Tamil Star |
- Kensington Market பகுதியில் 3மாடி வீட்டுத் தொகுதிகளில் தீவிபத்து
- யோர்க் பல்கலைக்கழகம் அருகே விபத்தில் சிக்கிய முதியவர் மருத்துவமனையில் மரணம்
- SkyGreece Airlines பயணங்கள் நிறுத்தம் – பயணிகள் அவதி
- கிராமப்புறங்களுக்கான இணைச் சேவையின் வேகத்தினை அதிகரிக்க நடவடிக்கை – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்
- மிசிசாகா குடியிருப்பு பகுதியில சந்தேகத்திற்கு இடமான துப்பாக்கிப் பிரயோகம்
- வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
- உடல்நலக்குறைவின் போது சாப்பிடவேண்டிய உணவுகள்!
| Kensington Market பகுதியில் 3மாடி வீட்டுத் தொகுதிகளில் தீவிபத்து Posted: 27 Aug 2015 08:32 PM PDT
இலக்கம் 39, கிங்ஸ்டன் அவனியூவில் அமைந்துள்ள இந்த வீட்டுத் தொகுதியில் இன்று காலை ஆறு மணியளவில் இந்த தீப் பரவல் ஆரம்பமானது. மிக வேகமாகவே தீவிரமாக பற்றி எரிய ஆரம்பித்த தீயிலிருந்து வெளியாக புகை மூட்டத்தினை ரொரன்ரோ நகர மத்திய பகுதியிலிருந்தே காணக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள வீடுகளின் யன்னல்கள் ஊடாக தீச் சுவாலைகள் வெளியேறியவாறு காணப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதிலும் அந்த வீடுகளில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதனை ரொரன்ரோ தீயணைப்பு படை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தீயணைப்பு முயற்சியில் 12 தீயணைப்பு வாகனங்களும், சுமார் 45 தீயணைப்பு படை வீரர்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. The post Kensington Market பகுதியில் 3மாடி வீட்டுத் தொகுதிகளில் தீவிபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| யோர்க் பல்கலைக்கழகம் அருகே விபத்தில் சிக்கிய முதியவர் மருத்துவமனையில் மரணம் Posted: 27 Aug 2015 08:28 PM PDT
பே வியூ அவனியூ மற்றும் லோறன்ஸ் அவனியூ பகுதியில் கடந்த 16ஆம் திகதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. பேவியூ அவனியூவில் தெற்கு நோக்கிய சாலையில் வாகனத்தினை செலுத்திச் சென்றுகொண்டிருந்த 90 வயது முதியவர், விதிச் சந்திபில் சிவப்பு சமிக்கை விளக்கில் நிற்காது சென்றதாகவும், அப்போது அந்த வழியே வந்த பிறிதொரு வாகனத்துடன் மோதுண்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள்பெற்றுவந்த குறித்த அந்த முதியவர், சிகிச்சைகள் பலனின்றி 25ஆம் திகதி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துடன் தொடர்புடைய மற்றைய வாகனத்தின் சாரதி காயமடைந்தாரா என்ற விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. குறித்த இந்த விபத்து தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். The post யோர்க் பல்கலைக்கழகம் அருகே விபத்தில் சிக்கிய முதியவர் மருத்துவமனையில் மரணம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| SkyGreece Airlines பயணங்கள் நிறுத்தம் – பயணிகள் அவதி Posted: 27 Aug 2015 12:21 PM PDT
நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக தமது சேவைகள் தடைப்பட்டுப் போயுள்ளதாக SkyGreece Airlines அறிவித்துள்ளதுடன், அதன் Twitter மற்றும் Facebook கணக்குகளும் முடங்கிப் போயுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய SkyGreece விமாணப் பயணம் ஒன்று நான்கு நாட்கள் தாமதமானதை அடுத்து இந்த புதிய விமானப் பயணத் தடங்கல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பயணத் தடைகள் காரணமாக அதிருப்தியுற்றுளள பயணிகள் பலரும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தமது சீற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும் SkyGreece Airlines நிறுவனம் தற்போதய இந்த நிலவரம் குறித்து தகவல்கள் எதனையும் ஊடகங்களுக்கு வெளியிட மறுத்து வருகிறது. The post SkyGreece Airlines பயணங்கள் நிறுத்தம் – பயணிகள் அவதி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிராமப்புறங்களுக்கான இணைச் சேவையின் வேகத்தினை அதிகரிக்க நடவடிக்கை – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் Posted: 27 Aug 2015 12:14 PM PDT
தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்றைய நாள் ஒன்ராறியோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பால் பண்ணைத் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி மீண்டும் ஆட்சி அமைக்குமாக இருந்தால், இவ்வாறான தூர தேசங்களில் உள்ள கிராமப்புறங்களிலும் அதிவேக இணையத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார். நாட்டின் நகரப் புறங்களில் இணையச் சேவைகள் மேம்பாடு கண்டுள்ள போதிலும் கிராப் புறங்களில் குறிப்பாக வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் இணைய இணைப்பு இன்னமும் மேம்பாடு காணவில்லை என்பதையம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணையச் சேவை மேம்பாடு மட்டுமின்றி, உள்ளூர் வீதிகள் பாலங்களை புணரமைத்தல், சமூக முன்னேற்ற நிலையங்களை உருவாக்குதல், கிராமப் புறங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், தீயணைப்பு படையினர் ஆகியோருக்கான நிதி உதவிகளை அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகளிலும் பழமைவாதக் கடசி அக்கறை செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் வாக்குறுதிகளை வழங்கியுள்ள போதிலும், பால்பண்ணை துறை உள்ளிட்ட வேளான் துறையினர் எதிர்நோக்கிவரும் பிரதான நெருக்கடிகளுக்கான தீர்வு தொடர்பில் அவர் கருத்துக்களை வெளியிடவில்லை என அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.'' குறிப்பாக பால்பண்ணை துறையினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர், அவர்கள் தற்போது எதிர்நோக்கிவரும் தமது உற்பத்திப் பொருட்களுக்கான வினியோக நெருக்கடிக்கான தீர்வுகள் தொடர்பில் எதனையும் கூறாது, இணையத் தொடர்பு வேகத்தினை அதிகரிப்பது தொடர்பில் பேசியுள்ளமை பல்வேறு மட்டத்திலும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. The post கிராமப்புறங்களுக்கான இணைச் சேவையின் வேகத்தினை அதிகரிக்க நடவடிக்கை – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிசிசாகா குடியிருப்பு பகுதியில சந்தேகத்திற்கு இடமான துப்பாக்கிப் பிரயோகம் Posted: 27 Aug 2015 12:01 PM PDT
நேற்று இரவு 11 மணியளவில் Collegeway பகுதியில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் அதிஸ்டவசமாக இந்த துப்பாக்கிப் பிரயோகங்களால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள போதிலும், சந்தேக நபர்கள் தொடர்பிலான விபரங்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. The post மிசிசாகா குடியிருப்பு பகுதியில சந்தேகத்திற்கு இடமான துப்பாக்கிப் பிரயோகம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! Posted: 27 Aug 2015 08:02 AM PDT
நல்லெண்ணெய்யில் கனிமச்சத்துகள், விட்டமின் ஈ, விட்டமின் பி6, மன்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளன. அதுவும், நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. 1.குடலியக்கம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். 2.நல்லெண்ணெய்யில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். 3.உடல் சூட்டை தணிக்கும். 4.நல்லெண்ணெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 5.ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். 6.இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். 7.நல்லெண்ணெய்யில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். The post வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடல்நலக்குறைவின் போது சாப்பிடவேண்டிய உணவுகள்! Posted: 27 Aug 2015 07:53 AM PDT
காய்ச்சல் காய்ச்சல் நேரத்தில் இட்லி, இடியாப்பம் போன்ற மென்மையான திட உணவுகள் சாப்பிடலாம். திட உணவுகள் சாப்பிட முடியாத போது திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். நொய்க்கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, பார்லி கஞ்சி, சூப், ஜூஸ், மோர், இளநீர் போன்ற நீராகாரங்கள் நல்லது. நீராகாரங்கள் உடலின் சூட்டைக் குறைத்து காய்ச்சல் குறைய உதவும். காய்ச்சல் நேரத்தில் நீர்ச்சத்து குறைந்தால் உடலில் பொட்டாசியம் சத்து குறைந்து கால் நரம்புகள் இழுத்துக்கொள்ளும். ஆகவே காய்ச்சலின் போது கட்டாயம் நீராகாரங்களாவது சாப்பிட வேண்டும். காரம் குறைவாக சாப்பிட வேண்டும். வாந்தி வாந்தி அதிகமாக இருக்கும் போது எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ முடியாது. முதலில் மருத்துவரைப் பார்த்து வாந்திக்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வாந்தி குறைந்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீராகாரங்கள் சாப்பிடுவது தான் நல்லது. நீர்ச்சத்துக் குறைபாட்டை தவிர்க்க நீராகாரங்கள் கொடுக்க வேண்டும்.வாந்தி ஓரளவு கட்டுப்பட்ட பின்னர் இட்லி, இடியாப்பம் போன்றமென்மையான உணவுகளை சாப்பிடலாம். பிஸ்கெட், பழங்கள் சாப்பிடலாம். வயிற்றுப்போக்கு வயிற்றுப்போக்கின் போது உடலின் நீர்ச்சத்து வெகுவாக குறைந்து, உடலின் சக்தி குறைந்து உடல் சோர்ந்து போகும். எனவே ORS (Oral Rehydration Solution) பவுடரை நீரில் கலந்து வயிற்றுப்போக்கு இருப்பவருக்குக் கொடுக்க வேண்டும். மருந்துக் கடைகளில் இது கிடைக்கும் அல்லது வீட்டிலேயே ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு உப்பு, இரண்டு தேக்கரண்டி சர்க்கரை கலந்து கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் பாலை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி நேரத்தில் காரமில்லாத, எண்ணெய் இல்லாத உணவுகள் தான் சாப்பிட வேண்டும். நேரத்துக்கு சாப்பிட வேண்டும். பழைய உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சூட்டினால் வரும் வயிற்று வலியாக இருந்தால் மோர் சாப்பிட வேண்டும். தயிர் சாதம், பிரெட் டோஸ்ட் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள்உணவில் உப்பின் அளவை குறைத்தாலே போதும். மற்றவர்கள் சாப்பிடும் அளவில் பாதியளவு உப்புதான் உணவில் சேர்க்க வேண்டும். அதாவது, தினசரி5 கிராம் என்ற அளவிற்கு உப்பு எடுத்துக்கொண்டால் போதும். மோர், தயிர் போன்றவற்றில் உப்பை தவிர்க்க வேண்டும். இயல்பாகவே உப்பு நிறைந்த ஊறுகாய், மோர் மிளகாய், வற்றல், அப்பளம் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. உணவில் எண்ணெயையும் குறைக்க வேண்டும். அசைவ உணவுகளில் மீன், கோழி மட்டும் சாப்பிடலாம், அதுவும் குழம்பாக செய்தே சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்தது வேண்டாம். மாதம் முழுவதிற்கும் சேர்த்து அரை லிட்டர் எண்ணெய்தான் பயன்படுத்த வேண்டும். அதிலும் தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை வேண்டாம். Mono Unsaturated Oil எனப்படும் நல்ல எண்ணெய்களே சிறந்தவை. ரத்தசோகை உடலில் தேவையான இரும்புச்சத்து இல்லாவிட்டால் ரத்த அணுக்கள் உற்பத்தி குறையும். இதனால் பலவீனமாக, சோர்வாக உணர்வார்கள். தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும். அதனால் இவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சைவ உணவுக்காரர்கள் கீரை வகைகள், கேழ்வரகு, வேர்க்கடலை, பாதாம், முந்திரி, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, எள், உருளைக்கிழங்கு, பீன்ஸ், அத்திப்பழம் போன்றவற்றில் இருந்து உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தினை பெற முடியும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் நன்கு உறிஞ்சிக் கொள்ள சிட்ரிக் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். The post உடல்நலக்குறைவின் போது சாப்பிடவேண்டிய உணவுகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இன்று காலை Kensington Market பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில், மூன்று மாடிகளில் அமைந்துள்ள தொடர் வீடுகள் சில தீக்கிரையாகியுள்ளன.
யோர்க் பல்கலைக்கழகத்தின் Glendon வளாகப் பகுதிக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமையும் வியாழக்கிழமையும் ரொரன்ரோவில் இருந்து மேற்கொள்ளும் பயணங்கள் பலவற்றை நிறுத்தியமையால் பயணிகள் பலரும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கிராமப்புறங்களுக்கான இணைச் சேவையின் வேகத்தினை அதிகரிக்கும் வகையில் 200 மில்லியன் டொலர்களை செலவிடவுள்ளதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளார்.
மிசிசாகா குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
உடல்நலக்குறைபாடுகள் ஏற்படும்போது சாப்பிடும் உணவுகளில் கவனம் தேவை.