதனை சேர்த்துக்கொள்ளுங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Posted: 28 Aug 2015 08:31 AM PDT

yu

yuகாலை உணவை தவிர்ப்பதால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் சந்திக்ககூடும்.

ஆனால், இன்றைய நவீன உலகில் காலை உணவை தவிர்க்கும் இளைய தலைமுறையினர்கள் ஏராளம்.

அவ்வாறு நாம் காலை உணவை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் நன்றாக இருக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மூன்று வகை உணவுகள்:

1. முழுத்தானிய உணவால் செய்யப்பட்ட சாண்ட்விச், பாலாடைக்கட்டி, ஆப்பிள், அல்லது

2. தக்காளித் துண்டுகள், கோதுமை சாப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கோப்பை அல்லது

3. கோதுமை ரவை, பால், பழத்துண்டுகள்

என்று எளிமையாக இருந்தால் போதும். பழங்களைத் தெரிவு செய்யும்போது மட்டும் விட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தெரிவு செய்யவும்.

ஏனென்றால், விட்டமின் சி இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து மூளைக்கும் ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும்.yu

ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை. தக்காளிப் பழம் ஒன்றை அவசியம் சாப்பிடவும். இதில் விட்டமின் சி தாராளமாக இருக்கிறது.

இட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீக்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உணவுகள் மூலம் கிடைக்கும்.

மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது.

காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் விட்டமின்களும் மூளையைத் துடிப்புடன் செயல்பட உதவுகின்றன.

அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித் துண்டுகள் என்று சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் மிக எளிய வழி, எலுமிச்சம் பழச் சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது.

காலை உணவில் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்துண்டுகளாகச் சாப்பிடலாம்.

பழச்சாறாக அருந்தினால் பாலாடைக்கட்டி சேர்க்கலாம். அல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம்.

சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.

நாம் காலை உணவை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்.

The post காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Annex பகுதியில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில் சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனர்

Posted: 28 Aug 2015 01:56 AM PDT

h

hAnnex பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற குழு ரீதியான தாக்குதல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களை வெளியிட்டுள்ள ரொரன்ரோ காவல்த்துறையினர், சந்தேக நபர்களை இனங்காண்பதற்கு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

Spadina Avenue மற்றும் Bloor Street West பகுதி வீதிச் சந்திப்புக்கு அருகே பாதைச் சந்தினுள் கடந்த 21ஆம் திகதி அதிகாலை 2.50 அளவில் நான்கு சந்தேக நபர்கள் ஒருவரை தாக்கியதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த நபரை நினைவிழக்கும் வரையில் தாக்கிய சந்தேக நபர்கள், அவரை மக்கள் பார்வையில் இருந்து மறைவான ஒரு இடத்துக்கு இழுத்துச் சென்று, அவரிடமிருந்த பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.h

இவ்வாறான நிலையில் சம்பவம் தொடர்பிலான கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதராங்களை வெளியிட்டுள்ள ரொரன்ரோ காவல்த்துறையினர், அவர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மை 416-808-1400 என்ற இலக்கத்தில் அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரை 416-222-8477 (TIPS) என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post Annex பகுதியில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில் சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™