Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காலிறுதியில் செரீனா, முர்ரே

Posted: 06 Jul 2015 01:17 PM PDT

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பிரிட்டனின் ஆன்டி முர்ரே ஆகியோர்

வெற்றி பாதையில் பாகிஸ்தான்

Posted: 06 Jul 2015 01:16 PM PDT

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மகளிர் கிரிக்கெட் 4-ஆவது ஆட்டத்தில் இந்தியா வெற்றி

Posted: 06 Jul 2015 01:15 PM PDT

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக ஹாக்கி லீக்: ஆடவர் பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடம்

Posted: 06 Jul 2015 01:14 PM PDT

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியின் ஆடவர் பிரிவு இறுதிச் சுற்றில் பெல்ஜியத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்தது.

ஆஷஸ் கேப்டன்களுக்கு நெருக்கடி

Posted: 06 Jul 2015 01:14 PM PDT

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியான ஆஷஸ் தொடரில் இரு அணிகளின்

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா சாம்பியன்

Posted: 06 Jul 2015 01:13 PM PDT

மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் கர்லி லாய்டு "ஹாட்ரிக்' கோல் அடித்து உதவ, ஜப்பான் அணியை வீழ்த்தி

ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர்: கரண் சர்மா விலகல்

Posted: 06 Jul 2015 01:12 PM PDT

கை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா ஜிம்பாப்வேக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

எல்.ஐ.சி. பிரீமியம் வருவாய் 31% உயர்வு

Posted: 06 Jul 2015 01:10 PM PDT

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) முதல் காலாண்டில் பெற்ற பிரீமியம் வருவாய் 31 சதவீதம் அதிகரித்ததாக அந்த நிறுவனம்

"வங்கிகள் நிதி நிலையை சமாளிப்பது சவாலாக இருக்கும்'

Posted: 06 Jul 2015 01:10 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளின் நிதி நிலையைச் சமாளிப்பது சவாலாக இருக்கும் என்று ஃபிட்ச் நிதி ஆய்வு நிறுவனம்

மும்பை பங்குச் சந்தையில் 115 புள்ளிகள் உயர்வு: கிரீஸ் பொருளாதாரச் சிக்கலால் பாதிப்பில்லை

Posted: 06 Jul 2015 01:09 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 115 புள்ளிகள் உயர்வு பெற்றது. கிரீஸ் பொருளாதாரச் சிக்கல்

ஹிந்து திருமணச் சட்டம்: பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழு பரிசீலனை

Posted: 06 Jul 2015 01:08 PM PDT

பாகிஸ்தானில் ஹிந்து திருமணச் சட்டம் தொடர்பான தனி நபர் மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு இந்த வாரம்

இராக் வெடிகுண்டுத் தாக்குதல்களில் 19 பேர் பலி

Posted: 06 Jul 2015 01:07 PM PDT

இராக் தலைநகர் பாக்தாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் 19 பேர் பலியாகினர்.

துப்பாக்கிக் குண்டைவிட வேகமாகப் பாயும் ஜெட் விமானம்!

Posted: 06 Jul 2015 01:06 PM PDT

துப்பாக்கிக் குண்டைவிட அதிக வேகத்தில் பறக்கக் கூடிய விமானத்தை அமெரிக்க ராணுவம் உருவாக்கி வருகிறது.

கிரீஸ் நிதியமைச்சர் திடீர் பதவி விலகல்

Posted: 06 Jul 2015 01:06 PM PDT

கடன் வழங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கக் கூடாது என கிரீஸ் நாட்டின் பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ள நிலையில்,

துருக்கி சாலை விபத்தில் 15 தொழிலாளர்கள் சாவு

Posted: 06 Jul 2015 01:04 PM PDT

துருக்கியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண்கள் உள்ளிட்ட 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மசூதி, உணவு விடுதியில் குண்டு வெடிப்பு: நைஜீரியாவில் 44 பேர் பலி

Posted: 06 Jul 2015 01:03 PM PDT

நைஜீரியாவில் மசூதி, உணவு விடுதி ஆகிய இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் 44 பேர் உயிரிழந்தனர்.

பரிமாற்றப் பகுதிகளில் வசிப்போரின் தேசிய அடையாளம்: இந்தியா, வங்கதேசம் ஆய்வு

Posted: 06 Jul 2015 01:03 PM PDT

இந்தியா, வங்கதேசம் இடையே பரஸ்பரம் பரிமாற்றம் செய்யப்படும் 162 சிறு  பகுதிகளில் வசிப்போரின்

ஓம் பிரகாஷ் செளதாலாவின் மனு மீதான விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்: ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கு

Posted: 06 Jul 2015 01:01 PM PDT

ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு தொடர்பான வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர்

ஜெயலலிதா வழக்கில் திமுக மேல்முறையீடு

Posted: 06 Jul 2015 01:00 PM PDT

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்த

ஆதித்ய பிர்லா குழுமம் மீது ஹவாலா புகார்: சிபிஐ, அமலாக்கப் பிரிவுக்கு நோட்டீஸ்

Posted: 06 Jul 2015 12:59 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு குறித்த விசாரணையின்போது எழுந்த, ஆதித்ய பிர்லா குழுமம் மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை

அறிக்கை அளிக்க கர்நாடக அரசுக்கு ஆளுநர் உத்தரவு

Posted: 06 Jul 2015 12:58 PM PDT

லோக் ஆயுக்த மீதான லஞ்சப் புகார் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு அந்த மாநில ஆளுநர் வஜுபாய் வாலா

லோக் ஆயுக்த நீதிபதியின் பதவி பறிப்பில் அவசரம் வேண்டாம்: கர்நாடகப் பேரவைத் தலைவர்

Posted: 06 Jul 2015 12:58 PM PDT

லோக் ஆயுக்த நீதிபதி பாஸ்கர் ராவின் பதவியைப் பறிக்கும் விவகாரத்தில் அவசரம் வேண்டாம் என்று, கர்நாடக பேரவைத் தலைவர்

"கிரீஸ் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை'

Posted: 06 Jul 2015 12:57 PM PDT

கடன் பிரச்னைக்குத் தீர்வு காண சர்வதேசக் கடனாளர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்க கிரீஸ் நாடு மறுத்துள்ளதால் எழுந்துள்ள

குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் அவசியத்தை முஸ்லிம்கள் உணர வேண்டும்: சிவசேனை

Posted: 06 Jul 2015 12:55 PM PDT

"நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மொழி, புவியியல் சார்ந்த மக்கள்தொகை விகிதாசார சமநிலை பாதிக்கப்படும்;

சபரிமலைக்கு ரயில் பாதை: கேரளம் கோரிக்கை

Posted: 06 Jul 2015 12:54 PM PDT

சபரிமலைக்கு ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றுமாறு ரயில்வே துறைக்கு கேரள அரசு திங்கள்கிழமை கோரிக்கை

குழந்தைகள் குறித்த யுனிசெஃப் அறிக்கை: ஆராய குழு அமைப்பு

Posted: 06 Jul 2015 12:49 PM PDT

இந்தியாவில் குழந்தைகளின் நிலை குறித்த யுனிசெஃப் அறிக்கையை ஆய்வு செய்ய குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புரியில் நவகளேபர விழாவுக்கு அமைக்கப்பட்ட சாலையில் திடீர் பள்ளம்: ஒடிசா முதல்வர் அவசர ஆலோசனை

Posted: 06 Jul 2015 12:49 PM PDT

ஜகந்நாதர் நவகளேபர விழாவை முன்னிட்டு புரியில் அமைக்கப்பட்ட புதிய சாலையில் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து

புயலை துல்லியமாக முன்கூட்டி அறிய புதிய கருவி

Posted: 06 Jul 2015 12:48 PM PDT

புயலை மிகச் சரியாக முன்கூட்டியே அறிந்துகொள்ளும் நோக்கில் ஒடிஸாவில் கடலோர நகரங்களான பாரதீப்,

ஆம்பூர் சம்பவம்: மேலும் 3 பேர் கைது

Posted: 06 Jul 2015 12:34 PM PDT

ஆம்பூர் வன்முறைச் சம்பவத்தில் தொடர்பாக, மேலும் மூவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மாநில அளவிலான எறிபந்து போட்டியில் திருச்சி மாவட்ட அணிகள் வெள்ளிப்பதக்கம்

Posted: 06 Jul 2015 12:34 PM PDT

மாநில அளவிலான எறிபந்து போட்டியில் திருச்சி ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெள்ளிப்பதக்கத்தை பெற்றன.

மதுப்போதையில் தகராறு:3 பேருக்கு அரிவாள் வெட்டு

Posted: 06 Jul 2015 12:34 PM PDT

திருச்சி திருவெறும்பூர் அருகே மதுப்போதையில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

நாகர்கோவில்

Posted: 06 Jul 2015 12:26 PM PDT

குளங்களை தூர்வார மதச்சார்பற்ற ஜனதாதளம் வலியுறுத்தல்

Posted: 06 Jul 2015 12:24 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி வலியுறுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் கடன் சுமையால் மேலும் இரு விவசாயிகள் தற்கொலை

Posted: 06 Jul 2015 12:24 PM PDT

 கர்நாடகத்தில் கடந்த 3 வாரங்களில் 15-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில்,

ராஜபதி கைலாசநாதர் கோயிலில்...

Posted: 06 Jul 2015 12:23 PM PDT

கேது வணங்கிய தலமும் நவகைலாய ஸ்தலங்களில் 8ஆவது ஸ்தலமுமான குரும்பூர் அருகேயுள்ள ராஜபதி ஸ்ரீசெளந்திரநாயகி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கருப்புப் பண விவரங்களை தாமாக தாக்கல் செய்தால் சட்ட நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு: மத்திய அரசு உறுதி

Posted: 06 Jul 2015 12:23 PM PDT

கருப்புப் பணம் தொடர்பான விவரங்களை தாமாக முன்வந்து தாக்கல் செய்வோருக்கு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்

திருச்செந்தூர் கோயிலில் குருபெயர்ச்சி விழா

Posted: 06 Jul 2015 12:22 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நிலம் கையக மசோதா; அனைத்து பிரிவுகளும் ஆய்வு செய்யப்படும்: நாடாளுமன்றக் கூட்டுக் குழு

Posted: 06 Jul 2015 12:21 PM PDT

நிலம் கையகச் சட்டத் திருத்த மசோதாவிலுள்ள அனைத்து அம்சங்களும் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று

ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தர்னா

Posted: 06 Jul 2015 12:21 PM PDT

ஆக்கிரமிக்கப்பட்ட தனது இடத்தை மீட்டுத் தரக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.

புதிய துறைமுகம் சகாய அன்னை ஆலயத் திருவிழா

Posted: 06 Jul 2015 12:20 PM PDT

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் உள்ள சகாய அன்னை ஆலயத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பலியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து: பொது வாக்கெடுப்புக்கு ஆம் ஆத்மி அரசு வலியுறுத்தல்

Posted: 06 Jul 2015 12:20 PM PDT

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிப்பது தொடர்பாக தில்லிவாசிகளிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று

திருக்குறள் கருத்தரங்கம்

Posted: 06 Jul 2015 12:20 PM PDT

தூத்துக்குடியில் திருக்குறள் முப்பால் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

புடவை விற்பனை தொழில் தொடங்க இரு திருநங்கைகளுக்கு ரூ. 25 ஆயிரம் கடன்

Posted: 06 Jul 2015 12:19 PM PDT

திருச்சியைச் சேர்ந்த இரு திருநங்கைகளுக்கு புடவை விற்பனை தொழில் தொடங்குவதற்காக கடன் தொகை தலா ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

"ஆகஸ்டில் விவசாயிகள் மறியல்'

Posted: 06 Jul 2015 12:19 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் மறியல் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் மருத்துவர் எம்.ஆர்.சிவசாமி கூறினார்.

எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை

Posted: 06 Jul 2015 12:19 PM PDT

எட்டயபுரம் கான்சாபுரம் நகர் பாலவிநாயகர் கோயிலில் ஆனி மாத நாயன்மார்கள் குருபூஜை விழா நடைபெற்றது.

போர்க்கால அடிப்படையில் முடிந்தது திருவானைக்காவல் சுங்கப்பாதை பணிகள் பொதுமக்கள், ரயில் பயணிகள் பாராட்டு

Posted: 06 Jul 2015 12:19 PM PDT

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதைப் பணிகள் போர்க்கால அடிப்படையில் 12 மணிநேரத்தில் முடிந்தது,வழக்கம்போல திங்கள்கிழமை இரவுபோக்குவரத்து தொடங்கியது.

கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 06 Jul 2015 12:18 PM PDT

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கார் சாகுபடிக்கு அணைகளிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும்

Posted: 06 Jul 2015 12:18 PM PDT

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.

கோவில்பட்டியில் நாமசங்கீர்த்தன பஜனை

Posted: 06 Jul 2015 12:18 PM PDT

கோவில்பட்டியில் நாமசங்கீர்த்தனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெளர்ணமி நூல் வலம்

Posted: 06 Jul 2015 12:17 PM PDT

கோவில்பட்டி இலக்கிய உலா சார்பில் பெளர்ணமி நூல் வலம் நடைபெற்றது.

சியாமா பிரசாத் முகர்ஜி தீர்க்கமான சிந்தனையாளர்: மோடி புகழாரம்

Posted: 06 Jul 2015 12:16 PM PDT

பாரதிய ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 3 முதியவர்களுக்கு 10 ஆண்டு சிறை: தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 06 Jul 2015 12:16 PM PDT

தூத்துக்குடி அருகே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மூன்று முதியவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி

Posted: 06 Jul 2015 12:15 PM PDT

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் கூட்டுறவு நகர வங்கியின் முத்தையாபுரம் கிளையில், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

மலிவான அரசியல் செய்கிறது காங்கிரஸ்: ம.பி. அரசு புகார்

Posted: 06 Jul 2015 12:15 PM PDT

மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணி தேர்வு வாரிய முறைகேடு விவகாரத்தோடு தொடர்புடைய நபர்கள் மர்மமாக

கோவில்பட்டி கல்லூரியில் இருபெரும் விழா

Posted: 06 Jul 2015 12:15 PM PDT

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நெறிப்படுத்துதல் நிகழ்ச்சி ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

இளநிலை மின் பொறியாளர் தாற்காலிக பணிநீக்கம்

Posted: 06 Jul 2015 12:14 PM PDT

சாகுபுரம் உபமின்நிலையத்தில் கவனக்குறைவாக பணியாற்றியதாக இளநிலை மின் பொறியாளர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு; புகார் தெரிவிக்க ஒரு வாரத்துக்குள் குழு அமைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 06 Jul 2015 12:14 PM PDT

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கை தொடர்பான புகார்களைத் தெரிவிக்கும்

கட்டடத் தொழிலாளியை கொல்ல முயன்ற சகோதரர்கள் கைது

Posted: 06 Jul 2015 12:13 PM PDT

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில்  கட்டடத் தொழிலாளியை கொலை செய்ய முயன்றதாக அண்ணன், தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 06 Jul 2015 12:12 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கடத்த முயன்ற சுமார் 7 டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

கடை உரிமையாளரை கொல்ல முயற்சி: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட இருவர் கைது

Posted: 06 Jul 2015 12:12 PM PDT

கழுகுமலையில் செல்லிடப்பேசி கடை உரிமையாளரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதாக பேரூராட்சி கவுன்சிலர் உள்பட இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

"வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

Posted: 06 Jul 2015 12:11 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆவது பைப் லைன் பணிகள்: மேயர் ஆய்வு

Posted: 06 Jul 2015 12:10 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சிக்கு தண்ணீர் வழங்கும் வகையில் நடைபெற்று வரும் 4 ஆவது பைப் லைன் பணிகளை மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இலங்கை சிறையில் ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

Posted: 06 Jul 2015 12:10 PM PDT

இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்

முழுநேர பேராசிரியரையே ஆராய்ச்சி கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும்: யுஜிசி எச்சரிக்கை

Posted: 06 Jul 2015 12:09 PM PDT

பல்கலைக்கழகங்களில் முழுநேரப் பேராசிரியரையே ஆராய்ச்சி கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும் என

கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

Posted: 06 Jul 2015 12:09 PM PDT

கடம்பூரை அடுத்த கீழப்பாறைப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்கக் கோரி குடும்பத்துடன் திங்கள்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டார்.

பீமநகரி ஊராட்சியில் நாளை மனுநீதி முகாம்

Posted: 06 Jul 2015 12:08 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் வருவாய் கிராமத்திற்குள்பட்ட பீமநகரி ஊராட்சியில் புதன்கிழமை (ஜூலை 8) வெள்ளமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த 17.6.2015 அன்று நடைபெற்ற மனுநீதித் திட்ட முதல் கட்ட நிகழ்ச்சியின் போது பெறப்பட்ட மனுக்களுக்கான உரிய பதில்கள்  சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூட்டம்

Posted: 06 Jul 2015 12:07 PM PDT

ஏழகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான பெற்றோர் -ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.

திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் காயிதே மில்லத் பற்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா

Posted: 06 Jul 2015 12:07 PM PDT

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில், இஸ்லாமிய ஆய்வு மையம்  சார்பில் ஆளூர் ஷாநவாஸ் இயக்கிய காயிதே மில்லத் பற்றிய ஆவணப்படம் திரையிடல் மற்றும் அது குறித்த உரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்

Posted: 06 Jul 2015 12:06 PM PDT

சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடல் இன்று விவசாயத்துக்காக கால்வாயில் நீர் திறப்பு

Posted: 06 Jul 2015 12:06 PM PDT

குமரி மாவட்டத்தில் மழை தணிந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து கணிசமான அளவில் குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் திங்கள்கிழமை மூடப்பட்டு, உபரி தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை அணையின் கால்வாய் செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ம.பி.யில் மர்மச் சாவுகள்; சிபிஐ விசாரணை தேவை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ராமதாஸ்

Posted: 06 Jul 2015 12:06 PM PDT

மத்தியப்பிரதேச மாநிலத்தின் தொழில் கல்வி, அரசுப் பணி தேர்வு வாரிய முறைகேடு விவகாரத்தில், மர்மச் சாவுகள் தொடர்பாக

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 06 Jul 2015 12:05 PM PDT

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், 22 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

50 ஆயிரமாவது ரயில் பெட்டியை தயாரித்தது ஐ.சி.எஃப்.

Posted: 06 Jul 2015 12:05 PM PDT

இந்திய ரயில்வேக்கு 50 ஆயிரமாவது ரயில் பெட்டியைத் தயாரித்து சென்னை இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்.) சாதனை

குமரி அருகே அதிமுகவில் இணைந்த பா.ஜ.க.வினர்

Posted: 06 Jul 2015 12:04 PM PDT

கொல்லங்கோடு பேரூராட்சியைச் சேர்ந்த பா.ஜ.க-வினர் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் முன்னிலையில் திங்கள்கிழமை அ.தி.மு.க. வில் இணைந்தனர்.

"ஆட்சியர் தலைமையில் அமைதிக் குழு தேவை

Posted: 06 Jul 2015 12:04 PM PDT

ஆம்பூரில் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிக் குழு ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய துணைச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஹெச்.அப்துல் பாசித் கோரிக்கை விடுத்துள்ளார்.

தண்ணீர் நிறுவனத்தை மூடக் கோரி மறியல்

Posted: 06 Jul 2015 12:04 PM PDT

காட்பாடியில் குடியிருப்புப் பகுதியில் உள்ள தண்ணீர் விநியோக நிறுவனத்தால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், எனவே அதை மூடக் கோரியும் பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி அருகே இளம்பெண் தூக்கிட்டுச் சாவு

Posted: 06 Jul 2015 12:04 PM PDT

கன்னியாகுமரி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு ஆம்பூரில் நுழைய அனுமதி மறுப்பு

Posted: 06 Jul 2015 12:04 PM PDT

ஆம்பூருக்கு திங்கள்கிழமை வருகை தர இருந்த இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலர் இராம.ரவிக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆற்றூரில் கலங்கலான குடிநீர் விநியோகம்

Posted: 06 Jul 2015 12:03 PM PDT

குமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சிப் பகுதிகளில் கலங்கலான குடிநீர் விநியோகம் செய்வதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

"வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தேவை'

Posted: 06 Jul 2015 12:03 PM PDT

ஆம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபாலிடம் இந்து மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

வேலூரில் 11,12-ம் தேதிகளில் சித்த மருத்துவப் பயிலரங்கம்

Posted: 06 Jul 2015 12:03 PM PDT

தமிழகத்தில் முதன்முறையாக, உயர்நிலை மருந்துகள் குறித்த பயிலரங்கம் வேலூரில் வரும் 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் தலைவர் கே.பி.அருச்சுனன் தெரிவித்தார்.

ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய பெண் நீதிமன்றத்தில் ஆஜர்: 2 வாரம் விடுதியில் தங்கியிருக்க உத்தரவு

Posted: 06 Jul 2015 12:03 PM PDT

ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய பெண் பவித்ரா, தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள

குமரி அருகே விஷம் குடித்த தம்பதி: மனைவி சாவு

Posted: 06 Jul 2015 12:03 PM PDT

கன்னியாகுமரி அருகே வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் மனைவி உயிரிழந்தார். கணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 06 Jul 2015 12:03 PM PDT

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை, எம்.ஃபில், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர மாணவ, மாணவியர் புதன்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்.

தீக்காயம் அடைந்த தொழிலாளி சாவு

Posted: 06 Jul 2015 12:02 PM PDT

காவேரிப்பாக்கத்தை அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி பிரதாபன் (47), தீக்காயம் அடைந்து இறந்தார்.

நித்திரவிளை அருகே இளைஞருக்கு வெட்டு: இருவர் கைது

Posted: 06 Jul 2015 12:02 PM PDT

நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டியதாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து இருவரை திங்கள்கிழமை கைது செய்தனர்.

இடையூறின்றி விளம்பரப் பலகைகளை வைக்கலாம்

Posted: 06 Jul 2015 12:02 PM PDT

நிரந்தர, தாற்காலிக விளம்பரப் பலகைகளை இடையூறின்றி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் கூறினார்.

விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது

Posted: 06 Jul 2015 12:01 PM PDT

விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் எந்தக் கட்சியும் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாது என சமூக ஆர்வலர் மேதா பட்கர் எச்சரிக்கை விடுத்தார். தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் மாநாடு செய்யாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் சேவை: த.மா.கா. வலியுறுத்தல்

Posted: 06 Jul 2015 12:01 PM PDT

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு பகல் நேர ரயில் இயக்கப்பட வேண்டுமென த.மா.கா. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மூன்றரை வயது சிறுவனுக்கு கட்டாய மது: 3 பேர் கைது

Posted: 06 Jul 2015 12:01 PM PDT

கலசப்பாக்கம் அருகே மூன்றரை வயது சிறுவனைக் கட்டாயப்படுத்தி மதுகுடிக்க வைத்த காட்சி, கட்செவி அஞ்சலில் வெளியானதை அடுத்து, இந்தச் செயலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

சட்ட ஆணையத்தின் பெயரை தவறாக பயன்படுத்தினால் புகார் தெரிவிக்கலாம்

Posted: 06 Jul 2015 12:01 PM PDT

கிரானைட் முறைகேடு விசாரணைக்கான சட்ட ஆணையத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது புகார் தெரிவிக்கலாம் என

ஸ்ரீதண்டபாணி ஆசிரமத்தில் குருப் பெயர்ச்சி யாகம்

Posted: 06 Jul 2015 12:00 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீதண்டபாணி ஆசிரமத்தில் நடைபெற்ற குருப் பெயர்ச்சி மகா யாகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

Posted: 06 Jul 2015 12:00 PM PDT

குமரி மாவட்ட அதிமுக சார்பில் கோட்டாறு இடலாக்குடி பாவா காசிம் ஒலியுல்லா சமூக நலக் கூடத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அதிமுக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

Posted: 06 Jul 2015 12:00 PM PDT

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கார் மோதியதில் இளைஞர் சாவு

Posted: 06 Jul 2015 12:00 PM PDT

செய்யாறு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கார் மோதியதில் இறந்தார். செய்யாறை அடுத்த பெரிய ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (20). இவர், செய்யாறு

கள்ளச் சந்தை வர்த்தகத்தால் அரசுக்கு ரூ. 39,239 கோடி இழப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

Posted: 06 Jul 2015 12:00 PM PDT

கள்ளச் சந்தை வர்த்தகம் காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த ஆண்டு ரூ. 39,239 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரல்வாய்மொழியில் மளிகைக் கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு

Posted: 06 Jul 2015 12:00 PM PDT

நாகர்கோவிலை அடுத்த ஆரல்வாய்மொழியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து, ரூ. 1 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா

Posted: 06 Jul 2015 11:59 AM PDT

திருவண்ணாமலை மாவட்ட காந்தி பேரவை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வலியுறுத்தி பேரணி

Posted: 06 Jul 2015 11:59 AM PDT

திருவண்ணாமலையில் சமையல் எரிவாயு மானியத் தொகையை விட்டுக் கொடுப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தங்கம் பவுனுக்கு ரூ.88 குறைவு

Posted: 06 Jul 2015 11:59 AM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 குறைந்து, திங்கள்கிழமை ரூ.19,816-க்கு விற்பனையானது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™