Cinema.tamil.com |
- எம்.எஸ்.வி.யின் உடல் புதன் அன்று தகனம்
- இசை சக்கரவர்த்தியாக வாழ்ந்தவர் எம்எஸ்வி., - வடிவேலு!
- தமிழ் சினிமாவுக்கு இன்று மிகப்பெரிய இழப்பு - விஷால்!
- என் மானசீக குரு அண்ணன் எம்.எஸ்.வி., - இளையராஜா!
- சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்...
- எம்.எஸ்.வியின் மறைவு வருத்தமளிக்கிறது - விஜயகாந்த்
- “ஒன்றுக்கும் உதவாத படம்” -பிரேமம்' மீது பின்னணி பாடகர் தாக்கு..!
- ஒவ்வொருக்கும் நன்றி சொல்லும் ராஜமௌலி
- வாலு' தடை, சிம்புவிடம் பேசிய தனுஷ்...
- தென்னிந்தியாவின் நம்பர் 1 இயக்குனர் ராஜமௌலி - தெலுங்கு மீடியாக்கள்
- வாலு படம் தற்போதைக்கு ரிலீஸ் இல்லை
- உலக தமிழர்களுக்கு பெரும் இழப்பு - பாரதிராஜா
- இசை சகாப்தம் நம்மை விட்டு பிரிந்தது - விக்ரமன்
- ராஜமௌலிக்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு
- 'பாகுபலி' - 500 கோடியை அள்ளுமா ?
- ரொமான்சில் ஆர்யாவை அடிச்சிக்க ஆளில்லை! -த்ரிஷா
- வில்லன் வேடத்தில் அவன் இவன் ஐநாக்ஸ் ஜி.எம்.குமார்!
- கூவம் ஆற்றில் இறங்கி நடித்த விஜய்ஆண்டனி!
- மூன்றாம் உலகப்போர் படத்துக்கு யு சான்றிதழ்!
- புகழ் படத்துக்காக பள்ளி நண்பர்களின் இசையில் பாடிய அனிருத்!
| எம்.எஸ்.வி.யின் உடல் புதன் அன்று தகனம் Posted: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல், புதன் அன்று, பெசன்ட் நகர் மின்மயானத்தில், காலை 10 மணியளவில் தகனம் செய்யப்பட இருக்கிறது. பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், உடல் நல குறைவினால் சென்னையில காலமானார். அவருக்கு வயது 87. வயது மூப்பின் காரணமான உடல்நலம் குன்றி சுமார் ஒரு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ... |
| இசை சக்கரவர்த்தியாக வாழ்ந்தவர் எம்எஸ்வி., - வடிவேலு! Posted: வடிவேலு பேசுகையில்... என் தாயாரை பார்க்க மதுரை சென்றிருந்தேன். விஷயம் தெரிந்து உடன் சென்னை வந்தேன். நான் பள்ளியில் சரியாக கூட படிக்க மாட்டேன். விபரம் தெரிந்த நாள் அய்யாவின் இசையை தான் கேட்டு வருகிறேன். நான் சினிமாவில் பாடிய பல பாடல்கள் எல்லாம் அவருடையது தான். இசை சக்கரவர்த்தியாக வாழ்ந்தவர் எம்.எஸ்.வி., எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற ... |
| தமிழ் சினிமாவுக்கு இன்று மிகப்பெரிய இழப்பு - விஷால்! Posted: எம்.எஸ்.வி.யின் மறைவு தமிழ் சினிமாவுக்கு இன்று மிகப்பெரிய இழப்பு என்று கூறியுள்ளார் நடிகர் விஷால். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஷால், நாசர், கருணாஸ் ஆகியோர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நேரில் அஞ்சலி ... |
| என் மானசீக குரு அண்ணன் எம்.எஸ்.வி., - இளையராஜா! Posted: எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவையொட்டி மாலை 5.45 மணியளவில் இளையராஜா அஞ்சலி செலுத்த வந்தார். சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக அங்கிருந்தார். பின்னர் அவர் பேசுகையில்... நான் இன்றைக்கு இவ்வளவு பெரிய ஆளாக வளர காரணம் அண்ணன் எம்.எஸ்.வி. தான். கூடவே கண்ணதாசனும் தான். எங்கள் திராவிட நாடு, அச்சம் என்பது மடமையடா.. என அந்தக்காலத்திலேயே அரசியல் ... |
| சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்... Posted: நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இன்று (ஜூலை 14ம் தேதி), தனது 61வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைநட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வரும்நிலையில், நடிகர் விஷாலும், டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஷால், டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரத் சார், இன்னும் நிறைய ... |
| எம்.எஸ்.வியின் மறைவு வருத்தமளிக்கிறது - விஜயகாந்த் Posted: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், எம்.எஸ்.வி.யின் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், எம்.எஸ்.வி. அவர்களை பற்றி பேச நான் பெரிய ஆள் கிடையாது. நான் சின்னவன் தான். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோருக்கு எல்லாம் நிறைய ஹிட் கொடுத்தவர். எனக்கும் சட்டம் ஒரு இருட்டரை, ... |
| “ஒன்றுக்கும் உதவாத படம்” -பிரேமம்' மீது பின்னணி பாடகர் தாக்கு..! Posted: திருட்டி விசிடி, ஆன்லைன் பைரஸி என பிரச்சனைகள் சுழற்றி அடித்தாலும் 'பிரேமம்' படத்தை மலையாள ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள்.. படத்தின் வசூலும் முப்பது கோடி ரூபாயை தாண்டி, மலையாள சினிமா வரலாற்றின் வசூல் ரெக்கார்டில் மூன்றாம் இடத்தை பிடித்தும் விட்டது.. ஆனால் "இந்தப்படம் ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடாக்கர் இல்லையே" என்கிற ... |
| ஒவ்வொருக்கும் நன்றி சொல்லும் ராஜமௌலி Posted: இந்தியத் திரையுலகத்தில் புதிய வசூலை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் 'பாகுபலி' படத்தின் இயக்குனரான ராஜமௌலி, அவ்வளவு பெரிய சூப்பர் ஹிட்டைக் கொடுத்தும் தலையில் எந்த கனத்தையும் ஏற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். கடந்த சில மணி நேரமாக 'பாகுபலி' படத்தை வாழ்த்தி அவருடைய டிவிட்டரில் பதிவு செய்துள்ள ஒவ்வொருத்தருக்கும் தனித் ... |
| வாலு' தடை, சிம்புவிடம் பேசிய தனுஷ்... Posted: சிம்பு, ஹன்சிகா நடித்து நீண்ட வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து 'வாலு' திரைப்படத்தை டி.ராஜேந்தர் வாங்கிய பிறகுதான் அந்தப் படத்திற்கு ஒரு உயிர் வந்தது. ஜுலை 17ம் தேதி படத்தை வெளியிடுவதாக கடந்த ஒரு மாத காலமாகவே டிஆர் விளம்பரம் செய்து வந்தார். ஆனால், அதற்குள் படத்தின் வெளியீட்டை எதிர்த்து ஒரு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு ... |
| தென்னிந்தியாவின் நம்பர் 1 இயக்குனர் ராஜமௌலி - தெலுங்கு மீடியாக்கள் Posted: 'பாகுபலி' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியால் தெலுங்குத் திரையுலகத்தினரும், தெலுங்கு மீடியாக்களும் அதிக சந்தோஷத்தில் உள்ளனர். இத்தனை நாள் வரை தென்னிந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனராக ஷங்கர் மட்டுமே பேசப்பட்டு வந்தார். மற்ற இயக்குனர்கள் அனைவரும் அவருக்குப் பின்னால்தான் என்ற பேச்சே அதிகம் இருந்தது. சிறந்த கதை, தேவையான ... |
| வாலு படம் தற்போதைக்கு ரிலீஸ் இல்லை Posted: சிம்பு நடிப்பி்ல உருவாகியுள்ள "வாலு" படத்திற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளதால், படம் தற்போதைக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளனு. சிம்பு, ஹன்சிகா நடித்து நீண்ட வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து 'வாலு' திரைப்படத்தை டி.ராஜேந்தர் வாங்கிய பிறகுதான் அந்தப் படத்திற்கு ஒரு உயிர் வந்தது. ஜுலை ... |
| உலக தமிழர்களுக்கு பெரும் இழப்பு - பாரதிராஜா Posted: எம்.எஸ்.வி.யின் மறைவு உலக தமிழர்களுக்கே பெரும் இழப்பு என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. எம்.எஸ்.விஸ்வநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா... தமிழ் மூன்றெழுத்து, எம்.எஸ்.வி., எனும் பெயரும் மூன்றெழுத்து. மண், மொழி, மக்கள் கலந்த மாபெரும் கலைஞர் எம்.எஸ்.வி. ஐந்து தலைமுறையையும் தாண்டி அவரது ... |
| இசை சகாப்தம் நம்மை விட்டு பிரிந்தது - விக்ரமன் Posted: எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவையொட்டி இயக்குநர் சங்கம் சார்பில் பெரிய மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமன், இசை சகாப்தம் நம்மை விட்டு பிரிந்து விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப உறுப்பினர் போன்று இருந்தவர் எம்.எஸ்.வி., என்ன ரேசன் கார்டில் அவர் பெயர் தான் இல்லை. காற்று இல்லாத வீடு கூட ... |
| ராஜமௌலிக்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு Posted: வெளிவந்த குறுகிய நாட்களில் இந்தியத் திரையுலகில் மிகப் பெரும் சாதனையைப் படைத்து வரும் 'பாகுபலி' படத்திற்கு இந்தியத் திரையுலகில் உள்ள பல இயக்குனர்களும் பெரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் இயக்குனர் ஷங்கரின் பாராட்டு, 'பாகுபலி' படத்தின் இயக்குனர் ராஜமௌலியை மிகவும் நெகிழ வைத்திருக்கிறது. ஷங்கர் சொன்ன ... |
| 'பாகுபலி' - 500 கோடியை அள்ளுமா ? Posted: தலைப்பைப் பார்த்ததுமே இப்படியும் வசூலாகுமா என நீங்கள் யோசிப்பது தெரிகிறது. ஆனால், கடந்த நான்கு நாட்களில் இந்தப் படம் வசூலித்துள்ள தொகையைப் பார்க்கும் போது இதுவும் சாத்தியமே திரையுலக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். 'பாகுபலி' திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சுமாராக 150 கோடியிலிருந்து 160 கோடி வரை ... |
| ரொமான்சில் ஆர்யாவை அடிச்சிக்க ஆளில்லை! -த்ரிஷா Posted: 32 வயதாகும் த்ரிஷாவும், 31 வயது நயன்தாராவைப்போலவே பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன்தான் இவர் முதன்முதலாக டூயட் பாடினார். அந்த ராசி இப்போது வரை த்ரிஷாவின் மார்க்கெட் கொளுந்துவிட்டு எரிகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி, ஆர்யா என ... |
| வில்லன் வேடத்தில் அவன் இவன் ஐநாக்ஸ் ஜி.எம்.குமார்! Posted: பிரபு நடித்த அறுவடை நாள், இரும்பு பூக்கள், சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், மோகன் நடித்த உருவம் ஆகிய படங்களை இயக்கியவர் ஜி.எம்.குமார். அதையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் குஷ்பு நடித்த கேப்டன் மகள் படத்தில் இருந்து நடிகரான இவர், வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், மாத்தியோசி, மிளகா, அவன் இவன், தெனாலிராமன், சண்டமாருதம் என பல படங்களில் ... |
| கூவம் ஆற்றில் இறங்கி நடித்த விஜய்ஆண்டனி! Posted: நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் பிச்சைக்காரன். இந்த படத்தின் டைட்டில் பிச்சைக்காரன் என்றாலும் கதைப்படி விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் இல்லை. அவர் ஒரு பிரச்சினைக்காக பிச்சைக்காரனாக நடிக்கிறாராம். கதைப்படி, அவர் பிச்சைக்காரனாக நடிக்கிறார் என்பதை படத்தின் ... |
| மூன்றாம் உலகப்போர் படத்துக்கு யு சான்றிதழ்! Posted: 2025ல் இந்தியா-சீனாவுக்கிடையே மூன்றாம் உலகப்போர் வந்தால் விளைவு என்னவாக இருக்கும் என்பதை மையப்படுத்தி சுகன் கார்த்திக் என்ற புதியவர் இயக்கியுள்ள படம் மூன்றாம் உலகப்போர். இந்த படத்தில் சுனில் நாயகனாக நடித்துள்ளார். இவர், நார்வே விருது பெற்ற பாலை என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். அதையடுத்து இப்படத்தில் அதிரடியான ஆக்சன் ரோலில் ... |
| புகழ் படத்துக்காக பள்ளி நண்பர்களின் இசையில் பாடிய அனிருத்! Posted: கத்தி, வேலையில்லா பட்டதாரி உள்பட பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் அனிருத், தற்போது நானும் ரவுடிதான், விஐபி-2, மர்ம மனிதன், தல 56, சிங்கம்-3 என பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். அதோடு தனது இசை மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் அவ்வப்போது பின்னணி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-14 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |