Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஜார்க்கண்டில் கொடூரம்: சூனியக்காரிகள் என சந்தேகித்து 5 பெண்கள் நேற்றிரவு அடித்துக் கொலை

Posted: 07 Aug 2015 11:18 PM PDT

மூடநம்பிக்கைக்கு பேர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைப்பதாக சந்தேகித்து நேற்றிரவில் மட்டும் 5 பெண்களை உள்ளூர் மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் மாவட்டமான ராஞ்சியின் அருகாமையில் இருக்கும் கான்ஜியா கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பல் கைத்தடி மற்றும் கூர்மையான

திருப்பதியில் வருடாந்திர பவித்ரோற்சவம் 25–ந்தேதி தொடங்குகிறது

Posted: 07 Aug 2015 11:09 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25–ந் தேதி வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கி 3 நாட்கள் நடக்கின்றன. இதனால் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கும் அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகள் தோஷங்களான மாறுகின்றன. அந்த தோஷ நிவர்த்திக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகிற 25–ந் தேதி பவித்ரோற்சவம் தொடங்கி 27–ந் தேதி வரை

சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் 4 நாட்கள் நடைபெறும் கூட்டு கூட்டம்

Posted: 07 Aug 2015 11:00 PM PDT

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டம் அடுத்த மாதம் நடக்கிறது. மத்திய அரசு சரக்கு மற்றும் சேவைவரி மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைப்பு

Posted: 07 Aug 2015 10:34 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் பெருமழையால் ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத்

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 5½ டன் தங்கம் வங்கிகளில் டெபாசிட்

Posted: 07 Aug 2015 10:13 PM PDT

உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்திய எல்லைக்குள் வழிதவறி நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் திரும்ப ஒப்படைப்பு

Posted: 07 Aug 2015 09:58 PM PDT

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி தவறுதலாக இந்திய பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனை இந்திய ராணுவ அதிகாரிகள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அட்டாரி சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாகிஸ்தானின் பம்மா கிராமத்தை சேர்ந்த சாஜித்(13

கொச்சி கடலில் பிடிபட்ட ஈரானியர் 12 பேர் கோர்ட்டில் ஆஜர்

Posted: 07 Aug 2015 09:56 PM PDT

கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் கடந்த மாதம் 6–ந்தேதி ஒரு மர்ம படகு சுற்றி திரிவதை கடலோர காவல் படையினர் பார்த்தனர். உடனே அவர்கள், அந்த படகை சுற்றி வளைத்து பிடித்தனர். படகில் 12 பேர் இருந்தனர். அவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மீன்பிடிக்க

கேரளா அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாய் – மகள் பலி

Posted: 07 Aug 2015 09:46 PM PDT

கேரள மாநிலம் வடக்கஞ்சேரி பழையனூரை சேர்ந்தவர் ரசீது அலி. இவரது மனைவி சபியா (வயது 36). இவர்களுக்கு பாத்திமா என்ற 1½ வயது பெண் குழந்தை இருந்தது. ரசீது அலி தனது மனைவி, மகளுடன் மோட்டார் சைக்கிளில் திருச்சூர் புறப்பட்டார். மண்ணுத்தி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற ஒரு லாரியை போலீசார் நிறுத்தினர்.

திருப்பதியில் பக்தர்களின் தலைமுடி காணிக்கை ரூ.5 கோடிக்கு ஏலம்

Posted: 07 Aug 2015 09:37 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் முதலில் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி விட்டு, தெப்பக்குளத்தில் நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்கிறார்கள். தலைமுடியை காணிக்கை செலுத்துவதற்காக திருமலையில் மொத்தம் 18 கல்யாண கட்டாக்கள் உள்ளன.

பிரதமர் மோடி நவம்பர் 16–ந்தேதி சவூதி அரேபியா பயணம்

Posted: 07 Aug 2015 09:16 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி வருகிற நவம்பர் 16 மற்றும் 17–ந்தேதிகளில் சவூதி அரேபியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார். துபாய்க்கு செல்லும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அங்கு வசிக்கும் இந்தியர்களையும் சந்தித்து கலந்துரையாடுகிறார்.

பாதி எரிந்த நிலையில் 12 வயது பழங்குடியின சிறுமியின் சடலம் மீட்பு: கற்பழித்துக் கொலையா?

Posted: 07 Aug 2015 08:47 PM PDT

ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஆறாம் வகுப்பு மாணவியின் பிரேதம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலாம் நினைவாக டெல்லியில் அருங்காட்சியகம்: பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. கோரிக்கை

Posted: 07 Aug 2015 08:37 PM PDT

ஏவுகணை விஞ்ஞானியாக, கல்வியாளராக, முன்னாள் ஜனாதிபதியாக அப்துல் கலாம், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு பணி ஆற்றி உள்ளார். குறிப்பாக இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர்களுக்கு ஊக்கம் அளித்து வந்தார். அவரது திடீர் மரணம், நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. அவரது

லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த வீடு 20 நாட்களில் வாங்கப்படும்: மந்திரி ராஜ்குமார் பட்டோலே அறிவிப்பு

Posted: 07 Aug 2015 08:30 PM PDT

'இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் சிற்பி' என்று போற்றப்படும் அம்பேத்கர், கடந்த 1921-22 காலகட்டத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பொருளாதார பள்ளியில் கல்வி பயின்றபோது அங்கு என்.டபிள்யு-3, கிங் ஹென்றி சாலையில் உள்ள 10-ம் எண் வீட்டில் தங்கி

ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு: மதுரை ஐகோர்ட்டின் தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

Posted: 07 Aug 2015 08:25 PM PDT

தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25-ல், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து வகையான இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசாணை 71-ல் 'வெயிட்டேஜ்' முறையும் பணி நியமனத்தின் போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாலையோரம் அனாதையாக கிடந்த ரூ.1.17 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ரிக்‌ஷா தொழிலாளியின் நேர்மை

Posted: 07 Aug 2015 08:22 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையோரம் அனாதையாக கிடந்த ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்த ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி அதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறி போலீசாரிடம் அளித்த நேர்மை போலீசார் மற்றும் ஊடகங்களின் வெகுவான பாராட்டை பெற்றுள்ளது.

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியை பிடிக்க உதவிய 2 பேருக்கு ரூ.5 லட்சம் பரிசு: சிவசேனா எம்.பி. அறிவிப்பு

Posted: 07 Aug 2015 08:20 PM PDT

காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் எல்லை பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான முகமது நவீத் கைது செய்யப்பட்டார். இந்த தீவிரவாதியை உயிருடன் பிடிப்பதற்கு, அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் மற்றும் ராஜேஷ் சர்மா என்ற இருவரும் பேருதவியாக இருந்தனர்.

பாகிஸ்தானில் நடைபெறும் காமன்வெல்த் பாராளுமன்ற சங்க மாநாடு: இந்தியா புறக்கணிப்பு

Posted: 07 Aug 2015 08:15 PM PDT

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், செப்டம்பர் 30-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் 61-வது மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்குமாறு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் சபாநாயகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பாகிஸ்தான், காஷ்மீர் மாநில சபாநாயகருக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை.

தீவிரவாதி அபு ஜிண்டால் தொடர் உண்ணாவிரதம்: சாதாரண அறைக்கு மாற்ற கோரிக்கை

Posted: 07 Aug 2015 08:14 PM PDT

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில், 166 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அபு ஜிண்டால்,

சகோதரர் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கப் போவதாக தகவல்: டைகர் மேமன் மிரட்டல்

Posted: 07 Aug 2015 08:08 PM PDT

மும்பையில் 1993-ம் ஆண்டு 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த பயங்கர தாக்குதலில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளி டைகர் மேமன் ஆகியோர் மூளையாக செயல்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கு: டிராபிக் ராமசாமி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted: 07 Aug 2015 08:05 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™