Tamil Star |
- பெண்களின் பாவாடை அசைவதை படம் எடுக்க முயன்ற இளைஞர் கைது
- 14 வயது பெண் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் 18 வயது இனைஞன் கைது
- கட்டத்தில் இருந்து விழுந்த பணியாளர் மருத்துவமனையில் அனுமதி
- அதிகாலை St. Catharines பகுதியில் வீதி விபத்து – இருவர் உயிரிழப்பு
- ஒன்ராறியோ ஆசிரியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கங்களுடன் பேச்சு – மாகாண கல்வி அமைச்சர்
- வடக்கு ரொரன்ரோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பதின்மவயது இளைஞர் பலி
- கொழுப்பால் உண்டாகும் இதயநோய்: இதோ குறைக்கும் வெங்காயத்தாள்
- வாகனத் தரிப்பிடங்கள் சிலவற்றிற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன
- மிசிசாகாவில் கொள்ளைச் சம்பவம்
- வாகனம் தீப்பற்றிக் கொண்டதால் டவுன்ரவுண் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
- கனடாவின் பிரதான மூன்று கட்சிகளுக்கும் மக்கள் சமமான ஆதரவு
- அதிகாலையில் பிரம்டனில் விபத்து – ஒருவர் படுகாயம்
- Gagetown இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்ட வீரர் உயிரிழப்பு
- அழிவை ஏற்படுத்தும் சாசேஜ், ஜங்க் உணவுகள்!
- ரொரன்ரோ நிலக்கீழ் சுரங்கப்பாதை விபத்தின் 20ஆம் ஆண்டு இன்று
- புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பில் கத்தலின் வின்
- பிரம்டனில் கனரக வாகனம் காருடன் மோதி விபத்து: ஒருவர் பலி
- கியூபெக்கின் தொழிற்சங்கங்கள் NDPக்கு ஆதரவு
- நோர்த் யோர்க் விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில்
- பத்தாயிரம் அகதிகள் கனடாவினுள் உள்வாங்கப் படவுள்ளனர் – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்
| பெண்களின் பாவாடை அசைவதை படம் எடுக்க முயன்ற இளைஞர் கைது Posted: 13 Aug 2015 10:52 PM PDT
York Mills Subway Station நிலையத்தில் ஓகஸ்ட் மாதம் பிற்பகல் 7.55 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றதாக இன்று வியாழக்கிழமை காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். குறித்த நிலையத்தினூடாக 29 வயது பெண் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது, குறித்த நபர் அவரை பின்புறமாக நெருங்கி அவரின் பாவாடை அசைவதை தனது கைபேசியில் படம் எடுக்க முயன்றதாக காவல்த்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனை நிலையத்தில் இருந்தவர்கள் அவதானித்ததாகவும், பின்னர் அந்த இடத்திற்கு காவல்த்துறையினர் செல்லும் வரையில், படம் எடுத்த குறித்த நபரைப் பிடித்து வைத்திருந்து காவல்த்துறையினரிடம் ஒப்படைத்திருந்தனர் என்றும் கூறியுள்ளனர். பின்னர் அவரிடம் காவல்த்துறையினர் நடத்திய சோதனையின் பேது, அவ்வாறான பல படப் பதிவுகள் அவரின் கைபேசியில் இருப்பதைக் காவல்த்துறையினர் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த காவல்த்துறையினர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். அத்துடன் 31 வது அமர் ஹசன் (Ammar Hasan) என்ற குறித்த நபரின் புகைப்படத்தையும் காவல்த்துறையினர் வெளியிட்டுள்ளதுடன், இந்த நபரினால் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இருக்கலாம் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 416-808-3200 என்ற இலக்கத்திற்கு அல்லது 416-222-TIPS (8477) என்ற இலக்கத்திற்க அழைத்து தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். The post பெண்களின் பாவாடை அசைவதை படம் எடுக்க முயன்ற இளைஞர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 14 வயது பெண் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் 18 வயது இனைஞன் கைது Posted: 13 Aug 2015 09:08 PM PDT
ecent Ross என்ற அந்த 14 வயது சிறுமி கடந்த யூலை மாதம் 9 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் Kipling அவனியூ மற்றும் Albion வீதிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உணர்வற்ற நிலையில் இருந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டடிருந்தார். எனினும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு மணித்தியாளத்தின் பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அந்த சிறுமி உயிரிழந்த நிலையில் அது தொடர்பான விசாரணைகளை காவல்த்துறையினர் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே தற்போது இந்த சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post 14 வயது பெண் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் 18 வயது இனைஞன் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கட்டத்தில் இருந்து விழுந்த பணியாளர் மருத்துவமனையில் அனுமதி Posted: 13 Aug 2015 03:32 PM PDT
இந்த தகவைல வெளியிட்டுள்ள ரொரன்ரோ காவல்த்துறையினர், இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். Yonge and Merton பகுதியில் காலை 8 மணிக்க சற்று முன்னராக இந்த விபத்து சம்பவித்தது என்று ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். விபத்தை அடுத்தும் அவர் சீரான சுவாசத்துடனும், சுய உணர்வுடனும் இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவத்தை அடுத்து தொழிலாளர் துறையின் அமைச்சுக்க தகவல் தெரிவிக்கப்பட்டு குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வருகின்றன. இந்த விபத்தை அடுத்து Yonge Street போக்குவரத்திற்கு மூடப்பட்டு பின்னர் மீண்டும் திறந்து விடப்பட்டது. The post கட்டத்தில் இருந்து விழுந்த பணியாளர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிகாலை St. Catharines பகுதியில் வீதி விபத்து – இருவர் உயிரிழப்பு Posted: 13 Aug 2015 11:52 AM PDT
Catharines இல் 7th Street மற்றும் 3rd Avenue Louth பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இவர்கள் இருவரும் பயணித்த உந்துருளி, ஜீப் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டதாகவும், படுகாயங்களுக்கு உள்ளான இவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய மற்றைய வாகத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும், சிறிய காயங்களுடன் காணப்படட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த அந்த பகுதி ஊடான போக்குவரத்துகளும் சில மணி நேரங்களுக்கு தடை செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. The post அதிகாலை St. Catharines பகுதியில் வீதி விபத்து – இருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோ ஆசிரியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கங்களுடன் பேச்சு – மாகாண கல்வி அமைச்சர் Posted: 13 Aug 2015 11:07 AM PDT
அடுத்த மாதம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில், மீண்டும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபடுவதனை தடுக்கும் வகையில் தாம் இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்ராறியோவின் அரச பாடசாலை ஆசிரியர்கள் கடந்த கோடை காலத்தில் இருந்தே ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப் படாத வகையில் பணியாற்றி வரும் நிலையில், ஒன்ராறியோ ஆங்கில கத்தோலிக்க ஆசிரியர்கள் சங்கத்துடன், ஒப்பந்தங்கள் தொடர்பிலான பேச்சுக்கள் நேற்று ஆரம்பமாகியுள்ளன. அதேபோல ஒன்ராறியோ இடைநிலை பாடசாலை ஆசிரியர்கள் சங்கமும் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இணக்கம் வெளியிட்டுள்ளது. இவ்வாறான பேச்சுகளின் ஊடாக உரிய இணக்கப்பாட்டினை எட்டுவதை உறுதிப்படுத்துவதிலேயே அனைவரும் மிகவும் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப இணங்கியுள்ளமை தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் சங்கத்துடனான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்ற போதிலும், அவை தொடர்பிலான முனைப்புக்களும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இறுதிகட்ட இணக்கப்பாட்டினை எட்டுவது மிகவும் கடுமையான காரியம் என்று போதிலும், அதற்கான முனைப்புக்களில் தாம் அனைவரும் கடுமையாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். The post ஒன்ராறியோ ஆசிரியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கங்களுடன் பேச்சு – மாகாண கல்வி அமைச்சர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடக்கு ரொரன்ரோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பதின்மவயது இளைஞர் பலி Posted: 13 Aug 2015 09:11 AM PDT
MacNab Street North மற்றும் Simcoe Street West பகுதியில் நேற்று இரவு 8.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் 18 வயதான ஷெரிக் டவ்ஸ்(Shariek Douse) என்பதனை பலியானவரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தாம் ஒரு சந்தேக நபரைத் தேடி வருவதாகவும், இந்த துப்பாக்கிச் பிரயோகத்தினை நேரில் கண்டோர் தமக்கு தகவல் வழங்கி உதவுமாறும் காவல்த்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். The post வடக்கு ரொரன்ரோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பதின்மவயது இளைஞர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொழுப்பால் உண்டாகும் இதயநோய்: இதோ குறைக்கும் வெங்காயத்தாள் Posted: 13 Aug 2015 07:57 AM PDT
சத்துக்கள் வைட்டமின் C, வைட்டமின் B2, வைட்டமின் A, வைட்டமின் k மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன. மருத்துவ பயன்கள் வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது, இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது. வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வெங்காயத்தாளில் உள்ள க்யூயர்சிடின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஹிஸ்டமின் எதிர்ப்பு (திசுநீர் தேக்கி எதிர்ப்பு) போன்ற நன்மைகளை வழங்குகிறது. இது கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும் வகையில் ஒரு நல்ல காய்கறியாக இருக்கிறது. வெங்காயத்தாள் முட்டை பொரியல் கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும். வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும். முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். சுடுசாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். பொரியலாகவும், சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
The post கொழுப்பால் உண்டாகும் இதயநோய்: இதோ குறைக்கும் வெங்காயத்தாள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாகனத் தரிப்பிடங்கள் சிலவற்றிற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன Posted: 12 Aug 2015 09:21 PM PDT
பாவனையின் அடிப்படையில் இந்த இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோவின் வாகனத் தரிப்பிடங்கள் தொடர்பான அதிகாரத்துவ தலைவரான Lorne Persiko தெரிவித்துள்ளார். அந்தந்த இடங்களை கவனத்தில் கொண்டு அரை மணித்தியாளம், நாள், மாதம் என்ற கால அளவில் கட்டணங்கள் தீர்மாணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் பிரகாரம் city hall பகுதி தரிப்பிடத்திற்கான கட்டணம் 25 சதத்தினால் அதிகரிக்கப்பட்டு 2.75 டொலராக அதிககரிக்கப்படுகிறது. அவ்வாறே மாதாந்தக் கட்டணம் 270 டெரில் இருந்து 300 டொலருக்கு அதிகரிக்கப்படவுள்ளது. The post வாகனத் தரிப்பிடங்கள் சிலவற்றிற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிசிசாகாவில் கொள்ளைச் சம்பவம் Posted: 12 Aug 2015 08:21 PM PDT
Dixie வீதிக்கும் அருகில் Shawson Drive பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 9.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நிலையத்தினுள் நுளைந்த ஆண் நபர் ஒருவா துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பயணத்தை கொள்ளையிட்ட அந்த நபர் வாகனம் ஒன்றில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் குறித்த நிலையத்தில் இருந்து கொள்ளையிட்டுச் சென்றவர் வெள்ளையினத்தை சேர்ந்த 20 வயதுகள் மதிக்கத்தக்க ஐந்து அடி ஏழு அங்குல உயரம் உரையவர் என காவல்த்துறை விபரித்துள்ளது. எனினும் கொள்ளையிட்ட போது அந்த நபர் முகத்தை மறைந்து மூடியிருந்தார் என்றும் வலது கையில் கறுப்பு நிற கையுறை அணிந்திருந்தார் என்றும் காவல்த்துளையினர் அடையாளப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதான முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்பட்வில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்த்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. The post மிசிசாகாவில் கொள்ளைச் சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாகனம் தீப்பற்றிக் கொண்டதால் டவுன்ரவுண் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு Posted: 12 Aug 2015 03:11 PM PDT
காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில் தீப்பற்றிய வாகனத்தில் இருந்து பெருமளவிலான அடர்ந்த கரும் புகை வெளியேறி அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. ரொரன்ரோ காவல்த்துறையினரும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருந்திருந்ததுடன், நிலைமையை சீர் செய்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். வாகனத்தின் ஓட்டுநர் அதில் இருந்து தப்பியிருந்தார் என்றும், அவருக்கு காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
காவல்த்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், வாகனம் தீப்பற்றியதற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த விபத்தின் காரணமாக Lake Shore Boulevard இல் இருந்து Front வீதி வரையிலான York வீதியின் தெற்குத் தடங்கள் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தன. The post வாகனம் தீப்பற்றிக் கொண்டதால் டவுன்ரவுண் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவின் பிரதான மூன்று கட்சிகளுக்கும் மக்கள் சமமான ஆதரவு Posted: 12 Aug 2015 12:07 PM PDT
கனேடிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையேயான நெரடி நிகழ்வு கடந்த வாரத்தில் இடம்பெற்ற நிலையில், அதற்கு அடுத்துவந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின் பிரகாரம் புதிய சனநாயக கட்சி ஓரளவு முன்னிலை பெற்று 33 சதவீத மக்களின் ஆதரவினையும், பழமைவாதக் கட்சி 31 சதவீத மக்களின் ஆதரவினையும், லிபரல் கட்சி 28 சதவீத மக்களின் ஆதரவினையும் பதிவு செய்துள்ளது. பசுமைக் கட்சி மற்றும் Bloc Quebecois ஆகியவற்றுக்கு நான்கு சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஒன்பது சதவீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர். இதேவேளை தாம் வாக்களிக்கப் போவதில்லை எனவும், வாக்குகளை செல்லுபடியற்றதாக்க போவதாகவும் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் நான்கு சதவீதமானோர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற நேரடி விவாத நிகழ்வின் வெற்றியாளர் லிபரல் கட்சித் தலைவர் என 26 சதவீதமானோரும், Tom Mulcair என 25 சதவீதம் பேரும், பிரதமர் என 21 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். The post கனடாவின் பிரதான மூன்று கட்சிகளுக்கும் மக்கள் சமமான ஆதரவு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிகாலையில் பிரம்டனில் விபத்து – ஒருவர் படுகாயம் Posted: 12 Aug 2015 11:39 AM PDT
Dixie வீதி மற்றும் Queen Street பகுதியில் அமைந்துள்ள வீதிச் சந்திப்பில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. வாகனம் ஒன்றினால் மோதுண்ட குறித்த அந்த ஆண் பாதசாரி பாரதூரமான காயங்களுக்கு உள்ளானதாகவும், உடனடியாகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்க அனுப்பி வைக்கப்பட்டதாகவும சம்பவ இடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ரொரன்ரோ சணிபுரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என நம்பப்படுவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவத்தமைக்கான காரணம் தொடர்பிலோ, சம்பவம் தொடர்பில் யார் மீதாவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டமை தொடர்பிலோ காவல்த்துறை தரப்பினரால் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. The post அதிகாலையில் பிரம்டனில் விபத்து – ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Gagetown இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்ட வீரர் உயிரிழப்பு Posted: 12 Aug 2015 11:13 AM PDT
சாமுவேல நாடோவ்(Samuel Nadeau) எனப்படும் அந்த இராணுவ வீரர் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்ததாக இராணுவத் தரப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அந்த வீரரின் மரணம் தொடர்பில் கனேடிய இராணுவத்தின் தேசிய விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் அவரது மரணத்தில் சந்தேகப்படும் படியான சம்பவங்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த அந்த நபர் கடந்த சனவரி மாதத்திலேயே கனேடிய படையில் இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. The post Gagetown இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்ட வீரர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அழிவை ஏற்படுத்தும் சாசேஜ், ஜங்க் உணவுகள்! Posted: 12 Aug 2015 07:16 AM PDT
உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள். இதற்கு மாறாக சிலவகை உணவுகள் மூளைச் செயல்பாட்டை அழிக்கும் உணவாகவே இருக்கிறது. அண்மையில் மாண்ட்ரியல் பல்கலைகழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் படி, ஜங்க் உணவுகள் நமது மூளையில் உள்ள ரசாயனத்தை மாற்றி, அவை மனஅழுத்தம் மற்றும் கவலை நிலைக்கு ஆளாக்கும். அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு பழகி விட்டு, அதனை நிறுத்தும் போதும் இதே போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த வகை உணவுகள், டோபமைன் உருவாவதை தடுக்கிறது. டோபமைன் என்பது சந்தோஷம் மற்றும் நல்ல உடல் வளம் பெற உதவி செய்யும் இரசாயனம். அதுமட்டுமல்லாது, டோப மைன் அறிவுத்திறன், விழிப் புணர்வு, ஊக்கத்திறன் மற்றும் ஞாபகத்திறன் போன்றவற்றிற்கும் உதவுகிறது. அதேபோன்று சாசேஜ் உணவுகளால் மனிதன் அதிகமான ஆரோக்கியமான பிரச்சனைகளை சந்திக்கிறான். சாசேஜ் அதிகம் உட்கொள்வதால் பெருங்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஜேர்மனி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்ற 4,500 நபர்களில் பெரும்பாலானோர் பெருங்குடல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இது புற்று நோய்க்கான அறிகுறியென தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், புதுவகை உணவு பழக்கவழக்கங்களால் நோய் வாய்ப்புகளும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டனர். மேலும் இறைச்சி போன்ற உணவு வகைகளை நெருப்பிலிட்டு வாட்டும்போது வெளியேறும் புகையை சுவாசிப்பதும் ஆபத்து என தெரிவித்துள்ளனர். The post அழிவை ஏற்படுத்தும் சாசேஜ், ஜங்க் உணவுகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ நிலக்கீழ் சுரங்கப்பாதை விபத்தின் 20ஆம் ஆண்டு இன்று Posted: 11 Aug 2015 08:55 PM PDT
1995ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி, St. Clair West மற்றும் Dupont நிலையங்களுக்கு இடைப்பட்ட சுரங்கப்பாதையில் இரண்டு தொடரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததுடன் 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். விபத்து இடம்பெற்ற வேளையில் இரண்டு தொடரூந்துகளிலும் 200 க்கும் அதிகமான பயணிகள் இருந்த நிலையில், விபத்தினை அடுத்து தொடரூந்து பெட்டிகளில் இருந்த பலரும் பலத்த சிரமத்தின் பின்னரே வெளியே கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மனித வழு மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளின் ஒருங்கிணைந்த தவறுகள் காரணமாக இந்த விபத்து நேர்தது என்பது பின்னர் விசாரணைகளின் மூலம் தெரியவந்தது. 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தினையும், அதன் போது பாதிக்கப்பட்ட மக்களையும் தமது போக்குவரத்து சேவை இன்றைய தினம் நினைவு கூர்வதாக ரொரன்ரோ போக்குவரத்து கழகமும் அறிவித்துள்ளது. The post ரொரன்ரோ நிலக்கீழ் சுரங்கப்பாதை விபத்தின் 20ஆம் ஆண்டு இன்று appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பில் கத்தலின் வின் Posted: 11 Aug 2015 08:32 PM PDT
இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு மாநில அரசாங்கம் விடுத்த கோரிக்கையை மத்திய அரசாங்கம் கடநத் யூலை மாதத்தில் நிராகரித்ததை தொடர்ந்து, மாநிலத்தின் இந்த ஓய்வூதிய திட்டம் தேக்கநிலை அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையிலேயே இந்த திட்டம் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை முதல்வர் கத்தலின் வின் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ராறியோவின் இந்த ஓய்வூதிய திட்டத்தினை நிராகரிப்பதன் வாயிலாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காண்பித்து வருவதான குற்றச்சாட்டுக்களை கத்தலின் வின் தொடரந்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மத்திய அரசின் அனுசரணை இல்லாவிட்டாலும் இந்த திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் ஒன்ராறியோ முதல்வர் சூழுரைத்திருந்தார். வேலையிட ஓய்வூதியத்தினை பெற்றுக்கொள்ளாத சுமார் மூன்று மில்லியன் ஒன்ராறியோ மக்களுக்கு ஓய்வூதித்தினை வழங்க ஏற்பாடு செய்யும் இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்ராறியோ மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. The post புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பில் கத்தலின் வின் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்டனில் கனரக வாகனம் காருடன் மோதி விபத்து: ஒருவர் பலி Posted: 11 Aug 2015 03:51 PM PDT
விமானநிலைய வீதியில் Williams Parkwayக்கு அருகே இன்று பிற்பகல் 2.47 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினை சென்றடைந்த போது, விபத்தில் சிக்கிய கனரக வாகனம் கவிழ்ந்த நிலையில் காணப்பட்டதாகவும், காருக்குள் ஒருவர் சிக்குண்டிருந்ததாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரை காரினுள் இருந்து வெளியே கொண்டுவந்து காப்பாற்றுவதற்கு பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தினால் அந்த வீதியில் இருந்த பல மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன. விபத்தினை அடுத்து விமான நிலைய வீதி ஊடான போக்குவரத்துகள் சில மணி நேரங்களுக்கு தடைசெய்யப்பட்டிருந்தன. The post பிரம்டனில் கனரக வாகனம் காருடன் மோதி விபத்து: ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கியூபெக்கின் தொழிற்சங்கங்கள் NDPக்கு ஆதரவு Posted: 11 Aug 2015 03:42 PM PDT
தம்முறைய அங்கத்துவ தொழிற்சங்கங்கள் பல இவ்வாறு தமது ஆதரவினை புதிய சனநாயக கட்சிக்கு வழங்க முன்வந்தள்ளமை தொடர்பிலான தீர்மானத்தினை மாநிலத்தின் மிகப்பெரும் தொழிங்சங்கங்கின் சம்மேளனம் கட்சித் தலைவர் Tom Mulcair இடம் தெரிவித்துள்ளது. தமக்கு ஆதரவளிப்பதான் இந்த தீர்மானம் தம்மை மிகவும் பெருமை கொள்ள வைத்துள்ளதாக Tom Mulcair புளகாங்கிதம் வெளியிட்டுள்ளார். மத்திய மாநில ரீதியில் பிரிவினைக் கோரிக்கையினை வலியுறுத்தி வந்த கட்சிகளுக்கு இதுவரை ஆதரவளித்துவந்த தொழிற்சங்கங்கள் தற்போது தமக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும், இவ்வாறான ஆதரவினை பெற்றுக் கொள்வதற்கு தாமும் பல்வேறு பிராயத்தனங்களை மேற்கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கியூபெக்கின் மிகப் பெரும் தொழிற்சங்கங்களின் சம்மேளனமாக FTQ அரசியலில் மிகுந்த செல்வாக்கினை செலுத்தி வருவதுடன், அந்த சம்மேளனத்தில் 37 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் ஆறு இலட்சம் பேர் வரையில் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. The post கியூபெக்கின் தொழிற்சங்கங்கள் NDPக்கு ஆதரவு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நோர்த் யோர்க் விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் Posted: 11 Aug 2015 03:38 PM PDT
இதனை அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அவரிற்கு ஏற்பட்ட காயங்கள் உயிராபத்தானவையாக இருக்கும் என தாம் நம்பவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். Wilson அவனியூ மற்றும் Keele வீதிச் சந்திப்பில் நடு இரவிற்கு சற்று முன்னராக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதேவேளை இந்த விபத்து தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். The post நோர்த் யோர்க் விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பத்தாயிரம் அகதிகள் கனடாவினுள் உள்வாங்கப் படவுள்ளனர் – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் Posted: 11 Aug 2015 03:34 PM PDT
கனடாவில் வெளிநாட்டு குடிவரவாளர்களை பெருமளவு எண்ணிக்கையில் கொண்ட ரொரன்ரோவில் நேற்றைய தினம் உரையாற்றும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தீவிரவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் பிராந்தியங்களில் உள்ள சிறுபான்மையின ஏதிரிகள் தொடர்பில் எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு தாம் கவனம் எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் இருந்து 2014ஆம் ஆண்டு இறுதிக்குள் 1,300 அகதிகளை உள்வாங்குவதாக 2013ஆம் ஆண்டில் உறுதியளித்திருந்த பழமைவாதக் கட்சி அரசாங்கம், 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த இலக்கினை எட்டியமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து மேலும் 10,000 பேரை உள்வாங்கப் போவதாக கடந்த சனவரியில் அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த திட்டத்தின் கீழ் இதுவரை எவ்வளவு பேர் வந்துள்ளனர் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. இவ்வாறான நிலையில் தற்போது சுமார் 2,500 சிரியர்கள் கனடாவில் வாழ்ந்து வருவதாக நேற்றைய தினம் ஆற்றிய உரையில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். The post பத்தாயிரம் அகதிகள் கனடாவினுள் உள்வாங்கப் படவுள்ளனர் – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பெண்களின் பாவாடை அசைவதை படம் எடுக்க முயன்றதாக இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
Rexdale பகுதியில் கடந்த மாதம் 14 வயது பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 18 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.
கட்டடம் ஒன்றின் (midtown condo building) ஐந்தாவது தளத்தில் இருந்து விழுந்த பணியாளர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலையில் St. Catharines பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உந்துருளி ஒன்றில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஒன்ராறியோ ஆசிரியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கங்களுடன் பேசி ஒரு தீர்வைக் காண்பதற்கு தாம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு ரொரன்ரோவின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பதின்மவயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஹமில்ட்டன் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெங்காயத்தாளில் உள்ள அதிகளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது.


வாகனத் தரிப்பிடங்கள் சிலவற்றிற்கான கட்டணங்கள் அதிகரிப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
மிசிசாகாவின் Canadian Tire gas bar ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.
டவுன்ரவுண் சந்திப்புப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை வாகனம் ஒன்ற திடீரென தீப்பற்றிக் கொண்டதனால் குறித்த பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டு இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ் வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது.
ரொரன்ரோ வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான நிலக்கீழ் சுரங்கப்பாதை விபத்து இடம்பெற்ற இருபதாவது ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது.
ஒன்ராறியோவின் புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பிலான மேலதிக விபரங்களை ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்டன் பகுதியில் இன்று பிற்பகல் இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகனம் ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கியூபெக்கில் Bloc Quebecois கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவந்த தொழிற்சங்கங்கள் பல தமது ஆதரவினை புதிய சனநாயக கட்சிக்கு வழங்க தீர்மானித்துள்ளன.
நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோசமான காயங்களுக்கு ஆளான ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால், மத்திய கிழக்கு நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து மேலும் பத்தாயிரம் அகதிகளை கனடாவினுள் உள்வாங்கப் போவதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.