Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நோர்த் யோர்க் வாகன விபத்தில் காயமடைந்திருந்த 88 வயது முதியவர் உயிரிழப்பு

Posted: 17 Aug 2015 08:52 PM PDT

i

iநோர்த் யோர்க் பிராந்தியத்தில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இரண்டு வாகனங்கள் விபத்துக்கள்ளான சம்பவம் ஒன்றில் காயமடைந்திருந்த முதியவர் பின்னர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி காலை 11.30 மணியளவில் Keele வீதி மற்றும் Maple Leaf Drive பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Keele வீதியின் வடக்குத் தடத்தில் Toyota Corolla வாகனம் ஒன்றை இந்த 88 வயதான முதியவர் செலுத்தி வந்திருந்தார் என்றும் அப்போது திரும்புவதற்கு காத்திருந்த வேறொரு ரக் ரக வாகனம் ஒன்றுடன் முதியவரின் வாகனம் மோதி வித்துக்குள்ளானதாகவும் காவல்த்துறையினர் விபரித்துள்ளனர்.

இதன் போதே குறித்த முதியவர் மோசமான காயங்களுக்கு உள்ளானதாகவும், உடனடியாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் முதியவருக்கு ஏற்பட்டிருந்த காயம் காரணமாக ஓகட்ஸ்ட் மாதம் 13 ஆம் திகதி முதியவர் உயிரிழந்தாக காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்த விபத்துத் தொடர்பில் தகவல்கள் தெரிவிக்க விரும்புபவர்கள் காவல்த்துறையினருடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post நோர்த் யோர்க் வாகன விபத்தில் காயமடைந்திருந்த 88 வயது முதியவர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

14வயது சிறுவனைக் காணவில்லை – பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது காவல்த்துறை

Posted: 17 Aug 2015 03:05 PM PDT

p

p14வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Giles Bennitt-Francois என்ற சிறுவனே காணாமல் போயுள்ளதாகவும், Church மற்றும் Gerrard வீதிப் பகுதியில் திங்கட்கிழமை பிற்பகல் 1 மணியளவில் கடைசியாக காணப்பட்டார் என்றும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்றும், ஏறத்தாழ் 5 அடி ஏழு அங்குளம் உயரமுள்ள, நடுத்தர உடல்கட்டு வாக்கான சிறுவன் என்றும் அடையாளப்படுத்தியுள்ள காவல்த்துறையினர், சிறுவனின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

p

சிறுவன் காணாமல் போயுள்ள நிலையில், சிறுவனின் பாதுகாப்பு தொடர்பில் தாம் கவலை அடைந்துள்ளதாகவும், சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மிடம் தொடர்புகொள்ளுமாறும் காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காவல்த்துறையினருடன் 416-808-5100 என்ற இலக்கத்திலும், குற்றத்தடுப்புப் பிரிவினருடன் 416-222-TIPS (8477).என்ற இலக்கத்திலும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post 14வயது சிறுவனைக் காணவில்லை – பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது காவல்த்துறை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென்கிழக்கு பகுதியில் மேலும் காட்டுத் தீ

Posted: 17 Aug 2015 12:14 PM PDT

m,bgjkghj

m,bgjkghjபிரிட்டிஷ் கொலம்பியாவின் தென்கிழக்கு பகுதியில் நேற்று இரவு புதிதாக ஏற்பட்ட மூன்று காட்டுத் தீச் சம்பவங்களில் பல வீடுகள் எரிந்து தரைமட்டமாகியுள்ளதுடன் பல நூற்றுக் கணக்கானோர் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Rock Creek பகுதியில் ஒரு காட்டுத் தீச் சம்பவமும், சுற்றுலா பிரதேசமான Oliver நகரை அண்டியுள்ள பகுதிகளில் இரண்டு காட்டுத் தீச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அந்த பகுதிகளில் தற்போது கடுமையான வரட்சி நிலவுவதாலேயே இந்த காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று இரவு ஏற்பட்ட இந்த புதிய காட்டுத் தீச் சம்பவங்களில் குறைந்தது 29 வீடுகள் முற்றாக எரிந்து தரைமட்டமானதும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Rock Creek பகுதியில் கடந்த வியாழக்கிழமையே சிறிய அளவில் உருவான காட்டுத் தீ, நேற்று இரவு சுமார் 3,700 ஹெக்டர் நிலப்பரப்பை சூழ்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த காட்டுத் தீ மனிதர்களாலேயே உருவாகியிருக்க கூடும் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.m,bgjkghj

இதேவேளை Oliver பகுதியில் ஏற்பட்ட இரு காட்டுத் தீப் பரவலும் மின்னல் தாக்கம் காரணமாக ஏற்பட்டதாகவும், நேற்று இரவு வரையில் சுமார் 1,800 ஹெக்டர் பரப்பளவுக்கு தீ பரவியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டுத் தீச் சம்பவங்களை கட்டுப்படுத்த தம்மாலான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும், அனைத்து வளங்களும் பயன்படுத்தப்படும் என்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர் Christy Clark அறிவித்துள்ளார்.

The post பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென்கிழக்கு பகுதியில் மேலும் காட்டுத் தீ appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பித்திருந்தவர் தாமாகவே கனடாவை விட்டு வெளியேறினார்

Posted: 17 Aug 2015 11:29 AM PDT

jhghmkb m

jhghmkb mநாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த ஆறு ஆண்டுகளாக வன்கூவரில் உள்ள தேவாலயம் ஒன்றிலே தஞ்சமடைந்திருந்த KGB எனப்படும் ரஷ்ய உளவுத் துறையின் முகவர் ஒருவர், தற்போது தானாகவே கனடாவை விட்டு வெளியேறியுள்ளார்.

மிக்கெய்ல் லெனிக்கோவ் எனப்படும் அந்த நபர் கனேடிய எல்லைக் காவல் துறையினருடன் பேச்சுக்களை மேற்கொண்டு தற்போது நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டதாக குறித்த அந்த நபரின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

குறித்த அந்த புலனாய்வு முகவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு 2009ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், நாடு கடத்தப்படுவதனைத் தடுக்கும் பொருட்டு பிரிட்டிஷ் கொலம்பியாவின் தேவாலயம் ஒன்றில் சமய ரீதியில் தஞ்சமடைந்திருந்த அவர், அண்மைய நாட்கள் வரையில் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்துள்ளார்.

குறித்த அந்த நபர் 1980களில் ரஷ்ய உளவுத் துறையில் பணியாற்றிவந்த காரணத்தினால், அவர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என கனேடிய குடிவரவுத் துறை அறிவித்திருந்தது.jhghmkb m

எனினும் தான் ரஷ்ய உளவுத் துறையில் பணியாற்றியதை 1999இல் கனேடிய அரசாங்கத்திடம் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்த அவர், தான் அழுத்தங்களின் காரணமாக விருப்பம் இல்லாத நிலையிலேயே அங்கு பணியாற்றியதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த அந்த நபர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ள போதிலும் அவரின் மனைவியும், மகனும் தற்போது கனேடிய குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாக அவரின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

The post நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பித்திருந்தவர் தாமாகவே கனடாவை விட்டு வெளியேறினார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவின் புலமைப் பரிசில் வாயிலாக இலங்கையர்கள் பயனடைவு

Posted: 17 Aug 2015 11:16 AM PDT

yuoykyu

yuoykyuகனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில்கள் காரணமாக இலங்கையின் மொரட்டுவ மற்றும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பயன் அடையவுள்ளார்கள்.

எலிசபெத் மகாராணியார் முடிசூடி்க் கொண்ட 60 வருட நிறைவை ஒட்டி, இந்த புலமைப்பரிசில்கள் கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது.

பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுக்கு இந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான புலமைப் பரிசில்கள் மொரட்டுவ மற்றும் பேராதனை பல்கலைக் கழகங்கள் பெறுகின்றன.yuoykyu

இதற்கு அமைய எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியில், நான்கு கோடி கனேடிய டொலர் பெறுமதியான 1,500 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post கனடாவின் புலமைப் பரிசில் வாயிலாக இலங்கையர்கள் பயனடைவு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தாய் இறந்துகிடந்தமை தொடர்பில் மகன் கைது – பிரம்டனில் சம்பவம்

Posted: 17 Aug 2015 10:47 AM PDT

fhfh

fhfhபிரம்டனில் உள்ள வீடு ஒன்றில் தயார் இறந்து கிடந்த நிலையில், மகன் மீது இரண்டாம் தரக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெற்கு Kennedy வீதியில் உள்ள குறித்த வீட்டிற்கு வருமாறு சனிக்கிழமை காலை 11.10 மணியளவில் தமக்கு அழைப்பு வந்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாம் குறித்த இடத்திற்கு சென்ற போது பெண் ஒருவர் அசைவுகள் எதுவும் அற்றநிலையில் கிடந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அந்த பெண் உயிரிழந்து விட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை தடுத்து வைத்துள்ளனர்.fhfh

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபர் உயிரிழந்த பெண்ணின் மகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தடுத்து வைக்கப்பட்டு்ள்ள மகனின் விபரங்களை காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

The post தாய் இறந்துகிடந்தமை தொடர்பில் மகன் கைது – பிரம்டனில் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™