4TamilMedia செய்திகள் | |
- இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணையையே கோருகின்றோம்; வடக்கு மாகாண சபை உறுதி!
- பக்கச் சார்பற்ற நடுநிலையான உள்ளக விசாரணையே சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவதற்கான வழி: மஹிந்த சமரசிங்க
- செப் 2 சுதந்திரக் கட்சி மாநாடு; அமைச்சரவை அடுத்த வார இறுதியிலேயே பதவியேற்கும்: துமிந்த திசாநாயக்க
- பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் தலையிட வேண்டும்: சந்தியா கோரிக்கை!
- பாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஷா கிலானி மீது கைது உத்தரவு
- அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலையில் துப்பாக்கிச் சூடு:ஊடகவியலாளர் இருவர் பலி
- மவுலிவாக்கம் கட்டிட விபத்து அறிக்கையில் அனுமதி வழங்கியவர்களிடம் விசாரிக்காதது ஏன்?:மு.க.ஸ்டாலின்
- ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறுவதுத் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாமா?
- இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது
- சமூக செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம் காலமானார்!
- இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்குப் பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவு
- தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க பன்னிரண்டு நகரங்களை அறிவித்தது மத்திய அரசு
- விண்டோஸ் 10 உண்மையில் இலவசமா? - தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் சில
- மூத்தப் பத்திரிகையாளர் சோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஜெயலலிதா
| இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணையையே கோருகின்றோம்; வடக்கு மாகாண சபை உறுதி! Posted: இலங்கையின் இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணையே மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் கூறிவருகின்ற நிலையில், “வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு சர்வதேச விசாரணையே. அதில் எவ்வித மாற்றமும் கிடையாது“ என மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். Read more ... |
| பக்கச் சார்பற்ற நடுநிலையான உள்ளக விசாரணையே சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவதற்கான வழி: மஹிந்த சமரசிங்க Posted:
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்க சார்பற்ற நடுநிலையான உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றை சகல இன, மத மக்களினதும் ஒத்துழைப்புடன் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதுவே, சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான ஒரே வழியென்று முன்னாள் மனித உரிமை விவகார அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| செப் 2 சுதந்திரக் கட்சி மாநாடு; அமைச்சரவை அடுத்த வார இறுதியிலேயே பதவியேற்கும்: துமிந்த திசாநாயக்க Posted:
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது சம்மேளன மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதால், புதிய அமைச்சரவை அடுத்த வார இறுதியிலேயே பதவியேற்கும் என்று சுதந்திரக்கட்சியின் பதில் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் தலையிட வேண்டும்: சந்தியா கோரிக்கை! Posted:
கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தலையிடுவதுடன், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுவரும் 4 சந்தேகநபர்களும் தப்பிச்செல்ல முடியாத வகையில் அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| பாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஷா கிலானி மீது கைது உத்தரவு Posted:
பாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஷா கிலானி மீது பாகிஸ்தான் இலஞ்சத் தடுப்பு நீதிமன்றம் ஒன்று இன்று வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
| அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலையில் துப்பாக்கிச் சூடு:ஊடகவியலாளர் இருவர் பலி Posted:
அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்திலுள்ள CBS WDBJ7 என்ற தொலைக்காட்சி சார்பாக ஒரு வணிக வளாகத்தில் பொதுமக்களிடம் பேட்டி காணும் நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை காலை நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு மர்ம நபர் தொலைக்காட்சி நிருபர் அலிசன் பார்க்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆடம் வார்டு ஆகியோரை நோக்கி 8 முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே பலியானதும் பொது மக்கள் துப்பாக்கி வேட்டு கேட்டு அலறும் காட்சி அப்படியே தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகியும் அமெரிக்க மக்களை மறுபடி ஒருமுறை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஸ்மித்மவுன்டன் என்ற ஏரிக்கு அருகே இருந்த ஒரு ஷாப்பிங் மையத்தில் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அரங்கேறியதுடன் அடையாளம் காணப்பட்ட 41 வயதான துப்பாக்கிதாரியான வெஸ்டர் பிளானகன் என்பவர் போலிசாரிடம் சிக்காமல் இருக்கத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டும் உள்ளார். மேலும் தனது திட்டம் குறித்து இந்த நபர் ஏற்கனவே ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு 23 பக்கங்கள் கொண்ட தொலைநகல் மூலம் அறிவித்தும் உள்ளார். தாக்குதல் இடம்பெற்று 90 நிமிடங்களுக்குள் இவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் மீண்டும் ஒரு முறை ஏபிசி நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு தனது வெறிச்செயல் குறித்து இவர் விளக்கியும் உள்ளார். வெஸ்டர் பிளானகனின் இந்த நடவடிக்கைக்குப் பின்னணியில் நிறவேறுபாடு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பணியில் இடையூறு போன்ற சில காரணங்களால் ஏற்பட்ட மனப் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகின்றது. இந்நபர் ஏற்கனவே WDBJ7 சேனலில் நிருபராகத் தன்னால் கொல்லப் பட்ட நபர்களுடன் பணியாற்றியவர் என்பதும் இதன் போது இவர் மீது அவர்கள் நிறவேறுபாட்டைக் காட்டியிருந்ததாகவும் கூடத் தெரிய வருகின்றது. அமெரிக்காவில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இது போன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அங்கு அரசுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேர்ஜினியா தாக்குதலுக்கும் வருத்தம் தெரிவித்துள்ள ஒபாமா இது போன்ற சம்பவங்களை சட்ட மாற்றம் மூலம் தடுக்க முடியாத கையாலாகதத் தனம் குறித்து விரக்தியையும் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் தீவிரவாதத்தை விட துப்பாக்கிக் கலாச்சாரமே அதிக மக்களைக் கொலை செய்து வருவதையும் அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். மேரிலேண்ட் பல்கலைக் கழகத்தால் வரையப் பட்ட உலகளாவிய தீவிரவாத மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பான புள்ளி விபரமும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 1970 முதற்கொண்டு 2014 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல்களால் 3521 பேர் கொல்லப் பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டு மட்டும் தீவிரவாதத் தாக்குதல்களால் 18 பேர் கொல்லப் பட்டுள்ளனர். ஆனால் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றைய திகதி வரை அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரத்தால் மட்டும் கொல்லப் பட்ட மக்கள் 8512 என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் அங்கு அதிகரித்து வரும் ஆயுத கலாச்சாரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பான விவாதத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன என்பதும் முக்கியமான விடயமே ஆகும்.
Read more ... |
| மவுலிவாக்கம் கட்டிட விபத்து அறிக்கையில் அனுமதி வழங்கியவர்களிடம் விசாரிக்காதது ஏன்?:மு.க.ஸ்டாலின் Posted:
மவுலிவாக்கம் கட்டிட விபத்து அறிக்கையில் அனுமதி வழங்கியவர்களிடம் விசாரிக்காதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறுவதுத் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாமா? Posted:
ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் அணிகள் இடம்பெறுவதுத் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாமா என்று, சென்னை கிரிக்கெட் வாரியத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read more ... |
| இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது Posted: |
| சமூக செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம் காலமானார்! Posted:
சமூக செயற்பாட்டாளரும், அரசியல் விமர்சகருமான சாந்தி சச்சிதானந்தம் அவர்கள், நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று வியாழக்கிழமை காலமானார். Read more ... |
| இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்குப் பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவு Posted: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்குப் பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர். Read more ... |
| தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க பன்னிரண்டு நகரங்களை அறிவித்தது மத்திய அரசு Posted:
இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, தமிழகத்தில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கத் தேர்வு செய்துள்ள நகரங்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டது. Read more ... |
| விண்டோஸ் 10 உண்மையில் இலவசமா? - தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் சில Posted:
Read more ... |
| மூத்தப் பத்திரிகையாளர் சோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஜெயலலிதா Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











விண்டோஸ் 10 பற்றிய பல தகவல்களை இணையத்தளங்களின் மூலம் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பீர்கள்.
மூத்தப் பத்திரிகையாளர் சோ.ராமசாமியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.