Tamil News | Online Tamil News |
- தமிழகத்தில் நகரங்களில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: பொருளாதார நிலை கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்கள்
- உறுதிமொழியை நிறைவேற்றாத கட்டுமான அதிபர்களுக்கு 'காப்பு':ரியல் எஸ்டேட் 2013 மசோதாவில் மத்திய அரசு திருத்தம்
- பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கால்பதிக்க ஐ.எஸ்., முயற்சி
- அப்போ சம்பளம் ரூ.500 தான்...!
- காயமடைந்தவர்களை கண்டுகொள்ளாத ஹேமமாலினி
- தமிழகத்தில் அன்னிய முதலீடு இரு மடங்கு அதிகரிப்பு
- ஜெ., இன்று கோடநாடு செல்கிறார்: காலையில் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்பு
- அதிக கட்டணம்: ஜெ.,க்கு கருணாநிதி பதிலடி
- பஸ்சில் ஹெல்மெட் அனுப்ப ரூ.200 வசூல்!
- ராஜபக் ஷேவுக்கு சிறிசேன திடீர் ஆதரவு
- வெளிநாட்டு சொத்து மதிப்பீடு: புதிய விதிமுறைகள் வெளியீடு
| Posted: தமிழகத்தில், நகரங்களில் வசிக்கும் மக்கள் எண்ணிகை அதிகரித்து உள்ளது. மேலும், அவர்களின் வாழ்க்கை நிலை பற்றிய சுவாரசிய தகவல், நேற்று வெளியிடப்பட்ட, சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.நாடு சுதந்திரம் அடையும் முன், 1931ல், சமூக, பொருளாதார, ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்பின், இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில், 2011ல், இந்தக் கணக்கெடுப்பை, மத்திய அரசு, நாடு முழுவதும் நடத்தியது. காகிதம் பயன்படுத்தாமல், கையடக்க எலக்ட்ரானிக் கருவி மூலம், வீடு, வீடாகச் சென்று, தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஒவ்வொரு ... |
| Posted: புதுடில்லி: ரியல் எஸ்டேட் மசோதா, 2013ல், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றத்தின் படி, வீடு வாங்க விரும்புபவர்களுக்கு, கட்டுமான நிறுவனங்கள் என்ன உறுதி அளித்துள்ளதோ, அவற்றை நிறைவேற்ற வேண்டும். மீறினால், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்களின் அதிபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.கட்டுமான விவகாரங்களில் இதுவரை, அபராதம், கூடுதல் கட்டணம் போன்றவையே தண்டனையாக இருந்த நிலையில், முதல் முறையாக, மோசடி கட்டுமான நிறுவனங்களின் அதிபர்களுக்கு சிறை தண்டனை அளிக்க, சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இம்மாதம் ... |
| பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கால்பதிக்க ஐ.எஸ்., முயற்சி Posted: ஜாங்கர்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக, மூத்த ராணுவ அதிகாரி கூறியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுஷரா பகுதியில் நேற்று நடந்த ராணுவ நிகழ்ச்சியின்போது, லெப்டினன்ட் ஜெனரல் கே.எச்.சிங், நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியா - பாக்., எல்லை நெடுக, பாக்., எல்லைக்குள், பயங்கரவாத உட்கட்டமைப்பு அப்படியே உள்ளது. பயங்கரவாத பயிற்சி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.பிர் பாஞ்சால் பகுதியில், 36 இடங்களில், 200 அல்லது 225 பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் ... |
| Posted: தாங்கள் வாங்கும் 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை, அப்படியே இரட்டிப்பாக்கி, ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ள எம்.பி.,க்களுக்கு, 1985ம் ஆண்டு வரையில், வெறும் 500 லிருந்து 1,000 ரூபாய் வரை தான் சம்பளமாக தரப்பட்டு வந்தது. |
| காயமடைந்தவர்களை கண்டுகொள்ளாத ஹேமமாலினி Posted: ஜெய்ப்பூர்: கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், முகத்தில் காயமடைந்த பாலிவுட் நடிகையும், பா.ஜ., - எம்.பி.,யுமான ஹேமமாலினி, 66, அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி கொஞ்சமும் விசாரிக்காதது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| தமிழகத்தில் அன்னிய முதலீடு இரு மடங்கு அதிகரிப்பு Posted: தமிழகத்தில், தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ள சூழலில், கடந்த இரு ஆண்டுகளில், அன்னிய முதலீடுகள் இரு மடங்குஅதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தபோது, சிறிது சுணக்கம் ஏற்பட்டபோதிலும், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பெரிய அளவில் பின்னடைவு ஏற்படவில்லை என்பது, ரிசர்வ் வங்கியின் பிராந்திய கிளைகள் திரட்டிய தகவலில் தெரியவந்து உள்ளது.அதன்படி, 2013 - 14ல், தமிழகத்தில், 12 ஆயிரத்து, 595 கோடி ரூபாய் அளவுக்கு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 2014 - 15ல், அன்னிய முதலீடு, இரு மடங்கு ... |
| ஜெ., இன்று கோடநாடு செல்கிறார்: காலையில் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்பு Posted: 'முதல்வர் ஜெயலலிதா, இன்று கோடநாடு செல்கிறார்; அதற்கு முன், இன்று காலையில், எம்.எல்.ஏ.,வாக பதவியேற்கிறார்' என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா, எம்.எல்.ஏ.,வாக பதவியேற்க வேண்டி உள்ளது.இந்த தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை, கடந்த மாதம், 30ம் தேதி நடந்தது. அன்று மாலையே, அவர் பதவியேற்கலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பதவியேற்பு தள்ளிப்போடப்பட்டது.உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசு ... |
| அதிக கட்டணம்: ஜெ.,க்கு கருணாநிதி பதிலடி Posted: சென்னை: 'முதல்வர் ஜெயலலிதா, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மெட்ரே ரயில் கட்டண உயர்வுக்கு காரணமானவர்களை அழைத்துப் பேசி, கட்டணத்தை குறைக்க சொல்ல வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, 2006ல், என் தலைமையில், அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா தன் அறிக்கையில், ரயில் கட்டணத்தை நிர்ணயிக்க, தி.மு.க., ஆட்சியில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்ற பழியை, என் மீது சுமத்த முயற்சித்துள்ளார். நான் ஏற்கனவே விடுத்த அறிக்கையில், மெட்ரோ ரயில் கட்டணத்தை, அ.தி.மு.க., ... |
| பஸ்சில் ஹெல்மெட் அனுப்ப ரூ.200 வசூல்! Posted: திருப்பூர்: 'ஹெல்மெட்'டுக்கு, பல இடங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கிடைக்கும் இடத்தில் வாங்கி, உறவினர்கள், நண்பர்களுக்கு, பஸ்களில் கொடுத்தனுப்பினால், அதற்கு, கண்டக்டர்கள், 200 ரூபாய் வசூலிக்கின்றனர். எந்த கணக்கில், இவ்வளவு பணம் வசூலிக்கிறனர் என தெரியாமல், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மாநிலம் முழுவதும், பெரும்பாலான கடைகளில், ஹெல்மெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. இருக்கும் ஒருசில கடைகளில், கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, கிராம மற்றும் சிறிய நகரங்களில், ஹெல்மெட்டுகள் கிடைக்கவில்லை.இதனால், போலீசாரின் கெடுபிடியில் இருந்து தப்பிக்க, ... |
| ராஜபக் ஷேவுக்கு சிறிசேன திடீர் ஆதரவு Posted: கொழும்பு : இலங்கை பார்லி., தேர்தலில், பிரதமர் வேட்பாளராக ராஜபக் ஷே போட்டியிட, அதிபர் சிறிசேன திடீரென்று ஆதரவு தெரிவித்து உள்ளார்.இலங்கை பார்லி., தேர்தல், ஆக., 17ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி - யு.பி.எப்.ஏ.,யின், பிரதமர் வேட்பாளராக களமிறங்க ராஜபக் ஷே திட்டமிட்டார்.ஆனால், ராஜபக் ஷேவுக்கு ஆதரவு அளிக்க முடியாது என, ஜூன் 30ம் தேதி சிறிசேன தெரிவித்தார். இதையடுத்து, கடந்த 1ம் தேதி, எதிர்க்கட்சி ஆதரவுடன், பார்லி., தேர்தலில் போட்டியிடப் போவதாக, ராஜபக் ஷே அறிவித்தார்.ஆனால், எந்த கட்சியின் ஆதரவு என்பதை ராஜபக் ஷே ... |
| வெளிநாட்டு சொத்து மதிப்பீடு: புதிய விதிமுறைகள் வெளியீடு Posted: புதுடில்லி: கறுப்பு பண சட்டப்படி, வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்களை மதிப்பிடுவதற்கான விதிமுறைகளை, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுஉள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:வெளிநாடுகளில் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு, அவற்றை வாங்கிய விலையை விட அதிகமாகவோ அல்லது மதிப்பீடு செய்யும் நாளன்று நிலவும் சந்தை விலையின் அடிப்படையிலோ, நிர்ணயிக்கப்படும். அதுபோல், நகைகள், நவரத்தினக் கற்கள், பழங்கால கலைப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவையும் மதிப்பிடப்படும். நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவையும் சந்தை மதிப்பில் நிர்ணயிக்கப்படும்; அல்லது, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 04,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |