Cinema.tamil.com |
- ரஜினி அல்லது அஜித் நடிப்பில் படம் இயக்க ஆசை: சிம்பு
- ஷுட்டிங்கில் ஓடிப் போக நினைத்த அனுஷ்கா
- தவறான நடத்தை - மதுஷாலினியின் மன வருத்தம்
- 'பிரேமம்' பட பாணியில் மாணவர்கள் அட்டகாசம் - விபத்தில் சிக்கிய மாணவி..!
- சத்ரபதி சிவாஜியாக ரித்தேஷ் - ஜெனிலியா தயாரிக்கிறார்!
- சிரஞ்சீவிக்கு பார்த்திபன் கொடுத்த பிறந்தநாள் பரிசு
- வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சென்னை பாசத்தை வெளிப்படுத்தும் மோகன்லால்..!
- புலி டிரைலர் கிளப்பும் அரசியல் புயல்
- 14 வருடம் கழித்து சம்யுக்த வர்மா ரிட்டர்ன்ஸ்..!
- தெலுங்கில் ரீமேக்காகும் பிரேமம்!
- ராம் சரண் நடிக்கும் படத்தின் டீசரை வெளியிட்ட சிரஞ்சீவி
- இறுதிக் கட்டத்தை எட்டிய பலே மஞ்சு ரோஜு
- நான் புதுமுகம் என்று நினைத்து கொள்ளுங்கள் - ராதிகா ஆப்தேவை உற்சாகப்படுத்திய ரஜினி
- விஜய் சேதுபதியும் போலீஸ் ஆகிறார்: அதிகாரபூர்வ அறிவிப்பு
- மேகி விளம்பரத்தில் நான் நடித்தபோது புகார் எதுவும் இல்லை: அமிதாப் மனு தாக்கல்
- ஆயிரம் எபிசோட் கண்ட சொல்வதெல்லாம் உண்மை
- த்ரிஷா, சமந்தா வரிசையில் ரெஜினா
- மஹதீரா ஹிந்தி ரீ-மேக்கில் ஷாகித் கபூர்!
- பேங் பேங்-2 : சித்தார்த் மல்கோத்ரா நடிப்பது உறுதி!
- பாடகியாகிறார் ஐஸ்வர்யா ராய்!
| ரஜினி அல்லது அஜித் நடிப்பில் படம் இயக்க ஆசை: சிம்பு Posted: பெண்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் ஜினி அல்லது அஜித் நடிப்பில் படம் இயக்க ஆசை பெண்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் தமிழ் சினிமாவில், 'லிட்டில் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார்' என்ற நிலையில் இருந்து இப்போது, எஸ்.டி.ஆர்., என, அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. காதல் முறிவு, பட ரிலீஸ் பிரச்னை, பண பிரச்னையை எல்லாம் கடந்து, ... |
| ஷுட்டிங்கில் ஓடிப் போக நினைத்த அனுஷ்கா Posted: இன்று தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, தான் அறிமுகமான முதல் படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே ஓடிப் போக நினைத்தாராம். அனுஷ்கா நாயகியாக அறிமுகமான 'சூப்பர்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஒரு காட்சியில் நடிக்க அனுஷ்கா அவ்வளவு ரீ-டேக் வாங்கினாராம். நடனம் ஆட கொஞ்சம் கூட வராதாம். படத்தின் ... |
| தவறான நடத்தை - மதுஷாலினியின் மன வருத்தம் Posted: 'பழனியப்பா கல்லூரி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மதுஷாலினி. அதன் பின் அவர் நடித்த '16' படமும் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டதால் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமாகலே இருந்தார். பாலா இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக 'அவன் இவன்' படத்தில் நடித்த பிறகுதான் மதுஷாலினி அதிகமாக அறியப்பட்டார். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ... |
| 'பிரேமம்' பட பாணியில் மாணவர்கள் அட்டகாசம் - விபத்தில் சிக்கிய மாணவி..! Posted: கேரளாவில் 'த்ரிஷ்யம்' படம் வெளியானபோது படத்தை ஆஹா ஓஹோவென எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பி.விஜயன் எண்ணம் மட்டும் வேறு மாதிரி யோசித்தது.. அதாவது "சினிமா என்பது சமூகத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ள ஒரு பொறுப்பான ஊடகமாகத்தான் இருக்கவேண்டும்.. மோகன்லால் போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் தவறான விஷயங்களை ... |
| சத்ரபதி சிவாஜியாக ரித்தேஷ் - ஜெனிலியா தயாரிக்கிறார்! Posted: பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா. தனது குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்து கொண்டார். சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது. நடிப்பிற்கு முழுக்க போட்ட ஜெனிலியா அடுத்தப்படியாக தயாரிப்பாளராக மாற ... |
| சிரஞ்சீவிக்கு பார்த்திபன் கொடுத்த பிறந்தநாள் பரிசு Posted: தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவிக்கு இன்று பிறந்தநாள். 60- ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். 1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான சிரஞ்சீவி இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார். அவற்றில் சில தமிழ் படங்களும் அடக்கம். அவரை முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிக்க வைத்தவர் மறைந்த இயக்குனர் சிகரம் ... |
| வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சென்னை பாசத்தை வெளிப்படுத்தும் மோகன்லால்..! Posted: மோகன்லால் மலையாள நடிகர்தான் என்றாலும் கிட்டத்தட்ட அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மாதிரிதான். பின்னே தமிழ்நாட்டு மருமகன் இல்லையா..? சென்னையில் பல இடங்களில் அவரது வீடுகள் இருக்கின்றன. அதனால் மோகன்லாலுக்கு சென்னை பாசம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது அவ்வப்போது அவரது படங்களிலும் வெளிப்படும். 'உதயநாணுதாரம்' என்கிற படத்தில் ... |
| புலி டிரைலர் கிளப்பும் அரசியல் புயல் Posted: புலி பட டிரைலரில் விஜய்யின் பனி, புலி பன்ச் டயலாக்கையும், சண்டைக் காட்சிகளையும், பிரம்மமாண்டமான அரங்குகளையும், ஸ்ரீதேவியின் தோற்றத்தையும் பற்றிப் பேசி வருபவர்கள் அந்த டிரைலரில் உள்ள மற்றொரு விஷயத்தையும் கவனிக்கத் தவறவில்லை. டிரைலரில் இரண்டு விதமான கேப்ஷன்கள் இடம் பெற்றுள்ளதைத்தான் சிலர் அப்படியே அரசியல் பக்கம் திருப்பி ... |
| 14 வருடம் கழித்து சம்யுக்த வர்மா ரிட்டர்ன்ஸ்..! Posted: சரத்குமார் நடித்த தென்காசிப்பட்டணம் படம் பார்த்தவர்களுக்கு அதில் அவருக்கு ஜோடியாக நடித்த சம்யுக்தவர்மாவை நன்றாகவே தெரிந்திருக்கும்.. மலையாள நடிகையான இவர் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவால் அறிமுகம் செய்யப்பட்டவர். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வாங்கிய பெருமை இவருக்கு உண்டு.. 1999ல் திரையுலகில் ... |
| தெலுங்கில் ரீமேக்காகும் பிரேமம்! Posted: மலையாள திரை உலகில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து வெற்றி படங்களின் வரிசையில் இடம் பிடித்த பிரேமம் படத்தை இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருந்தார். அல்போன்ஸ் புத்ரன் முதலில் இயக்கிய நேரம் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்தது. நேரம் படத்தின் வாயிலாக ரசிகர்களின் கவனம் ஈர்த்த அல்போன்ஸ் இயக்கும் இரண்டாவது படமே ... |
| ராம் சரண் நடிக்கும் படத்தின் டீசரை வெளியிட்ட சிரஞ்சீவி Posted: டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 60வது பிறந்தநாள் விழா ஐதராபாத்தில் உள்ள சில்பகல வேதிகா கலையரங்கில் நேற்று(ஆகஸ்ட் 21) பிரமாண்டமாக நடைபெற்றுது. இதில் மெகா ஸ்டார் குடும்ப உறுபினர்களுடன் டோலிவுட்டின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் நடித்துவரும் படத்தின் டீசரை இவ்விழாவில் ... |
| இறுதிக் கட்டத்தை எட்டிய பலே மஞ்சு ரோஜு Posted: தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை கனவரும் வளர்ந்து வரும் நடிகருமான சுதீர் பாபு தற்போது பலே மஞ்சு ரோஜு படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார்.மோசகலக்கு மோசகடு, கிருஷ்ணம்மா களிபிண்டி இட்டரிணி போன்ற படங்களைத் தொடர்ந்து சுதீர் பாபு நடிக்கும் இப்படத்தை இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்குகின்றார். இப்படத்தில் ... |
| நான் புதுமுகம் என்று நினைத்து கொள்ளுங்கள் - ராதிகா ஆப்தேவை உற்சாகப்படுத்திய ரஜினி Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் பணிகள் நேற்று முறைப்படி போட்டோ ஷூட்டுடன் தொடங்கியது. ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள ஏசி புளோரில் நடந்த போட்டோ ஷூட்டில் ரஜினி உற்சாகமாக கலந்து கொண்டார். அவருடன் ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நேற்று முழுவதும் ரஜினி சம்பந்தப்பட்ட போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. ... |
| விஜய் சேதுபதியும் போலீஸ் ஆகிறார்: அதிகாரபூர்வ அறிவிப்பு Posted: விஜய் சேதுபதி போலீசாக நடிக்க போகிறார் என்று கடந்த பல மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய எஸ்.யூ.அருண் குமார் அடுத்து இயக்கும் படம் சேதுபதி, இதில் விஜய் சேதுபதி போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். பீட்சா படத்துக்கு ... |
| மேகி விளம்பரத்தில் நான் நடித்தபோது புகார் எதுவும் இல்லை: அமிதாப் மனு தாக்கல் Posted: கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான ரசாயனபொருள் பயன்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது. அந்த மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் அமிதாப் நடித்திருந்தார். தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் கு.மணவாளன் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ... |
| ஆயிரம் எபிசோட் கண்ட சொல்வதெல்லாம் உண்மை Posted: தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக ஒரு வித்தியாசமான டாக் ஷோவாக ஜீ தமிழ் தொலைக்காட்சியால் ஆரம்பிக்கப்பட்டது சொல்வதெல்லாம் உண்மை. தனி மனிதர், தனி குடும்பத்தின் பிரச்னைகளை கேமராவுக்கு முன்னால் பேசி அதற்கான தீர்வு காணும் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. குறிப்பாக பெண்களுக்கு. அடுத்த வீட்டு சங்கதிகளை ... |
| த்ரிஷா, சமந்தா வரிசையில் ரெஜினா Posted: தெலுங்குத் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள்தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னையைச் சேர்ந்த த்ரிஷா சில வருடங்கள் முன்னர் வரை தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். அவருக்கு அடுத்து சமந்த கடந்த சில வருடங்களாக நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். த்ரிஷாவுக்கு ... |
| மஹதீரா ஹிந்தி ரீ-மேக்கில் ஷாகித் கபூர்! Posted: ராஜமெளலி இயக்கத்தில், ராம்சரண் தேஜா நடிப்பில், சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக வெளிவந்த படம் மஹதீரா. தமிழில் இப்படம் மாவீரன் என்ற பெயரில் வெளிவந்தது. இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி வசூலை குவித்த இப்படம், தற்போது இந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. சாஜித் நாடியாவாலா ரீ-மேக் உரிமையை வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ... |
| பேங் பேங்-2 : சித்தார்த் மல்கோத்ரா நடிப்பது உறுதி! Posted: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப் நடிப்பில் வெளியான படம் பேங் பேங். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது உறுதியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தில் ஹிருத்திக்கும், கத்ரீனாவும் நடிக்க மாட்டார்கள் என்று சில நாட்களாக செய்திகள் வந்தது. அதுமட்டுமின்றி இவர்களுக்கு பதிலாக சி்த்தார்த் ... |
| Posted: ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்பு களத்தில் குதித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். தற்போது அவர், ஜாஸ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷ்ன், த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில், ஐஸ்வர்யாவுடன் இர்பான் கான், ஷபானா ஆஷ்மி, சித்தாந்த் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சஞ்சய் குப்தா இயக்குகிறார். இப்படத்தின் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-22 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |